Saturday, 16 January 2010

கூட்டமைப்பு இந்திய வேண்டுகோளை ஏன் நிராகரித்தது?





இலங்கையில் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த வேளையில் தமிழத் தேசியக் கூட்டமைப்பு இந்தியா சென்று இந்திய அரசு தரப்பினரைச் சந்திக்க முயற்ச்சி எடுத்த போது அவர்கள் ஏறக்குறைய இந்திய அரசினால் அவமரியாத செய்யப்பட்டனர். ஒரு நாட்டில் இருந்து கணிசமான எண்ணிக்கையான மக்களைப் பிரதிநிதிப் படுத்துபவர்களைச் சந்திக்க வரலாம் என்று கூறிவிட்டு சந்திக்க மறுப்பது போன்ற கேவலமான வேலையை இந்தியாவால் மட்டுமே செய்ய முடியும். இலங்கைத் தமிழர்கள் அனைவருமே இதனால் மானபங்கப்படுத்தப் பட்டனர். வீட்டுக்கு வந்த மருமளை அரச சபையில் மாதவிடாய் காலத்தில் துகிலுரியும் வரலாறு கொண்ட நாட்டில் இது சாதாரணம்.

முன்பு சந்திக்க மறுத்த இந்தியா இப்போது இரண்டாம் முறையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்தது. இந்தியா ஏன் அழைத்தது? தமிழர்களுக்கு வாழ்வளிக்கவா? தமிழர்களின் துயர் துடைக்கவா?



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஏன் அழைத்தார்கள் என்று எவரும் பகிரங்கமாகக் கூறவில்லை.

சந்தித்தபின் மாவை சேனாதிராசா "எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் இலங்கைத் தமிழ் மக்க ளின் அரசியல் எதிர்காலம் போன்றவை தொடர்பான விடயங் களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவுகள், அணுகு முறைகள் போன்றவற்றை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமப்பு யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதைப் பற்றிக் கதைக்கத்தான் இந்தியா அழைத்தது என்று மாவை அவர்களின் கூற்றில் இருந்து தெரிகிறது.


தமிழத் தேசியக் கூட்டமைப்பை மூன்றாகப் பிரிக்க முயன்றது யார்?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து சிவாஜிலிங்கத்தை தனிவேட்பாளராக போட்டியிட இந்தியாவே சதி செய்ததாகக் குற்றம் சாட்டப் பட்டது. அது மட்டுமல்ல நாலு தமிழ்த் தேசியக் கூட்டமப்புப் பாராளமன்ற உறுப்பினர்கள் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தனர். இந்த உள் முரண்பாட்டை உருவாக்கியது யார்? கூட்டமைப்பின் தலைமை இந்தப் பிளவை சாதுரியமாக கையாண்டு வருகிறது.

நான்கு தெரிவுகள்
கூட்டமைப்பைப் பொறுத்தவரை இலங்கைக் குடியரசுத் தேர்தலில் நான்கு தெரிவுகள் இருந்தன:
  1. தேர்தலைப் புறக்கணித்தல்
  2. கூட்டமைப்பு சார்பாக ஒரு வேட்பாளரை நிறுத்துதல்.
  3. மஹிந்த ராஜபக்சவை ஆதரித்தல்
  4. சரத் பொன்சேக்காவை ஆதரித்தல்.
சென்றமுறை தமிழர்கள் தேர்தலைப் புறக்கணித்தது தவறு என இ. சம்பந்தன் அவர்கள் தெரிவித்து முதலாவதை நிராகரித்து விட்டார்.

கூட்டமைப்பின் சார்பாக ஒருவரை நிறுத்துவதால் தமிழர்களுக்கு ஒரு நன்மையும் கிடைக்கப் போவதில்லை. அது மட்டுமல்ல அப்படி ஒரு முடிவு எடுத்தால் அவர்கள்மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படும். தொடர்ந்து ஒரு அரசியல் கட்சியாகச் செயற்பட முடியாமல் போகலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மஹிந்தவை ஆதரிப்பதை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

ஆட்சி மாற்றம் ஒன்று தேவை மஹிந்தவைத் தோற்கடிக்க வேண்டும் என்ற அடிப்படையில் சரத் பொன்சேக்காவுடன் பேச்சு வார்த்தை நடாத்தி சில வெளியில் சொல்லப் படாத உடன்பாடுகளை ஏற்படுத்தி சரத் பொன்சேக்காவை ஆதரிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்தது.

சரத் பொன்சேக்கா இந்திய விரோதி, பாக்கிஸ்த்தானுடனும் சீனாவுடனும் இலங்கை நல்ல உறவைப் பேண வேண்டும் என்று விரும்புகிறவர். அதனால் அவர் வெற்றி பெறுவதை இந்தியா விரும்பவில்லை.

மஹிந்த ராஜபக்சேயும் இந்திய விரோதி, பாக்கிஸ்த்தானுடனும் சீனாவுடனும் இலங்கை நல்ல உறவைப் பேண வேண்டும் என்று விரும்புகிறவர். ஆனாலும் அவர் தோற்று சரத் பொன்சேக்கா வெற்றி பெற்றால் இலங்கை இனக்கொலை சம்பந்தமான பல உண்மைகள் வெளிவரும். இலங்கை இனக்கொலையில் இந்தியாவின் பங்கும் வெளிவரும். என்பதால் இந்தியா மஹிந்தவை வெற்றி பெற வைக்க முயல்கிறது. இதனால் இந்தியா தமிழர்கள் யாவரும் மஹிந்தவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று திரை மறைவில் வற்புறுத்திக் கொண்டிருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரத் பொன்சேக்காவை ஆதரிப்பதைத் தவிர வேறு எந்த முடிவு எடுத்தாலும் அவர்களுக்குப் போட்டியாக இன்னொரு அரசியல் சக்தி உருவாகி இருக்கும்.

இந்தியாவின் வற்புறுதலுக்கு கூட்டமைப்பு மறுத்தமைக்கான காரணங்கள்:
  • இந்தியாவின்சொல்லைக் கேட்க வேண்டிய எந்தக் கடப்பாடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இல்லை. பொறுத்த நேரத்தில் அவர்களை சந்திக்க மறுத்து மானபங்கப் படுத்தியது இந்தியா.
  • தமிழர்களுக்கு முழுவிரோதியான இந்தியாவின் சொல்லை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்க முடியாது.
  • மஹிந்த வெற்றி பெற்றால் ராஜபக்சே குடும்பம் தமிழ்த் தேசிய வாதம் இன்னும் 10 தலைமுறைக்கு தலையெடுக்க முடியாமல் வேரோடு அறுக்க வேண்டும் என்ற செயல் திட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ளும். இந்தியாவின் விருப்பமும் அதுவே.
தமிழ் மக்கள் இந்தியாவின் தமிழர்களுக்கு எதிரான சதியை உணர்ந்து இந்தியாவை தங்கள் மோசமான எதிரியாக கருதுகின்றனர். இந்நிலையில் தமிழர்களின் பகைமையை மேலும் சம்பாதிக்க விரும்பாத இந்தியா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது தனது அழுத்தத்தை தீவிரப் படுத்தவில்லை.

Friday, 15 January 2010

இனிய பானத்தில் இயங்கும் கைத்தொலைபேசிகள்.


கைத் தொலைபேசிப் பாவனையாளர்கள் எதிர் நோக்கும் பெரிய பிரச்சனை அவசியமான நேரத்தில் பட்டரியில் வலு இல்லாமல் தவிப்பது. காதலியுடன் மணித்தியாலக் கணக்கில் பேசிக் கொண்டிருக்கும் போது காதலி நல்ல இசைவான நிலைக்கு வரும் வேளையில் பட்டரி காலை வாரி விட்டுவிடும். இந்தப்பிரச்சனைக்கு ஒருவர் விடை கண்டுள்ளார். கொக்க கோலா போன்ற இனிய பானங்களில் இயங்கும் பட்டரியைக் கண்டு பிடித்துள்ளார். டெய்சி செங் என்ற பெண் தனது இலண்டன் பல்கலைக் கழக பட்டப் படிப்பின் ஒரு பகுதியாக இந்தக் கருவியை வடிவமைத்துள்ளார்.
இலண்டன் மெற்றோ பத்திரிகை இப்படிச் செய்தி வெளியிட்டுள்ளது:

The bizarre idea could soon become reality after a designer produced a concept mobile phone that is powered by sugary soft drinks.
Daizi Zheng came up with the phone as part of her graduation project at Central St Martins college in London.
Her cylindrical design has a screw top at one end where you pour in the fizzy drink.
The bio battery, in theory, generates energy as glucose molecules in the cola drink are digested by enzymes, releasing hydrogen molecules.
Power, as in other fuel cells, is produced through a flow of electrons between a cathode and anode.
‘By using bio battery as the power source of the phone, it only needs a pack of sugary drink and it generates water and oxygen while the battery dies out,’ Zheng said.


இன்னொரு இணையத் தளம் இப்படிச் சொல்கிறது:

Bio battery is an ecologically friendly energy generates electricity from carbohydrates (currently sugar) and utilizes enzymes as the catalyst. By using bio battery as the power source of the phone, it only needs a pack of sugary drink and it generates water and oxygen while the battery dies out.

The Bio battery has the potential to operate three to four times longer on a single charge than conventional lithium batteries and it could be fully biodegradable. Meanwhile, it brings a whole new perception to batterY.

Using a fuel-cell instead of a battery means the phone should actually run on any sugar-based soft drink, but photos from Inhabitat show the cylindrical-shaped handset being filled up with coke, with a screw-off top to easily add your lunchtime tipple. Whether this is the future of mobile phones remains to be seen – but it’s certainly an unusual place to store your drink in the meantime. Can you see future Nokia’s being powered by Coke? Let us know what you think.

இந்தியா ஏன் ராஜபக்சவின் பின்னால் நிற்கிறது?


மஹிந்த ராஜபக்சவிற்கு இந்தியா பண உதவி செய்கிறது, ஆயுத உதவி செய்கிறது, படை உதவி செய்கிறது, பன்னாட்டு அரங்கில் பாதுகாக்கிறது. இவை எல்லாம் செய்வது ஒரு அயல் நாடு ஒன்றுடன் நல்ல நட்பு பேணுவது என்ற ரீதியிலா? மஹிந்த ராஜபக்சவிற்கு இந்தியா தேர்தலில் வெற்றி பெறச் செய்வது ஏன்? அது இரண்டு நாடுகளிற்கு இடையில் உள்ள உறவுகளுக்கு அப்பாற் பட்டது. இத்தனைக்கும் ராஜபக்சக்கள் இந்திய விசுவாசிகள் அல்லர். சீனாவின் நல்ல நண்பர்கள். பாக்கிஸ்தானுடன் நல்ல உறவைப் பேணுபவர்கள். இருந்தும் இந்தியா ராஜபக்சவிற்கு பின்னால் நிற்பது ஏன்? இந்திய ஊடகங்கள் ராஜபக்சவின் வெற்றி இந்தியாவின் வெற்றியாகும் என்று கூக்குரல் இடுவது ஏன்?

இந்தியாவின் பார்பனர் நிறைந்த South Block
இந்திய மத்திய அரச நிர்வாக கட்டிடத்தின் South Block இல் பிரதம மந்திரி அலுவலகம், பாதுகாப்பு அமைச்சு, வெளிவிவகார அமைச்சு ஆகியன அமைந்துள்ளன. இந்த South Block இந்தியாவின் செல்வாக்கு மிக்க பகுதியாகும். இந்த அமைச்சுக்களின் அதிகாரிகள் முழுக்க முழுக்க பார்ப்பனர்களே. இவர்களுக்கு திராவிடம் தமிழ்த்தேசியம் என்ற வார்த்தைகள் காதில் ஈயம் காய்ச்சி ஊற்றுவது போன்றது. தமிழர்கள் அடக்கி ஆளப் படவேண்டியவர்கள் என்ற அபிப்பிராயம் கொண்டவர்கள். அவாள் பாஷையில் சொல்லுவதனால் தமிழர்கள் சூத்திரர்கள். அவாள் ஆளக்கூடாது.

கருணாநிதியின் பலங்கள் பலவீனங்களை South Block நன்கு அறிந்து கொண்டதுடன் அவரின் செல்வச் சேகரிப்பு பற்றியும் அறிந்து வைத்து அவரை தமது பெருவிரலின் கீழ் வைத்திருக்கின்றன. South Blockஐ மிஞ்சி கருணாநிதியால் ஏதும் செய்ய முடியாது.

இலங்கையில் தமிழர்கள் இந்தியாவில் உள்ள அதிகாரப் பரவலாக்கத்திலும் அதிகமாக எதுவும் பெறக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றது இந்த South Block. இலங்கைத் தமிழர்கள் மத்தியில் தமிழ்நாட்டுத் தமிழர்களிடையே இருப்பது போல் பார்ப்பன ஆதிக்கம் என்பது அறவே இல்லை. இது பற்றி 1983-84களில் அறிந்து கொண்ட இந்த South Block மிகுந்த ஆத்திரமும் அதிர்ச்சியும் அடைந்தது. அன்றிலிருந்து இந்த South Block ஈழ விடுதலைக்கு எதிராகச் செயற்படுகிறது. அதில் ஒரு அம்சமாக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை சிங்களவர்களுக்கு சாதகமாகவும் தமிழர்களுக்கு எதிராகவும் திருப்பியது இந்த South Block. இதை அரசியல் அறிவில்லாத ராஜிவ் காந்தி காலத்தில் அது வெற்றீகரமாகச் சாதித்தது.

சிங்களவர்களில் ராஜபக்சவை இந்தியா விரும்புவது ஏன்?
ராஜபக்சே வெளியுறவுக் கொள்கை அமெரிக்காவை விரோதியாகக் கருதுகிறது. ராஜபக்சவின் வெளியுறவுக் கொள்கை சீனா பாக்கிஸ்த்தானுடன் இந்தியாவையும் இணைத்து நல் உறவைப் பேண முயல்கிறது. ரணில் விக்கிரமசிங்கே மற்றும் சரத் பொன்சேக்காவின் ஆட்சி அமெரிக்காவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும். சீனாவும் பாக்கிஸ்த்தானும் தமிழர்களுடன் எந்தத் தொடர்பும் இல்லாதவை. தமிழர் நலன் பற்றி அக்கறை இல்லாதவை. இலங்கையில் சீனா பாக்கிஸ்த்தான் ஆகியவற்றின் ஆதிக்கம் தமிழர்களுக்கு மிகப் பாதகமானவை. அத்துடன் இலங்கையில் சீனா பாக்கிஸ்த்தான் ஆகியவற்றின் இலங்கை மீதான ஆதிக்கம்இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கும் விரோதமானதே. இருந்தும் இந்திய நலனைப் பலியிட இந்த South Block தயங்கவில்லை. அமெரிக்காவிற்கு தமிழர்களுக்கு எதிராக செயற்பட வேண்டிய அவசியமில்லை. ஐரொப்பிய அமெரிக்க அரசுகளுடன் தமிழ் அமைப்புக்களுக்கு தொடர்பு உண்டு. இந்த தொடர்புகளுக்கு South Block பயப்படுகிறது. அதனால் அமெரிக்க சார்பு சரத் பொன்சேக்கா வெல்லுவதிலும் பார்க்க அமெரிக்க விரோத ராஜபக்சே வெல்லுவதை South Block விரும்புகிறது. அமெரிக்காவின் நோக்கம் இலங்கையில் சீன ஆதிக்கதை ஒழிப்பது. அது இந்தியப் பிராந்திய நலன்களுக்கு சாதகமான கொள்கை. இருந்தும் இந்தப் பார்ப்பன South Block தமது சாதிய நலன்களுக்கு அது சாதகமாக அமையும் என்பதால் அமெரிக்காவின் கொள்கையை விரும்பவில்லை. இதற்க்காக இந்தியா மஹிந்த ராஜபக்சவை ஆதரிக்கிறது.

இந்தியாவும் ஒரு போர்குற்றவாளி
சரத் பொன்சேக்கா வெற்றி பெற்றால் போர்குற்றம் சம்பந்தப் பட்ட தகவல்கள் பல வெளிவர வாய்ப்புண்டு. அந்தப் போர்குற்றத்திற்கு இந்தியாவின் பங்களிப்பும் வெளிவரும். இதனாலும் இந்தியா பொன்சேக்காவை வெறுக்கிறது.

Thursday, 14 January 2010

இந்தியாவால் இறந்த பல்லாயிரம் தமிழர்கள்


கடந்த சில தினங்களாக இலங்கையில் நடந்த போர் தொடர்பாக சில உண்மைகள் வெளிவந்துள்ளன:

1. இந்தியப் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற மஹிந்த ராஜபக்சே உதவினார் என்று இலங்கை அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

2. வி எஸ் சுப்பிரமணியம் என்னும் அரசியல் விமர்சகர் இலங்கை ஆகஸ்ட் மாதம் முடிக்கவிருந்த போரை இந்தியா மே மாதம் முடிக்கச் சொல்லிவற்புறுத்தியது என்று எழுதியுள்ளார்.

3. இறுதிப் போரில் 27,000 சிங்களப் படையினர் கொல்லப் பட்டதாக சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

இவற்றில் இருந்து தெரியவரும் உண்மைகள்:

  • இலங்கைப் போர் இந்திய நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நடந்தது.
  • தமிழ்நாட்டில் பல தலைவர்களும் தொண்டர்களும் பல் போராட்டங்கள் நடத்தியதால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. சுயநிர்ணய உரிமை தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு இல்லை.
  • ஆகஸ்ட் மாதம் இலங்கை முடிக்க விருந்த போரை இலங்கை மே மாதத்தில் முடிக்க வற்புறுத்தியாதால் பல்லாயிரக் கணக்கான அப்பாவித் தமிழர்கள் உயிரிழந்தனர்.
இறுதிக் கட்டப் போர் ஒரு சிறிய இடத்தில் நடைபெற்றது. அது ஒரு சில சதுர கிலோமீற்றர்கள்தான். நீண்டதூரம் சென்று தாக்கக் கூடிய ஆயுதங்களை அங்கு பாவிக்க முடியாது. அந்நிலையில் இலங்கையும் இந்தியாவும் சேர்ந்து ஆடிய நாடகம்தான் கனரக ஆயுதங்கள் பாவிக்கப் படமாட்டாது என்ற பொய். நீண்டதூரம் சென்று தாக்கும் ஆயுதப்பாவனைகளை மட்டுமே இலங்கையும் இந்தியாவும் நிறுத்தின. மற்றக் கனரக ஆயுதங்கள் தாராளமாகப் பயன்படுத்தப் பட்டன. குறுகிய இடைவெளியில் சிங்களப் படைகளும் விடுதலைப் புலிகளும் சண்டையிடும்போது சிங்கள விமானப் படைகள் தமது தரைப் படையினர்மீதே குண்டு வீசிய பல சம்பவங்கள் கடந்த காலத்தில் நடந்ததுண்டு. அதனால் விமானக் குண்டு வீச்சும் இறுதிக் கட்டத்தில் நடக்கவில்லை. ஆனால் டாங்கிகள் மக்கள் மேல் ஏறிச்சென்றன.

போரில் பல சிங்களப் படை வீரர்கள் உயிரிழக்கும் போது போரை நிறுத்துவது சிங்களவர்களின் வழக்கம். ஆனால் மாறாக இவ்வாண்டின் முற்பகுதியில் போர் இடைவிடாது தொடர்ந்து நடக்க இந்தியாவில் இருந்து எத்தனை இந்தியப் படைவீரர்கள் இலங்கைச் சண்டையில் நேரடியாக பங்கு பற்றினர்? இலங்கைக்கு பேராபத்து விளைவிக்கக் கூடிய எந்த வகையான ஆயுதங்களை இந்தியா இலங்கைக்கு வழங்கியது? இந்த உண்மைகள் இனி வெளி வருமா?

Wednesday, 13 January 2010

பிரபாகரனுக்காக அழவில்லை.


இலங்கை அரசு தனது கொடுமையில் வயது வேறுபாடு காட்டுவதில்லை. பச்சிளம் குழந்தைகள் தள்ளாடும் வயோதிபர் என எல்லோரையும் கொன்று குவித்ததுண்டு. சண்டைக்கு நிற்பவர்களையும் கொல்வார்கள். சரணடையச் செல்பவரையும் கொல்வார்கள். சிறையில் அடைப்பதும் அப்படியே வயது வேறுபாடின்றிச் சிறையில் அடைத்தார்கள். இதனால்தான் சர்வதேச் நெருக்கடிக் குழுவின் இணைத் தலைவர் கிறிஸ் பற்றேண் அவர்கள் இலங்கையில் ஒருவரை ஒருவர் போர்க் குற்றவாளிகள் எனக் குற்றம் சுமத்தும் இருவரில் ஒருவரை குடியரசுத் தலைவராகத் தெரிவு செய்யப் போகிறார்கள் என்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தையும் தாயும் மற்ற மூன்று இலட்சம் தமிழர்களைப் போலவே சட்ட விரோதமாகச் சிறையில் அடைக்கப் பட்டனர். அவர்களை அடைத்துவைத்தது கொடுமைக்குப் பெயர் போன பனாகொட இராணுவ முகாமில். வேறு முகாம்களில் வைத்திருந்தால் யாராவது உடைத்துக் கொண்டு போய்விடுவார்கள் என்ற பயமாக இருக்கலாம்.

பிரபாகரனின் தந்தையின் இறுதிநாட்கள் பற்றி சில கதைகள் கொழும்பில் பேசப் படுகின்றன. அது இப்படிப் போகிறது:

  • பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் அவர்கள் கடுமையாக நோய் வாய்ப்பட்டு இறக்கப் போகிறார் என்று அறிந்து அவரை வந்து அழைத்துச் செல்லும்படி இலங்கை திருமாவளவனைக் கேட்டதாம். தேர்தல் காலத்தில் தமிழர்களின் தேச பிதா சிறையில் இறப்பதை ராஜபக்சேக்கள் விரும்பவில்லை. இரு தரப்பும் இதில் ஒரு விதமாக நடந்து கொண்டார்கள். திருமாவளவன் இலங்கைக்கு சந்திரசேகரனின் இறுதிக் கிரியையில் கலந்து கொள்ள வருவது போல் வருவார். அவர் தேச பிதாவை தன்னிடம் ஒப்படைக்கக் கேட்க அதை தாராள மனதுடன் ராஜபக்சே ஒத்துக் கொள்வார். திருமா தாயையும் தந்தையையும் இந்தியா அழைத்துச் செல்வார். ஆனால் திருமா இலங்கை வந்தவுடன் தேச பிதா திருவேங்கடம் அவர்கள் காலமாகிவிட்டார்.
பிரபாகரனின் தாயையும் தந்தையையும் அழைத்துச் செல்ல வந்த திருமா இறுதிக் கிரியைகளில் கல்ந்து விட்டுச் சென்றார். ஆனால் இங்குள்ள் மில்லியன் டொலர் கேள்வி: தமிழ் நட்டில் உள்ள தமிழ்த் தேசிய போராட்டத்திற்கு ஆதரவானவர்களை இலங்கைக்கு வர இலங்கை அரசு அனுமதிப்பதிக்கத இலங்கை அரசு திருமா யாழ் வரை செல்ல எப்படி அனுமதித்தது?

பிரபாகரனுக்காக அழவில்லை.
இலங்கையில் ஒரு மரண விட்டில் அழும்போது அதற்கு முன் அந்த வீட்டில் யாராவது இறந்திருந்தால் அவருக்கும் சேர்த்து அழுவார்கள். திருவேங்கடம் அவர்களின் கிரியையில் பிரபாகரனின் தாய் அப்படியாருக்காகவும் அழவில்லை. மாறாக தனது மகன் பிரபாகரன் பத்திரமாக இருப்பதாக கூறினாராம் பார்வதி அம்மாள்.

கருவில் உருவான எல்லாளன்.
தேச பிதாவின் மரணத்தை ஒட்டி ஜிரிவி தொலைக்காட்சியில் அரது உறவினர் ஒருவர் சொன்ன தகவல்:பிரபாகரன் பார்வதி அம்மாளின் கருவில் உருவாகும்போது அவர்கள் குடும்பம் அநுராதபுரத்தில் இருந்ததாம். அவர்கள் இருந்த வீட்டிற்கு முன்னால் எல்லாளனின் சிலை இருந்ததாம் நாள் தோறும் வெளியில் செல்லும் போது எல்லாளனின் சிலையை பார்வதி அம்மாள் தரிசித்துச் சென்றமையால் அப்படி ஒரு பிள்ளை உருவாகினானான்.

Tuesday, 12 January 2010

கூட்டமைப்பு சரத்திற்காக பிரச்சாரம் செய்வதை ஏற்றுக் கொள்ளமுடியுமா?


மஹிந்த ராஜபக்சவை தோற்கடிக்க வேண்டும் என்பதில் எந்த ஒரு தமிழனுக்கும் சந்தேகம் இருக்க முடியாது. சந்தேகம் இருக்கவும் கூடாது.

மஹிந்த ராஜபக்சவை தோற்கடிக்க ஒரே வழி சரத் பொன்சேக்காவிற்கு வாக்களிப்பதுதான். தமிழ் மக்கள் அதைச் செய்வாரகள்.

சரத்திற்கு தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என்பது அவர்களின் ஆத்திரத்தை வெளிப்படுத்த ஒரு வழி மட்டுமே. அவர்கள் கையில் இருக்கும் ஒரு ஆயுதம் தான் தேர்தல் வாக்கு. சரத்திற்கு வாக்களிப்பது என்பது அவரது தலைமையில் தமிழர்களுக்கு விடிவும் கிடைக்கும் என்பதல்ல.

மஹிந்த கொழுக்கட்டை என்றால் சரத் மோதகம். இருவரும் இனக் கொலையாளிகள் என்றுதான் தமிழ் மக்கள் கருதுகிறார்கள். இருவர் கைகளிலும் இரத்தக் கறை உண்டு என்று தமிழ் மக்கள் நம்புகிறார்கள்.

தமிழர்களுக்கு வாக்குறுதிகள் வழங்கித் தேர்தலில் வென்றவர்கள் தேர்தலில் வென்றபின் தமிழர்களுக்கு எதிராக பல தீங்குகள் செய்வது என்பதுதான் இலங்கையின் அரசியல் வரலாறு.

தமிழர்களின் தாயகம், தன்னாட்சி, சுய நிர்ணய உரிமை ஆகிய அடிப்படைக் கோட்பாடுகளை ஏற்க மறுக்கும் எவரையும் நாம் ஆதரிக்க முடியாது.

சரத் பொன்சேக்கா இப்போது ஒரு ஓய்வு பெற்ற தளபதி..அவன் தோற்றாலும் ஒரு
ஒரு ஓய்வு பெற்ற தளபதி. மஹிந்த இபோது குடியரசுத் தலைவர். அவன் தோற்றால் செல்லாக்காசாவான். தமிழர்கள் மஹிந்தவைத் தோற்கடிப்பதால் அவனுக்கும் அவர் சகோதரர்களுக்கும் பலத்த இழப்பை ஏற்படுத்த முடியும். இப்போது தன்னை அரசன் என்று கருதிக் கொண்டிருப்பவனை நடுத் தெருவில் நிற்பாட்டுவது அவனால் பாதிக்கப் பட்ட தமிழ் மக்களுக்கு ஒரு சிறு மகிழ்ச்சியைக் கொடுக்கும். சரத்தை தோற்கடிப்பதால் சரத்திற்கு ஏற்படும் பாதிப்பை விட மஹிந்தவைத் தோற்கடிப்பதால் மஹிந்தவிற்கு ஏற்படும் பாதிப்பு பன்மடங்கானது. இதற்காக மட்டுமே சரத்திற்கு வாக்களித்து மஹிந்தவைத் தோற்கடிக்க வேண்டும்.

சரத் வென்றபின் அவனுக்கு ஜேவிபி யூஎன்பி ஆகிய இரு முரண்பட்ட கட்சிகளிடையே சிக்கித் தவிப்பதுதான் அவன் பெரும் பாடாக இருக்கும். சரத்திற்கு என்று சொந்தமாக ஒரு கட்சியுமில்லை. அரசியல் அனுபவமும் இல்லை. ஒரு நல்ல நிர்வாகியுமல்ல. அவனால் நாட்டுக்கு எந்த நன்மையும் வரப் போவதுமில்லை. அவனது நிர்வாகத்தில் இன்னோரு இனவாதியாகக் கருதப் படும் ஓய்வு பெற்ற தலைமை நீதியரசர் சரத் என் சில்வாவை நியமிக்க ஜேவீபீ வற்புறுத்தும். மொத்தத்தில் சரத்தால் தமிழர்களுக்கு எந்த நன்மையும் விளையப் போவதில்லை.

மஹிந்த வென்றால் அவன் தனது தமிழ்த் தேசியத்தின் வேரை அறுக்கும் திட்டத்தை தொடருவான்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மஹிந்தவிற்கு வாக்களிக்காமல் சரத்திற்கு வாக்களித்து மஹிந்தவைத் தோற்கடியுங்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களிடம் எடுத்துச் சொல்லலாம். தமிழர்களின் பிரதிநிதிகளான தமிழத் தேசியக் கூட்டமைப்பு மேடைகளில் ஏறி சரத் பொன்சேக்காவிற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

Monday, 11 January 2010

மஹிந்த இனக்குரோத நஞ்சைக் கக்குவாரா?


யாழ்ப்பாணத்துக்கு சென்ற இலங்கைக் குடியரசுத்தலைவர் மஹிந்த ராஜபக்ச அங்கு தமிழ் மக்கள் பிரச்சனை தொடர்பாக நல்ல அறிவிப்புக்களைச் செய்வார் எனப் பலரும் எதிர்பார்த்திருந்தனர். யாழ் மக்களுக்கு பெரும் தொல்லைகள் கொடுத்து வந்த உயர் பாதுகாப்பு அரண்களை விலக்கி, பாதுகாப்பு வலயத்தைச் சுருக்கி, அப்பிர தேசங்களை நடமாட்டத்துக்குத் திறந்து விடும் பணிகள் நேற்று ஆரம்பமாகுமென நம்பப்பட்ட போதும் அது இடம்பெற வேயில்லை.

கெடுப்பதில்தான் போட்டி கொடுப்பதில் போட்டியில்லை.
சரத் பொன்சேக்கா தமிழ்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளுக்கு போட்டியாக மஹிந்தவும் ஏதாவது சொல்வார் அல்லது செய்வார் என்று எதிர்பார்க்கப் பட்டது. யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் ஜனா திபதி மஹிந்த ராஜபக்ச தனது பேச்சை ஆரம்பித்தபோது அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. எனினும், உயர் பாது காப்பு வலயப் பிரச்சினை குறித்து ஜனா திபதி தமது உரையில் ஒரு சொல் கூடக் குறிப்பிடவில்லை. அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தோ அல்லது அதற்கு அப்பால் செல் வது குறித்தோ ஜனாதிபதி எதையுமே சுட்டிக்காட்டவில்லை.

தமிழ் மக்களின் வாக்குகளில் பெரும்பாலானவை மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக திரும்பிவிட்டதை இப்போது மஹிந்த தரப்பினர் உணர்ந்து விட்டனர். தமிழ் மக்களின் வாக்குகளுக்கு போட்டி போடுவதிலும் பார்க்க சிங்கள வாக்குகளை அதிகரிப்பதில் மஹிந்த தரப்பினர் இறங்கி விட்டனர். சிங்கள வாக்குக்கள் சரிபாதியாகப் பிரிந்து நிற்கின்றன. சிவாஜிலிங்கத்தை களத்தில் இறக்கியது எதிர்பார்த்த அளவு வேலை செய்யவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தம்மை மஹிந்த முன்பு புறந்தள்ளியமைக்கு தருணம் பார்த்து மஹிந்தவைப் பழிவாங்கிவிட்டது. இந்தியாவின் உத்தரவின் பேரில் மஹிந்தவிற்கு ஆதரவு தெரிவித்த தோட்டாத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியில் இருந்து பலர் சரத் பொன்சேக்காவிற்கு ஆதரவாகத் தாவிவிட்டனர். முஸ்லிம் மக்கள் மத்தியிலும் பெரும் ஆதரவு மஹிந்தவிற்கு இல்லை. இப்போது மஹிந்தவிடம் இருப்பது இரு ஆயுதங்கள்:

1. தமிழினத்துக்கு எதிராக இனவாத நஞ்சைக் கக்குதல்
1970-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் அப்போதைய தமிழரசுக் கட்சியின் பிரச்சார பீராங்கியான அ. அமிர்தலிங்கம் அவர்கள் ஒரு கருத்தை பலமாக முன்வைத்தார்: "இந்த முறை எந்த சிங்களக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையுடன் வெல்லப் போவதில்லை. சிங்களக் கட்சிகள் ஆட்சி அமைப்பதற்கு தனது தமிழரசுக் கட்சியையே நாடி வரவேண்டும்."அமிர்தலிங்கத்தின் இந்த உரையை சிறிமாவோ பண்டார நாயக்காவின் சுதந்திரக் கட்சி ஒரு துண்டுப் பிரசுரமாக வெளியிட்டு நாம் ஒரு தமிழ் கட்சியிலா தங்கியிருக்க வேண்டும்? எமக்கு பெருவாரியாக வாக்களித்து சிங்களவர்களின் மானத்தைக் காப்பற்றுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தது. இந்தமாதிரி பல இனவாத பிரச்சாரங்கள் மூலம் பெரு வெற்றியீட்டியது. இந்தப்பாணியை மஹிந்த இம்முறையைப் பின்பற்றுவார். ஏற்கனவே சில கொழும்புப் பத்திரிகைகள் இம்முறை குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழர்களே அரசு உருவாக்குபவர்களாக (King Makers) இருக்கிறார்கள் என்று கூறத் தொடங்கிவிட்டன. இத எந்த ஒரு சிங்களவனும் ஏற்கப் போவதில்லை. அதனால் மஹிந்த:
  • தமிழர்களுடன் சரத் இணைது விட்டார்.
  • நாடு இரண்டாகப் பிளவு படப் போகிறது.
  • மீண்டும் புலிகள் உருவாகப் போகிறார்கள்.
  • சிங்கள இராணுவ வீரர்களின் உயிர்த் தியாகம் வீணாகப் போகிறது.
  • நாடு மீண்டும் ஆபத்தை நோக்குகிறது.
  • நாட்டைக் காப்பாற்ற எனக்கு வாக்களியுங்கள்.
போன்றவற்றை சிங்களமக்கள் முன் வைத்து அவர்களின் வாக்கைப் பெற முயலப் போகிறார்.

2. அமெரிக்க விரோதம்.
சிங்கள மக்கள் மத்தியில் உள்ள அமெரிக்க விரோதத்தை மஹிந்த பயன்படுத்துவார்.
  • சரத் பொன்சேக்கா ஒரு அமெரிக்க ஆதரவாளர்.
  • அவர் நாட்டை அமெரிக்காவிற்கு அடகு வைக்கப் போகிறார்.
  • வெளிநாடுகள் சரத்தைப் பாவித்து மீண்டும் புலிகளுக்கு உயிர் கொடுக்கப் போகிறார்கள்.
போன்ற ரீதியில் மஹிந்த தரப்பின் பிரச்சாரம் இனி அமையும்.

ஐநாவில் இருந்து மஹிந்தவிற்கு எதிராக அழைப்பாணை பெற முயற்ச்சி.
ஐக்கிய நாடுகள் சபைக்ககான இலங்கையில் நிரந்தரப் பிரதிநிதி பாலித கொஹென்ன ஐநாவில் இருந்து மஹிந்தவின் நண்பரான பான் கீ மூன் மூலமாக மஹிந்தவிற்கு எதிராக போர்குற்றம் தொடர்பாக ஒரு அழைப்பாணை பெற முயற்ச்சிப்பதாகப் பேசப் படுகிறது. அந்த அழைப்பாணை மஹிந்த இலங்கையில் பயங்கரவாதிகளை ஒழிக்க எடுத்த நடவடிக்கைகளை சரத் பொன்சேக்கா காட்டிக் கொடுத்ததால் ஏற்பட்டது என்று சிங்கள மக்களிடம் கூறி வாக்குப் பெறும் முயற்சியில் மஹித தரப்பினர் முயற்ச்சி செய்யலாம்.

Sunday, 10 January 2010

இலங்கைத் தேர்தலில் கிழக்கு மஹிந்தவை வெளுத்து வாங்குமா?


வடக்கில் அடக்கு கிழக்கில் விரட்டு.
சிங்களப் பேரினவாதிகளின் பெருந்தன்மையான கொள்கை தமிழர்களை இலங்கையில் இருந்து விரட்டியடிக்கவோ அல்லது கொன்றொழிக்கவோ தேவையில்லை அவர்களை இலங்கயின் கிழக்கு மாகாணத்தில் இருந்து விரட்டியடிக்க வேண்டும் வடக்கு மாகாணத்தில் அடக்கி வைத்திருக்க வேண்டும். இந்த சிங்களப் பேரினவாதிகளின் "தாராண்மை" கொள்கையால் பெரிதும் பாதிக்கப் பட்டுக் கொண்டிருப்பவர்கள் கிழக்கில் வாழும் தமிழர்களே. தரிசாகாக் இருந்த காணிகளைக் துப்பரவாக்கி பண்படுத்தி விதைத்து பராமரித்து பயிர் செய்து அறுவடைக்கு தயாராக இருக்கும் வேளைகளில் அங்கிருந்து அவர்கள் அடித்து விரட்டப்பட்டு சிங்களவர்களைக் குடியேற்றுவார்கள். பல விவசாயத் திட்டங்கள் இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் இருந்தே தமிழர்களை அகற்றி சிங்களவர்களக் குடியேற்றும் நோக்கத்தைக் கொண்டன. குடியேற்றப் படும் சிங்களவர்கள் சாதாரணமானவர்கள் அல்லர். சிறைகளில் இருக்கும் குற்றவாளிகள் மன்னிப்பு வழங்கப் பட்டு கிழக்கில் குடியேறும் நிபந்தனையுடன் விடுவிக்கப் படுவர்.

தமிழர்களை மீண்டும் பிரிக்கும் இந்தியா
தமிழர்களின் வாக்கு இந்த மாதம் 26ம் திகதி நடைபெறவிருக்கும் இலங்கைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் முடிவைத் தீர்மானிக்கும் காரணியாக அமையவிருக்கிறது. தமிழத் தலைவர்கள் அத்தனை பேரும் ஒன்று பட்டு நின்று செயற்பட்டால் பலவற்றைச் சாதிக்க முடியும். மலைய அரசியல் கட்சிகள் மக்கள் பிரச்சனையை அடிப்படையாக வைத்து யாரை ஆதரிப்பது என்று தீர்மானிக்காமல் இந்தியாவின் வற்புறுத்தலின் பேரில் மஹிந்தவை நிபந்தனையின்றி ஆதரிப்பதாக முடிவெடுத்தன. இதனால் அவற்றிடை இப்போது பிளவுகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. பல கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் கட்சிமாறிக்கொண்டிருக்கின்றனர்.

கிழக்கில் மஹிந்த ராஜபக்ச வென்றுவிட்டார் என்று ஒரு தமிழினத் துரோகி முன்கூட்டியே அறிவித்து விட்டார். அவர் அப்படி அறிவித்து சில தினங்களுக்குள் மட்டக்களப்பு மாநாகர சபை முதல்வர் கட்சி மாறினார்.

கிழக்கில் அண்மையில் முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான காணிகளைச் சிங்களவர்கள் அபகரித்துக் கொண்டனர். இந்தச் செய்தி அங்கு வாழும் முஸ்லிம்களின் வாக்களிக்கும் தீர்மானத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.

கிழக்கின் தலைகளாக தம்மைத் தாமே கருதிக்கொள்ளும் கருணாவும் பிள்ளையானும் இப்போது தமது கட்சி உறுப்பினர்கள் தமது சொற்படி வாக்களிப்பார்களா என்ற பயத்தில் இருக்கிறார்கள். திருமலை மாவட்டத்தில் மஹிந்தவைத் தோற்கடிப்பதாகவே பெரும்பாலான தமிழர்கள் முடிவெடுத்துள்ளனர். தேர்தல் நெருங்க பல மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத் தமிழர்கள் தம்முடிவை சரியாக எடுப்பர். கருணா பிள்ளையான் அணிகளில் உள்ளவர்கள் மஹிந்தவிற்குப் பாடம் புகட்டுவர். அதுமட்டுமல்ல பிள்ளையான கடைசி நேரத்தில் முடிவை மாற்றினாலும் ஆச்சரியமில்லை.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...