உலக வரலாற்றில் அதிக படைக்கலன்களைத் தாங்கிச் செல்லும் AC-130J Ghostrider என்னும் புதிய போர் விமானத்தை அமெரிக்கா உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. இந்த விமானம் அமெரிக்கப் படைகளுக்கு நெருக்கமாக நின்று செயற்படக்கூடியது. அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினர் இதை ஒரு a badass plane என விமர்சிக்கின்றனர். badass என்பது a tough, uncompromising, or intimidating person எனப் பொருள்படும். இந்த விமானம் வலிமை மிக்கதும் விட்டுக்கொடுக்காததும் பயமூட்டுவதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கின்றார்கள். இன்னும் சில ஆண்டுகளில் பெரும்பாலும் 2017இன் இறுதியில் இந்த வகை விமானங்கள் பாவனைக்கு ் வரவிருக்கின்றன.
சுமை தாங்கி
AC-130J Ghostrider விமானத்தை குண்டு வீச்சு விமானமாக வகைப்படுத்தலாம். அதில் இவை gunships என அழைக்கப்படுகின்றன. 30மில்லி மீட்டர் மற்றும் 105 மில்லி மீட்டர் பீராங்கிகள் பொருத்தப்பட்டிருக்கும். அத்துடன் AGM-176A Griffin missiles என்னும் ஏவுகணைகள், Hellfire ஏவுகணைகள், GBU-39 Small Diameter குண்டுகள் போன்றவற்றைக் காவிச் செல்லக் கூடியவை. இவை மட்டுமல்ல அமெரிக்கா தற்போது உருவாக்கிக் கொண்டிருக்கும் லேசர் படைக்கலன்களையும் இவற்றில் 2020-ம் ஆண்டு பொருத்தப்படவிருக்கின்றன. இதன் six-bladed propellers பெரும் பாரத்தைத் தூக்கிச் செல்லும் வலுவை இதற்குக் கொடுக்கின்றன. கணனிகள் மூலம் இயக்கக் கூடிய smart weaponsகளும் இதில் இருந்து வீச மூடியும் வகையில் புதுமைப்படுத்தப்பட்டுள்ளது.
குண்டு மழை
லொக்கீட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட AC-130 விமானங்களுக்கு என ஒரு நீண்ட வரலாறு உண்டு. எதிரியின் மீது குண்டு மழை பொழிவதற்கு என இவை உருவாக்கப் பட்டன. எதிரியின் இலக்கைச் சுற்றி இவை பறந்து கொண்டு இவற்றின் பக்கவாட்டில் இருக்கும் பீராங்கியில் இருந்து இலக்கின் மீது குண்டு மழை பொழிந்து அதை நிர்மூலமாக்கும். 2007-ம் ஆண்டு போபர்ஸ் பீரங்கிகளைத் தாங்கிச் செல்லக் கூடியவையாக மிள் வடிவமைக்கப்பட்டன. 2010-ம் ஆண்டு துல்லியமாகத் தாக்கக் கூடிய குண்டுகள் இவற்றில் பாவிக்கப்பட்டன. 2011-ம் ஆண்டு AC-130W Stinger II விமானங்கள் உருவாக்கப்பட்டன.
ரடார்களும் AC-130J Ghostriderஉம்
இந்த வகை விமானங்களின் பின்னடைவாக இவற்றின் high signatures and low airspeed கருதப்படுகின்றன. அதாவது எதிரியின் ரடார்களால் இலகுவில் இனம் கண்டுகொள்ளும் தன்மையும் குறைவான வேகத்தில் பறப்பதும் இவற்றின் குறைபாடுகளாகும். குறைவான வேகத்தில் பறக்கும் விமானங்களைச் சுட்டு வீழ்த்துவது இலகுவானதாகும். இனி வரும் காலங்களில் ஸ்ரெல்த் தொழில் நுட்பம் இவற்றில் அறிமுகப்படுத்தப் படவுள்ளன. தற்போது ஆப்கானிஸ்த்தான், ஈராக் போன்ற தொழில்நுட்ப வளர்ச்சியடையா படைகளுக்கு எதிராக AC-130 விமானங்கள் சிறப்பாகச் செயற்படுகின்றன. ஆப்கான் போர் முடிந்தவுடன் AC-130 விமான உற்பத்தி நிறுத்துவதாக திட்டமிடப் பட்டிருந்தது. ஆனால் இரசியா. சீனா போன்ற தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த படையினருக்கு எதிராகவும் பாவிக்கக் கூடிய வகையில் புதிய AC-130J Ghostrider விமானங்கள் உருவாக்கப்பட்டுவருகின்றன.
Thursday, 27 October 2016
Monday, 24 October 2016
ஐ எஸ்ஸைத் தோற்கடிப்பது ஈராக்கில் அமைதியைக் கொண்டு வருமா?
சிரியாவின்
மூன்றில் இரு பகுதி நிலப்பரப்பையும்
ஈராக்கின் அரைப்பங்கு நிலப்பரப்பையும்
தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த அபூபக்கர் அல் பக்தாடி
தலைமையிலான ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பினர்
தற்போது பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். ஐ எஸ் அமைப்பினர் 2014-ம் ஆண்டு ஜூன்
மாதம் ஈராக்கில் மிகக் கடுமையான
தாக்குதலைத் தொடுத்தனர். 2014-ம் ஆண்டு ஓகஸ்ட்
மாத ஆரம்பத்தில் ஈராக்கிலும் சிரியாவிலும் பத்துக்கு மேற்பட்ட நகரங்களைக்கொண்ட பெரு நிலப்பரப்பைத் தமது
கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். ஈராக்கியப் படையினருக்கு
அமெரிக்கா வழங்கியிருந்த பல படைக்கலன்களையும் பார ஊர்திகளையும் ஐ
எஸ் அமைப்பினர் கைப்பற்றியதுடன் சதாம் ஹசேயினின் முன்னாள்
படைத்துறை வீரர்களையும் நிபுணர்களையும் தம்முடன்
இணைத்துக் கொண்டனர். தமது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் அவர்கள் இஸ்லாமிய
அரசையும் நிறுவினர்.
குர்திஷ் தலைநகரில் அஸ்டன் கார்ட்டர்
அமெரிக்காவின் பாதுகாப்புத் துறைச் செயலர் அஸ்டன் கார்ட்டர் 23-10-2016 ஞாயிற்றுக் கிழமை ஈராக்கில் குர்திஷ் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தின் தலைநகராகக் கருதப்படும் எர்பிலில் ஒரு கூட்டம் நடத்தினார்.
குர்திஷ் தலைநகரில் அஸ்டன் கார்ட்டர்
அமெரிக்காவின் பாதுகாப்புத் துறைச் செயலர் அஸ்டன் கார்ட்டர் 23-10-2016 ஞாயிற்றுக் கிழமை ஈராக்கில் குர்திஷ் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தின் தலைநகராகக் கருதப்படும் எர்பிலில் ஒரு கூட்டம் நடத்தினார்.
மொசுல் முற்றுகை
தற்போது அமெரிக்கா
ஈராக்கில் ஐ எஸ் அமைப்பினரின் கடைசிப் புகலிடமாகக் கருதப்படும் மொசுல் நகரை
கைப்பற்ற தனது வியூகத்தை வகுத்துள்ளது. முப்பதினாயிரம் ஈராக்கிய அரச
படைகள் நான்காயிரம் குர்திஷ் மக்களின் பெஸ்மேர்கா போராளிகள் அமெரிக்கப்
போர்விமானங்களின் குண்டு வீச்சுத் தாக்குதல் ஆதரவுடன் ஈராக்கின் மொசுல்
பிராந்தியத்தின் ஐ எஸ் அமைப்பினரின் வசமிருக்கும் பகுதிகளை மீட்கப் போர்
தொடுத்துள்ளனர். இவர்களுடன் அமெரிக்காவின் சிறப்பு அதிரடிப் படையினரும் ஈராக்கின்
பயங்கரவாத எதிர்ப்புப் படையணியும் இணைந்து கொள்வார்கள். மொசுலில் உள்நாட்டு
மற்றும் வெளிநாட்டுப் போராளிகள் உட்பட எண்ணாயிரம் ஐ எஸ் போராளிகள் இருப்பதாக
நம்பப்படுகின்றது. மொசுலில் தமது கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசம் சுற்றிவளைக்கப்
படும் என அறிந்த ஐ எஸ் அமைப்பினர் நிலத்தின் கீழ் சுரங்கப் பாதைகளை அமைத்துள்ளனர்.
ஹமாஸ் அமைப்பினர் காசா நிலப்பரப்பில் நிலத்தின் கீழ் அமைத்துள்ள சுரங்கப் பாதைகள்
அவர்களை இஸ்ரேலிடமிருந்து பாதுகாக்கின்றது. அவர்களுக்கான சுரங்கத் தொழில்நுட்பம்
வட கொரியாவில் இருந்து ஈரானால் பெற்றுக் கொடுக்கப் பட்டதாக நம்பப்படுகின்றது.
நிலக்கீழ் சுரங்கப் பாதைக்குள் போர் புரிவதற்கான தொழில்நுட்பத்தை அமெரிக்காவும்
இஸ்ரேலும் இணைந்து உருவாக்கத் தொடங்கிவிட்டன. அது எந்த அளவில் தற்போது இருக்கின்றது
என்பது பெரிதளவில் வெளிவரவில்லை. மொசுல் நகர் கைப்பற்றப் படும் போது கிடைக்கும் உளவுத்
தகவல்களை ஆய்வு செய்ய அமெரிக்கா தனது உளவுத் துறை நிபுணர்களை ஈராக்கிற்கு அனுப்பியுள்ளது.
மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் தற்போது உள்ள
கொதிநிலைக்கான காரணங்கள்:
1. இஸ்ரேலின் பாதுகாப்பான இருப்பிற்கு அமெரிக்கா செய்யும்
சதிகள்.
2. எரிபொருளின் சீரான விநியோகத்தைப் பாதுகாக்க அமெரிக்கா
எடுக்கும் நடவடிக்கைகள்
3. இஸ்லாமியப் “பயங்கரவாதத்திற்கு” எதிரான் போர் எனச்
சொல்லிக்கொண்டு அமெரிக்கா செய்யும் படை நடவடிக்கைகள்.
4. சவுதி அரேபியாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பிராந்திய
ஆதிக்கப் போட்டி.
5. சுனி இஸ்லாமியர்களுக்கும் சியா இஸ்லாமியர்களுக்கும்
இடையிலான மோதல்கள்.
6. குர்திஷ் மக்களுக்கு எதிராகப் பல்வேறுதரப்பினர் செய்யும்
இனக்கொலை.
ஈராக்கின் வட
பகுதியையும் சிரியாவின் வட
பகுதியையும் தன்னுடன் இணைக்க துருக்கி
விரும்புகின்றது. சியா முஸ்லிம்களைப்
பெரும்பான்மையாகக் கொண்ட ஈராக்கில் சவுதி
சுனி முஸ்லிம்கள் ஆட்சி நடத்த வேண்டும்
எனக் கருதுகின்றது. ஈரான் அங்கு சியா முஸ்லிம்களின் ஆட்சி நடப்பதை
விரும்புகின்றது. இவற்றால் சவுதி அரேபியா,
ஈரான், எகிப்து, துருக்கி ஆகிய
நாடுகளின் ஆட்சியாளர்களிடையே ஒரு பிராந்திய
ஆதிக்கப் போட்டி நிலவுகின்றது. ஈரானைப் போல் ஒரு அரபு நாடு அல்லாத துருக்கி அரபுப்
பிரதேசத்தின் வடக்கில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட விரும்புகின்றது. அமெரிக்கா
மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் தனது கேந்திரோபாயத்
தரகர்களாக சவுதி, எகிப்து, துருக்கி ஆகிய நாடுகள் இருக்க வேண்டும் என
விரும்புகின்றது.
ஏமாற என்றும் தயாரான குர்திஷ் மக்கள்
ஈராக்கில் செயற்படும் சியா இஸ்லாமியத் போராளிக்
குழுக்களுக்கு மொசுல் நகரில் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிரான தாக்குதலில் நேரடியாக
ஈடுபட அனுமதி வழங்கப்படவில்லை. மாறாக அவர்கள் மொசுல் நகரின் மேற்குப் புறமாக ஐ எஸ்
போராளிகள் தப்பிச் செல்லாமல் தடுக்கும் பணி வழங்கப்பட்டது. சியா இஸ்லாமியப்
போராளிக் குழுக்கள் நேரடித் தாக்குதலில் ஈடுபட்டால் மொசுல் நகரில் இருக்கும் சுனி
இஸ்லாமியர்கள் ஆத்திரப்படுவார்கள் என்பதாலும் பல சியா போராளிக் குழுக்கள்
ஈரானிற்கு ஆதரவானவர்கள் என்பதாலும் இந்த ஏற்பாடு செய்யப் பட்டது. ஆனால் ஈரானியப்
படைகள் தமது படைப்பிரிவில் சியா விடுதலைப் படை என ஒன்றை புதிதாக அமைத்துள்ளனர். ஆனால்
குர்திஷ் மக்கள் ஐக்கிய அமெரிக்காவால் பல தடவைகள் ஏமாற்றப்பட்டும் ஐ எஸ்ஸிற்கு
எதிரான அமெரிக்க நிகழ்ச்சி நிரலில் ஈராக்கிய குர்திஷ் போராளிகளான பெஸ்மேர்கா
முக்கிய இடம் வகிக்கின்றது. மொசுல் சுற்றி வளைக்கப்பட்டவுடன் ஐ எஸ் அமைப்பினர் பழிவாங்கல்
தாக்குதலுக்கு தெரிவு செய்த இடம் ஈரானிய இலக்கு அல்ல, சியா இலாக்கு அல்ல, அமெரிக்க இலக்கு
அல்ல. அவர்கள் தெரிவு செய்தது. குர்திஷ் மக்கள் வாழும் கேர்க்குத்
நகர் தான். பல தடவைகள் அமெரிக்காவால் கால் வாரப்பட்ட குர்திஷ் மக்கள் மேலும் அமெரிக்காவால்
ஏமாற்றப் படப் போகின்றார்கள்.
ஈராக் துருக்கி முறுகல்.
மொசுல் முற்றுகையில் 23-10-2016 ஞாயிற்றுக் கிழமையில் இருந்து துருக்கி திடீரென தனது படையினரையும் அனுப்பியுள்ளது. குர்திஷ் போராளிகள் கைப்பற்றும் நிலப்பரப்பை மட்டுப்படுத்தவே அது இணைந்திருக்கலாம். ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராகத் தீரமாகப் போராடும் ஒரே ஒரு அமைப்பான குர்திஷ் பெஷ்மேர்கா அமைப்பு ஒக்டோபர் 23-ம் திகதி ஞாயிறு மொசுல் நகரையும் பஷிக்கா நகரையும் இணைக்கும் பிரதான தெருவைக் கைப்பற்றினர். துருக்கியப் படையினர் தமது நாட்டுக்குள் நுழைவதையிட்டு ஈராகிய அரசு அதிருப்தியடைந்துள்ளது. துருக்கியப் படையினர் மொசுல் நகருக்குள் வருவது அவர்களுக்கு சுற்றுலாவாக அமையாது என ஈராக்கியத் தலைமை அமைச்சர் ஹைதர் அல் அபாதி ஏற்கனவே எச்சரித்திருந்தார். ஆனால் இந்தப் பிராந்தித்தில் தமக்கு ஒரு வரலாற்றுக் கடமை உண்டு என துருக்கிய அதிபர் எர்டொகன் தெரிவித்திருந்தார். துருக்கி ஈராக்கின் வட பகுதியை தன்னுடன் இணைக்கும் கனவுடன் நீண்ட நாட்கள் இருக்கின்றது. துருக்கி சிரியாவில் செயற்படும் குர்திஷ் போராளிகள் மீது காட்டும் வன்மம் ஈராக்கில் செயற்படும் குர்திஷ் பெஷ்மேர்கா போராளிகள் மீது காட்டுவதில்லை. வைபிஜி/ வைபிஜே (YPG/YPJ) - இவை இரண்டும் சிரியாவில்
செயற்படும் மக்களாட்சி
ஐக்கியக் கட்சியின் போராளிப் பிரிவுகளாகும். YPG ஆண் போராளிகளையும்
YPJ பெண் போராளிகளையும் கொண்டவை. YPJதான் சிரியப் போராளி அமைப்புகளிலும் போரிடும் திறன் மிக்கது. இது சிரியாவில் தனது கட்டுப்பாட்டின் கீழ் ஒரு நிலப்பரப்பை
வைத்திருக்கின்றது. அமெரிக்காவுடன் இது இணைந்து செயற்படுகின்றது. ஈரக்கில் பஷீக்கா நகரில் துருக்கி ஒரு படைப்பிரிவை வைத்துள்ளது. அது தொடர்பாகவும் ஈராக் துருக்கி மீது ஆத்திரமடைந்துள்ளது. துருக்கிக்கும் ஈராக்கிற்கும் இடையில் போர் நடக்கலாம் என அமெரிக்க முன்னாள் அரசுறவியல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஈராக் துருக்கி முறுகல்.
மொசுல் முற்றுகையில் 23-10-2016 ஞாயிற்றுக் கிழமையில் இருந்து துருக்கி திடீரென தனது படையினரையும் அனுப்பியுள்ளது. குர்திஷ் போராளிகள் கைப்பற்றும் நிலப்பரப்பை மட்டுப்படுத்தவே அது இணைந்திருக்கலாம். ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராகத் தீரமாகப் போராடும் ஒரே ஒரு அமைப்பான குர்திஷ் பெஷ்மேர்கா அமைப்பு ஒக்டோபர் 23-ம் திகதி ஞாயிறு மொசுல் நகரையும் பஷிக்கா நகரையும் இணைக்கும் பிரதான தெருவைக் கைப்பற்றினர். துருக்கியப் படையினர் தமது நாட்டுக்குள் நுழைவதையிட்டு ஈராகிய அரசு அதிருப்தியடைந்துள்ளது. துருக்கியப் படையினர் மொசுல் நகருக்குள் வருவது அவர்களுக்கு சுற்றுலாவாக அமையாது என ஈராக்கியத் தலைமை அமைச்சர் ஹைதர் அல் அபாதி ஏற்கனவே எச்சரித்திருந்தார். ஆனால் இந்தப் பிராந்தித்தில் தமக்கு ஒரு வரலாற்றுக் கடமை உண்டு என துருக்கிய அதிபர் எர்டொகன் தெரிவித்திருந்தார். துருக்கி ஈராக்கின் வட பகுதியை தன்னுடன் இணைக்கும் கனவுடன் நீண்ட நாட்கள் இருக்கின்றது. துருக்கி சிரியாவில் செயற்படும் குர்திஷ் போராளிகள் மீது காட்டும் வன்மம் ஈராக்கில் செயற்படும் குர்திஷ் பெஷ்மேர்கா போராளிகள் மீது காட்டுவதில்லை.
அன்று நடந்ததற்கு இன்று பழிவாங்கல்
சியா இஸ்லாமியர்களைப் பெரும் பான்மையாகக் கொண்ட PMF எனச் சுருக்கமாக
அழைக்கப்படும் Popular Mobilisation Forces என்ற போராளிக்குழுவும் ஈரானின் நேரடி ஆதரவுடன் இயங்கும் அசைப் ஆல் அல் ஹக்
என்ற போராளிக் குழுவும் முகம்மது நபியின் பேரனான ஹுசேய்ன் பின் அலி கர்பாலாப்
போரில் 1400 ஆண்டுகளுக்கு முன்னர்
கொல்லப்பட்டதற்கான பழிவாங்கலாக மொசுல் நகரைக் கைப்பற்றுதலும் அங்குள்ள சுனி
அமைப்பான ஐ எஸ்ஸை அழிப்பதும் அமையும் எனப் பிரகடனப் படுத்தியுள்ளன. ஹுசேய்ன் பின்
அலி சுனி முஸ்லிம்களால் கொல்லப்பட்டதாக சியா முஸ்லிம்கள் நம்புகின்றார்கள். தற்போது
துருக்கிய அதிபராக இருக்கும் ரிசெப் எர்டோகனும் ஈராக்கிய குர்திஷ்களின் தலைவரான
மஸ்ஸோட் பர்ஜானியும் ஹுசேய்ன் பின் அலியின் கொலையாளின் வாரிசுகள் என சியா
இஸ்லாமியர்கள் நம்புகின்றார்கள். ஈராக்கிய அரச படையினரும் Popular
Mobilisation Forces என்ற
சியா போராளிக்குழுவும் இணைந்து திக்ரித் பிராந்தியத்தில் பல அட்டூழியங்களை
ஏற்கனவே சுனி இஸ்லாமியர்களுக்கு எதிராகச் செய்ததாகக் குற்றச் சாட்டுக்கள்
முன்வைக்கப்படுகின்றன. இந்த இரு தரப்பினரும் சுனி இஸ்லாமியர்களைச் சிரச்சேதம்
செய்யும் காணொளிப் பதிவுகள் வெளிவராமல் தடுக்கப்பட்டுவிட்டன. அதே போல ஐ எஸ்
அமைப்பினரிடமிருந்து பல்லுஜா பிராந்தியத்தைக் கைப்பற்றிய பின்னர் அவர்களிடம்
அகப்பட்ட சுனி இஸ்லாமியர்களை அவர்களது இரத்தத்தைக் குடிக்கும்படி சித்திரவதை
செய்யப்பட்டனர்.
சிரியாவால் சவுதிக்கும் எகிப்த்திற்கும் இடையில் முறுகல்
ஐக்கிய நாடுகள் சபையில் இரசியாவின் தீர்மானத்திற்கு எகிப்த்து ஆதரவு
வழங்கியமையும் சவுதியின் பின்புல ஆதரவுடன் பிரான்ஸ் சமர்ப்பித்த நகல் தீர்மானத்தை
எகிப்த்து ஆதரிக்காமையும் சவுதி அரேபிய ஆட்சியாளர்களை ஆத்திரப்படுத்தியுள்ளது.
இதனால் எகிப்த்திற்கான சவுதியின் தூதுவர் அவசரமாக சவுதி திரும்பினார். எகிப்தின்
படைத்துறை ஆட்சியாளர்களுக்கு சவுதி அரேபியா பில்லியன் டொலர்களை நிதி உதவியாகும்
எகிப்த்தில் முதலீடாகவும் செய்து வருகின்றது. பதிலாக உலக அரங்கில் சவுதிக்கு
எகிப்து அரசுறவியல் ஆதரவுகளை வழங்க வேண்டும் என சவுதி எதிர்பார்த்தது. எகிப்த்தின்
செய்கையால் அதிருப்தியடைந்த சவுதி எகிப்த்தில் தனது முதலீடுகளை உடனடியாக
நிறுத்தியுள்ளது. அத்துடன் எகிப்த்திற்கான எரிபொருள் விற்பனையையும் சவுதி
நிறுத்தியுள்ளது. தொடர்ந்து எகிப்த்திற்கான நிதி உதவிகளையும் சவுதி குறைக்கும் என
எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே யேமனில் ஹூதி மற்றும் சலேஹ் போராளிக்
குழுக்களுக்கு எதிராக சவுதி செய்யும் தாக்குதலுக்கு எகிப்த்து போதிய உதவிகளை
வழங்கவில்லை என சவுதி அரேபியா கடும் அதிருப்தியடைந்திருந்தது. சிரியாவில் அதிபர்
பஷார் அல் அசாத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என சவுதி உறுதியுடன் இருக்கின்றது.
ஆனால் எகிப்து அசாத்தைப் பதவியில் வைத்துக் கொண்டு ஓர் அரசியல் தீர்வு
காணப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் இருக்கின்றது. குவைத்தின் முன்னாள்
தகவற்துறை அமைச்சர் சாத் அல் அஜ்மி எகிப்த்திற்கு எதிராக உலக அரங்கில் கடும்
நடக்வடிக்கைகள் எடுக்கப் படவேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளார். எகிப்த்திற்கு
நாம் கொடுக்கும் உதவிகளின் ஒரு விழுக்காடு உதவியை மட்டும் நாம் செனகல்
நாட்டிற்குக் கொடுக்கின்றோம் ஆனால் செனகல் எமக்காக வாக்களித்தது எனச் சொல்கின்றார்
சாத் அல் அஜ்மி. இவரது கருத்து பல வளைகுடா நாடுகளில் எகிப்த்திற்கு எதிரான
நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
சிரியாவால் ஈரானும் எகிப்த்தும் இணையுமா?
எகிப்த்தியப் படைத்துறை ஆட்சியாளர்களுக்கு தலையிடியாக இருப்பது இஸ்லாமிய
சகோதரத்துவ அமைப்பு. எகிப்த்தில் தடைசெய்யப் பட்ட அந்த அமைப்பின் சிரியக் கிளை அசாத்திற்கு
எதிராகப் போராடும் குழுக்களுடன் இணைந்து செயற்படுவது எகிப்த்திய ஆட்சியாளர்களுக்கு
ஆத்திரத்தை ஊட்டுகின்றது. தற்போதைய சிரிய அதிபர் பஷார் அல் அசத்தின் தந்தை ஹஃபீஸ்
அல் அசாத் காலத்தில் இருந்தே எகிப்த்திற்கும் சிரியாவிற்கும் இடையில் நல்லுறவு
நிலவுகின்றது. 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின்
பொதுச் சபைக் கூட்டத்திற்குச் சென்ற ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சரும் எகிப்திய
வெளியுறவுத் துறை அமைச்சரும் சந்தித்து சிரியா தொடர்பாகக் கலந்துரையாடி இருந்தனர்.
சிரியாவில் அசாத் ஆட்சியில் இரு நாடுகளும் விரும்புகின்றன. இச் சந்திப்பைக்
கேள்விப்பட்டவுடன் சவுதியில் இருந்து எகிப்திய அதிபர் அப்துல் அல் சிசியிற்கு ஒரு
தொலைபேசி அழைப்பு விடுக்கப்பட்டு உதவி நிறுத்தல் மிரட்டல் விடுக்கப் பட்டதாக இரசிய
ஊடகம் ஒன்று தெரிவித்தது. சிரியப் படைத்துறைக்குப் பொறுப்பான அலி மம்லுக் ஐந்து
ஆண்டுகளில் முதற்தடவையாக ஒரு வெளிநாட்டுப் பயணமாக எகிப்த்திற்கு 2016 ஒக்டோபர்
17-ம் திகதி சென்றார். இரு நாடுகளும் பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒருங்கிணைந்து
செயற்படுவதாக அவரின் பயணத்தின் போது ஒத்துக் கொள்ளப்பட்டது. சில தகவல்களின் படி
அலி மம்லுக் இதற்கு முன்னரும் பல தடவைகள் இரகசியமாக எகிப்த்து சென்றதாகத்
தெரிவிக்கப்படுகின்றது. சவுதி அரேபியா எகிப்த்திற்கான எரிபொருள் விநியோகத்தை
நிறுத்தியதால் ஈரானிடம் இருந்து எகிப்த்து எரிபொருள் இறக்குமதி
செய்யவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன. அரபு நாட்டின் அதிக மக்கள் தொகையைக்
கொண்டதும் சிறந்த படைத்துறையைக் கொண்டதுமான எகிப்த்து சவுதி அரேபியாவிற்கு எதிரான
நிலைப்பாட்டை எடுத்தது பஷார் அல் அசாத்திற்கு ஒரு அரசுறவியல் வெற்றியாகும்.
வெற்றிகரமான பின் வாங்குதல்
ஜிஹாதி எனப்படும் புனிதப் போராளிகளிடம் அல் ஹிஜ்ரா என்ற உத்தி உள்ளது. அதை வெற்றிகரமான
பின் இடப்பெயர்வு எனவும் கூறலாம். முஹம்மது நபி மக்காவில் இருந்து மதீனாவிற்குப் தப்பியதையே அல் ஹிஜ்ரா என அழைப்பர். மொசுலில்
இருந்து ஐ எஸ் அமைப்பினர் தமக்கு அவமானம் ஏற்படாத வகையில் அதைச் செய்யலாம். ஐ எஸ்
அமைப்பினர் தமது ஐ எஸ் ஐ எஸ் என்றிருந்த பெயரை ஐ எஸ் என மாற்றியதே தமது இஸ்லாமிய
அரசு உலகளாவியது என்பதைக் காட்டவே. ஐ எஸ் ஐ எஸ் என்பது ஈராக்கிற்கும் சிரியாவிற்குமான
இஸ்லாமிய அரசு எனப் பொருள் படும். ஐ எஸ் அமைப்பின் ஆதிக்கத்தின் கீழ் ஒரு சதுர அங்குல
நிலம் கூட இல்லாத நிலையிலும் அவர்களால் உலகெங்கும் மறைந்திருந்து செயற்பட முடியும்.
ஆனால் சொல்லொணாக் கொடுமைகளுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் பலஸ்த்தீனியர்களின் விடுதலைக்காகப்
போராட போகாதவர்கள் சிரியாவிலும் ஈராக்கிலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த ஆயிரக்கணக்கில்
போய்ச் சேர்கின்றார்கள் என்பது ஐயத்துடன் பார்க்கப்பட வேண்டியதே. முஸ்லிம்கள் தங்களுக்குள்
போராடி அழிந்து கொள்ள ஐ எஸ் அமைப்பு வழிவகுப்பது ஐயத்துக் குரியதே. ஐ எஸ் அமைப்பின்
தலைமை மோசாட்டினதும் சி ஐ ஏயினதும் கைப்பொம்மை என்பது சரியாதா?
பல் முனை முறுகல் மோசமடையலாம்.
பல் முனை முறுகல் மோசமடையலாம்.
மொசுல் கைப்பற்றப் பட்டு ஐ எஸ் ஈராக்கில் இருந்து ஒழித்துக் கட்டப்பட்டாலும்
ஈராக்கில் அமைதி திரும்பும் என்பது நிச்சயமல்ல. அதன் பின்னரும் ஈரானுக்கும்
சவுதிக்கும் இடையிலான பிராந்திய ஆதிக்கப் போட்டியின் கொதிநிலை மோசமடையும்.
குர்திஷ் மக்கள் தமக்கு என ஓர் அரசைப் பிரகடனப் படுத்தி கொண்டு நடத்துவதற்கு
அவர்களிடம் போதிய நிதி வசதிகள் இல்லை அவர்கள் அமெரிக்கா அல்லது சவுதி அரேபியா
சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும். அவர்கள் ஒரு சமஷ்டி என்ற இணைப்பாட்சி அரசை
அமைக்க அவர்கள் விரும்புகின்றார்கள். ஈராக்கில் குர்திஷ் மக்கள் வலுப்பெறுவது தனது
நாட்டில் உள்ள குர்திஷ் இன மக்களுக்கு உந்துதலாகவும் உதவியாக அமையும் எனக் கருதும்
துருக்கி எந்நேரமும் குர்திஷ்ப் போராளிகள் மீதுதாக்குதல் செய்யலாம். தமது நாட்டைக்
கைப்பற்றிய சியா இஸ்லாமியர்கள் சிறுபான்மையினரான சுனி இஸ்லாமியர்கள் மீது
தாக்குதல் நடத்தலாம். ஈராக்கில் வடபகுதியில் இருக்கு துருக்கி இனத்தவர்கள் மீதும் சுனி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம். அது ஈராக்கிற்கும் துருக்கிக்கும் இடையில் போரை உருவாக்கும். ஈராக்கில் வாழும் யதீஷியர்கள், கிருஸ்த்தவர்கள், துருக்கியர்கள் தமக்கு என தன்னாட்சியுள்ள அதிகார அமைப்பு வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களிடையிலான எல்லைப் பங்கீடு, நிதிப்பங்கீடு, நிலவளப் பங்கீடு தொடர்பாக மோதல் உருவாகும். ஈராக்கியப் போரால் மனோநிலை பாதிக்கப்பட்டவர்களாக யதீஷியர்களே இருக்கின்றார்கள். தமது கௌரவம் நிலை நிறுத்தப்பட வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கின்றார்கள். அவர்கள் இனக்கொலை, கற்பழிப்பு, அடிமைப்படுத்தல் ஆகியவற்றுக்கு ஆளாக்கப் பட்ட போது எந்த ஓர் இனக்குழுமத்தினரும் அவர்களுக்கு உதவி செய்யவில்லை. ஈராக்கியக் கிறிஸ்த்தவர்கள் சதாம் ஹுசேய்ன் ஆட்சியில் இருந்து அகற்றப் பட்ட பின்னர் பெரும் துயரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். ஏர்பில் பிராந்தியத்தில் வாழும் கிறிஸ்த்தவர்கள் தமக்கு ஆதரவாக இருக்க வேண்டும் பாக்தாத்தில் ஆட்சியில் இருக்கும் சியா இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இருக்கக் கூடாது என குர்திஷ் மக்கள் கருதுகின்றனர்.
ஈராக்கிய ஆட்சியாளர்களை தனது பக்கம் திருப்ப ஈரான் முயற்ச்சி ஒரு புறம் செய்ய மறுபுறம் அமெரிக்கா அதற்கு எதிரான நடவடிக்கைகள எடுக்கும். இரசியா மட்டும் சும்மா பார்த்துக் கொண்டு இருக்க மாட்டாது. அதுவும் புதிய ஈராக்கில் தனது பிடியை இறுக்க முயற்ச்சி செய்ய ஈராக்கில் இரத்தக் களரி தொடரும்.
ஈராக்கிய ஆட்சியாளர்களை தனது பக்கம் திருப்ப ஈரான் முயற்ச்சி ஒரு புறம் செய்ய மறுபுறம் அமெரிக்கா அதற்கு எதிரான நடவடிக்கைகள எடுக்கும். இரசியா மட்டும் சும்மா பார்த்துக் கொண்டு இருக்க மாட்டாது. அதுவும் புதிய ஈராக்கில் தனது பிடியை இறுக்க முயற்ச்சி செய்ய ஈராக்கில் இரத்தக் களரி தொடரும்.
Subscribe to:
Posts (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...

-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
முதலில் அருட்தந்த்தைக்கு ஒரு அறிமுகம்: Fr. Jegath Gaspar Raj is a Catholic priest currently residing in Chennai , India. His academic qualif...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...