Saturday, 24 April 2010
இடையால் கதை பேசடி
இதயங்களின் அடிபிடி அடிபிடி
இணைந்தென் அடி பிடி அடி பிடி
உடலதை மடியடி மடியடி
தஞ்சம் என் மடியடி மடியடி
இதழோடு இதழை மூடடி மூடடி
இடையால் கதை பேசடி பேசடி
கண்கள் விடும் கணையடி கணையடி
காமத் தீயணையடி அணையடி
கட்டி இறுக அணையடி அணையடி
சாமத் துணையடி துணையடி
இதழோடு இதழை மூடடி மூடடி
இடையால் கதை பேசடி பேசடி
தடைகளித் துணியடி துணியடி
எதற்கும் துணியடி துணியடி
இணைவதெம் பணியடி பணியடி
காளை முன் பணியடி பணியடி
இதழோடு இதழை மூடடி முடடி
இடையால் கதை பேசடி பேசடி
Friday, 23 April 2010
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் மூக்குடைபட்ட இந்தியா
2008ஆண்டு பிற்பகுதியில் பிரித்தானியாவில் உள்ள சிலஇந்தியக் கைகூலிகள் வெளிநாடுகளில் வாழ் தமிழர்கள் மத்தியில் தமிழர்களுக்கு தனிநாடு வேண்டுமா என்பது பற்றி ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்த வேண்டும் என்று பேசத் தொடங்கிவிட்டனர். இந்திய உளவுத்துறை தமிழர்கள் போராட்டம் தோற்கடிக்கப் பட்டபின் தமிழர்கள் மத்தியில் தனிநாட்டுக்கான ஆதரவு குறைந்துவிடும் என்று கணக்குப் போட்டிருந்தனர். வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் பெரும்பாலான தமிழகள் பங்கெடுக்க மாட்டார்கள் என்று இந்திய உளவுத் துறை கணக்கும் போட்டிருந்தது.
தமிழர்களில் பலர் 1977இல் இலங்கையில் நடந்த தேர்தல் தனிநாட்டிற்கான வாக்கெடுப்பே என்று வாதிட்டனர். இந்தியக் கைக்கூலிகள் தனிநாடு தேவையா இல்லையா என்ற கருத்துக் கணிப்பு நடத்துவதற்கு சரியான ஆதரவு மக்கள் மத்தியில் இல்லை என்பதை அறிந்தவுடன் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள் வாக்கொடுப்பு என்ற கோரிக்கையை தமிழமக்கள் முன் வைத்தனர். சில தீவிர தமிழ்த் தேசியவாதிகளும் இந்த இந்தியக் கைகூலிகளுடன் இணைந்து கொண்டனர். ஆனால் பல தமிழ்த் தேசிய ஆதரவு அமைப்புக்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள் வாக்கொடுப்பை ஆதரிக்கவில்லை. நாடுகடந்த தமிழீழ அரசின் மதியுரைக் குழுவைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள் வாக்கொடுப்பு என்பது எமது போராட்டத்தின் அத்திவாரத்தை அது சரியானதுதான என்று ஆட்டிப் பார்ப்பது போன்றது என்றார். இன்னொருவர் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள் வாக்கொடுப்பு தம் உயிர்களைத் தனிநாட்டுக்காக உயிர் துறந்த பல ஆயிரம் மாவீரர்களின் தியாகங்களைக் கொச்சைப் படுத்துவது போன்றது என்றார். ஆனாலும் இந்தியக் கைக்கூலிகள் விட்டபாடில்லை வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள் வாக்கொடுப்பை நடத்துவதே என்று தீர்மானித்தனர். இந்த வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தால் தமிழ்த்தேசியத்து எதிரான வாதம் பலம் பெற்றுவிடும் என்று உணர்ந்த தமிழ் தேசியத்திற்கு ஆதரவானவர்கள் தாமும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள் வாக்கொடுப்பிற்கு முன்னின்று உழைத்தனர்.
கனடாவில் வாக்கெடுப்பு நடந்த பின் இந்திய ஆரியப் பேய்களின் ஒன்றான கேணல் ஹரிகரன் 300,000 தமிழர்கள் வாழும் கனடாவில் 48,000 தமிழர்கள் மட்டும் வாக்களித்ததை கணக்கில் எடுக்கத் தேவையில்லை என்று பிதற்றினார். ஆனால் 300,000 தமிழர்களில் 60,000 மட்டுமே வாக்களிக்கும் தராதரமும் வசதியும் பெற்றிருந்தனர் என்றும் அவர்களில் 40,000பேர் வரையில் வாக்களிக்கலாம் என்று தாம் எதிர்பார்த்ததாக தெரிவித்த தமிழ்த் தேசியவாதிகள் 48,000பேர் வாக்களித்தது பெரு வெற்றி என்றனர். இதன்பின் இந்தியா ஆய்வாளர்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள் வாக்கெடுப்பு பற்றி வாய்திறக்கவில்லை.
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை கொச்சைப் படுத்த முயன்ற இந்தியாவிற்கு உலகெங்கும் வாழ் தமிழர்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு தங்கள் முழு ஆதரவைத் தெர்வித்து இந்தியாவின் சதியை முறியடித்தனர். இப்போது தமிழர்கள் இன்னொரு இந்தியச் சதியை முறியடிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறார்கள்.
- வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள் வாக்கெடுப்பு என்ற போர்வையில் சில இந்தியக் கைக்கூலிகள் தமிழ்த் தேசியப் போர்வை போர்திக் கொண்டு தமிழர்கள் மத்தியில் ஊடுருவாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை உலகெங்கும் வாழ் தமிழர்களுக்கு உண்டு.
Wednesday, 21 April 2010
நொக்கியா உட்பட iPadஇற்கு போட்டியாக களமிறங்கும் பலர்
பல ஆரம்ப பிரச்சனைக்களுக்கு(teething problem) மத்தியிலும் iPad என்னும் tablet கணனிக்குக் கிடைத்த பலத்த வரவேற்பை அடுத்து பல நிறுவனங்கள் iPadஇற்கு போட்டியாகக் களமிறங்குகின்றன. அவற்றை “iPad killers” என்று அழைக்கின்றன ஊடகங்கள்.
Neofonie, என்னும் ஜேர்மனிய நிறுவனம் WePad என்னும் tablet கணனியை அறிமுகம் செய்யவிருக்கின்றது.
நொக்கியா நிறுவனமும் ஒரு tablet கணனியை இ-நூலக வாசிப்பு வசதிகளை அடிப்படையாகக் கொண்டு அறிமுகம் செய்யவிருக்கிறது.
Microsoft சும்மா இருக்குமா? அதுவும் ஒரு tablet கணனியுடன் களத்தில் iPadஇற்கு போட்டியாக இறங்கவிருக்கிறது.
அடுத்து கூகிள் மட்டும் பார்த்துக் கொண்டு இருக்குமா? அதுவும் தனது ஒரு tablet கணனியுடன் களத்தில் iPadஇற்கு போட்டியாக இறங்கவிருக்கிறது.
Acer, Toshiba and HP ஆகிய நிறுவனங்களும் வரிந்து கட்டிக் கொண்டு வரிசையாக தங்களது tablet கணனியுடன் களத்தில் இறங்கத் தயாரகின்றன.
இவற்றில் Neofonie, என்னும் ஜேர்மனிய நிறுவனத்தின் WePadதான் iPadஇற்கு போட்டியாகக் களமிறங்கும் என எதிர் பார்க்கப் படுகிறது. அது தனது WePadஐ ஆகஸ்ட் மாதத்தில் 450யூரோவிற்கு விற்கவிருக்கிறது. அதன் முக்கிய் அம்சங்கள்:
- 11.6" touchscreen display
- With a massive 11.6” [1366x768] touchscreen
- 1.66 Ghz Atom N450 Processor
- GMA 3150 graphics
- UMTS modem
- Bluetooth
- WLANn
- 1.3mp web camera
- 16 GB storage, 32 GB SD card support
- SIM card slot, 2 USB ports
- GPS optional
- Flash card reader.
iPadஇன் உற்பத்தியாளர்களான ஆப்பிள் பல உற்பத்தி சார் பிரச்சனைகளுக்குள் மாட்டிக் கொண்டுள்ளது. அதனது தூர கிழக்கு நாட்டு உதிரி உற்பத்தியாளர்களின் பிரச்சனையும் ஆப்பிளுக்கு பெரும் தலையிடி. இதை சரியாகப் பயன்படுத்த மற்ற நிறுவனங்கள் விரைந்து தயாராகின்றன.
ஆப்பிளின் போட்டி நிறுவனங்கள் iPadஇன் பலவீனங்களை சரியாகப் புரிந்து கொண்டு தமது கருவிகளை வடிவமைக்கின்றனர். தங்கள் கருவிகளில் காணொளிமூலமான அரட்டை சிறந்த ஒளிப் பதிவுக் கருவி ஆகியவற்றை உள்ளடக்கி iPadஐ திணறடிக்க இருக்கின்றன.
தற்போது ஆப்பிளும் அமேசனும் இ-புத்தகத் துறையில் அரசோச்சி வருகின்றன. அதில் தானும் களமிறங்கும் நோக்கத்தை நொக்கியா கொண்டுள்ளது.
ஆப்பிள் தொலைத்த புத்தம் புது 4G iPhone
ஆப்பிள் நிறுவந்த்தில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் ஆப்பிள் இதுவரை சந்தைக்கு வெளியிடாமல் இரகசியமாகப் பாதுகாத்து வைத்திருந்த 4G iPhoneஐத் தொலைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிளின் பொறியியலாளர் 4G iPhoneகருவியை பரீட்சார்த்தமாக பாவிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் ஒரு மதுபானச் சாலையில் (Gourmet Haus Staudt bar) உள்ள ஆசனத்தில் மறந்து போய் விட்டுச் சென்றுவிட்டார். அதை கண்டெடுத்தவர் அதை பாவிக்கும் அறிவு படைத்தவர். அதைப் பாவித்தும் விட்டார். இதை அறிந்த ஆப்பிள் நிறுவனம் அதை பாவனையில் இருந்து முடக்கிவிட்டது. (Apple remotely disabled the device via the MobileMe service. ) ஆனால் பிரச்சனை அத்துடன் முடியவில்லை. Gizmodo என்ற புதிய கருவிகளை அறிமுகம் செய்யும் நிறுவனம் அந்த 4G iPhoneஐ பத்தாயிரம் டொலர்கள் கொடுத்து வாங்கிவிட்டது. வாங்கியது 4G iPhone சம்பந்தமான தகவல்களை அம்பலப்படுத்தியும் விட்டது. அது அம்பலப் படுத்திய தகவல்கள்:
What's new
• Front-facing video chat camera
• Improved regular back-camera (the lens is quite noticeably larger than the iPhone 3GS)
• Camera flash
• Micro-SIM instead of standard SIM (like the iPad)
• Improved display. It's unclear if it's the 960x640 display thrown around before—it certainly looks like it, with the "Connect to iTunes" screen displaying much higher resolution than on a 3GS.
• What looks to be a secondary mic for noise cancellation, at the top, next to the headphone jack
• Split buttons for volume
• Power, mute, and volume buttons are all metallic
What's changed
• The back is entirely flat, made of either glass (more likely) or ceramic or shiny plastic in order for the cell signal to poke through. Tapping on the back makes a more hollow and higher pitched sound compared to tapping on the glass on the front/screen, but that could just be the orientation of components inside making for a different sound
• An aluminum border going completely around the outside
• Slightly smaller screen than the 3GS (but seemingly higher resolution)
• Everything is more squared off
• 3 grams heavier
• 16% Larger battery
• Internals components are shrunken, miniaturized and reduced to make room for the larger battery
தற்போது ஆப்பிள் நிறுவனம் தங்கள் கைத் தொலைபேசியைக் கையளிக்கும்படி Gizmodoவிற்கு கடிதம் அனுப்பியுள்ளது. இனிச் சட்டப் பிரச்சனைகள் தொடரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
Monday, 19 April 2010
காற்றில் இணைந்த நட்பு கலைந்தோடியது
நேற்றோரு நட்பால் நெகிழ்ந்திருந்தேன்
ஊற்றெடுத்த அன்பால் மகிழ்ந்திருந்தேன்
பாட்டோடு பொருளாயிருந்தோம்
காற்றோடு காற்றாய் கலந்திருந்தோம்
வார்த்தைகளில் இனிய வருடல்
வார்த்தைகளில் உடல்கள் உரசல்
வார்த்தைகளில் இனித்த இதழ்கள்
வார்த்தைகளில் கனிந்த இணைவு
உற்றது உளமாரச் சொன்னால்
அற்றது ஆங்குபொருந்துமென்றார்
கற்றதது மனதில் வந்தது இங்கு
உற்றதை உவகையுடன் உரைத்தேன்
கொதித்தாள் உண்மை கேட்டு வெகுண்டாள்
துரோகியெனத் துவைத்தாள் என் மனதை
என்ன நட்பிதென்று உணருமுன்னே
காற்றில் இணைந்த நட்பு கலைந்தோடியது
கூகிளின் முகில் அச்சிடல்(Cloud Printing) தொழில் நுட்பம்
Click on the above picture to enlarge. பெரிதாக்க படத்தில் சொடுக்கவும்
நீங்கள் செல்லும் இடங்களில் இருந்தபடியே உங்கள் அலுவலகத்திலோ அல்லது விட்டிலோ உள்ள அச்சிடல் கருவிகளில் நீங்கள் எடுக்கும் படங்களை அச்சிட்டுக் கொள்ளும் வசதிகளைக் கூகிள் நிறுவனம் அறிமுகம் செய்யவிருக்கிறது. முகில் அச்சிடல்(Cloud Printing) என்று அழைக்கப்படும் இத் தொழில் நுட்பத்தை கூகிள் கண்டுபிடித்துள்ளது. வழமையாக உங்கள் படங்களை நீங்கள் உங்கள் கணனிக்கு அனுப்பு அங்கிருந்து பின்னர் நீங்கள் அச்சிடவேண்டும். புதிய முறை மூலம் நீங்கள் தொலைவில் இருந்தபடியே உங்கள் அச்சிடல் கருவிகளை இயக்கி அச்சிட்டுக் கொள்ளலாம்.
இந்தத் தொழில்நுட்பம் பற்றி கூகிள் இப்படித் தெரிவிக்கிறது:
In Google Chrome OS, all applications are web apps. Therefore, in designing the printing experience for Google Chrome OS, we want to make sure printing from web apps is as natural as printing from traditional native apps is today. Additionally, with the proliferation of web-connected mobile devices such as those running Google Chrome OS and other mobile operating systems, we don't believe it is feasible to build and maintain complex print subsystems and print drivers for each platform. In fact, even the print subsystems and drivers on existing PC operating systems leave a lot of room for improvement.
Our goal is to build a printing experience that enables any app (web, desktop, or mobile) on any device to print to any printer anywhere in the world.
This goal is accomplished through the use of a cloud print service. Apps no longer rely on the local operating system (and drivers) to print. Instead, as shown in the diagram below, apps (whether they be a native desktop/mobile app or a web app) use Google Cloud Print to submit and manage print jobs. Google Cloud Print is then responsible for sending the print job to the appropriate printer, with the particular options the user selected, and providing job status to the app.
HPயின் அச்சிடுகருவிகள் சென்ற ஆண்டே கைத்தொலை பேசிகளுக்கான முகில் அச்சிடுதல் தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்தது.சென்ற ஆண்டு மே மாதம் HP இப்படி அறிவித்தது:
HP and Research In Motion (RIM)(Nasdaq: RIMM; TSX: RIM) today announced they are establishing a strategic alliance to deliver a portfolio of solutions for business mobility on the BlackBerry® platform.
The solutions, which include support for BlackBerry® Enterprise Server 5.0, are focused on increasing service levels, reducing operations costs and improving productivity for customers.
HP and RIM plan to design and launch offerings to increase the productivity levels of the growing number of global mobile employees, enabling businesses to extend the return on their investments in mobility.
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...