Tuesday 24 February 2009

எம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.


எண்பத்தெட்டில் அமைதிப்படை நாட்களில்
தெரு முனையில் ஒரு கண்ணி வெடி
சிக்கியது ஒரு சீக்கியப் படையணி
கண்டபடி சுட்டனர் கண்டவரையும் கொன்றனர்

தப்பித்து நான் தலை தெறிக்க
ஓடி சரண் புகுந்தது உன் வீடு
நின் முக தரிசனம் முதல் தரிசனம்
சரளி வரிசையாய் ஆரம்பித்தது எம் காதல்

உள்ளஙகள் இணைந்தன ஒன்றோடு ஒன்றாயின
இரு மன இணைப்பு ஜண்டை வரிசைகளாயின
உன்வீட்டின் முன் தெருவில் அங்கும் இங்கும்
தாண்டி வருவேன் நான் தாட்டு வரிசைகளாக.

உன் அழகு முகத்து ஒளியும் உதட்டுச் சிரிப்பும்
என்னை இட்டுச் செல்லும் மேல் ஸ்தாயி வரிசைக்கு
என் முகம் என் பார்வைக்கே அழகானது
எல்லாம் எனக்கு அலங்கார வரிசையானது
உன்னுள் நானாக என்னுள் நீயாக இனிய உறவாக
எனக்குள் இசைக்கத் தொடங்கியது ஓர் இனிய கீதம்.
இதயங்கள் ஒன்றாக இதமாக இளமை இனியதாக
ஸ்வரம் நீயாக ஜதி நானாக ஸ்வரஜதியானோம்


இரவுகள் நீண்டிருக்க எண்ணங்கள் எங்கோ இருக்க
கனவுகளில் கலந்திருக்க நினைவுகள் வர்ணங்களானது
பார்வைகள் பல்லவியாக சிரிப்புக்கள் அனுபல்லவியாக
நெருக்கங்கள் சரணங்களாக எம் உறவு கீர்த்தனமானது

பிறவிகள் பல தோறும் தொடரும் பிணைப்பாக
திருமண மேடையில் அரங்கேறியது எம் சங்கீதம்.

1 comment:

வேல் சாரங்கன் said...

பிறகென்ன அரங்கேற்றிட்டீங்கள்.... வாழ்துக்கள் இன்னும் எழுதுங்கள்.. நல்ல கவிதை....

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...