Friday, 29 May 2009

சர்வ தேச அரங்கில் தமிழர்களுக்கு எதிராகப் போர் தொடுக்கும் இந்தியா!


தமிழர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு இலங்கையில் முடிவு கட்டியதற்கு(?) பெரும் பங்காற்றிய இந்தியா இப்போது உலக அரங்கில் தமது கைவரிசையைக் காட்டத் தொடங்கிவிட்டது. உலகெங்கும் வாழ் தமிழ் மக்கள் தமது அயாராத் போராட்டத்தால் வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் சில நாடுகளைத் ஈழத்தமிழர்களின் அவலத்தை நோக்கி அவர்களது பார்வையைச் செலுத்த வைத்தனர். இதன் விளைவாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையகத்தில் இலங்கைக்கு எதிராக முன் வைத்த தீர்மானத்தை நீதிக்கு எதிரான வகையில் இந்தியா எதிர்த்தது. இலங்கைக்கு எதிராக தமிழர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள்:



  • தமிழர்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக இடைத்தங்கல் முகாம் எனப் படும் வதை முகாம்களில் தடுத்து வைத்திருத்தல்.


  • அம் முகாம் களில் உள்ள மிக மோசமான நிலை.


  • அம் முகாம்களில் உள்ள இளைஞர்கள் காணாமல் போதல் அல்லது கொலை செய்யப்படல்.


  • அம் முகாம்களில் உள்ள யுவதிகள் பாலியல் அடிமைகளாக்கப் பட்டமை.


  • அம் முகாம்களுக்கு தொண்டு நிறுவனங்களை அனுமதிக்காமை.


  • காயப்பட்டவர்களின் உடலுறுப்புகளைத் திருடிவிட்டு அவர்களைக் கொல்லுதல்.


  • அம் முகாம்களுக்கு பன்னாட்டுத் தொண்டர் நிறுவனங்களுக்கு அனுமதி மறுத்தமை.


  • அம் முகாம்களுக்கு ஊடகவியலாளர்களை அனுமதிக்காமை.


  • பாதுகாப்பு வலய மென்று அறிவித்த பிரதேசத்தில் குண்டுகள் வீசி அப்பாவி பொதுமக்களைக் கொன்றமை.


  • போர் நடந்த்து கொண்டிருந்தவேளை பாதிக்கப் பட்ட மக்களுக்கு உணவு மருந்துப் பொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லப் படுவதைத் தடுத்தமை.


இப்படிப் பல குற்றச்சாட்டுக்கள் இலன்கைக்கு எதிராக ஆதாரங்களுடன் நிரூபிக்கத் தாம் தயாராக இருப்பதாக தமிழர் தரப்புக் கூறுக்கிறது. ஐநா மனித உரிமை மன்றில் இலங்கைக்கு எதிராக கொண்டுவந்த பிரேரணையை இந்தியா எதிர்த்ததுடன் இலங்கைக்கு ஆதரவாக செயல்படும் படி சில நாடுகளை வலியுறுத்தியதாகவும் சொல்லப் படுகிறது.


தமிழ்த் தேசியவாததின் பன்னாட்டுக் கட்டமைப்பு
தமிழ்த் தேசிய வாதத்தின் ஆயுத பலம் மழுங்கடிக்கப் பட்ட நிலையில் அதன் பன்னாட்டுக் கட்டமைப்பு இன்னும் உறுதியுடனும் புதிய உத்வேகத்துடனுமே இருக்கிறது. ஆரிய சிங்களக் கூட்டமைப்பின் அடுத்த நடவடிக்கை இந்த கட்டமைப்பைத் தகர்த்தெறிவதாகவே இருக்கும். அதற்கு ஆரிய சிங்களக் கூட்டமைப்பு தமிழ்த்தேசிய வாததிற்க்கு எதிராக இலங்கையில் செய்ததுபோல் பன்னாட்டு மட்டத்திலும் பின் வருபவனற்றைச் செய்யலாம்:



  1. தமிழ்த் தேசியவாததின் பன்னாட்டுக் கட்டமைப்புக்குள் தமது உளவாளிகளை ஊருடுவச் செய்தல்.


  2. தமிழ்த் தேசியவாததின் பன்னாட்டுக் கட்டமைப்புக்குள் பிளவுகளை ஏற்படுத்தி சகோதர யுத்தம் புரிய வைத்தல்.


  3. தமிழ்த் தேசியவாததின் பன்னாட்டுக் கட்டமைப்பின் சொத்துக்களை அழித்தல்.


  4. தமிழ்த் தேசியவாததின் பன்னாட்டுக் கட்டமைப்பு செயல்படும் நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்தல்.


  5. கொலை கொள்ளைகளின் ஈடுபடும் சமூக விரோதிகளை தமிழ்த் தேசியவாததின் பன்னாட்டுக் கட்டமைப்புடன் சம்பந்தப் படுத்தல்.


இப்படிப் பட்ட செயல்களை ஆரிய-சிங்களக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளுக்கு எதிராக வெற்றிகரமாக செய்து முடித்தது. அந்த அனுபவம் இதற்கு நன்கு உதவும்.

Thursday, 28 May 2009

பிரபாகரனின் மனைவியும் இரண்டாவது மகனும் சென்ற ஆண்டே தப்பிவிட்டனர்.







விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மூத்த மகன் சாள்ஸ் அன்ரனி கொல்லப் பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. இது இதுவரை யாராலும் மறுக்கப் படவில்லை. ஆனால் இலங்கை அரசுவெளியிட்ட படம் சாள்ஸ்ஸினுடையது அல்ல அது வேறு ஒரு கடற்புலியுனுடையது என்று சிலர் மறுத்தனர். இலங்கை அரசு வெளியிட்ட படம் 24 வயதிலும் கூடியவர் போலிருப்பது உண்மை. சாள்ஸ் அன்ரனியின் மரணத்திலும் மர்மம் தொடர்கிறது.
.
பிரபாகரனின் மனைவி மதிவதனியும் மகள் துவரகாவும் இளைய மகன் பாலச்ச்ந்திரனும்(13 வயது) கொல்லப் பட்டதாக முதலில் அறிவித்த இலங்கை அரசு பின்னர் கொல்லப் பட்டவில்லை என அறிவித்தது. ஆனால் துவாரகா அயர்லாந்தில் படித்துக் கொண்டிருப்பது என்ற உண்மை அறிந்த பின்னரே இலங்கை அரசு தனது கூற்றை மாற்றிக் கொண்டதாகவும் சொல்லப் படுகிறது. இலங்கையில் போர் உச்சக் கட்டத்தை அடைந்த வேளை துவாரகா நோர்வே சென்றதாகவும் ஒரு தகவல் உண்டு.
.
மதிவதனியும் பாலச்சந்திரனும் சென்ற ஆண்டே முல்லைத்திவிலிருந்து தமிழ்நாடு சென்று பின்னர் விமான மூலம் சிங்கப்பூர் சென்று அதன் பின்னர் அங்கிருந்து வேறு ஒரு இடத்திற்கு சென்று விட்டனர் எனவும் சிலர் உறுதியாகக் கூறுகின்றனர்.



Wednesday, 27 May 2009

விடுதலைப் புலிகளின் தலைமை - மறைந்துவிட்டதா? மறைந்திருக்கிறதா?


விடுதலைப் புலிகளின் தலைமைக்கு என்ன நடந்தது? என்பது தான் இப்போது பலரும் விடைகாணத்துடிக்கும் கேள்வி. . விடுதலைப் புலிகளின் தலைமைக்கு என்ன நடந்திருக்கலாம் என்ற கேள்விக்கு சில விடைகள் உண்டு:
.
1. இலங்கை அரசின் பதில்: கொல்லப்பட்டுவிட்டனர். பிரபாகரனின் உடல் புதைக்கப் பட்டுவிட்டது.


.
2. நக்கீரனின் பதில்: இறுதிக்கட்டத்தில் வீரம் செறிந்த தாக்குதலை நாடாத்தி விட்டுத் தப்பி ஓடிவிட்டனர்.


.
3. அனிதா பிராதப்பின் ஊகம்: பிரபாகரன் இறப்பதாயின் சாதாரணமாக இறந்திருக்க மாட்டார். அடையாளம் தெரியாத படி தற்கொலை செய்திருக்கலாம்.


.
4. புலிகளின் தீவிர ஆதரவாளர்களின் பதில்: சென்ற ஆண்டிலிருந்தே புலிகள் பின்வாங்கும் போது இராணுவத்திற்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்தியபடி இருந்தனர். இலங்கையின் சிறப்புப் படையணிகள் பலமிழந்தபின் திருப்பித்தாக்கும் திட்டம் இருந்தது. ஆனால் இலங்கை இராணுவத்தின் இழப்புக்களை இந்தியா தனது படைகளை அனுப்பி புலிகள் ஏற்படுத்திய வெற்றிடங்களை நிரப்பியது. கிளிநொச்சிப் போரின் போது இதை உணர்ந்த புலிகள் இனித் திருப்பித்தாக்குவது சாத்தியமற்றது என்ற முடிவுக்கு வந்தனர். இந்நிலையில் தமது வளங்களை மறைத்து வைத்துவிட்டு தலைமையும் மறைந்து இருக்கிறது.


.
இப்போது பெரிய சந்தேகம் எழுகிறது! பத்மநாதன் அறிக்கை விட்டாரே பிரபாகரன் இறந்து விட்டார் என்று. முதலில் புலிகளின் சர்வதேசக் கட்டமைப்பில் இரு பத்மநாதன்கள் இருக்கின்றனர். ஒருவர் குமரன் பத்மநாதன். இவர் புலிகளுக்கான ஆயுதக் கொள்வனவு செய்பவர். மற்றவர் செல்வராசா பத்மநாதன். இவர் புலிகளின் சர்வதேச தொடர்புகளுக்கு பொறுப்பானவர். செல்வராசா பத்மநாதன்தான் புலிகள் இறந்து விட்டதாக அறிக்கை விட்டவர். இவரது அறிக்கையில் பிரபாகரனின் பெயரைக் குறிப்பிடவில்லை. எமது அதி உத்தம தளபதியான ஒப்பிடமுடியாத தலைவர் வீரமரணம் அடைந்தார் என்றுதான் குறிப்பிட்டார்.


.
செ. பத்மநாதன் பிரபாகரனின் பெயர் குறிப்பிடாமல் பிரபாகரன் இறந்துவிட்டார் என்று குறிப்பிடுவது ஏன்? இதற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன என்று பார்த்தால் பல சாத்தியப் பாடுகள் உண்டு.


.
தூய செ. பத்மநாதன்:
1. தப்பிய பிரபாகரனைத் தொடர்ந்து இலங்கை இந்தியப் படைகள் தேடாமல் இருக்க வைப்பதற்காக பத்மநாதன் ஒரு பொய் சொன்னார்.

.
2. பத்மநாதன் சொல்வது உண்மை. பிரபாகரன் இறந்துவிட்டார்.

.3. பத்மநாதனுக்கு வேறு ஒரு நாடு வேண்டுதல் விடுத்து அவர் இப்படிச் சொல்கிறார். அந்த நாடு மேற்கொண்டு புலிகளுக்கு உதவப்போவதாக வாக்குறுதியளித்துள்ளது.

..
துரோகி செ. பத்மநாதன்.
1. பத்மநாதன் இந்திய-இலங்கை உளவுப் படையிடம் விலை போய் விட்டார். அவர்களின் வேண்டுதலின் பேரில் 1. உண்மை சொல்கிறார் 2. பொய் சொல்கிறார்.


.
2. புலிகளின் சர்வதேச கட்டமைப்பில் பிளவு ஏற்பட்டுவிட்டது. அதில் ஒரு பிரிவு. பத்மநாதனின் தலைமையில் இருக்கிறது அது 1. பிரபாகரன் இறந்துவிட்ட உண்மையைச் சொல்கிறது. 2. பிரபாகரன் இறந்தார் எனப் பொய் சொல்கிறது.

.
விடுதலை புலிகளின் சார்பான ஊடகங்கள்.
விடுதலைப் புலிகளின் சார்பானதும் தொடர்புடையதுமான ஊடகங்கள் என்று மூன்று முக்கிய ஊடகங்களைக் குறிப்பிடலாம். 1. தமிழ்நெற் இணையத்தளம், 2. ஐபிசி வானொலி, 3. ஜிரிவி தொலைக்காட்சி. இவற்றில் ஜிரிவி மட்டும் பிரபாகரன் இறந்ததாக அறிவித்தது.
.
மற்றும்படி விடுதலைப் புலிகளுடன் நெருக்கமாகச் செயல்பட்டவர்கள் புலிகளின் தலைமையின் இறப்பை இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. அஞ்சலிக் கூட்டங்களும் ஒழுங்கு செய்யவில்லை

Tuesday, 26 May 2009

இன்று அவன் எங்கு போவான்? ஒரு நாள் வெல்வான்..



தன்னாட்சி கேட்டவன்
தன்னாட்டம் தளர்கையில்
முன்னூட்டம் கொடுக்காதோர்
பின்னூட்டம் கொடுத்துப்
பெருமையடைகின்றனர்
அவன் இப்போது
எங்கு செல்வான்
எவரிடம் செல்வ்வான்
எப்படிச் செல்வான்
.
எங்கும் இருட்டு
எங்கும் அவலம்
எங்கும் அபாயம்
எதுவும் புரியவில்லை
திக்கும் தெரியவில்லை
அவன் இப்போது
எங்கு செல்வான்
எவரிடம் செல்வ்வான்
எப்படிச் செல்வான்
.
துணைக்கு வந்தவர் துரோகிகளாயினர்
பங்காளிகளய் வந்தவர் பகையாளியாயினர்.
திர்க்க வந்தவர் தீர்த்துக் கட்டினர்
பார்த்து நின்றவர் பாரா முகங் கொண்டனர்
அவன் இப்போது
எங்கு செல்வான்
எவரிடம் செல்வ்வான்
எப்படிச் செல்வான்
.

பொய் மூட்டைகள்
புனை கதைகளும்
மெய்யாகிப் போனதால்
உண்மை எது பொய் எது
தடுமாறி நிற்பவன்
அவன் இப்போது
எங்கு செல்வான்
எவரிடம் செல்வ்வான்
எப்படிச் செல்வான்
.
பூகம்பத்துள் பூவாகியவன்
சூறாவளிக்குள் சுடரானவன்
துரோகச் சுனாமியைக் கண்டவன்
அடுத்தவரால் அடுத்துக் கெடுக்கப்ப்ட்டவன்
அவன் இப்போது
எங்கு செல்வான்
எவரிடம் செல்வ்வான்
எப்படிச் செல்வான்
.
அவனுக்கு சமயம் பார்த்து
உதவியவருமில்லை
அவன் சமயத்தைப் பார்த்து
உதவியவருமில்லை
அறிக்கைப் போரால்
அலுத்துப் போனவன்
அவன் இப்போது
எங்கு செல்வான்
எவரிடம் செல்வ்வான்
எப்படிச் செல்வான்
.
இழப்புக்களே வாழ்க்கையானவன்
துரோகங்களே சூழலலானவன்
ஒன்றை மட்டும் இழக்காமல்
நிற்ப்பான் நிமிர்ந்து
இழக்கவில்லை அவன் மனத்திடம்
அதனால் அவன்
அவன் இப்போது
எங்கும் செல்வான்
எவரிடமும் செல்வ்வான்
எப்படியும் செல்வான்
ஒருநாள் வெல்வான்

Monday, 25 May 2009

பொய்கள் உண்மையான போது பொய்யான உண்மைகள்.


இலங்கையின் சரித்திரம் பொய் மயமானது. சூளகவம்சம் எனும் நுால் இலங்கையின் சரித்திரத்தைக் கூறும் நுாலாக இருந்தது. அது தமிழர்களையும் தமிழ் மன்னர்களின் ஆட்சியையும் உயர்வாகக் கூறியது. அது சிங்கள பேரினவாதிகளிற்கு ஏற்புடைத்ததாக இருக்கவில்லை. சூளகவம்சத்தை மாற்றி எழுதினர். பொய்களுடன் உருவானது மஹாவம்சம். மஹாவம்சம் தமிழர்களைத் தாழ்வானவர்களாகவும் கொடுமையானவர்களாகவும் சித்தரித்தது.
.
சிங்கள மனனர்களின் கோட்டைகள் தமிழ் மனனர்களால் முற்றுகையிடப் படும் போது சிங்கள மன்னர்கள் அரசியையும் இளவரசியையும் கோட்டைக்குள் விட்டுவிட்டுத் தப்பிச் செல்வார்களாம். பின்னர் தமிழர்கள் தம் பெண்களைத் பிடித்து வைத்துத் துன்புறுத்துவதாக தமது மக்களிடையே பொய்ச் செய்து பரப்பி மக்களைத் தமிழர்களுக்கு எதிராக கிளர்ந்து எழச் செய்வார்களாம்.
.
பிரித்தானியா ஆட்சியிலிருந்து இலங்கைக்கு சுதந்திரம் வேண்டு மென்று முதல் போராட்டம் தொடங்கியது தமிழர்களே. சுதந்திரம் பெறும்போது தாம் சிறு பான்மை இனங்களுடன் ஒற்றுமையாக இருப்போம் என்று பொய் சொல்லியே சுதந்திரத்தைப் பெற்றனர்.
.
தனிச்சிங்கள சட்டத்தை தந்தை செல்வா அமைதியான முறையில் எதிர்த போது. யாழ்ப்பாணத்திலிருந்து தந்தை செல்வா சிங்களவர்களைத் தாக்குவற்கு கப்பலில் ஒரு பெரும் படையுடன் வருகிறார் என்று ஒரு பொய்ப் பிரசாரம் சிங்கள மக்கள் மத்தியில் பரப்பிவிட்டு சிங்களவர்களை தமிழர்களுக்கு எதிராக தூண்டி விட்டு பெரும் இனக்கொலையைச் செய்தனர்.
.
1977இல் யாழ்ப்பாணத்தில் சிங்களக் காவல் துறையினருக்கும் தமிழர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் உள்ள பெளத்த விஹரை தாக்கி அழிக்கப்பட்டதாக இலங்கை முழுவதும் உள்ள காவல் துறையினருக்கு ஒரு பொய்ச்செய்தி அனுப்பப்பட்டது. இதனால் நாடெங்கும் ஒரு தமிழினக் கொலை ஆரம்பித்தது. இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சிங்களவர்களையும் பல்கலைக் கழகத்தில் படித்த மாணவர்களையும் எந்த பாதிப்புமின்றி தொடரூந்தில் தமிழ் இளைஞர்கள் அனுப்பி வைத்தனர். தொடரூந்து அனுராதபுரத்தை அடைந்ததும் சிங்கள மாணவிகளின் பாவாடைகளின் சிவப்பு மையை ஊற்றி அவர்களைத் தமிழர்கள் கற்பழித்ததாகவும் எல்லோரையும் அடித்துத் துரத்தியதாகவும் பொய்யுரைத்தனர். இதையடுத்து அனுராதபுரத்தில் தமிழினக்கொலை நடந்தது.
.
1977 இனக் கலவரத்தை அடுத்து தமிழர்களுக்கு எதிரான வன்முறை நாளாந்த நிகழ்வாக மாறியது. தமிழர்கள் தமது காவல்தெய்வமாக தமக்காகக் குரல் கொடுத்த இந்திராகாந்தி அம்மையாரை நம்பினார்கள். இந்திய உளவுத்துறை தமிழர்களிடை பல விடுதலை(?) அமைப்புக்களை உருவாக்கியது. தமிழ் ஆயுதப் போராட்டம் வலுவடைந்த நிலையில் அனுராதபுரத்தில் பெரியதாக்குதலை விடுதலைப் புலிகள் நடாத்திய போது இலங்கையின் எப்பகுதியிலும் இதைப் போன்ற தாக்குதல் நடக்கலாம் என்ற அச்சத்தில் சிங்களவர்கள் இந்தியாவை நாடினர். தமது படை அமைதிப்படை என்று பொய் சொல்லிக் கொண்டுவந்த இந்தியப் படை தமிழின அழிப்பை மேற்கொண்டது. தமிழ்த்தேசிய வாதத்தை வலுவிழக்கச் செய்தது.
.
இந்திய அமைதிப் படையால் முகாமில் வைத்து தொடர்ச்சியாக கற்பழிக்கப் பட்ட பெண் தன் உயிரைக்கொடுத்து பழிதீர்த்தாள். தமிழர்கள் தான் பழிவாங்கியதாக பொய்ச் செய்தி பரப்பப்பட்டட்து. இதைச் சாட்டாக வைத்து இலங்கையில் தமிழர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாககப் பட்டுள்ளது. .

Sunday, 24 May 2009

கேள்விக் குறியான தமிழர் எதிர் காலம்!!!



போலிப் போர்நிறுத்த வேண்டுகோள்கள் விட்டுக் கொண்டே சிங்களவருக்குத் தேவையான கால அவகாசத்தை வழங்கின பல நாடுகள். போலியாக விட்ட அறிக்கையை நம்பி பிரபாகரன் இறந்ததாக பல செய்தி ஏடுகள் செய்தி விட்டு மகிழ்ந்தன. போருக்குப் பின் என்ன செய்வதென்று போர் முடியமுன்னரே திட்டமிடுவதாகவும் ஒருசில நாடுகள் கூறின. இப்போது என்ன செய்வது என்ன சொல்வது என்று சொல்ல முடியாமல் இருக்கின்றன.
.
தமிழர் மீதான அடுத்த கட்ட அடக்கு முறைக்குத் தயாராகி விட்டார் மஹிந்த. அதாவது தமிழர்களுக்கு என்று ஒரு அரசியல் கட்சி இருக்கக் கூடாது என்பது தான் அவரது அடுத்த திட்டம். விடுதலைப் புலிகளை அழித்துவிட்ட நிலையில் தமிழர் தரப்பில் சிறிய கட்சிகள் எதுவும் தேவையில்லை எனவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து வடபகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யுமாறு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச டக்ளசிடம் கேட்டதாகவும் கொழும்பில் ஈ.பி.டி.பி. வட்டாரங்கள் கூறுகின்றன. கருணா ஏற்கனவே சேர்ந்து விட்டார். சேராத பிள்ளையானுக்கு என்ன நடக்கும்? தமிழர்களை இப்படி ஒடுக்க நினைப்பவரிடம் தமிழர்களுக்கு சம உரிமை பெற்று தரப்படும் என்றும் சிலர் கூறுகின்றனர்.
.
தமிழர்களுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் நடக்கும் அடக்கு முறைகள் பலப்பல. இவை மறைக்கப் படுகின்றன.
.
இலங்கையில் மனித உரிமை மீறப் படுவதில்லை என்கிறது இந்தியா
இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்று ஆர்ஜென்ரீனா ,பொஸ்னியா, கனடா ,சிலி, பிரான்ஸ் ஜேர்மனி, இத்தாலி, மெக்ஸிக்கோ, மொரிசியஸ், நெதர்லாந்து, கொரிய குடியரசு,ஸ்லோவாக்யாஇ ஸ்லோவேனிய , சுவிற்சர்லாந்து, உக்கிரைன், ஐக்கிய ராச்சியம், உருகுவே ஆகிய நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. இந்தியா இதை ஏற்றுக் கொள்ள வில்லையாம். ஐநாவின் மனித உரிமைக்கான ஆணையத்தில் இந்தியா இலங்கையில் மனித உரிமைகள் மீறப் படுவதில்லை என்று வலியுறுத்துமாம். இலங்கையில் நடப்பதைச் சரிவரப் புரிந்து கொள்ளாத இந்தியா இலங்கையில் தமிழர்களுக்கு உதவுமாம். இலங்கை இனப் பிரச்சனையைத் தீர்க்குமாம்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...