கலைஞர் ஐய்யா உங்கள் டெசோவில் ஈழம் என்ற வார்த்தை பாவிக்கக் கூடாது என்று நீங்கள் சொக்கத் தங்கம் என்று வர்ணித்த சோனியாவின் அரசு கூறிவிட்டது. ஈழத்தை எடுத்து விட்டு உங்கள் மாநாட்டை நடந்துங்கள். இனி உங்கள் மாநாட்டை டசோ மாநாடு என்று அழைப்போம்.
உங்கள் ஊது குழல் சுப வீர்பாண்டியன் டெசோ மாநாடு மன்னிக்கவும் டசோ மாநாடு தொடங்கும் என்று அறிவித்ததிலிருந்து எல்லோரும் ஈழத்தைப் பற்றிப் பேசாமல் கலைஞரைப் பற்றிப் பேசுகிறார்கள். கலைஞரைப்பற்றிப் பேசாமல் ஈழத்தைப் பற்றிப் பேசவும் என்றார். அப்போ கலைஞரைப்பற்றிப் பேச முடியாது....ஈழத்தைப் பற்றிப் பேச முடியாது....நாற்பது ஆண்டுகளில் பல்லாயிரம் கோடிகள் சுருட்டுவது எப்படி என்பதைப் பற்றி ஆராய டசோ மாநாட்டை நடத்துங்கள்.
மருத்துவத் தேவைகளுக்காக இந்தியா வர விரும்பிய ஒரு வயது முதிந்த மூதாட்டியை இந்தியாவிற்குள் வரலாம் என்ற நுழைவு அனுமதியைக் கொடுத்து விட்டு அவர் சென்னை வந்து இறங்கியதும் அவரை நாற்காலியில் பல மணித்தியாலங்கள் காத்திருக்க வைத்து விட்டு உங்கள் மாநில ஆட்சியும் மத்திய ஆட்சியுமாமக இணைந்து செய்த சதி போல் உங்கள் டசோ மாநாட்டிற்கு வருபவர்களையும் திருப்பி அனுப்பப்படமாட்டார்கள் என்ற உத்தரவாதத்தைக் கொடுத்து விட்டு உங்கள் டசோ மாநாட்டை நடத்துங்கள்.
பார்ப்பாரப் பயல் சுப்பிரமணிய சுவாமி மஹிந்த ராஜபகசவிற்கு இந்தியா விருது வழங்கிக் கௌரவிக்க வேண்டுமென்கிறான். இன்னொரு பார்ப்பாரப் பயல் சோ மஹிந்த ராஜபக்சவைப் பாராட்ட வேண்டுமென்கிறான். இந்த மிருக்கக் கூட்டம் வாழும் நாட்டை தமிழ்நாடு என்று சொல்லக் கூடாது. அதனால் தமிழ்நாட்டின் பெயரை மாற்றவேண்டும் என்று தீர்மானம் போட உங்கள் டசோ மாநாட்டை நடத்துங்கள்.
இப்போதைய நிலையில் ஈழம் பற்றிப் பேசத்தேவையில்லை ஈழத்தில் அல்லல்...... ஐயோ ஐயோ தப்பு தப்பு கன்னத்தில் போட்டுக் கொள்கிறேன்.... இலங்கைத் தமிழ் மக்களின் துயரத்தைத் துடைக்கவும் அவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கவும் என்ன செய்வது என்பதைப் பற்றி ஆராய மாநாடு என்றீர்கள். இது தொடர்பாக எத்தனை நிபுணர்களை நீங்கள் அழைத்துள்ளீர்கள் என்பதைத் தெரிவித்து விட்டு உங்கள் மாநாட்டை நடத்துங்கள்.
இலங்கையில் இறுதிப் போரின் போது உங்களை சிவ சங்கரமேனனும் எம் கே நாராயணசாமியும் சந்தித்து விட்டுக் கொழும்பு செல்வார்கள். அவர்கள் கொழும்பு சென்றவுடன் தமிழர்களுக்கு எதிரான போர் உக்கிரமடையும். இந்த இரு மலையாளிகலூம் என்னவெல்லாம் சொல்லி உங்களை மிரட்டினார்கள் என்பதை ஒன்றும் விடாமல் சொல்லிவிட்டு உங்கள் டசோ மாநாட்டை நடத்துங்கள்.
தியாகி முத்துக்குமரன் தற்கொடை செய்து இறந்து தனது உடலத்தை வைத்து ஈழப்பிரச்சனையை தமிழ்நாடு எங்கும் பரப்புரை செய்யும் படி எழுதி வைத்தான். அவனது கடைசி ஆசையை நிறைவேற்ற நீங்கள் போட்ட தடைகள் யாவற்றிற்கும் மன்னிப்புக் கேட்க டசோ மாநாட்டை நடத்துங்கள்.
இலங்கை இறுதிப் போரின் போது நீங்கள் உண்ணாவிரதம் இருந்து போரை நிறுத்தி விட்டதாகச் சொன்னீர்கள். அதன் பின்னர் ஊடகவியலாளர்கள் உங்ககளைச் சந்தித்து தொடர்ந்தும் இலங்கையில் தமிழர்கள் மீது குண்டு வீச்சு நடக்கிறது என்றார்கள். அதற்கு நீங்கள் மழை விட்டு விட்டது இப்போது தூவானம் அடிக்கிறது என்றீர்கள். சென்ற சட்ட சபைத் தேர்தலில் உங்களுக்கு கிடைத்த படு தோல்வி தூவானம் மட்டுமே. மழை அடுத்த 2014 பாராளமன்றத் தேர்தலில்தான் பொழிய இருக்கிறது என்பத உணர்ந்து கொண்டு உங்கள் மாநாட்டை நடந்த்துங்கள்.
நீங்கள் டெசோ மாநாடு தொடங்க அதில் ஈழம் என்ற சொல்லே இருக்கக் கூடாது என்கின்றது. இந்திய மத்திய அரசு. அந்த அளவிற்கு உங்கள் மத்திய அரசுக்கு தமிழ் மக்கள் மீது காழ்ப்புணர்ச்சி வெளிநாடுகளில் வாழும் இந்தியக் கைக்கூலிகள் பலர் இந்திய ஒரு பிராந்திய வல்லரசு அதை ஈழத் தமிழ் மக்கள் அனுசரித்துப் போகவேண்டும் என்று திருப்பித் திருப்பிச் சொல்லி வருகிறார்கள். உங்கள் மத்திய அரசின் முக மூடியை கிழிக்க இந்த டசோ மநாடு எங்களுக்கு உதவியது என்பதால் உங்களுக்கு நாங்கள் சொல்லும் நன்றியைப் பெற்றுக் கொண்டு உங்கள் டசோ மாநாட்டை நடத்துங்கள்.
டசோ மாநாட்டை இத்தாலியாளின் அரசு மட்டுமல்ல கன்னடத்தியின் அரசும் எதிர்க்கிறது. கன்னடத்தியும் ஈழத்தமிழர்களுக்கு எதிராளவளே என்று எமக்கு உங்கள் மாநாடு உணர்த்தியது என்ப்தால் நாம் உங்களுக்கு சொல்லும் நன்றியை பெற்றுக் கொண்டு உங்கள் டசோ மாநாட்டை நடத்துங்கள்.
இலங்கையில் சகல அரசியல் கட்சித் தலைவர்களும் உங்கள் டசோ மாநாட்டிற்கு வர மாட்டோம் என்று சொல்லிவிட்டனர். வைரமுத்து வருவாக..............சுப வீரபாண்டியன் வருவாக.....குஷ்பு வருவாக........கலா அக்கா வந்து சும்மா கிழி கிழி கிழி கிழி கிழி என்று கிழிப்பாகா......நமீதா வருவாக........மற்றும் உங்கள் மாநாட மயிலாட ஆட்டக் காரர்கள் அனைவரும் வருவாக.........இவர்களை வைத்துக் கொண்டு உங்கள் மாநாட்டை நடத்துங்கள்.
நீங்கள் உண்மையான தமிழ்த் தலைவர் என்றால் உங்கள் தலைவர் அண்ணாத்துரை ஒத்தி வைத்த திராவிட நாட்டுக் கோரிக்கையை உங்கள் கழக் கொள்கையாக மாற்ற ஒரு மாநாடு நடாத்துங்கள். அல்லது நீங்கள் ஒரு தெலுங்கர் தமிழ்நாட்டுக்கு வாழ வந்தவன். இப்போது ஆளுகின்றீர்கள் என்ற உண்மையை பகிரங்கப்படுத்துங்கள்.
Showing posts with label கருணாநிதி. Show all posts
Showing posts with label கருணாநிதி. Show all posts
Saturday, 11 August 2012
Thursday, 3 June 2010
செம்மொழி மாநாடு: பேராசிரியர் சிவத்தம்பியிடம் சில கேள்விகள்

இலங்கைத் தமிழர்களின் அரசியல் போராட்டம் தமிழக முதல்வர் கருணாநிதியை நம்பி ஆரம்பிக்கப்பட்டதல்ல. இது எங்களுடைய போராட்டம். இந்தப் போராட்டத்தை நாங்களே நாடி, நாங்களே வெல்ல வேண்டும் என யாழ். பல்கலைக்கழக பேராசிரியரும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கக் குழுவுக்குத் தலைமை வகிப்பவருமான கா.சிவத்தம்பி தெரிவித்தார்.
கலைஞர் கருணாநிதி ஈழப்பிரச்சினைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதற்காக அங்கு போகக் கூடாது எனச் சொல்வது தவறு. இன்னொருவர் எமக்கு உதவி செய்யவில்லை என்பது இங்கு பிரச்சினையல்ல. இதனை நான் தமிழகத்திலும் சொல்வேன் என அவர் மேலும் கூறினார்.
பேராசிரியர் அவர்களே
- வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றும் போது அதற்கு ஆதரவாக பேசியவர்கள் என்ன கூறி தனிநாட்டிற்கு ஆதரவு கேரினார்கள் என்பதை அறிவீர்களா?
- தந்தை செல்வா உட்பட பல தமிழ்த் தலைவர்கள் மூன்றரைக் கோடி தமிழர்கள் (அப்போதைய தமிழ்நாட்டு மக்கள் தொகை) எமக்கு உதவுவார்கள் என்று அடிக்கடி கூறியதை நீங்கள் அறிவீர்களா?
- அந்தத் தமிழர்களின் தலைவர் ஈழத் தமிழர்களின் தலைவர்களின் நம்பிக்கைக்கு துரோகம் இழைக்கக் கூடாது என்பதை நீங்கள் அறிய மாட்டீர்களா?
- ஒருகாலத்தில் நீங்கள் இடது சாரி முகமூடி அணிந்த சிங்களப் பேரினவாதிகளுடன் நல்ல உறவு வைத்திருந்தீரகள். 1974-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் தமிழாராய்ச்சி மாநாடு நடத்தப்படுவதை அப்போது இடது சாரி முகமூடி அணிந்திருந்த சிங்களப் பேரினவாதிகள் தமிழாராய்ச்சி மாநாடு கொழும்பில் நடத்த வேண்டும் என்று அடம் பிடித்தனர். உங்கள் இடதுசாரி "தமிழ் புத்தி ஜீவிகள்" பலர் தங்கள் சிங்களப் பேரினவாதிகளைத் திருப்திப் படுத்த யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழாராச்சி மாநட்டைப் புறக்கணித்ததை மறந்து விட்டீர்களா? அவர்களையும் மீறி மாநாடு நடந்த போது அப்போதைய உங்கள் சிங்கள இடது சாரி நண்பர்கள் இறுதி நாளில் செய்த சதியை மறந்து விட்டீர்களா? தமிழாராச்சி மாநாட்டின் இறுதி நாளில் நடந்த் கொலைகளை மறந்து விட்டீர்களா?
- சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கம் தமிழ்நாட்டில் இருந்து பத்திரிகைகள் இறக்குமதி செய்வதைக் கட்டுப்படுத்தியதை எதிர்த்து எழுதிய கொழும்புத் தமிழ்ப் பத்திரிகை வீரகேசரியயை அதன் விழாவிலேயே எதிர்த்து உரையாற்றிய உங்கள் வீரத்தை மறந்து விட்டீர்களா?
- கருணாநிதியின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்து பல நாட்களாகி விட்டன. அவர் தமிழ்நாட்டு முதல்வராக இருக்கும் வரை உலகத்தில் எங்கு தமிழர்களுக்கு எதிராக அடக்கு முறை நடந்தாலும் அவர் குரல் கொடுக்க வேண்டிக கடப்பாடு உடையவர் என்பதை மறுக்கிறீரகளா?
- சென்ற ஆண்டு இலங்கையில் நடந்த இன அழிப்புப் போரின் இறுதி நாட்களில் ஒரு சிறு இடத்தில் போர் நடந்ததால் இலங்கை படைகள் தொலை தூரம் சென்று தாக்கும் ஆயுதங்கள் பாவிக்கப் படமுடியாத நிலை ஏற்பட்ட போது தாம் கனரக ஆயுதங்கள் பாவிக்க முடியாது என்று அறிவித்தனர். அதை சாக்காக வைத்து முதல்வர் கருணாநிதி ஒரு உண்ணா விரத நாடகமாடி வாக்கு வேட்டையாடியதை நீங்கள் அறியவில்லையா?
- முதல்வர் கருணாநிதி தனது உண்ணாவிரதத்தால் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டது என்ற பொய் சென்ன பின்னரான 24 மணித்தியால நேரத்தில் இருபத்தையாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் வன்னியில் கொல்லப்பட்டதை நீங்கள் அறியவில்லையா?
- செம்மொழி மாநாடு முதல்வர் கருணாநிதி தனது தலைமையில் எந்த ஒரு தமிழாராய்ச்சி மாநாடும் நடக்க வில்லை என்ற ஆதங்கங்கத்தை தீர்க்க ஒழுங்கு செய்யப் பட்டது என்று கூறுவதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
- ராஜபக்சே நல்லவர் அவர் கொடுப்பதை தமிழர்கள் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியதை நீங்கள் அறியவில்லையா?
- தமிழர்களுடைய உரிமைப் போராட்டம் உங்களுடைய போராட்டம் என்கிறீர்களே "உங்களுடைய" போராட்டத்திற்கு நீங்கள் இதுவரை செய்த பங்களிப்பு என்ன?
Sunday, 14 February 2010
முதல்வர் கருணாநிதியின் அடுத்த நாடகம்

கருணாநிதி தனது அடுத்த நாடகத்திற்கு தயாராகி விட்டார். அவர் அண்மையில் இப்படித் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்:
- தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை தேர்தல் முடிந்தபின் நிறைவேற்றுவதுதான் நியாயமான - நாணயமான ஜனநாயகமாக இருக்க முடியும். அதிலும் குறிப்பாக ராஜபக்சே இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு என்ற அடிப்படையில் அளித்துள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் தவறினாலும் - தாமதப்படுத்தினாலும் தி.மு.க. அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. இங்குள்ள கழக அரசின் சார்பாக இந்தியப் பேரரசை வலியுறுத்தி ஆவன செய்யத் தயங்காது.
நடுக்கடலில் தமிழ்நாட்டு மீனவர்கள் குருவிகள் போல் சுட்டுக் கொல்லப்பட்டபோது, நிர்வாணமாக்கி மானபங்கப்படுத்தித் தாக்கியபோது யாரால் தடுக்க முடிந்தது? பார்வையாளர்களாக இருந்தது யார்?
தமிழர்களின் ஆயுதக் கப்பலை இந்தியாவும் இலங்கையும் இணைந்து அழித்து ஒழித்தபோது யாரால் தடுக்க முடிந்தது? பார்வையாளர்களாக இருந்தது யார்?
தமிழர்கள் ஒரு நாளில் மட்டும் ஆரியப் பிணந்தின்னி நாய்களும் சிங்களவர்களும் இணைந்து 25000 இற்கு மேற்பட்ட அப்பாவித் தமிழர்களைக் கொன்றும் குவித்தபோது யாரால் தடுக்க முடிந்தது? பார்வையாளர்களாக இருந்தது யார்?
ராஜீவ்-ஜேஆர் ஜெயவர்தன ஒப்ந்தம் இதுவரை நிறைவேற்றப் படவில்லையே! ராஜீவும் ஜேஆரும் தமிழர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறை வேற்றவில்லையே இதப் பார்த்துக் கொண்டு இருந்தது யார்?
இம்முறை பதவியைத் துறந்து விட்டுப் போராடுவோம் என்று சொல்லாமல் இந்தியப் பேரரசை வலியுறுத்தி ஆவன செய்வோம் என்று முதல்வர் ஐயா கூறியிருப்பதைக் கவனிக்கவும். அவர் இன்னும் கடிதம் எழுதப்போகிறார்.
Subscribe to:
Posts (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிர்கள் ஜெனிவாவில் உள்ள ஐநா முன்ஒன்று கூடி மானம் கெட்ட இந்தியா என்று முழங்கினர். இதன் காணொளியைக்காண click on ...
-
போரில் இறந்த எதிரியின் உடலைப் புணரும் பேய்களின் நாட்டுடன் நட்புறவைப் பேணுகிறது ஒரு மானங் கெட்ட நாடு பாதுகாப்பு வலயத்திற்கு வாவெனச் சொல்லிக...
-
வட கொரியா , ஈரான் ஆகிய நாடுகள் ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் மிகவும் துரிதமாக வளர்ந்து வருகின்றன. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் வட கொரியா உலகின் ...
