Saturday, 19 December 2009
துருப்பிடித்த ஆயுதத்தைத் தூக்கும் இந்தியா.
இலங்கையில் நடந்த இனக்கொலைக்கு இந்தியா செய்த உதவிகளை எந்த ஒரு தமிழனும் மறக்கவும் மாட்டான். மன்னிக்கவும் மாட்டான். சரணடைய வந்தவர்களைத் தட்டிக் கழித்து சிங்களவனிடம் சரணடையுங்கள் என்று கூறியது இந்தியா என்ற உண்மை வெளிவந்தது. வன்னிப் போர்களத்தில் இந்தி, தமிழ் ஆகியன பேசியபடி படிவீரர்கள் செயற்பட்டதை சிங்களத் தொலைக்காட்சிப் பதிவுகள் வெளிக்கொணர்ந்தன. இந்தியாவின் மீது தமிழர்களின் வெறுப்பு உச்சக் கட்டத்தை அடைந்து விட்டது. இதன் தாற்பரியத்தை உணர்ந்து கொண்ட இந்தியப் பேரினவாதிகள் தங்கள் தமிழ்நாட்டு முகவர்கள் மூலம் இந்தியாவை விட்டால் தமிழர்களுக்கு உதவ வேறு ஒருவரும் இல்லை என்ற பொய்க் கருத்தைப் பரப்ப முற்பட்டது. ஆனால் இந்தியாவால்தான் தமிழர்களுக்கு உதவ வந்தவர்கள் தடுக்கப் பட்டனர் என்ற உண்மை பசில் ராஜபக்சேவால் போட்டு உடைக்கப் பட்டது. கோபாலபுரத்தார் தான் அழுவது யாருக்கும் தெரியாது என்று கூறிய போலிவார்த்தைகளும் எடுபடவில்லை.
சூரிச் சூழ்ச்சி படுதோல்வி.
சுவிஸ்லாந்து நகர் சூரிச்சில் செய்த சூழ்ச்சி இந்தியாவிற்கு படு தோல்வியைக் கொடுத்தது. இப்போது இந்தியப் பேரினவாதிகளுக்கு வேறு வழியில்லை. ஒரே வழி ராஜீவ் கொலை. அந்த துருப்பிடித்த ஆயுதத்தை மீண்டும் எடுத்துள்ளது. குறைந்த பட்சம் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களிடம் உள்ள இந்திய வெறுப்பை சமாளிக்க அது உதவும் என்று அவர்கள் நம்புகின்றனர்.
புதிய புத்தகம் பழைய ஆயுதம்
ராஜீவ் கொலைவழக்கில் சம்பந்தப் பட்ட முன்னள் சிபிஐ அதிகாரி கே.ரகோத்தமன் மூலம் ஒரு புத்தகத்தை வெளிவிட்டது இந்தியப்பேரினவாதம். 'ராஜீவ் காந்தி கொலைவழக்கு - மர்மம் விலகும் நேரம்' என்ற தலைப்பில் ராஜீவ் கொலை நடந்து 22 வருடங்களுக்குப் பின் வெளியிடப் பட்டுள்ளது. அதில் அவர் விடுதலைப் புலிகளுக்கும் தமிழ்நாட்டு தமிழின உணர்வாளர்களுக்கும் ராஜீவ் கொலையில் சம்பந்தம் இருப்பதாக ஆதாரமின்றி ஊகங்களை வைத்து எழுதி இருக்கிறார்.
- கே.ரகோத்தமனைப் பேட்டி கண்டு (இந்திய உளவுத்துறைக்கு பலவிதத்திலும் உதவிவருவதாக சந்தேகிக்கப்படும்) ஜுனியர் விகடன் சஞ்சிகை அவர் புத்தகத்திற்கு விளம்பரம் தேடிக் கொடுத்திருக்கிறது. விகடனுக்கு அவர் கூறியது: ''வைகோ மீது எனக்கு தனிப்பட்ட வருத்தம் ஏதுமில்லை. ஆனால், அவர் மீது எனக்கிருக்கும் சந்தேகங்கள் வலுவானவை. காயமடைந்த விடுதலைப் புலிகளை வைகோவின் தம்பி ரவிச்சந்திரன், அவரது வீட்டில் தங்க வைத்திருக்கிறார். அதன் மூலமாக ராஜீவ் கொலை குறித்து முன்கூட்டியே வைகோவுக்கும் அவர் தம்பிக்கும் தெரிந்திருக்க நிறைய வாய்ப்பிருக்கிறது என்றே நம்புகிறேன். இலங்கைக்கு சென்றிருந்தபோது வைகோ, ராஜீவ் குறித்து கடும் ஆவேசத்தோடு பேசிய பேச்சுகள் ஆதாரத்தோடு இருக்கின்றன. சிவராசனை சந்தித்து, ராஜீவ் கொலை குறித்தும், வைகோவை முதல்வராக்கும் திட்டம் குறித்தும் சீனிவாசய்யா என்பவர் பேசியதாக சின்ன சாந்தனின் ஸ்டேட்மென்ட்டிலேயே இருக்கிறது. அந்த சீனிவாசய்யா என்பவர் வைகோவின் தம்பியான ரவிச்சந்திரனாக இருக்க முடியும் என்பது எங்களின் யூகம்தான். மற்றபடி அது ரவிச்சந்திரன்தான் என நான் உறுதியாகச் சொல்லவில்லை. ஆனாலும், வைகோவை முதல்வராக்குவது குறித்து அந்த 'சீனிவாசய்யா' என்கிற மர்ம நபர் சொன்னதை யாராலும் மறுக்க முடியாது
இதில் சொல்லப் பட்ட எதுவும் உறுதியானவை அல்ல. எல்லாம் ஊகங்களும் நம்பிக்கைகளும். ஊகங்களையும் நம்பிக்கைகளையும் வைத்து உண்மையை வெளிக் கொண்டுவர முடியுமா? ராக்கோத்தமன் இந்திய உளவுத்துறையிடம் கூலி பெற்றுக் கொண்டு இந்த நூலை எழுதியுள்ளார் என்பது எனது ஊகம்.
Friday, 18 December 2009
பிரபாகரனின் மகளின் உடல் - இலங்கை அரசு மறுப்பு
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகாவின் உடலை தாம் கண்டறியவில்லை என்று இலங்கை அரசு கூறியுள்ளது. சென்ற வாரம் துவரகாவின் கொடூரமாகக் கொல்லப் பட்ட உடல் என்று சொல்லி ஒரு படம் வெளிவிடப் பட்டிருந்தது. இப்படம் துவரகாவின் படம் என்று உறுதிசெய்யப் படவில்லை.
பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனியின் உடலைத் தவிர பிரபாகரனின் வேறு எந்த குடும்ப உறுப்பினர்களின் உடலையும் தாம் கைப்பற்றவில்லை என்று இலங்கை படைத்துறைப் பேச்சாளர் உதய நாணயக்காரா டெய்லி மிரர் பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார்.
துவரகாவின் படம் வெளியிட்டது இலங்கைக் குடியரசுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்சேவிற்கு எதிராக தமிழர்களின் அபிப்பிராயத்தை திருப்பவே என்று பேசப் பட்டது. அதைச் சீர் செய்ய அரசு இந்த மறுப்பறிக்கை வெளியிட்டிருக்கலாம்.
பிரபாகரனின் மனைவி மதிவதனி மகள் துவராகா இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோர் 2008 அக்டோபர் மாதமே வன்னியில் இருந்து வெளியேறி வேறு நாடு சென்றுவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன.
மேற்படி படம் இசைப் பிரியா என்னும் நிதர்சனம் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளருடையது என்று சிலர் அடையாளம் கண்டுள்ளனர். இசைப் பிரியா ஒரு விடுதலைப் புலிகளின் கடற்படைப் போராளியின் துணைவியாவார்.
ஏற்கனவே துவரகாவைக் கைது செய்ததாகவும் இலங்கை அரசு செய்தி வெளியிட்டிருந்தது. அப்பதிவைக் காண இங்கு சொடுக்கவும்: துவாரகா
===========================================
Thursday, 17 December 2009
காசோலை காணமற் போகப் போகிறது
காசோலைக்கு என்று ஒரு தனிப்பட்ட வரலாறு உண்டு. அது பற்றிய தகவல்கள்:
- 16-02-1659 இலன்று முதலாவது காசோலை 400 சிலிங்குகளுக்கு எழுதப் பட்டது. எழுதியவர் நிக்கொலஸ் வான் அக்கர். பெற்றுக் கொண்டவர் டெல்போ என்பவர்.
- 1717-ம் ஆண்டு இங்கிலாந்து வங்கி அச்சடிக்கப்பட்ட காசோலைகளை வெளியிட்டது.
- 1833இல் முதலாவது காசோலை செலுத்தும் நிலையம் (cheque clearing house) இலண்டனில் ஆரப்பிக்கப் பட்டது.
- இன்று 38இலட்சம் காசோலைகள் பிரித்தானியாவில் தினந்தோறும் எழுதப்படுகின்றன.
- ஐக்கிய இராச்சியத்தில் ஒருவர் சராசரியாக நளொன்றிற்கு 5 காசோலகளைப் பெறுகிறார். (நான் மாதத்தில் ஒன்றுதான் பெறுகிறேன்)
- 1990-ம் ஆண்டு நாளொன்றிற்கு 40 கோடி காசோலைகள் எழுதப்பட்டன. 2008இல் அது 14 கோடியாகக் குறைந்தது.
- பொதுவாக ஒரு காசோலை எழுதப் பட்ட நாளில் இருந்து ஆறு மாதங்கள்வரை செல்லு படியாகும். அமெரிக்காவில் இது கட்டாயம்.
பிரித்தானியாவில் 31-10-2018இற்குப் பிறகு காசோலை எழுதுவதை நிறுத்துவதாக வங்கிகள் ஒத்துக் கொண்டிருக்கின்றன. அதன் பிறகு இலத்திரனியல் அட்டைகள் மூலமாகவும் இணைய வலை அமைப்பினுடாகவும் கொடுப்பனவுகள் மேற் கொள்ளப் படும்.
அமைதி தராத போர்
பயங்கரவாத ஒழிப்புக்கான போர். இலங்கையின் தேசிய ஒருமைப் பாட்டை நிலைநாட்டுவதற்கான போர். இப்படி இலங்கையில் நடந்த போருக்கு பல வியாக்கியானங்கள் கொடுக்கப் பட்டன. இலங்கையின் இனப் பிரச்சனைக்கு "சமஷ்டி" எனப்படும் அதிகாரப் பகிர்வு மூலமான தீர்வு காணவேண்டும் என்ற வாதம் முன்வைக்கப் பட்டபோது அதற்கு எதிராக பல குரல்கள் எழுப்பப்பட்டு இலங்கை அரசியல் அரங்கில் அதிகாரப் பகிர்வு என்பது ஒரு கெட்ட வார்த்தையாக்கப் பட்டது. அதிகாரப் பகிர்விற்கு முன்னின்று செயற்பட்டவர்களில் தம்மை முற்போக்குவாதிகள் என்று கூறிக்கொண்டவர்களும் அடக்கம்.
எண்பதுகளில் இலங்கைப் பிரச்சனைக்கு அதிகாரப் பரவலாக்கம் ஒரு தீர்வு என்று முன்வைக்கப் பட்டது. அது வெகு இலகுவாக இலங்கையில் ஒரு கெட்ட வார்த்தையாக்கப் பட்டது. சென்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிகாரப் பரவலாக்கம் பற்றிப் பேசப் பட்டது. இம்முறை அதிகாரப் பரவலாக்கம் பற்றி பேசுவதை குடியரசுத் தலைவர் வேட்பாளர்கள் தவிர்த்துக் கொள்கின்றனர்.
சுவிஸ் சூரிச்சில் கூடிய தமிழ் அரசியல்வாதிகளிடையே முன்வைக்கப் பட்ட கருத்துக்களில் முக்கியமானவை:1. தமிழர்களின் சுயநிர்ணய உரிமை என்பது சிங்களவர்களை ஆத்திரப் பட வைக்கிறது. 2. தமிழர்களின் தாயகம் தன்னாட்சி எனபது இனி சரிவராத ஒன்று.
போருக்குப் பின் தமிழர்கள் அடிமையாகவே வாழமுடியும் என்ற கருத்தை தமிழர்கள் மத்தியில் பரப்ப சிலர் முயல்கின்றனர் என்பதை சூரிச்சில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். ஒரு இனத்தில் சிலர் அடிமை வாழ்வை ஏற்றுக் கொள்ளலாம். அடிமை வாழ்வை ஏற்க மறுக்கும் உணர்வுள்ள மனிதர்கள் மீண்டும் வீறு கொண்டு எழுந்து ஆயுத போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.
போரில் வென்றவர்கள் சமாதானத்தில் தோற்றார்கள்.
இலங்கையில் போருக்குப் பின் பொருளாதார வளர்ச்சி ஏற்படலாம் என்ற நம்பிக்கை இப்போது தளர ஆரம்பித்து விட்டது. இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த Transparency International என்னும்சர்வதேச அமைப்பு இலங்கயில் கருத்துச் சுதந்திரமின்மை, திறந்த நிலைப்பாடின்மை, வகைசொல்லல் பற்றாக்குறை ஆகியன இலங்கையில் சுமூக நிலை திரும்புவதை தடுக்கிறது என்று கூறியுள்ளது. மனித உரிமைகளுக்கும் பத்திரிகைச் சுதந்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இந்த அமைப்புக்கூட இனப்பிரச்சனை தீர்க்கப் படாமை அமைதி இன்மைக்கு வழிவகுக்கும் என்பதைப் பற்றி குறிப்பிடத் தவறி விட்டது. அதை முன்வைத்தால் தனது கருத்து இலங்கையில் எடுபடாது என்று அந்த அமைப்புக் கூடக் கருதி இருக்கலாம். இப்போது பலதரப்பில் இருந்தும் பத்திரிகைச் சுதந்திரத்தை வலியுறுத்தி கருத்துக்கள் முன்வைக்கப் படுவதற்கான காரணம் உலகமயமாக்கலுக்கு பத்திரிகைச் சுதந்திரம் மிக அவசியம் என்பதற்காகவே. போரை அயல் நாட்டு திரை மறைவு உதவியின் மூலம் வெல்லலாம் சமாதானத்தை வெல்ல முடியாது. இலங்கையில் சமாதானம் நிலவுவதை அந்த அயல் நாடு விரும்பாது.
போரின் வெற்றியை அடிப்படையாக வைத்து போட்டியிடும் இரு பிரதான குடியரசுத் தலைவர் வேட்பாளர்களின் ஆதரவாளர்களிடையே பலத்த மோதல்கள் இனி நடக்கவிருக்கிறது. யுத்த வெற்றிக்கு உரிமை கோரிப் போட்டியிடும் இரு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் கடும் சவாலை எதிர்கொள்வதாலும், அரச கட்டமைப்புகள் அரசியல் மயப்படுத்தப்பட்டுள் ளமையாலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல், வன்முறை மிகுந்ததாகவும் அமைதியற்றதாகவும் அமையலாமென "சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான ஜனநாயக செயற்பாடு" ("பவ்ரல்") எனும் சுயாதீன தேர்தல் கண்காணிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.
"எஜமானர்களுக்காக" மோதும் அடிமைகள்
இலங்கையின் கிழக்குப் பகுதியில் இரு தமிழ் ஆயுதக் குழுக்கள் தமக்குள் குடியரசுத் தலைவர் தேர்தலை ஒட்டி மோதிக் கொண்டன. இருவரும் ஒரே "எஜமானர்களுக்கு" சேவை செய்கிறார்கள். இருந்தும் மோதிக் கொள்கிறார்கள்.
தேர்தல் மோதலில் இலங்கைப் படை.
இதுவரை இலங்கையில் இடம் பெற்ற தேர்தலில் படையினர் சம்பந்தப் பட்டதில்லை. போர் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு நடை பெறும் தேர்தல் ஆகியபடியால் இம்முறை படையினர் தேர்தலில் பங்காளிகளாக உள்ளனர். நேற்று அடிதடிக்குப் பெயர் போன அரச அமைச்சர் ஒருவர் தான் செல்லும் வழியில் சரத் பொன்சேக்காவிற்கு ஆதரவான தேர்தல் பதாதைகளை தனது அடியாட்கள் மூலம் அப்புறப் படுத்தினார். அதைப் கண்ட சதாரண உடையிலிருந்த அரச படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடாத்தினர்.
மேலும் பல மோசமான மேதல் செய்திகளுக்காக காத்திருக்கவும்.
Wednesday, 16 December 2009
இந்தியாவைச் சங்கடத்திற்கு உள்ளாக்கினாராம் சரத் பொன்சேக்கா.
இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் ஒரு போர் நிறுத்தத்தை உண்டாக்கி சரணடைய முயன்ற விடுதலைப் புலிகளின் அரசியற் துறைப் பிரிவினரையும் படுகாயப் பட்ட போராளிகளையும் பாதுகாப்பாக சரணடைய அமெரிக்கா நோர்வே மூலம் இலங்கைக்குக் கொடுத்த அழுத்தம் இந்தியாவின் உதவியுடன் தவிர்ககப் பட்டது என்று சரத் பொன்சேக்கா வெளியிட்ட தகவல் இந்தியாவின் கபடத்தை அம்பலப் படுத்தியுள்ளது.
அமெரிக்க முயற்ச்சி திரை மறைவில் நடந்தது. அதற்கு முன்னர் பிரான்ஸ் தான் பிரித்தானியாவுடன் இணைந்து ஒரு கடற்படை நடவடிக்கை மூலம் போர் முனையில் அகப்பட்டிருக்கும் அப்பாவிப் பொது மக்களைப் பாதுகாக்கத் தயாரானது. இம்முயற்ச்சி இந்தியாவால் தடுக்கப் பட்டதாக நம்பப் படுகிறது. இதற்கு எதிராக இந்தியா சீனாவுடன் தொடர்பு கொண்டு இந்திய சீன கடற்படைகள் பிரான்ஸின் நடவடிக்கைக்கு எதிராக தயாரானதாகவும் நம்பப்படுகிறது. இது நடந்திருந்தால் சுமார் 55,000 அப்பாவி மக்கள் உயிரிழப்பில் இருந்து காப்பாற்றப் பட்டிருக்கலாம்.
பல நோர்டிக் நாடுகள் இறுதிப் போரில் போர் நிறுத்தம் வேண்டி இலங்கையுடன் தொடர்பு கொண்டது உண்மை. இலங்கைக்குப் பின்னால் இந்தியா நின்றபடியால் அவை எல்லாம் பயனற்றுப் போயின.
இலங்கையின் டெய்லி மிரர் பத்திரிகைச் செய்தி: It is common knowledge that it was America which was behind the International pressure brought to bear during the tail end of the war adverted to by Gotabaya Rajapaksa . It was America’s objective to bring about a ceasefire during the final phase of the war. When this was unsuccessful, America sought to save the Tamil Tiger political wing leaders as a last ditch effort . America also gave instructions via Norway to the political wing leaders of the Tamil Tigers to come forward with white flags in order to save them. Later , however their dead bodies were shown by the security division. The International Human rights Organization accused that the dead Tamil Tiger leaders were killed by the Security Division when they came to surrender at the behest of America. The security Division of course repudiated these charges. The Tamil Tiger Diaspora charged that America should take full responsibility for these murders. America had no alternative but to remain silent in the face of these charges.
நடேசனினும் புலித்தேவனும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் மூலமும்தமது ஆதரவாளர்கள் மூலமும் ( கனிமொழி, திருமாவளவன், ஜகத் கஸ்பார்) சரணடையும் வேண்டுகோள் விடுத்த போது. அதற்குக் கால அவகாசம் இல்லை என்று கையை விரித்த இந்தியா அவர்களை இலங்கை அரசிடம் சரணைடையும் படி பணித்தது. வங்களதேசப் போரின் போது அப்போது பாதுகாப்பு மந்திரி ஜெகஜீவன் ராமின் கூற்றுப் படி இந்தியாவால் ஒன்பது நிமிடங்களில் இலங்கையை தனது கட்டுப் பாட்டில் கொண்டுவர முடியும். அப்போது அந்த நிலைமை என்றால் இப்போது இன்னும் குறுகிய நேரத்தில் சரணடைய முயன்ற புலிகளின் அரசியற் துறையை இந்தியாவால் காப்பாற்றி இருக்க முடியும் ஆனால் செய்யவில்லை.
இந்த உண்மைகள் வெளிவந்தமை இந்தியாவை சங்கடத்திற்கு உள்ளாக்கி இருப்பதாக டெய்லி மிரரி தெரிவிக்கிறது.
டெய்லி மிரர் மேலும் தெரிவிப்பது:
America classified these assassinations of those who came to surrender as war crimes. It sought to bring war crime charges against SL before the United Nations Human rights Commission (UNHRC) when India joined its regional enemy China to ward off these charges . The UNHRC had questioned whether India’s restlessness and uneasiness whenever war crime charges are levelled against SL is because there is a skeleton in the cupboard of the Delhi’s South Block. If that is true , Delhi South block has to become uneasy and worried by the disclosures made by Gen. Sarath Fonseka in regard to the occurrences during the last days of the war.
அமெரிக்கா சரணடைய வந்தவர்களை கொன்றமையை போர் குற்றமாகக் கருதுகிறது.
ஆனால் இந்தியா அப்படி எந்த அறிக்கையும் வெளிவிடவில்லை. இலங்கையில் நடந்தது இனக்கொலை என்பத இந்திய மாநிலங்கள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப் பட்டது. வட இந்திய ஊடகங்கள் கூட இலங்கையில் போர்குற்றம் இழைத்ததைச் சுட்டிக் காட்டவில்லை. தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் ஹிந்துப் பத்திரிகை எப்போதும் சிங்களவர்கள் பக்கமாக நின்று எழுதும். பலநாடுகள் இலன்கையில் போர் குற்றம் நடந்திருக்கிறது அல்லது நடந்த்தா என்பதற்கான விசாரணை தேவை என்று கூறுகின்றன. இந்தியத் தரப்பில் இருந்து அப்படி ஒரு கருத்தும் வெளிவரவில்லை. மாறாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கழகத்தில் இலங்கையை சீனாவுடன் இணைந்து பாராட்டியது.
இந்திய உளவுத்துறை போர் முடிந்த பின் தமிழர்களுக்கு உதவ யாரும் இல்லை என்ற கருத்தை தமிழர்கள் மத்தியில் பரப்ப முயன்று வருகிறது. ஆனால் அது உண்மை அல்ல என்று நாம் அறிவோம். உண்மையில் தமிழர்களுக்கு உதவ வந்தவர்களை எல்லாம் தடுத்தது இந்தியாதான்.
உதவிகளைத் தடுத்ததும் இந்தியா கெடுத்ததும் இந்தியா
அண்மையில் இலண்டன் வந்த திருமாவளவனும் தமிழருவி மணியனும் உங்களுக்கு உதவ யார் வந்தனர், நோர்வே வந்ததா, பிரித்தானியா வந்ததா என்று கேள்விகளை எழுப்பினர். அவர்கள் தங்கள் "எஜமானர்களின்" எண்ணத்தைப் பிரதி பலித்தனர். உதவந்தவர்களைத் தடுத்ததும் உதவிகளைக் கெடுத்ததும் இந்தியா. ஆனால் தமிழர்களுக்கு நன்கு தெரியும் தங்கள் முதலாம் எதிரி இந்தியா என்று.
டெய்லி மிரர் இன்னும் சொல்வது: Delhi South Block’s uneasiness and worry were heightened when Gen . Sarath Fonseka decided to seek candidature for the forthcoming Presidential elections against Mahinda Rajapaksa in much the same way as when war crime charges were levelled against SL. There are reports that when Gen. Sarath Fonseka went to America after meeting US Ambassador in SL , he was to be questioned on war crime charges. It is significant to note that the Indian media began relentlessly criticizing Sarath Fonseka after he returned.. These criticisms turned most vicious after he announced his candidature for the forthcoming Presidential elections. A frontline Indian media went even so far as to give undue prominence and coverage to a news item provided by the SL Govt. that , after Kilinochchi was liberated.
டெல்லியின் நிலைப்பாடு தெற்குக் குழுவினருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தி உள்ளதாம். அவர்களுக்கு சூடு சுரணை இருந்தால்தானே அசௌகரியப்படுவர்கள். வாழை இலைக்கு மேல் புரியாணியும் கிழ் பணமும் வைத்து தேர்தலில் வென்று விடலாம். எத்தனை இலட்சம் தமிழன் செத்துத் தொலைந்தால் என்ன. தமிழ்நாட்டின் முன்னணி அரசியல்வாதிகளில் எத்தனை பேர் தமிழர்கள்?
டெய்லி மிரர் சொல்வதுபோல் இந்தியாவிற்கு எந்தவிதமான சங்கடங்களும் இல்லை. இலங்கைத் தமிழினக் கொலையில் யார் முக்கிய பங்காளி என்பதை யாவரும் அறிவர்.
இது இவ்வாறிருக்க கொழும்பில் இருந்து வெளிவரும் Island பத்திரிகை வெளியிட்ட செய்தி:
The former Gajaba Regiment veteran (Maj. General Shavindra Silva ) said that almost all major media groups, including the BBC, CNN, Al Jazeera and the influential Indian press sought his comments though he did not respond. According to him, the Indian press had emphasised that he could not turn a blind eye to criticism of his conduct as it was a major issue in India. The bottom line is that even if the Opposition candidate had disputed the news item, those who sided with the LTTE during Sri Lanka’s war on terror would now go on the offensive. He pointed out that the unsubstantiated allegation would help the Tamil Diaspora and peace merchants to revive their campaign against Sri Lanka.
சரத் பொன்சேக்கா கூறியவற்றை மறுதலிக்கும்படி பல பத்திரிகைகள் Maj. General Shavindra Silva அவர்களை வற்புறுத்தியதாம். போர் குற்றங்களை மூடி மறைப்பதில் இந்தியப் பத்திரிகைகளுக்கு ஏன் இந்த அக்கறை?
சரத் பொன்சேக்கா பதவிக்கு வந்தால் இன்னும் பல இந்தியச் சதிகள் அம்பலமாகும்.
இந்தியாவிற்கு எதிராக களமிறங்கும் பாக்கிஸ்த்தான்
சரத் பொன்சேக்கா இந்தியாவிற்கு எதிரானவர் பக்கிஸ்த்தான், சீனா, ரசியா போன்ற நாடுகளுடன் நல்ல நட்புறவைப் பேண விரும்புபவர் என்று இந்திய வெளியுறவுத் துறையினர் நம்புவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சரத் பொன்சேக்கா இராணுவத்தில் அதிக செல்வாக்குப் பெறுவதை இந்தியா விரும்பாமல் அவர் ஒரு இராணுவ சதிப் புரட்சி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற முயன்றார் என்று ஒரு பொய்க் கதையை இந்தியா கட்டவிழ்த்து விட்டு அவரை இராணுவத் தளபதி பதவியில் இருந்து அகற்றியது என்று பாக்கிஸ்த்தானியப் பத்திரிகையான த நேஷன் தெரிவித்துள்ளது. அத்துடன் இலங்கை இராணுவத்தின் புதிய தளபதி சரத் பொன்சேக்காவுடன் ஆலோசிக்காமல் நியமிக்கப் பட்டதாகவும் அப் பத்திரிகை தெரிவிக்கிறது. போரில் இலங்கை வெற்றி பெற்று அங்கு சுமூக நிலை திரும்புவதை இந்தியா விரும்பவில்லை எனவும் அது இலங்கை மீதான இந்தியப் பிடியைத் தளர்த்தும் எனவும் த நேஷன் பத்திரிகை தெரிவித்துள்ளது.
த நேஷன் மேலும் தெரிவிக்கும் முக்கிய கருத்துக்கள்
பாக்கிஸ்த்தானின் நஞ்சுத் தன்மையான பத்திரிகை இரு உண்மைகளை இந்தியாவிற்கு எதிராக கருத்து தெரிவிக்கிறபோது வெளிக் கொண்டுவந்துள்ளது:
India was also displeased with Sri Lankan leadership for the killing of large number of Tamils during the war and for not fully implementing the 13th amendment that meant grant of autonomy to Tamils in the North and East..
If he loses, still India would be happy, as New Delhi is largely responsible for Tamil’s ethnic cleansing, a top government official in Colombo said, requesting that his name not be mentioned stating that the issue is very sensitive and confidential.
இலங்கையில் பல தமிழர்கள் கொல்லப் பட்டதையும் இலங்கையில் நடந்தது ஒரு இனச் சுத்தீகரிப்பு என்பதையும் பாக்கிஸ்த்தானியப் பத்திரிகை வெளிக் கொணர்ந்துள்ளது.
பாக்கிஸ்த்தானியப் பத்திரிகை சரத் பொன்சேக்காவிற்கு எதிராக இந்தியா செயற்பட்டது என்று செய்தியை பரப்புவதன் மூலம் அவரது செல்வாக்கை சிங்கள மக்கள் மத்தியில் உயர்த்தலாம் என்று நம்புகிறது. அந்த வகையில் அமெரிக்கா சீனா இந்தியாவுடன் இப்போது பாக்கிஸ்த்தானும் இலங்கை குடியரசுத் தலைவர் தேர்தலில் இறங்கியுள்ளது.
இதேவேளை இந்தியாவிற்கும் ராஜபக்சே குடும்பத்திற்கு இடையில் உள்ள உறவு திருப்திகரமாக இல்லை. சீனா ஒருபோதும் இலங்கைத் தேர்தலில் நேரடியாகத் தலையிடுவதில்லை. எவர் வென்றாலும் அவருடன் நல்ல உறவை பேணுவதே சீனாவின் நோக்கம். அது சிங்களவர்களிடையே பலதரப்பினரிடமும் நல்ல உறவைப் பேணுகிறது. தேர்தலிலும் அதையே செய்கிறது. பலதரப்பிற்கும் சீனா உதவி செய்வதாக நம்பப்படுகிறது. தேர்தலின் பின்னர் இந்தியாவின் இலங்கை மீதான பிடி முற்றாகவே இல்லாமல் போகும்.
Tuesday, 15 December 2009
சரத் பொன்சேக்கா பல்டிஅடிக்கக் காரணம் என்ன?
புரட்டு + பொய் = சரத் பொன்சேக்கா.
சரணடைய வந்த நடேசனையும் புலித்தேவனையும் குடும்பத்தினருடன் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டது இலங்கைக் குடியரசுத் தலைவரின் சகோதரர் பசில் ராஜபக்சே என்று இலங்கை குடியரசுத் தலைவர் வேட்பாளரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேக்கா கூறியதாக முதலில் தகவல் வந்தது. அது உலகம் முழுக்க ஒரு அதிர்வலைகளை ஏற்படுத்த ஆரம்பித்தது.
திடீரென்று அதை சரத் பொன்சேக்கா மறுத்ததுமல்லாமல் சகல படை நடைவடிக்கைகளுக்கும் தான் பொறுப்பு என்றார். அத்துடன் யாரும் சரணடைய வெள்ளைக் கொடியுடன் வரவில்லை என்றார்.
இக்கட்டான நிலையில் வேட்பாளர்கள்.
இப்போது குடியரசுத் தலைவர் வேட்பாளர்களான சரத் பொன்சேக்காவிற்கும் மஹிந்த ராஜபக்சவிற்கும் ஒரு இக்கட்டான சூழ்நிலை. போரை நான் எப்படி நடாத்தினேன் எப்படி வென்றேன் என்று விளக்கினால் சிங்களமக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும் அதே வேளை தமிழ் மக்களின் வாக்குகளை இழக்க வேண்டிவரும். போர் குற்றம் தொடர்பாக ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுத்தாலும் காட்டிக் கொடுத்தவர் சிங்கள மக்களின் வாக்குகளை இழப்பர். காட்டிக் கொடுக்கப் பட்டவர் சிங்களவர்களின் வாக்குகளை பெறுவர். தமிழ் மக்கள் விடயத்தில் இது தலை கீழாக இருக்கும்.
சரத் மீது இரு முனை அழுத்தம்.
சரத் பொன்சேக்கா முதலில் தமிழர்களின் வாக்குக்களை மஹிந்தவிற்கு விழாமற் பண்ணவே பசில் சரணடைய வந்தவர்களைச் கொல்ல உத்தரவிட்டார் என்று அறிக்கை விட்டதாகக் கூறப் படுகிறது. பின்னர் அவர் இரு முனைத் தாக்குதலுக்கு உள்ளானார். ஒன்றி ராஜபக்ச சகோதரர்களின் சட்ட நடவடிக்கை மிரட்டல். மற்றது அவரது ஆதரவாளர்களின் ஆட்சேபனை. சரத் பொன்சேக்காதான் போரை வென்றார் என்ற அடிப்படையில் தான் அவரை எதிர் கட்சிகள் தமது பொது வேட்பாளராக அறிவித்தன. புலித்தேவனையும் நடேசனையும் கொன்றது பொன்சேக்கா அல்ல பசில் ராஜபக்ச தான் என்று அறிந்தால் சிங்கள மக்கள் ராஜபக்சவை ஆதரிப்பர்.. இது சரத் பொன்சேக்காவின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும். இதனால் சரத் பொன்சேக்கா ஒரு பல்டி அடித்து முழுக் கொலைகளூக்கும் தானே உத்தரவிட்டதாகவும் வேறு எவரும் உத்தரவிடவில்லை என்றும் அறிக்கை விட்டார். அவர் விட்ட அறிக்கை:
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் உயர் இராணுவ அதிகாரிகள் முதல் கடை நிலை சிப்பாய்கள் வரையில் மேற்கொண்ட சகல நடவடிக்கைகளுக்குமான பொறுப்பைத் தாம் ஏற்றுக்கொள்கிறார் என அவர் தெரிவித்தார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் யுத்த மரபுகள் மீறப்படவில்லை எனவும், சர்வதேச சட்டங்களுக்கு அமைவாகவே யுத்தம் முன்னெடுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கரணத்தின் காரணம்.
உயர் இராணுவ அதிகாரிகள் முதல் கடை நிலை சிப்பாய்கள் வரையில் மேற்கொண்ட சகல நடவடிக்கைகளுக்குமான பொறுப்பைத் தாம் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்ததன் மூலம் முழுவெற்றிக்கான காரணகர்த்தா தானே என சரத் பொன்சேக்கா பறை சாற்றிக் கொண்டார்.
இப்போது மற்றத் தரப்பு என்ன சொல்லப் போகிறது?
==================================================
இத்தாலியானுக்கு நடந்தது இத்தாலிச் சனியனுக்கு நடக்காதா?
தமிழ் மக்களின் ஏக்கம் இப்போது இத்தாலியானுக்கு நடந்தது இந்த்தாலிச் சனியனுக்கு நடக்காதா என்பதுதான்.
கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட இத்தாலிய பிரதம மந்திரி சில்வியோ பெர்லுஸ்கோனி மீது ஒருவர் பலத்த தாக்குதல் நடாத்தினார். இதனால் அவரது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. உலோகத்தாலான சிலை ஒன்றினாலேயே இத்தாலிய பிரதம மந்திரி சில்வியோ பெர்லுஸ்கோனி மீது தாக்குதல் மேற்கொள்ளப் பட்டது. அவரது பற்களில் ஒன்று அல்லது இரண்டு சேதமடைந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது. அவரைத் தாக்கியதாகச் சந்தேகிக்கப் பட்டவர் ஒரு 42வயது சித்த சுவாதினமற்றவர்.
இந்தியாவிலும் எத்தனை சித்த சுவாதீனமற்றவர்கள் இருந்தும் என்ன பயன்?
Monday, 14 December 2009
தமிழர்களைத் துண்டாடும் இந்தியா.
ஐம்பதுகளில் இந்தியா மலையகத் தமிழர்களையும் இலங்கைத் தமிழர்களையும் ஒன்று படமால் தடுத்தது. எழுபதுகளில் தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தை தீவிரப் படுத்தியபோது இந்தியா பல ஆயுதக் குழுக்களை தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தி தமிழர்களிடையே சகோதரப் போரை ஏற்படுத்தியது. அவற்றை எல்லாம் முறியடித்து தமிழீழ விடுதலைப் புலிகள் வளர்ச்சி அடைந்த போது பல தடவை அவர்களுக்கிடையில் பிளவுகளை இந்தியா ஏற்படுத்தியது. அவற்றில் முக்கியமானவை மாத்தையா பிளவும் கருணாபிளவும்.
மேற்குலகில்
இப்போது இந்தியா புலம் பெயர்ந்த தமிழர்களைத் துண்டாடும் முயற்ச்சியில் இறங்கையுள்ளது. இந்திய உளவாளிகள் இப்போது பலமுனைகளில் ஐரோப்பிய நாடுகளில் செயற்படுகிறார்கள். பிரித்தானியாவில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று கூறிக் கொண்டு இவர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். பிரித்தானியாவில் 2009 மே மாதத்திற்கு முன்னர் இவர்கள் தமிழ் உணர்வாளர்கள் நடாத்திய நிகழ்வுகளில் கலந்து கொண்டது கூட இல்லை. ஆனால் இப்போது வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் முன்னிற்கின்றார்கள்.
இலங்கையில்
இலங்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை மஹிந்த ராஜபக்சே என்ற அரக்கனை ஆதரிப்பதாக தெரிவிக்கவில்லை. இது இந்தியாவிற்கு ஏமாற்றம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தீவிர தமிழின உணர்வாளராகக் கருதப் படுபவர் சிவாஜிலிங்கம் அவர்கள். இவருக்கு எதிராக இவரது சகாக்களே குற்ற சுமத்த ஆரம்பித்து விட்டனர்.
வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கம் வகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் எதிர்வரும் தேர்தலில் பொது வேட்பாளராக நிற்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதற்காக சிவாஜிலிங்கம் பாரிய பணத்தொகையையும் பெற்றுக் கொண்டதாக அவர் குற்றம் சுமத்தியிருந்தார். இந்த அளவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிளவு வரக் காரணம் என்ன? இவர்களை இந்தியாவைத் தவிர எவரும் பிளவு படுத்த முடியாது.
தமிழர்கள் இனியாவது விழிப்பாக இருக்க வேண்டும்
Sunday, 13 December 2009
இறுதிப் போர் உண்மைகள்: காணொளி
வன்னியில் இறுதிப் போரில் நடந்த உண்மைகளை உள்ளடக்கிய காணொளிக்காட்சி வெளிவந்துள்ளது. அதன் படி:
முடங்கிக் கிடந்த போரை சிங்களவனுக்கு சாதமாக்கிய
இந்திய இரசாயன ஆயுதங்கள்.
மன்னாரை கைப்பற்றிய சிங்கள இராணுவம் அங்கிருந்து முன்னேறமுடியாமல் திணறிக் கொண்டிருந்தனர். பல சிறப்புப் படையணிகளஐச் சேர்ந்த சிங்களவர்கள் கொல்லப் பட்டனர். சிறப்புப் படையணிகளை சிதறடித்து போரை தமக்குச் சாதகமாக மாற்றுவது புலிகளின் திட்டம். அக்கிராயனை நோக்கி முன்னேற முடியாமல் சிங்கள இராணுவம் தவித்துக் கொண்டிருந்த வேளை இந்தியா வழங்கிய இரசாயன ஆயுதங்கள் அக்கிராயனைக் கைப்பற்ற சிங்களவர்களுக்கு உதவின
மூன்று அணிகளாகப் பிரிந்த புலிகள்.
ஆறு நாடுகளை எதிர் கொண்டு வெற்றி கொள்ள முடியாது என்று உணர்ந்த விடுதலைப் புலிகள் போராட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் இறுதிக் கட்டத்தில் விடுதலைப் புலிகள் தம்மை மூன்று வகையாகப் பிரித்துக் கொண்டனர்:
1. செய் அல்லது செத்து மடி என்ற அடிப்படையில் சிங்களப் படையுடன் மோதும் அணி.
2. ஊடறுத்துத் தாக்கி தப்பிச் செல்லும் அணி.
3. சிங்களவர்களிடம் சரணடைந்து உலகிற்கு உண்மையை உணர்த்தும் அணி. இதில் பெரும்பாலும் காயப் பட்டவர்கள் அடங்குவர்.
இரசயான ஆயுதத்தால் முறியடிக்கப் பட்ட திட்டம்
புதுக்குடியிருப்புக்கே வடக்கே சிங்கள இராணுவத்தை முறியடித்து சிங்கள படைகளின் அணியின் பின்பு சென்று அங்கிருந்து தாக்குதல் நடாத்தும் விடுதலைப் புலிகளின் திட்டத்தை துரோகிகளின் காட்டிக் கொடுப்பால் அறிந்த சிங்களவர்கள் இரசாய ஆயுதத்தை மீண்டும் பவித்து 389 புலிகளைக் கொன்றனர்.
உயிருடன் தப்பிய பிரபாகரன்.
பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனியைக் களத்தில் நிற்க வைத்து விட்டு300 கரும்புலிகள் 3000கிலோ வெடி மருந்துகளுடன் தாக்கி பிரபாகரனைத் தப்பவைத்தனர். இதில் சசி மாஸ்டர் கொல்லப் பட்டார். சசி மஸ்டர் பிரபாகரன் போல் தோற்றம் அளிப்பவர். அவர் உடலையே இலங்கை இராணுவம் பிரபாகரன் உடல் என காட்சிப் படுத்தியது. காயப் பட்ட மூத்த தளபதி சொர்ணம் சயனைட் அருந்தி வீரச் சாவு அடைந்தார்.
தப்பி ஓடிய பல விடுதலைப் புலிகள்.
விடுதலைப் புலிகளின் பல படையணிகள் பலத்த எதிர்த் தாக்குதல் நடத்தி சிங்களப் படைகளைப் பல கிலோமீற்றர் வரை பின்வாங்கச் செய்து வன்னிக்குத் தெற்காக தப்பிச் சென்றனர்.
இறுதியாகத் தப்பிச் சென்ற பொட்டு அம்மான்.
பிரபாகரன் முதலில் தப்பிச் செல்ல களத்தில் இருந்த பொட்டு அம்மானும் தப்பிச் சென்றார்.
இந்தியப் படைகள் நேரடியாகக் களத்தில் நின்றன
இறுதிப் போரில் சிங்களவர்களுடன் இந்தியப் படைகளும் (தமிழ் பேசுபவர்கள் உட்பட) தமிழர்களுக்கு எதிரான போரில் ஈடுபட்டிருந்தனர்.
இவை அடங்கிய காணொளி:
வாக்குப் போரில் உக்கிரமடையும் சேற்றுப் போர்.
கள்ளர்களுக்குள் சண்டை வந்தால் களவு வெளிப்படும்.
அடுத்த ஆண்டு ஜனவரி 26-ம் திகதி நடை பெறவிருக்கும்இலங்கைக் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் இப்போது தீவிரமடைகின்றது. ஒருதரப்பு மறுதரப்பின் மீது சேறு வாரி வீசும் போரும் தீவிரமடைகின்றது. இந்தப் போரில் தமிழர்களுக்கு ஒரு நன்மை கிடைக்கவிருக்கின்றது. இலங்கையில் நடந்த இனக் கொலை சம்பந்தமான உண்மைகள் வெளிவரத் தொடங்கி இருக்கிறது. முதல் கட்டமாக சரணடையச் சென்ற விடுதலைப் புலிகளின் அரசியல் துறப் பொறுப்பாளர் நடேசன், சமாதானச் செயலர் புலித் தேவன் போன்றோரை போர்விதிகளுக்கு மாறாக சுட்டுக் கொன்ற உண்மை வெளிவந்துள்ளது.
சரத் பொன்சேக்காவிடம் 21 கேள்விகள் என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை Asian Tribune சஞ்சிகையில் வெளிவந்துள்ளது. அக்கேள்விகளில் பெரும்பாலானவை சரத் பொன்சேக்காவின் மகளின் கணவர் தனுன திலகரட்னவின் அமெரிக்க வாழ்க்கை, அவரது அமெரிக்க விசா போன்றவை சம்பந்தமாக இருக்கிறது. அதில் இலங்கை இராணுவத்திற்கான ஆயுதக் கொள்வனவுகளும் உள்ளடங்கியுள்ளது.
இந்தச் சண்டை போதாது இன்னும் பெரிசாக வேண்டுமே!
இந்தச் சேறுவாரி இறைக்கும் போட்டியில் இன்னும் பல உண்மைகள் எமக்குத் தேவை:
- இலங்கை தமிழனக் கொலையில் இந்தியாவின் நேரடிப் பங்களிப்பு.
- காணமற் போனோர்களிற்கு நடந்த உண்மை.
- வன்னி வதை முகாம்களில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறையும் அதில் வெளிநாட்டுத் தொண்டர் நிறுவனங்களின் சம்பந்தமும்.
- வதை முகாம்களில் ஆரம்பத்தில் மக்களுக்கு மனித எச்சங்கள் கலந்த உணவு வழங்கைப்பட்டமை.
- பாவிக்கப் பட்ட இரசாயன ஆயுதங்கள். அவற்றை வழங்கிய நாடுகள் எவை.
- இலங்கை இனக் கொலைக்கு உதவிய நாடுகளின் பட்டியல்.
- உயிருடன் புதைக்கப் பட்ட மக்கள் சம்பந்தமான தகவல்.
- இனக் கொலையில் தமிழினத் துரோகிகளின் தொடர்பு.
பிரபாகரனின் இறப்புத் தொடர்பான உண்மை வெளிவராது.
சேறு வீசும் போட்டியில் உள்ள இருதரப்பும் விடுதலிப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இறப்புச் செய்தியின் பொயத்தன்மையைப் பற்றியோ இலங்கை இராணுவத்தால் காண்பிக்கப் பட்ட சடலம் தொடர்பான மோசடி பற்றியோ வெளிவிடமாட்டாது என்பது உறுதி. அந்த உண்மை வெளிவந்தால் இருதரப்பினதும் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும்.
Subscribe to:
Posts (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...