இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருக்கும் சோனியா-மேனன் அதிகார மையத்தின் தற்போதைய கனவு:
1. விடுதலைப் புலிகளை இந்தியத் தேர்தலுக்கு முன் அழித் தொழித்தல்.
2. தேவை ஏற்படின் விடுதலைப் புலிகளை அழிக்க ஒரு திரை மறைவு இந்தியப் படை நடவடிக்கையை இலங்கையில் அரங்கேற்றுதல்.
3. இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு ஒரு தீர்வை இலங்கை அரசை முன் வைக்கச் செய்தல்.
4. தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள ஈழ ஆதரவு அலையை மழுங்கடித்தல்.
5. தமிழ்நாட்டில் தேர்தல் வெற்றி பெறல்.
புலிகள் பலவீனமடையவில்லை
இதில் முதலாவது நடக்குமா என்பது சந்தேகம். விடுதலைப் புலிகள் தமது படை பலத்தையும் ஆளணிப் பலத்தையும் இழப்பின்றித் தப்ப வைத்துக் கொள்ளும் தந்திரத்தில் பெரு வெற்றி கண்டுள்ளனர். தமது அனுபவம் குறைந்த வீரர்களைப் களமிறக்கி அனுபமிக்க சிங்களப் படையணிகளை அழித்தொழித்து வருகின்றனர்
திரை மறைவு இந்தியப் படை நடவடிக்கை
இந்தியப் படைகளை திரை மறைவாக வன்னிக் கள முனைக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவின் அசிங்கக் கைகள் ஈழ இனக் கொலையின் பின்னணியில் இருப்பது அம்பலப் படுத்தப் பட்டுள்து. இந்தியப் படைகளை திரை மறைவில் வன்னிக் கள முனைக்கு அனுப்பும் நடவடிக்கை வெளிவந்தால் தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகளைப் பெரிதும் பாதிக்கும்.
ஒரு தீர்வை இலங்கை அரசை முன் வைக்கச் செய்தல்.
விடுதலைப் புலிகளை ஒழிக்காமல் இலங்கை அரசு எந்தத் தீர்வையும் முன் வைக்காது. விடுதலைப் புலிகளை ஒழித்தால் எந்தத் தீர்வையும் முன் வைக்கும் அவசியம் இலங்கைக்கு இல்லை. இதை தனது சக கட்சியான ஜாதிக ஹெல உருமய மூலமாக வெளிப்படுத்தி உள்ளது. விடுதலைப் புலிகளை ஒழித்த பின் இந்திய அரசின் கோரிக்கைகளுக்கு செவி மடுக்க வேண்டிய அவசியம் இலங்கைக்கு இருக்காது. தனது வழமையான நண்பர்களான சீனாவுடனும் பாக்கிஸ்த்தானுடனும் கைகோத்து கொண்டு இந்தியாவிற்கு பெப்பே சொல்லிவடலாம்.
கனவு கனவுதான்
மேல் உள்ள முதல் மூன்றையும் செய்யாமல் நாலாவதைச் செய்ய முடியாது. நாலாவதாக உள்ளதைச் செய்யாமல் ஐந்தாவது நிறைவேறாது. ஆக மொத்தத்தில் சோனியா – மேனனின் கனவு கனவுதான்