Saturday, 13 November 2010

வித்தியாசமான கேள்விகளும் விவரம் கெட்ட பதில்களும்



What Do Fish Say When They Hit a Concrete Wall?
>> Dam

What Do Eskimos Get From Sitting On The Ice too Long?
>> Polaroids

What Do You Call a Boomerang That Doesn't work?
>> A Stick

What Do You Call Santa's Helpers?
Subordinate Clauses.

What Do You Call Four Bullfighters In Quicksand?
Quattro Sinko..

What Do You Get From a Pampered Cow?
Spoiled Milk.

Why Do Gorillas Have Big Nostrils?
Because They Have Big Fingers.

Where Do You Find a Dog With No Legs?
Right Where You Left Him

விவரங்கெட்ட கேள்விகளும் முறையான பதில்களும்:
What is the origin of the phrase SCOT free - why not Irish free or Welsh free, for example?
In this context 'scot' has nothing to do with nationality. It derives from the old word 'scot' meaning tax, payment or reckoning. Thus to go scot-free means to go without payment or penalty.


Why do we park on a driveway and drive on a parkway?
The words 'drive' and 'park' existed long before automobiles were ever invented. These are not words created to describe the actions of your car, but rather words which already had meanings and were adapted to describe a new innovation. Since people don't park on parkways, isn't it likely that some other meaning of the word park (i.e. place of recreation) is the root of the word?

G-20 நாடுகளின் நாணயப் போர் நிறுத்தம்


G-20 நாடுகள் என்ற அமைப்பு 1999-ம் ஆண்டு ஆசிய நாடுகள் 1990களில் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானதைத் தொடர்ந்து உலகின் முன்னணிப் பொருளாதர வல்லமை உடைய இருபது நாடுகளின் நிதி மந்திரிகளும் மத்திய வங்கிகளி ஆளுனர்களும் கூடி உருவாக்கப்பட்டது. இதில் உள்ள நாடுகள்:

Argentina, Australia, Brazil, Canada, China, France, Germany, India, Indonesia, Italy, Japan, Mexico, Russia, Saudi Arabia, South Africa, Republic of Korea, Turkey, U K and USA.


வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கும் எழுச்சியடையும்(emerging economies) நாடுகளிற்குமிடையிலான பொருளாதர வளர்ச்சி வீதத்தில் இப்போது பாரிய வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு வளர்ச்சி அடைந்த நாடுகளின் பொருளாதாரம் 2.2% வளர்ச்சியையும் எழுச்சியடையும் நாடுகளின் பொருளாதாரம் 6.4% வளர்ச்சியையும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. எழுச்சியடையும் நாடுகள் தமது பொருளாதார வளர்ச்சிக்கு வளர்ச்சியடைந்த நாடுகளுக்கான ஏற்றுமதியை நம்பியுள்ளன.


வளர்ச்சியடைந்த நாடுகள் இபோது பாரிய உள்ளூர் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. அவை தமது வட்டி வீதத்தை தாழ் நிலையில் வைத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம். இது அந்த நாடுகளின் நாணயத்தின் பெறுமதியை தாழ் நிலையில் வைத்திருக்கும். இது அவற்றின் ஏற்று மதியை அதிகரிக்கும் இறக்கு மதியைக் குறைக்கும். இது சீனா, இந்தியா, பிரேசில் நாடுகளின் ஏற்றுமதியைப் பாதிக்கும். இதனால் சீனா இந்தியா பிரேசில் ஆகிய நாடுகள் தங்கள் நாணயத்தின் பெறுமதியை குறைத்து வைத்திருக்க முயல்கின்றன. பல நாடுகள் தமது நாணயத்தின் பெறுமதியை குறைத்து வைத்திருக்கும் போட்டியில் ஈடுபடுவதை நாணயப் போர் என்கின்றனர். இந்த நாணயப் போர் உலக வர்த்தகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சத்தின் மத்தியில் G-20 நாடுகளின் மாநாடு தென் கொரியத் தலைநகர் செயோலில் நடந்தேறியுள்ளது.


  • நாணயப் போரின் பின்னணி:ஒரு பிரித்தானியப் பவுண்டின் பெறுமதி இந்திய ரூபாவிற்கு எதிராக £1=Rs75 என்று இருக்கையில் இந்தியாவில் 15000ரூபா பெறுமதியான ஒரு சேலையை பிரித்தானியாவில் இருநூறு பவுண்களுக்கு வாங்க முடியும். ரூபாவின் பெறுமதி £1=Rs100 என்று விழ்ச்சியடைந்தால் அச்சேலையின் விலை நூற்றைம்பது பவுண்களாகும். இதனால் பிரித்தானியாவில் வாழும் இந்தியர்களும் இலங்கையர்களும் அதிக சேலைகளை வாங்குவர். இது இந்தியச் சேலை உற்பத்தியை அதிகரிக்கும். இப்படிப் பல இந்தியப் பொருட்கள் பிரித்தானியாவில் அதிகம் விற்கப்பட இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியடையும். இப்பின்னணியிலேயே நாடுகள் தமது நாணயப் பெறுமதியை குறைந்த மதிப்பில் வைத்திருக்க முயல்கின்றன.


மேற்கு நாடுகளும் சரவ தேச நாணய நிதியமும் சீனா தனது நாணயத்தின் பெறுமதியை வேண்டுமென்றே குறைத்து வைத்திருக்கின்றது என்று குற்றம் சாட்டுகின்றனர். சீனா தனது நாணத்தின் பெறுமதியைக் கூட்டினால் அதன் ஏறுமதி வீழ்ச்சியடைந்து தனது நாட்டில் பலர் வேலையிழக்க வேண்டிவரும் என்று கூறுகிறது. அப்படிச் செய்தால் அது தனது நாட்டு மக்களின் கொள்வனவு சக்தியை குறைவடையச் செய்யும் அது மேற்கு நாடுகளின் ஏற்று மதியையும் பாதிக்கும் என்று வாதிடுகிறது.


பன்னாட்டு நாணய நிதிய முறைமை பெரிதும் நலிவடைந்துள்ள நிலையில் நாணயப் போர் பெரிய நிதி நெருக்கடியை பல நாடுகளில் ஏற்படுத்தும் என்ற அச்சம் இப்போதும் பொருளாத நிபுணர்கள் மத்தியில் நிலவுகிறது.


G-20 நாடுகளின் இடையான பொருளாதார வளர்ச்சி வீத வேறுபாடும் முரண்பட்ட நோக்கங்களும் சீனாவின் தந்திரங்களும் ஒரு நாணயப் போரை ஏற்படுத்தாமல் இருக்க G-20 மாநாட்டில் பெரும் முயற்ச்சி எடுக்கப் பட்டது. முடிவில் G-20 நாடுகளுக்கான சில வழிகாட்டல்களுடன் (indicative guidelines) மாநாடு முடிவடைந்தது. ஆனால் இந்த வழிகாட்டல்கள் ஒரு பூசி மெழுக்கப்பட்ட முரண்பாடே எனப் பலரும் கருதுகின்றனர். மாநாட்டின் இறுதி அறிக்கையில் சந்தை தீர்மானிக்கும் நாணயமாற்று வீத முறைமையை நோக்கி நகர்வதாகவும் போட்டி அடிப்படையிலான நாணய மாற்று வீதத்தை தவிர்ப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓரம் கட்டப்பட்ட அமெரிக்கா
நாடுகள் தங்கள் ஏற்றுமதி இறக்குமதி வித்தியாசத்தை தங்கள் பொருளாதார உற்பத்தியின் 4%இற்கு உள் வைத்திருக்க வேண்டும் என்ற அமெரிக்க வேண்டுதல் முன்னணி ஏற்றுமதி நாடுகளான சீனாவினதும் ஜெர்மனியினதும் எதிர்ப்பால் நிராகரிக்கப்பட்டது. அமெரிக்காவிற்கு பிரித்தானியா கூட ஆதரிக்கவில்லை. பிரித்தானிய சீனாவை தாஜா பண்ணி அங்கு தனது ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கத்துடன் செயற்பட்டது.

முக்கியமாக G-20 நாடுகள் தமக்கிடையிலான பொருளாதார வளர்ச்சி சமநிலையின்மை நிலையை அடைந்துள்ளது என்பதை எப்படி அறிந்து கொள்வது என்பதில் உடன்படவில்லை. இந்த உடனபாடு இல்லாமல் நாடுகளுக்கிடையிலான வளர்ச்சி சமநிலையின்மையை அடைவதை தடுக்க முடியாது.

அண்மைக்காலங்களில் G-20 குழுமம ஐநா பாதுகாப்புச் சபையை ஓரங்கட்டிவிடுமா என்று சந்தேகப் படும் அளவுக்கு அவை பல உடன்பாடுகளைக் கண்டிருந்தன. 2009இல் ஏற்பட்ட உலகப் பொருளாதரச் சரிவை G-20 நாடுகளின் கூட்டமைப்பு சரிப்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில் நாணயப் போர் மீண்டும் உலக நாணய நெருக்கடியை ஏற்படுத்தும்.

போர் நிறுத்த ஒப்பந்தங்களின் பின்னர் பெரும் போர் நடக்கும்
கொரியாவில் நடந்த G-20 நாடுகளின் மாநாடு ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் என்று கருதப்பட்டாலும், பல போர் நிறுத்த ஒப்பந்தங்கள் பேரழிவுப் போரில் முடிவடைவதைப் பார்த்திருக்கிறோம். சீனாவும் அமெரிக்காவும் ஒன்றை ஒன்று சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டு ஒன்றுக் கொன்று குழிபறிக்கக் காத்திருக்கும் நிலையில் எதுவும் நடக்கலாம்.

Friday, 12 November 2010

குமரியின் கண்டம் - பிணை எடுத்த முத்தங்கள்


வானம் எல்லையல்ல

நிலவை மிதித்தாயிற்று

செவ்வாயைப் பார்த்தாயிற்று

பிரபஞ்ச ஓரத்தை நோட்டம் விட்டாயிற்று

வானம் எல்லையல்ல


அறிஞர்கள்

உனக்கு தெரிந்த ஓன்றை

தெரியாதது போல் குழப்பிவிடுபவன்

தத்துவஞானி

உன்னால் புரியக்கூடிய ஒன்றை

புரியாதபடி விளக்குபவன்

புத்திஜீவி

உனக்குத் தேவையில்லாததை

தேவையானதாக்குபவன்

விஞ்ஞானி


அலைகிறேன்

அலைகடல் நடுவினிலே

திசையறி கருவியில்லா மாலுமி

சங்கீத கதிரைப் போட்டியில்

காதற்ற போட்டியாளன்

பட்டிமன்றத்தில்

ஊமைப் பேச்சாளன்


குமரியின் கண்டம்

குமரிக் கண்டத்தை

கடல் கொண்டதாம்

என் குமரியின்

கண்டத்தை

எது கொள்ளும்.


பிணை எடுத்த முத்தங்கள்

கைது செய்தன பார்வைகள்

சிறைவத்தன நினைப்புக்கள்

பிணை எடுத்தன முத்தங்கள்

Wednesday, 10 November 2010

மொக்கை SMS,


I smile because i have no idea what's going on.

If looks could kill, You would be a weapon of mass destruction

You Talk More S**t Than Your A** Can Produce

i was hungary so i ate turkey, slipped in greece, hit iraq and broke china

If you ever want to see a man cry..Put a beer in one hand and a naked woman in the other..And..MAKE HIM CHOOSE!

what's six inches long, two inches wide, and drives girls crazy?.......................................................................... MONEY!!!

Have you ever noticed that if you rearranged the letters in Mother-In-Law, they come out to Woman Hitler?

There are three sides to every argument: your side,my side and the right side.

Ociffer. Iswear to drunk I'm not God. There's no blood in my alcohol system. That's my stuck and I'm story to it.

I'm on a seafood diet. Every time I see food, I eat it.

Sex is bad, sex is a sin, our sins are forgiven so stick it in!

You can fall from the sky, you can fall from a tree but the best way to fall is in love with me

Never try to drown your troubles... Especially if she can swim
.

Marriages are made in heaven. But so again, are thunder and lightning.

"Alcohol doesn't solve any problems, but then again, neither does milk."

It's not that I'm antisocial. I just don't like you.

A kiss blown is a kiss wasted...the only real kind of kiss is a kiss tasted

முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ் வேறு நாடுகளில் கைது செய்யப்படும் அபாயம்.


முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ் வேறு நாடுகளில் கைது செய்யப் படலாம் என்ற அபாயத்துக்கு உள்ளாகி உள்ளார்.

அவர் தனது சுயசரிதையில் போலி நீர் முழ்கடிப்புச் சித்திரவதை அமெரிக்காவில் செய்யப்பட்டதை ஒத்துக் கொண்டுள்ளதுடன் அதை ஆதரித்தும் எழுதியதால் வந்த வினை இது.

ஜோர்ஜ் புஷ் அமெரிக்க அதிபராக இருந்த போது அமெரிக்காவில் அல் கைடா சந்தேக நபர்களிடம் இருந்து தகவல்களைப் பெற சி ஐ ஏ உளவு நிறுவனம் Waterboarding Interrogation Techniques எனப்படும் Simulated drowning ஐப்பாவித்தது. இந்த சித்திரவதையை விக்கிபீடியா இப்படிக் கூறுகிறது:
The prisoner is bound to an inclined board, feet raised and head slightly below the feet. Cellophane is wrapped over the prisoner’s face and water is poured over him. Unavoidably, the gag reflex kicks in and a terrifying fear of drowning leads to almost instant pleas to bring the treatment to a halt. According to the sources, CIA officers who subjected themselves to the water boarding technique lasted an average of 14 seconds before caving in. They said al Qaeda’s toughest prisoner, Khalid Sheik Mohammed, won the admiration of interrogators when he was able to last over two minutes before begging to confess.

சுருங்கக் கூறுவதானால் கைதி நீருள் மூழ்கி இறப்பது போன்ற ஒரு உணர்வைப் போலியாக ஏற்படுத்தி அதன் மூலம் அவருக்கு இறக்கப் போகிறேன் என்றபயத்தை ஏற்படுத்தி அவரை உண்மைகளைக் கக்க வைப்ப்துதான் இந்த water boarding சித்திரவதை.

இந்தச் சித்திரவதை மூலம் அல் கைடா கைதிகளிடமிருந்து முக்கிய தகவலகளை அமெரிக்க உளவுத் துறை பெற்றுக் கொண்டது. முக்கியமாக பிரித்தானிய Heathrow விமான நிலையம் Canary Wharfபெரு வர்த்தக நிலையம் ஆகியவற்றில் அல் கைடா நடத்த இருந்த தாக்குதல்கள் முன்கூட்டியே அறியப்பட்டு பெரும் அழிவுகள் தடுக்கப்பட்டனவாம்.

இந்தச் சித்திரவதையை பகிரங்கமாக ஒத்துக் கொண்டதால் பல நாடுகளிற்கு பயணம் செய்தால் கைது செய்யப்படும் ஆபத்தை ஜோர்ஜ் புஷ் எதிர் கொள்கிறார்.

இலண்டனில் கைது செய்யப்படலாம் என்ற பயத்தில் மஹிந்த ராஜபக்சவின் பிரித்தானியப் பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது என அண்மையில் செய்திகள் வந்தன. 1998இல் சிலியின் சர்வாதிகாரி ஸ்பானிய சிலியில் வாழும் ஸ்பானிய மக்களுக்கு எதிராக போர்குற்றம் புரிந்தமைக்காக அவரை ஸ்கொட்லண்ட்யாட் கைது செய்தது.

அண்மையில் பிரித்தானிய வரமுயன்ற இஸ்ரேலிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் அங்கு கைது செய்யப்படலாம் என்றபயத்தில் ஹீத்துரு விமான நிலையம் வரை வந்து விட்டுத் திரும்பிச் சென்றனர். இப்போது இதே பயம் ஜோர்ஜ் புஷ்ஷிற்கும் ஏற்பட்டுள்ளது.

மனித உரிமை சட்ட நிபுணர்கள் பல நாடுகளில் ஜோர்ஜ் புஷ் கைது செய்ய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளனர்.


கேலிக்கும் கேள்விக்கும் உள்ளாக்கப்பட்ட இந்திய மக்களாட்சி


ஒரு நல்ல மக்களாட்சி நிலவுகின்ற நாடு என்று ஒரு உலகில் எங்கும் இல்லை. தம்மை மக்களாட்சி நாடுகள் என்று சொல்லிக் கொள்கின்ற நாடுகளின் ஆட்சியாளர்களை அங்குள்ள பணமுதலைகள் தான் நிர்ணயம் செய்கின்றனர்.


இந்தியாவும் ஒரு மக்களாட்சி நாடு என்று சொல்லப்படுகிறது. இந்திய ஆட்சியாளர்களை குடும்பப் பின்னணியும் பணமுதலைகளும் சாதியமைப்பும் தீர்மானம் செய்கின்றன. சில மேற்கத்திய நாடுகளின் அரசியல் கட்சிகளுக்குள் நல்ல மக்களாட்சித்தன்மை நிலவுகின்றது. அங்கு குடும்ப ஆதிக்கங்கள் இல்லை என்றே சொல்லலாம். இதன் அடிப்படையிலேயே பிரித்தானித் தொழிற் கட்சியின் தலைவராக அக்கட்சியின் தொழிலாள உறுப்பினர்களின் ஆதரவுடன் எட் மில்லிபாண்ட் தெரிந்தெடுக்கப் பட்டார். அவருக்குப் பின்னனியாக எந்த ஒரு குடும்பமோ அல்லது பண முதலைகளோ இருக்கவில்லை. இந்தியாவில் நிலைமை வேறு. முக்கிய கட்சிகள் எதாவது ஒரு குடும்பத்தின் பிடியிலேயே இருக்கின்றன.

உலகத்தில் அதிகாரம் மிக்கவர்கள் பட்டியலில்
சோனியா-9ம் இடம் மன் மோகன் சிங் - 18
ம் இடம்

உலகின் அதிகாரம் மிக்கவர்கள் பட்டியலில் சீனத் தலைவர் முதலாம் இடத்திலும் அமெரிக்கத் தலைவர் இரண்டாம் இடத்திலும் சவுதி அரேபிய மன்னர் மூன்றாம் இடத்திலும் இரசிய தலைவர் நான்காம் இடத்திலும் போப் ஆண்டவர் ஐந்தாம் இடத்திலும் ஜெர்மனித் தலைவர் ஆறாம் இடத்திலூம் பிரித்தானியப் பிரதமர் ஏழாம் இடத்திலும் அமெரிக்க மத்திய வங்கி (Federal Reserve) தலைவர் எட்டாம் இடத்திலும் சோனியா காந்தி ஒன்பதாம் இடத்திலும், பில் கேட் பத்தாம் இடத்திலும் இருக்கின்றனர். பாவம் மன்மோகன் சிங் 18-ம் இடத்தில் இருக்கிறார். இந்திய ஆயுத வலிமை படைத் தொகை எண்ணிக்கை மொத்தப் பொருளாதார உற்பத்தி என்பவற்றை வைத்துப் பார்க்கும் போது இந்தியப் பிரதமர் முதல் ஐந்துக்குள் இருக்க வேண்டும். ஆனால் இந்திய ஆட்சியில் உள்ள குடும்ப ஆதிக்கம் இந்தியப் பிரதமரை 18இடத்தில் வைத்திருக்கிறது.

இந்தியாவின் ஆட்சி அதிகாரம் அதன் பாராளமன்றத்திடம் இருக்க வேண்டியது. அதன்படி பிரதம மந்திரியின் கையில் அதிகாரம் இருக்க வேண்டும். ஆனால் அதிகாரம் ஆளும் கட்சித் தலைவியிடம் இருக்கிறது. இது இந்திய மக்களாட்சியை கேள்விக்குரியதாக்குகிறது. ஆளும் கட்சி ஒரு குடும்பத் தலைவியிடம் இருக்கிறது. இது இந்திய மக்களாட்சியை கேலிக்குரியதாக்கிவிட்டது.

இந்தியாவிற்குப் பயணம் மேற் கொண்ட பராக் ஒபாமாவும் இந்திய ஆட்சியாளர்கள் தன் அயலில் நடக்கும் அக்கிரமங்களை பார்த்துக் கொண்டு இருப்பதை நல்ல மக்களாட்சிப் பண்பு அல்ல என்று சுட்டிக் காட்டியுள்ளார்:

  • When peaceful democratic movements are suppressed, as they have been in Burma (Myanmar), then the democracies of the world cannot remain silent. Faced with such gross violations of human rights, it is the responsibility of the international community, especially leaders like the United States and India, to condemn it.

ஐயா ஒபாமா அவர்களே அயல் நாடுகளில் நடக்கும் அக்கிரமங்களை இந்தியா பார்த்துக் கொண்டிருந்தால் பாரவாயில்லை. பாங்காளியாக இருக்கிறதே!

Tuesday, 9 November 2010

பிரித்தானியாவில் ஒரு இசுலாமியத் தொலைக்காட்சி கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.


ஒரு இசுலாமியத் தொலைக்காட்சி பிரிதானிய தகவல் துறை அதிகார சபையான OFCOM இன் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது. 2007-ம் ஆண்டு இதே தொலக்காட்சி பிரித்தானியச் சட்ட வரம்புகளை மீறியதற்காக முப்பதினாயிரம் பவுண்கள் தண்டப் பணமாகச் செலுத்தியது.

நேற்றைய தினம் OFCOM ஒரு இசுலாமியத் தொலைக்காட்சி மூன்று ஒழுக்கக் கட்டுப்பாடுகளை மீறியுள்ளதாக கண்டித்துள்ளது.

1. கணவன் மனைவியுடன் அவள் விருப்பத்திற்கு மீறி உடலுறவு வைக்கலாம் என்று சென்ற ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் கூறப்பட்டதை OFCOM தவறு எனக் கூறுகிறது. பிரித்தானியச் சட்டப்படி கணவன் மனைவிய அவள் விருப்பத்திற்கு மாறாக உடலுறவு கொள்வதை marital rape எனக் கருதப்பட்டு அது தண்டனைக்குரிய குற்றம் எனக் கொள்ளப் படுகிறது. இந்த நிகழ்ச்சியை வழங்கியவர் ஒரு பெண்ணாகும்.

2. ஷேக் அப்து மஜீத் அலி என்பவர் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஆதரிதார். இவர் பெண்களை பல முறைகளில் மரியாதையாக நடத்துங்கள் என்று கூறிய போதும். பெண்களை சில விதங்களில் உடல் ரீதியான தண்டனைக்கு உள்ளாக்குவது ஏற்றுக் கொள்ளக் கூடியது என்று கூறினார். அத்துடன் பொது இடங்களில் வாசனைத் திரவியங்கள் பூண்டு வரும் பெண்களை விபச்சாரிகள் என்று வர்ணித்தார்.

3. பல நிகழ்ச்சிகளில் மத்திய கிழக்குத் தொடர்பாக ஒருதலைப்பட்சமான கருத்து முன் வைக்கப் பட்டதாக இந்த இசுலாமியத் தொலைக்காட்சி மீது குற்றம் காணப்பட்டது.

பிரித்தானியாவின் பல ஊடகங்களிலும் ஊடக மேற்பார்வைகளிலும் யூத சக்திகளின் ஆதிக்கம் நிறைந்து விட்டதாக சில இசுலாமியர்கள் கருதுகின்றனர்.

SMS தத்துவங்கள், கவிதைகள்



SMS தத்துவங்கள்
You don't marry someone you can live with,
you marry the person who you cannot live without.

Love bears all things, believes all things,
hopes all things, endures all things.

Living in the favourable and unfavourable situation is called
“PART OF LIFE”,
But smiling in all those situations is called
“ART OF LIFE”.


அன்புக்கு நான் அடிமை
தாக்கினால் தாங்க மாட்டேன்
போற்றினால் நம்ப மாட்டேன்
ஒதுக்கினால் விலகுகிறேன்
ஊக்கம் தாருங்கள் வாங்குகிறேன்
துரோகத்தை மன்னிக்க மாட்டேன்
அன்பு காட்டு அடிமையாகிறேன்

தவறு செய்யாமை என்பது செயற்படாமையே
வெற்றி அகங்காரம் தரும்
தோல்வி அறிவுதரும்
தவறு தகவல் தரும்
தவறு செய்யாமை என்பது செயற்படாமையே

நீங்காத நினைவு
கண்களின் ஒவ்வொரு இமைப்பிலும்
இதயத்தின் ஒவ்வொரு துடிப்பிலும்
கடிகாரத்தின் ஒவ்வொரு ஒலிப்பிலும்
அவள் நினைவே

ஒன்றுபட மாட்டோம்
அடம்பன் கொடி உவமையும் கேட்டோம்
நண்டுகளின் கதையையும் கேட்டோம்
பெரும் அவலங்களையும் கண்டோம்
ஆனாலும் ஒன்று படமாட்டோம்.

Sunday, 7 November 2010

பெண்களுக்கு வேறு விதமாகச் செய்ய வேண்டும்;


ஒரு பெரிய பணவைப்பகம் (Bank) தந்து வாடிக்கையாளர்களுக்கு வண்டி செலுத்தி பணம் அட்டைகளில் இருந்து பெறும் வசதியை ("Drive-through" ATM machine to withdram money) எற்படுத்தியது.

இதற்கான அறிவுறுத்தல் பலகையை ஆண்களுக்கு வேறு விதமாகவும் பெண்களுக்கு வேறுவிதமாகவும் தயார் செய்தது:

MALE PROCEDURE

1. Drive up to the cash machine.

2. Put down your car window.

3. Insert card into machine and enter PIN.

4. Enter amount of cash required and withdraw.

5. Retrieve card, cash and receipt.

6. Put window up.

7. Drive off.


FEMALE PROCEDURE

1. Drive up to cash machine.

2. Reverse and back up the required amount to align car window with the machine.

3. Set parking brake, put the window down.

4. Find handbag, remove all contents on to passenger seat to locate card.

5. Tell person on cell phone you will call them back and hang up.

6. Attempt to insert card into machine.

7. Open car door to allow easier access to machine due to its excessive distance from the car.

8. Insert card.

9. Re-insert card the right way.

10. Dig through handbag to find diary with your PIN written on the inside back page.

11. Enter PIN.

12. Press cancel and re-enter correct PIN.

13. Enter amount of cash required.

14. Check makeup in rear view mirror.

15. Retrieve cash and receipt.

16. Empty handbag again to locate wallet and place cash inside.

17. Write deposit amount in check register and place receipt in back of checkbook.

18. Re-check makeup.

19. Drive forward 2 feet.

20. Reverse back to cash machine.

21. Retrieve card.

22. Re-empty hand bag, locate card holder, and place card into the slot provided.

23. Give appropriate one-fingered hand signal to irate male driver waiting behind you.

24. Restart stalled engine and pull off.

25. Redial person on cell phone.

26. Drive for 2 to 3 miles.

27. Release Parking Brake.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...