ஆசியாவில் ஜப்பானும் தென் கொரியாவும் மட்டுமே அபிவிருத்தியடைந்த நாடுகள். உலகத்தின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக சீனா இருந்தாலும் அது ஒரு அபிவிருத்தியடைந்த நாடு அல்ல. தனிநபர் வருமானமும் வாழ்க்கைத்தரமும் தொழில்நுட்ப வளர்ச்சியும் தொழில்மயப்படுதலும் ஒரு நாட்டை அபிவிருத்தியடந்த நாடாகத் தீர்மானிக்கும்.ஹாங்காங், தைய்வான், சிங்கப்பூர், தென் கொரியா ஆகிய நாடுகள் ஆசியப் புலிகளாக பொருளாதார நிபுணர்கள் கருதி இருந்த போதிலும் தென் கொரியா மட்டுமே ஒரு அபிவிருத்தி அடைந்த நாடு என்ற நிலையைப் பெற்றது.
கடின உழைப்பு
1960இல் இருந்து 1990 வரை பொருளாதார ரீதியாக உலகின் மிக வேகமாக முன்னேறும் நாடாகக் கருதப்பட்ட தென் கொரியா உலகின் பொருளாதாரவளத்தில் 15வது நாடாக இருக்கிறது. இயற்கை வளம் ஏதுமில்லாத சிறிய நிலப்பரப்பின் அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு நாடான தென் கொரியா அதன் மக்களின் கடின உழைப்பாலும் சிறந்த ஆட்சியாளர்களாலும் ஒரு அபிவிருத்தியடைந்த நாடாக உருவெடுத்தது.
கல்விக்கு அதிக நேரம்.
திட்டமிட்ட பொருளாதாரத்தில் இருந்து திறந்த பொருளாதாரத்திற்கு வெற்றீகரமாக மாறிய நாடுகளில் தென் கொரியா முன்னணியில் திகழ்கிறது. 1960இல் இருந்து தொடர் 5ஆண்டுத் திட்டங்கள் மூலம் தென் கொரியா தனது பொருளாதரத்தை மேம்படுத்தியது. காலை 7மணி முதல் மாலை 6.30வரை நடக்கும் பாடாசாலைகள் மாணவர்களுக்கு அதிக சிரமம் கொடுக்கும் என பல நிபுணர்கள் கண்டித்த போதும். கடுமையான கல்விப் போதனை தென் கொரியாவின் கல்வி மேம்மாட்டிற்கு வழி வகுத்தது. அதனால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது.
1970இல் தென் கொரியாவின் தனி நபர் வருமானத்திலும் பார்க்க பிரேசிலின் தனி நபர் வருமானம் இருமடங்காக இருந்தது. இயற்கைவளம், எரிபொருள் வளம், வளமை மிக்க பெரு நிலப்பரப்பு, பல துறைமுகங்கள், அபிவிருத்தி அடைந்த நாடுகளின் ஆதரவு, ஆகியவை பிரேசிலுக்கு இந்தன. ஆனால் 2008இல் தென் கொரியாவின் தனி நபர் வருமானம் பிரேசிலினதும் பார்க்க இருமடங்காக அதிகரித்தது.
தென் கொரியாவின் வளர்ச்சிக்கு சம்சங்க், கியா, ஹியுண்டாய் போன்ற தனியார் நிறுவங்களும் பெரும் பங்களிப்புச் செய்தன. ஜப்பானியப் பொருளாதார வளர்ச்சியை தொடர்ந்து அதன் நாணய மதிப்பு அதிகரித்த போது அதை தென் கொரியா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி தனது நாட்டில் ஜப்பானிய நிறுவங்களை உற்பத்தி செய்ய ஊக்குவித்தது. கைப்பேசிகள், கப்பல் கட்டுதல், கட்டிட நிர்மாணம், ஊர்திகள் உற்பத்தி, படைக்கலன் உற்பத்தி ஆகியவற்றில் தென் கொரியா சிறந்து விளங்குகிறது.
2008இல் உலகப் பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளான போது அந்த நெருக்கடியை தனக்கு எப்படிச் சாதகமாக்குவது என்பதில் தென் கொரியா கவனம் செலுத்தியது. "I am confident that this crisis can advance our dream of becoming an advanced first-class nation," President Lee Myung-bak told a group of business leaders in 2009. உலகப் பொருளாதாரம் நெருக்கடியில் இருக்கையில் சிறந்த வழி ஆராய்சியிலும் அபிவிருத்தியிலும் (Research & Development) அதிக அக்கறை காட்டியது தென் கொரியா. ஏற்கனவே ஆராய்ச்சி அபிவிருத்திச் செலவில் உலகின் முன்னணி வகித்த தென் கொரியா தனது ஆராய்ச்சி அபிவிருத்திக்கான அரச செலவை 3%இல் இருந்து 5%மாக அதிகரித்தது.
2008இல் உருவான உலகப் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் சீனாவினதும் இந்தியாவினதும் பொருளாதாரங்களின் வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டன. ஆனால் தென்கொரியாவின் கடன்பெறுவலு அதிகரித்தது. இது பன்னாட்டு முதலீட்டாளர்களுக்கு ஒரு சாதகமான நிலையாகும். இந்தியாவின் கடன்பெறுவலு குறைக்கப்பட்டது. இந்தியாவில் அதன் மக்களின் கண்மூடித் தனத்தால் ஆளும் கட்சித் தலைவியின் மருமகனின் பொருளாதாரம் மட்டும் பெருவளர்ச்சியடைந்தது.
தற்போது உள்ள உலகப் பொருளாதார நெருக்கடியில் தேறும் நாடுகளில் தென் கொரியா முதலிடம் வகிக்கிறது. தற்போது உள்ள உலகப் பொருளாதர நெருக்கடி சீரடைந்ததும் தற்போது குறைந்த நிலையில் உள்ள தென் கொரிய மக்களின் கொள்வனவுத் திறன் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது உற்பத்தித் துறையில் பல உலக நாடுகளுக்கு தென் கொரியா பெரும் சவாலாக உருவாகும்.
Saturday, 13 October 2012
Friday, 12 October 2012
உலகின் முதல் நூறு வணிகச் சின்னங்கள் (Brands)
Forbes உலகின் முதல் நூறு வர்த்தகச் சின்னங்களின் (Brands) வரிசையை வெளியிட்டுள்ளது. இதில் முதலாம் இடத்தை ஆப்பிளும் நூறாம் இடத்தை கடுதாசிக் கைக்குட்டை தயாருக்கும் கிளீனெக்குசும்(Kleenex) பெற்றுள்ளன. ஆப்பிளை அடுத்து இரண்டாம் இடத்தில் Microsoft உம் தொடரும் இடங்களை Coca Cola, IBM, Google, Intel, MacDonalds, General Electric, BMW, Cissco ஆகியவை பெற்றுள்ளன.
முதல் பத்து இடங்களில் அமெரிக்க நிறுவனங்களே அதிகம் இடம் பிடித்துள்ளன. Coca Cola மூன்றாம் இடம் எடுத்துள்ள வேளையில் அதன் போட்டி நிறுவனமான பெப்சி 27-ம் இடத்தை மட்டுமே பெற்றுள்ளது. முதலாம் இடம் பெற்ற ஆப்பிளின் போட்டி நிறுவனமான சம்சங் 12-ம் இடத்தைப்பெற்றுள்ளது. நொக்கியா 22-ம் இடத்தையும் பிளக்பெரி 62-ம் இடமும், எல்ஜி 65-ம் இடமும், HTC 77-ம் இடமும் பெற்றுள்ளன.
கூகிள் 5-ம் இடத்தைப் பெற யாஹூ 96-ம் இடம் பெற்றுள்ளது. Adidasஇன் 53-ம் இடமும் Facebookஇன் 73ம் இடமும் e-bayஇன் 74-ம் இடமும் Dell - 41 ஆச்சரியத்தைத் தருகின்றன. ஆனால் Amazon 28-ம் இடத்தைப் பிடித்துள்ளது.
BMW - 9, Toyotoa - 14, Mercedes-Benz - 16, Honda - 19, Audi - 32, Volksvagan - 45, Ford - 59, Hyundai -71, Nissan-76, Lexus - 87, ஆகிய இடங்களைப் பிடித்து வாகன உற்பத்தித் துறையில் ஜேர்மனியும் ஜப்பானும் அமெரிக்கவிற்குப் பெரும் சவாலாக இருப்பதைக் கூறுகின்றன.
HPஇன் 15-ம் இடம் Dellஇன் 41-ம் இடமும் கவனிக்கத் தக்கன.
கடன் அட்டைகளில் Visa 29, American Express 34, Matercard 52,
விரைவு உணவகங்களில் MacDonalds7-ம் இடத்தில் இருக்கிறது. KFC, Burger King முதல் 100 இடத்துக்குள் வரவில்லை. காப்பிக்குப் பெயர் போன Starbucks 54-ம் இடத்தில் இருக்கின்றது. காப்பித்தூளிற்குப் பெயர் பெற்ற நெஸ்கஃபே20-ம் இடத்தைப் பெற்றுள்ளது.
இந்தியாவில் இப்போது பிரபலமாக அடிபடும் வால் மார்ட் 24-ம் இடத்தைப் பெற்றுள்ளது.
தொலைக்காட்சி மற்றும் செய்திகளுக்குப் பெயர் எடுத்த பிபிசி, அல்ஜசீரா, சிஎன்.என் போன்றவை முதல் நூறு இடத்துக்குள் வ்ரவில்லை. எம்ரீவி 68-ம் இடம் பெற்றுள்ளது.
வங்கிகளில் HSBC மட்டும் முதல் நூறு இடத்துக்குள் இடம்பெற்றுள்ளது. அதன் நிலை 39.
இவையாவும் அமெரிக்கர்களின் விருப்பை அடிப்படையாகக் கொண்டவையாகத்தான் இருக்கின்றன.
Wednesday, 10 October 2012
மானைக் கொன்றபின்னர் மான் குட்டியைத் தத்தெடுத்த சிங்கம்.
நெதர்லாந்தைச் சேர்ந்த ஐம்பது வயதான Adri De Visser என்னும் புகைப்படக்
கலைஞருக்கு உகண்டாவின் Queen Elizabeth National Park இல் ஒரு அற்புதக்
காட்சியைப் படம் பிடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு பெண்சிங்கம் ஒரு
மானைக் கொன்று தின்ற பின்னர் அதன் குட்டியை தன்னுடன் அணைந்த்து வைத்துக்
கொண்டது. அதன் மீது பரிவு காட்டி அத்துடன் விளையாடியது.
மிருகப் பூங்காவைப் பராமரிப்பவர் தனது மோட்டர் பைக்கில் வந்த ஓசை கேட்டு அந்த மான் குட்டியைப் பாதுகாக்க தனது வாயால் கவ்விக் கொண்டு வேறிடம் சென்றது அந்தப் பெண் சிங்கம்.
இந்த அன்பு மான் குட்டி வளர்ந்த பின்னரும் நிலைக்குமா?
பயமறியா இளம் கன்று... |
மிருகப் பூங்காவைப் பராமரிப்பவர் தனது மோட்டர் பைக்கில் வந்த ஓசை கேட்டு அந்த மான் குட்டியைப் பாதுகாக்க தனது வாயால் கவ்விக் கொண்டு வேறிடம் சென்றது அந்தப் பெண் சிங்கம்.
இந்த அன்பு மான் குட்டி வளர்ந்த பின்னரும் நிலைக்குமா?
நகைச்சுவைக் கதை: அவள் விகடனால் நரகத்திற்குப் போன கணவன்
இடம்: யமலோகம்
பூலோகத்தில் இருந்து கொண்டுவரப்பட்டவர்கள் மீது சித்திரபுத்தினார் தனது குற்றப்பத்திரிகைகளை வாசித்துக் கொண்டிருந்தார். அதன்படி தீர்ப்பை யமன் வழங்கிக் கொண்டிருந்தார். பயந்தபடி நின்று கொண்டிருந்த ஒருவர் மீதான குற்றப் பத்திரிகையை சித்திர புத்திரனார் வாசிக்கத் தொடங்கினார். பிரபு இருதய நோயாளியான இவனது மனைவி யாருடனோ கள்ளத் தொடர்பு வைத்திருக்கிறாள் என்பதை அறிந்த இவன் அதைக் கையும் களவுமாகப் பிடிப்பதற்காக இருபத்து ஐந்தாம் மாடியில் உள்ள தனது வீட்டிற்கு வழமைக்கு முன்னதாக வேலையில் இருந்து வந்தான்.
வந்தவன் வீடு முழுக்கத் தேடு தேடு என்று தேடினான். ஒருவரும் அகப்படவில்லை. தனது மனைவி மூச்சு வாங்க நின்று கொண்டிருப்பதைப் பார்த்து எப்படியும் கள்ளக் காதலன் இங்கு ஒளிந்து இருப்பது நிச்சயம் என்று எண்ணிக் கொண்டு பலகணியில்(balcony) போய்ப்பார்த்தான். அங்கு ஒருவன் பலகணி நுனியில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து தொங்கிக் கொண்டிருந்தவனைத் தாக்கத் தொடங்கினான். கள்ளக் காதலன் கைப்பிடியை விடுகிறான் இல்லை. ஒரு சம்மட்டியை எடுத்துக் கொண்டுவந்து அதனால் அவன் கையில் அடித்தான். கைப்பிடி நழுவி கள்ளக் காதலன் என இவன் சந்தேகித்தவன் கீழே ஒரு குப்பை மேட்டில் விழுந்தான். அவன் இறக்கவில்லை என்பதால் ஆத்திரத்துடன் மிக மிக சிரமப்பட்டு வீட்டுக்குள் இருந்த குளின்சாதனப் பெட்டியைத் தள்ளிக் கொண்டு வந்து கள்ளக் காதலன் என இவன் சந்தேகித்தவன்மீது விழுத்தினான். அது விழுந்து அவனை நசுக்கிக் கொன்றது. பாரம் மிக்க பெரிய குளிர் சாதனப் பெட்டியைத் தள்ளிக் கொண்டுவந்ததால் இருதய நோயாளியான இவன் உடனே மாரடைப்பு வந்து இறந்து விட்டான்.
பொறுமையாகக் குற்றப் பத்திரிகையை வாசிப்பதைக் கேட்டுக் கொண்டிருந்த யமன் தனது மனைவி சுவாஹா தனக்கு துரோகம் செய்து வாயு பகவானுடன் ஓடியதை கருத்தில் கொண்டு அவனை சுவர்க்கத்திற்கு அனுப்பும் படி கட்டளையிட்டான்.
இப்போது சித்திரபுத்திரனார் அடுத்த குற்றப்பத்திரிகையை வாசிக்கத் தொடங்கினார். பிரபு இவனது மனைவி அவள் விகடனில் வரும் முப்பது வகை ரெசிப்பிகளை ஒரு நாளைக்கு இரண்டுவீதம் சமைத்து இவனுக்குக் உண்ணக் கொடுத்து வந்ததால் உடல் எடை கூடி 26வது மாடியின் பலகணியில் நின்று தினமும் உடற்பயிற்ச்சி செய்து வந்தான். இன்று அப்படி உடற்பயிற்ச்சி செய்து கொண்டிருக்கும் போது தவறி விழுந்தவன் 25வது மாடியில் உள்ள பலகணியில் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தான். அப்போது 25வது மாடியின் பலகணிக்குரியவன் வந்து இவனது கையில் தாக்கினான். பின்னர் ஒரு சம்மட்டியை எடுத்து வந்து இவன் கையைப் பலமாகத் தாக்க கைப்பிடி நழுவி ஒரு குப்பை மேட்டில் விழுந்தான். இவனைத்தாக்கிய 25வது மாடி வாசி இவன் மேல் ஒரு பெரிய குளிர்சாதனப் பெட்டியை இவன் மேல் தள்ளி விழுத்தினான். அதனால் நசுங்கி இறந்தான். அவனை நரகத்திற்கு அனுப்பும்படி யமன் பணித்தார்.
பின்னர் சித்திர புத்திரனார் மூன்றாவது ஆசாமி மேல் குற்றப்பத்திரிகை வாசிக்கத் தொடங்கினார். பிரபு இவன் பெயர் கத்தியானந்தா சுவாமி. கத்தியால் தனது பக்தர்களின் கைகளில் கீறி அருள் பாலிப்பவன். இன்று இவன் 25வது மாடியில் இருந்து தள்ளிவிடப்பட்ட ஒரு குளிர்சாதனப் பெட்டியில் ஒளித்திருந்ததால் கொல்லப்பட்டான். இதைக் கேட்ட யமன் நரகத்தை நோக்கி ஓடினார்.

Tuesday, 9 October 2012
விஞ்ஞானிகள்: சர்க்கரை அதிகம் உண்டால் முட்டாள்களாய் ஆகுவீர்கள்
சர்க்கரை உண்பதற்கும் மூளையின் செயற்பாட்டிற்கும் உள்ள தொடர்பைப்பற்றி லொஸ் ஏஞ்சலிஸில் உள்ள கலிபோர்னியாப் பல்கலைக் கழகம் ஒரு ஆய்வை மேற்கொண்டது. Gomez-Pinilla என்னும் விஞ்ஞானியின் தலைமையிலான ஒரு குழுவினர் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
சிக்கலான சுவர்க்கட்டமைப்பு(maze) |
இரு குழு எலிகளும் மீண்டும் சிக்கலான சுவர்க்கட்டமைப்பிக்குள்(maze) நடக்கும் படி விடப்பட்டன. சர்க்கரை அதிகம் உண்ட எலிகள் கட்டமைப்பில் இருந்து வெளியே நடந்து வரும் வழியைக் கண்டுபிடிக்கமுடியாமல் தடுமாறின. சர்க்கரை உண்ணாத எலிகள் இலகுவாக வெளியே வரும் வழியை இலகுவாகக் கண்டு கொண்டன.
மூளையில் உள்ள உயிரணுக்கள் தமக்கிடையிலான சமிக்ஞைப் பரிமாற்றத்தை செய்வதை சர்க்கரை உணவு உண்பது தாமதப் படுத்துகிறது. இன்சுலினின் வலுக்குறைவதால் இந்த தாமதம் ஏற்படுகிறது. அத்துடன் நினைவாற்றலும் கற்கும் திறனும் பாதிப்படைகிறது. A closer look found that insulin had lost some of its power to influence the brain, which in turn disrupted the memory and learning functions of the brain.
அதிக மீன்களை உண்பவர்களுக்கு மூளை அதிகம் என்ற பழம் கூற்றும் இந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மூளையின் சிறந்த செயற்பாட்டிற்கு docosahexaenoic acid (DHA) பெரிதும் உதவுகிறது. மீன்வகைகளில் docosahexaenoic acid (DHA) உண்டு.
சர்க்கரை அதிகம் உண்பதால் இரத்தத்தில் சேரும் fructose எமது மூளைக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இயற்கையான பழவகைகளை உண்பதால் இந்தப்பாதிப்பு ஏற்படாது. பழவகைகளில் உள்ள ஆன்டிஒக்சிடென்ற் உடலுக்கு உகந்தது.
"Insulin is important in the body for controlling blood sugar, but it may play a different role in the brain, where insulin appears to disturb memory and learning," he said. "Our study shows that a high-fructose diet harms the brain as well as the body. This is something new." என்கிறார் Gomez-Pinilla என்னும் விஞ்ஞானி.
Monday, 8 October 2012
தொலைபேசி விற்பனையாளர்களைக் கலாய்ப்பது எப்படி
நீங்கள்
வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போது உங்களை கலாய்க்கும் தொலைபேசி
அழைப்பு ஒரு மோசமான விற்பனையாளரிடமிருந்து வரலாம். நீங்கள் ஒரு முக்கியமான
ஒரு தொலைபேசி அழைப்பை எதிர்பார்த்திருக்கும் போது ஒரு அறுவை அழைப்பு ஒரு
விற்பனையாளரிடமிருந்து வரலாம். இந்த தொ(ல்)லைபேசி அழைப்பாளர்களை நீங்களும் இப்படிக் கலாய்க்கலாம்.
- உங்கள் மாமியார் வீட்டில் இருந்தால் அவரிடம் தொலைபேசியைக் கொடுங்கள்.
- தொலைபேசியில் பாட்டுப்பாடுங்கள்.
- உங்களிடம் என்சைக்கிளோப்பிடியா விற்பனைக்கு உண்டு. அதை அழைப்பு விடுத்தவரை வாங்கும்படி கேளுங்கள்.
- அவர் அழைத்த்தது பிழையான இலக்கம் எனச் சொல்லுங்கள். இந்த வீட்டில் கடவுள் மட்டும்மே வாழ்கிறார் எனச் சொல்லுங்கள்.
- அழைப்பு விடுத்தவரிடம் உங்கள் வீட்டு நாய் கொடுக்கும் தொல்லையைப் பற்றி கூறுங்கள்.
- அழைப்பு விடுத்தவரிடம் உங்கள் வாழ்க்கைப்பிரச்சனை பற்றிக் கூறுங்கள்
- உங்கள் வீட்டில் இருக்கும் சிறுகுழந்தைகள் யாராவது முக்கியமானவரிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும் போது தாம் தொலைபேசியில் பேச வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள். அந்தச் சிறு குழந்தையின் ஆசையத் தீர்த்து வையுங்கள்.
- அழைப்பு விடுப்பவர் தனது நிறுவனம் பற்றிக் கூறியவுடன் நாய் மாதிரிக் குரையுங்கள்.
- அவரிடம் பவர்ஸ்டாரின் பெருமைகளைப்பற்றி எடுத்துச் சொல்லுங்கள்.
- அழைப்பு விடுத்தவர் என்ன நிற உள்ளாடை அணிந்திருக்கிறார் என்று கேளுங்கள்.
- அழைப்பு விடுத்தவர் பேசும் போது தொடர்ந்து உரத்துக் கொட்டாவி விடுங்கள்.
- அழைப்பு விடுத்தவரின் தொலைபேசி இலக்கத்தைக் தரும்படி கேட்டு பின்னர் சாகவசகாசமாக உரையாடலாம் என்று சொல்லுங்கள்.
Sunday, 7 October 2012
மோசமான கமெராக்களால் சிறந்த படங்கள் எடுப்பது எப்படி?
புகைப்படக்கருவிகள் இலத்திரனியல் மயமாகி எண்மியப்படுத்தப் பட்ட பின்னர் பல மாற்றங்களுக்கு உள்ளாகிவிட்டன. புதுப் புது புகைப்படக் கருவிகள் வந்தவண்ணமாய் இருக்கின்றன. இருபந்தைந்து ஆண்டுகளுக்கு முன்னரும் சிறந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. போட்டோஸொப் போன்ற மென்பொருள்கள் இல்லாத காலங்களிலும் சிறந்தபுதிய புகைப்படக் கருவிகள் வாங்கினாலும் பழுதடையாமல் இருக்கும் பழையவற்றைக் கொண்டும் சிறந்த படக்கள் எடுக்க முடியும்.
ஒரு பிரபல புகைப்படக் கலைஞரின் கண்காட்சிக்குச் சென்ற ஒரு பிரபல எழுத்தாளர் நீங்கள் நல்ல புகைப்படங்கள் எடுத்துள்ளீரகள். நீங்கள் என்ன கமெரா பாவிக்கிறீர்கள் எனக் கேட்டார். அதற்கு அந்தப் புகைப்படக் கலைஞர் நீங்கள் சிறந்த நாவல்கள் எழுதுகிறீர்கள். நீங்கள் என்ன பேனா பாவிக்கிறீர்கள் எனப் பதிலுக்கு கேட்டார். புகைப்படம் எடுத்தலும் பயிலக்கூடிய ஒரு கலையே. வலுக்கூடிய ஒரு மோட்டர் பைக் இருந்தால் மட்டும் விரைவாக ஓட்ட முடியாது. நல்ல பயிற்ச்சியும் திறமையும் உள்ளவரால் ஒரு மோசமான மோட்டார் பைக்கை விரைவாக ஓட்ட முடியும் புகைப்படமும் அப்படியே.
புகைப்படமும் ஒரு கலைஞனின் கற்பனையே. Image என்ற சொல்லும் imagination என்ற சொல்லும் நெருன்க்கிய தொடர்புடையவை.
பழைய கமெராக்களைப் பாவிக்கும் போது கவனிக்க வேண்டியவை:
1. Charge the battary before it goes down. பழைய கமெராக்களின் பாட்டரிகள் விரைவில் முடிந்து விடும். அவற்றை Charge முடிய முன்னரே Chargeபண்ணிவிட வேண்டும்.
2. வெளிச்சம் உங்கள் முதுகின் பின்னர் இருந்து வரவேண்டும். இயற்கையான ஒளியோ அல்லது செயற்கையான ஒளியோ ஒளி உங்கள் முதுகின் பின்னர் இருந்து வரவேண்டியபடி நிலை எடுக்க வேண்டும். மேற்கு நாடுகளில் பல நேரங்களில் மப்பும் மந்தாரமாக இருக்கும். பல இடங்களில் திக்குத் திசை தெரியாமல் இருக்கும். அப்போது உங்கள் உள்ளங்கையக் நிலத்திற்குச் சமாந்தரமாகப் பிடிதுக் கொண்டு மறுகையின் சுண்டுவிரலை உள்ளங்கைக்கு செங்குத்தாகப் பிடித்தால் விரலின் நிழல் விழும் திசையை வைத்து எந்தப்பக்கத்தில் இருந்து அதிக ஒளிவருகிறது என்று அறியலாம்.
3. கறுப்பு நிறமானவர்களைப் படம் எடுக்கும் போது கமெராவை இருட்டில் அல்லது குறைந்த ஒளியில் படம் எடுப்பதற்கான settingஇல் வைக்கவேண்டும்.
4. இயன்ற அளவிற்கு அதிக படங்களை எடுக்க வேண்டும். அதிலும் வேறு வேறு settingஇல் வைத்து பல படங்களை எடுக்க வேண்டும். கமெராவின் memory போதாவிட்டில் பெரிய வலுவுள்ள SD cardஐப் பொருத்தலாம்.
5. பழைய கமெராக்கhttp://www.blogger.com/blogger.g?blogID=4878036059365749039#editor/target=post;postID=2779207865571850495ளில் படம் எடுக்கும் போது ஒளி அதிகம் இருந்தாலும் flash lightஐப் பாவித்தால் படங்கள் நன்றாக வரும். சில இருட்டான நிலைகளில் flash lightஐப் பாவிக்காமல் எடுத்தாலும் படங்கள் நன்றாக வர வா6ய்ப்புண்டு.
6. பழைய கமெராவில் உள்ள creative mode களைப் பாவிப்பதைத் தவிர்த்துக்கொள்ளவும். Basic settingஇல் சிறந்த படங்களை எடுக்க முடியும்.
7. பின்னணி முன்னணியைக் கெடுக்கும். நீங்கள் படமெடுக்கும் ஆளின் அல்லது பொருளின் பின்னணியில் புகைப்படத்தின் தரம் பெரிதும் தங்கியுள்ளது. கரிய அல்லது கரு நிலப் பின்னணியை புகைப்படக் கலைஞர்கள் விரும்புவார்கள்.
8. புதிதாகப் புகைப்படம் எடுப்பவர்கள் வேறு வேறு settingஇலும் பின்னணியிலும் பல பாடங்களை எடுத்து அந்த அந்த settingஇலும் பின்னணியிலும் படங்கள் எப்படி வருகிறது என்று பார்த்து உரிய settingகளையும் பின்னணிகளையும் குறித்து வைத்து கொள்ள வேண்டும்.

Subscribe to:
Posts (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...