Saturday, 9 June 2012
இலங்கைக்கு படைப் பயிற்ச்சி அளிப்பதன் மர்மம்.
அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் லியொன் பனெட்டா மற்றும் இந்தியா, இந்தோனேசியா, அவுஸ்ரேலியா, கம்போடியா, ஜப்பான், மியான்மர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, திமோர், சீனா, மொங்கோலியா, கொரியா, ஜேர்மனி, பிரித்தானியா, மலேசியா, கனடா, நியூசிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்து கொண்ட சிங்கப்பூரில் நடந்த சங்கிரிலா கலந்துரையாடல் எனப்படும் 11ஆவது ஆசிய பாதுகாப்பு மாநாடு இந்த மாத ஆரம்பத்தில் நடந்தது. அங்கு திரைக்குப் பின்னால் அமெரிக்க படை உயர் அதிகாரி மார்ட்டின் டிம்(ப்)சேயும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணாவும் இலங்கை படையினருக்கு பயிற்ச்சி வழங்கும் தங்களது விருப்பத்தை இலங்கைப் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜ்பக்சவிடம் தெரிவித்தனர்.
இலங்கையின் சில்லறைக் கைக்கூலியாக இந்தியா
இனக்கொலை புரிந்த இலங்கைப் படையினருக்கு அமெரிக்காவும் இந்தியாவும் படைப்பயிற்ச்சி வழங்குவதா என்ற ஆத்திரம் பல தமிழ் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது. இந்தியக் கொள்கை வகுப்பாளர்களும் ஆட்சியாளர்களும் இந்தியாவின் பிராந்திய நலன்களைக் கோட்டை விட்டுவிட்டு தங்கள் சாதிய நலன்களையும் இந்தியப் பெரு முதலாளிகளின் குறுங்கால நலன்களையும் கருத்தில் கொண்டு கடந்த சில ஆண்டுகளாகச் செயற்பட்டு வருகின்றனர். இது சீனா இலங்கையில் தனது ஆதிக்கத்தை அதிகரிக்கப் ஏதுவாக அமைந்துள்ளது. இதனால் இலங்கையின் சில்லறைக் கைக்கூலி போல் செயற்படும் இந்தியாவை அமெரிக்கா இலங்கைக்கு எதிராகச் செயற்படப் பெரும் முயற்ச்சி செய்து வருகிறது. இதில் அமெரிக்கா பெற்ற முதற் சிறு வெற்றி இந்தியாவை இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைக்கழகத் தீர்மானத்திற்கு வாக்களிக்கச் செய்தமை. அதற்காக அமெரிக்கா இந்தியாவின் நிர்பந்தந்தால் தீர்மானத்தில் இலங்கைக்கு சாதகமாகப் பல மாற்றங்களைச் செய்தது.
இலங்கையில் சீனாவின் முதலீடு பெரிது
இலங்கையில் தனது ஆதிக்கத்தை சீனா ஒரு நீண்டகாலமாகத் திட்டமிட்டு அதிகரித்து வருகிறது. இலங்கைக்கு உதவி செய்யும் நாடுகளில் சீனா முதலிடம் வகிக்கிறது. இலங்கைக்கு எந்தவொரு அவசர நிலையிலும் இராணுவ உதவிகளை வழங்க தயாராக உள்ளதாக சீனா ஜூன் 7-ம் திகதி உறுதியளித்தது. இலங்கைப் படைத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங்லீயைச் சந்தித்துப் பேசியபோதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டது.பெய்ஜிங்கில் உள்ள மக்கள் விடுதலைப் படையின் தலைமையகத்தில் ஜூன் 6-ம் திகதி இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. சீன படைத்துறையின் அழைப்பின் பேரில் இலங்கைப்படைத் தளபதி ஆறு நாள் பயணத்தை மேற்கொண்டிருந்தார். பேரழிவு அல்லது ஏனைய எந்த அவசரநிலையிலும் சீன இராணுவத்தின் உதவியை இலங்கை கோரலாம் என்றும் எந்தநேரத்திலும் இலங்கைக்கு உதவ தமது இராணுவம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இது கோத்தபாய ராஜ்பக்சவிடம் இந்தியாவும் அமெரிக்காவும் வைத்த முன் மொழிவிற்கான பதிலடியாகும். அத்துடன் இலங்கையில் இயற்கை அனர்த்தம் அல்லது அரசியல் கிளர்ச்சி என்பன நடக்கும் போது இலங்கை அதற்கான உடன் உதவிகளை இந்தியாவிடம் இருந்தே இதுவரை பெற்று வந்தது. இலங்கையின் இந்த இந்தியாவில் தங்கியிருக்கும் நிலையை இல்லாமல் செய்யும் நோக்கத்துடனேயே சீனா இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளது.
உறுதி செய்யப்பட்ட வல்லரசுப் போட்டி
இலங்கைக்கு படைப் பயிற்சி வழங்க அமெரிக்காவும் இந்தியாவும் தயாராவதும் இலங்கைக்கு எந்நேரமும் படை உதவி செய்ய சீனா தாயாரென உறுதியளித்ததும் இலங்கையில் வல்லரசுப் போட்டி முனைப்படைந்துள்ளமையை உறுதி செய்கின்றன. இது இனி வரும் காலங்களில் இலங்கையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தலாம்.
ராஜபக்சேக்களை பதவியில் இருந்து அகற்றுதல்
இலங்கை தொடர்பாக அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலில் முக்கியமானது மஹிந்த ராஜ்பக்சவை ஆட்சியில் இருந்து அகற்றுவதே. இப்போது உள்ள சூழ் நிலையில் இது இலகுவானது அல்ல. ராஜபக்சேக்களை ஒரு தேர்தல் மூலம் பதவியில் இருந்து விலக்குவது இப்போது சாதியமற்றது. ராஜபக்சேக்களை ஒரு மக்கள் எழுச்சியின் மூலம் பதவியில் இருந்து அகற்றுவத்தும் இப்போது சாத்தியமில்லை. ராஜபக்சேக்களுக்கு எதிரானவர்களிடையே ஒற்றுமை இல்லை. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் பதவிப் போட்டி நிலவுகிறது. ஒரு படைத்துறை(இராணுவ)ப் புரட்சி மூலம் ராஜபக்சேக்களைப் பதவியில் இருந்து விலக்குவதும் இப்போது சாத்தியமில்லை. சரத் பொன்சேக்காவிற்கு ஆதரவான உயர்நிலை மற்றும் இடைநிலைப் படை அதிகாரிகள் ஏற்கனவே படையில் இருந்து விலக்கப்பட்டுவிட்டனர். மற்றவர்கள் தீவிர கண்காணிப்பில் இருக்கின்றானர். சரத் பொன்சேக்கா சிறையில் இருந்து விடுதலையானதும் பட்டாசு கொழுத்திய படை முகாம்களுக்கு இரகசியக் காவல்துறையினர் சென்று தீவிர விசாரணை நடாத்தினர். விலைவாசி உயர்வினால் ராஜபக்சேக்களின் செல்வாக்கு குறைந்து செல்வதால் தமக்கு மக்களிடம் இருக்கும் செல்வாக்கு முற்றாகக் குறையும் முன்னர் அதிபர் தேர்தலை நடாத்தி தனது பதவிக்காலத்தை அதிகரிக்கும் எண்ணமும் ராஜபக்சேக்களிடம் உண்டு. 2013இல் இலங்கைக் குடியரசு அதிபர் தேர்தலை ராஜபக்சேக்கள் நடாத்தலாம். ராஜபக்சேக்களைப் பதவியில் இருந்து விலக்க மக்கள் கிளர்ச்சியும் அதற்கு ஆதரவாக படையினர் மத்தியில் ஒரு கிளர்ச்சியும் ஏற்படுத்தியே ராஜபக்சேக்களைப் பதவியில் இருந்து விலக்க முடியும். மனித உரிமை மீறலுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கவும் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் ஏற்படுத்தவும் ராஜபக்சேக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையிலும் அதன் உப அமைப்புக்களிலும் அழுத்தம் கொடுத்தால் அதில் இருந்து தப்ப ராஜ்பக்சேக்கள் எடுக்கும் தமிழர்களுக்கு சாதகமான நடவடிக்கைகள் அவர்களையும் அவர்களுக்கு தோள் கொடுத்துக் கொண்டிருக்கும் சிங்கள-பௌத்த மேலாதிக்கத்தைத் தம் கொள்கைகளாகக் கொண்ட விமல் வீரவன்ச குழுவினரையும் ஜாதிக ஹெல உருமயக் கட்சியினரையும் பிரித்து வைக்கும் என்பது அமெரிக்காவின் நம்பிக்கை. அதுமட்டுமல்ல இவ்விரு குழுக்களும் தமது அரசியில் நிலைப்பாட்டை உறுதிப்படுத்த ராஜபக்சவிற்கு எதிராகவும் திரும்பலாம். அமெரிக்காவும் இந்தியாவும் இலங்கைப் படையினருக்கு பயிற்ச்சி அளிப்பது என்ற போர்வையில் ஒரு தொகை படையினரை தமது நாட்டுக்கு அழைத்து அவர்களை மூளைச் சலவை செய்து ராஜபக்சவிற்கு எதிரான கிளர்ச்சியில் அவர்களது படையினரிடை sleeper cell ஆக இவர்கள் செயற்படுவார்கள். sleeper cell என்பது ஒரு குழுவினரிடை அவர்களுக்கு எதிரான குழுவினரின் ஆட்கள் உள் நுழைந்து அவர்களிடை ஒருவர் போல் தக்க தருணம் வரை காத்திருந்து தருணம் வந்ததும் தமது குழுவினருடன் இணைந்து செயற்படுவார்கள் அல்லது தாக்குதல் நடாத்துவர். மும்மர் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சியில் இப்படிப் பட்ட sleeper cell நிறையப் பேர் பாவிக்கப்பட்டனர்.
Thursday, 7 June 2012
மானங்கெட்ட இந்தியன் பதவி விலக மாட்டான்
02-12-2010இலன்று பிரித்தானிய ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச ஆற்ற இருந்த உரை இரத்துச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அறிக்கை விட்ட அவர் தான் பிரித்தானியாவில் வேறு எங்காவது ஒரு இடத்தில் தனது உரையை நிகழ்த்துவேன் என்று சூளுரைத்திருந்தார். “I am very sorry this has had to be cancelled, but I will continue to
seek venues in the UK and elsewhere where I can talk about my future
vision for Sri Lanka.”அன்றிலிருந்து பல தரகு நிறுவனங்கள் மூலம் தனது முயற்ச்சியை மேற்கொண்டிருந்தார்.
2011 டிசம்பருடன் ஓராண்டு காலம் ஆகியும் தனது உரையாற்றும் ஆசை நிறைவேறவில்லை என்பதால் பெரும் விசனமடைந்த மஹிந்த கழுதை கெட்டால் குட்டிச் சுவர் என்பது போல் இந்தியாவை நாடினார். இந்தியாவிற்கு கிடைத்த மேடை பொதுநலவாய நாடுகள். அதில் இந்தியரான கமலேஷ் ஸர்மா செயலாளராக இருக்கிறார். அவர் தேர்ந்தெடுத்த நிகழ்ச்சி பிரித்தானிய அரசியாரின் முடிசூடிய வைரவிழாக் கொண்டாட்டம். பிரித்தானிய அரசியாரின் வைரவிழாக் கொண்டாட்ட ஏற்பாடுகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடை பெற்றன. வைரவிழாவிற்கு வரும் மஹிந்த ராஜ்பக்ச வருகை தரும் போது பொதுநலவாய நாடுகள் அமைப்பு ஒரு வர்த்தக மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் மஹிந்த ராஜபக்சவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டது. மாநாட்டை ஆரம்பித்து வைத்து மஹிந்த தொடக்க உரை ஆற்றுவதாக நிகழ்ச்சி நிரல் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் பிரித்தானிய அரசியாருக்கு பொதுநலவாய நாடுகளின் மார்ல்பரோ மாளிகையில் விருந்து கொடுப்பதாகவும் அதில் அரசியாருக்கும் மஹிந்தவிற்கும் ஒரே மேசையில் அமரவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
மஹிந்தவின் அற்ப ஆசை
மஹிந்த ராஜபக்ச தனது மந்திரி ஒருவரின் பிறந்த நாள் வைபவத்தில் கலந்து கொண்டு தனது நண்பர்களுடன் அரட்டை அடிக்கையில் தான் எப்படி இந்தியாவை ஏமாற்றுகிறார் என்பதைக் கூறித் தம்பட்டம் அடித்ததை கொழும்பில் ஊடகங்கள் அம்பலப்படுத்தி இருந்தன. இலங்கை எப்படி இந்தியாவை ஏமாற்றிவிட்டு சீனாவுடன் தனது உறவை பலப்படுத்தி வருகிறது என்பது உலகறிந்தது. தமிழர்களுக்கு எதிரான போர் முடிவடைந்த பின்னர் இலங்கை இந்திய வர்த்தக ஒப்பந்தமான சீபாவில் கையொப்பமிடுவதை இலங்கை இழுத்தடித்து இந்தியாவை ஏமாற்றி வருகிறது என்பது நாம் அனைவரும் அறிந்தது. இவ்வளவு இருந்தும் மஹிந்தவின் அற்ப ஆசையை நிறைவேற்ற ஏன் இந்தியா தனது அரச உபாயப் பலத்தைப் (diplomatic leverage) பாவித்து மஹிதவை மேடையேற்ற முயன்றது என்பது பெரும் கேள்வி. புது டில்லியில் நடந்த பொது நலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிக்கு மஹிந்தவின் வேண்டுகோளின் பேரில் அவருக்கு இந்தியா முக்கியத்துவம் கொடுத்தது. இந்தியா ஏன் இலங்கையின் கைக்கூலி போல் செயற்படுகிறது? இலங்கைப் போரில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களில் இந்தியாவிற்கும் பங்கிருப்பதை நிரூபிக்கக் கூடிய ஆதாரங்கள் இலங்கை கையில் இருப்பதாலா? பிரபாகரன் குடும்பத்தில் அனைவரையும் கொல்லுங்கள் என்று இந்திய இளவரசர் சொன்னதை இலங்கை ஒலிப்பதிவு செய்து வைத்திருக்கிறதா?
மான பங்கப்படுத்தப்பட்ட பிரித்தானிய அரசி
பிரித்தானிய அரசியின் வைரவிழா இனிதே நிறைவேறியது. ஆனால் பிரித்தானிய அரசிக்கு பொதுநலவாய நாடுகளால் வழங்கப்பட்ட விருந்து உபசாரம் மட்டும். பல்லாயிரக் கணக்கான மக்கள் கூடி ஆர்ப்பாட்டம் செய்வதும் கொடும்பாவிகள் எரிப்பதும் உருவப் பொம்மைக்கு காலணிகளால் அடிப்பதும் ஆயிரக்கணக்கில் பெருநகரக் காவல்துறையினரும் கலவரம் அடக்கும் படையினரும் குவிக்கப்பட்டதும் இதுவரை அரசியார் கலந்து கொள்ளும் எந்த ஒரு நிகழ்விலும் நடக்காத ஒன்று. பிரித்தானியா வாழ் தமிழர்களை வைரவிழாவிற்கு இலங்கை அதிபரை அழைத்தமை ஆத்திர மடையச் செய்யவில்லை. வர்த்தக மாநாட்டில் மஹிந்தவிற்கு முக்கியத்துவம் கொடுத்தமையே தமிழ் மக்களை ஆத்திரமடையச் செய்திருந்தது. இதனால் பிரித்தானியா வாழ் தமிழர்கள் ஐரோப்பியா வாழ் தமிழர்களையும் அழைத்து பெரும் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டக் காரர்களை கண்காணிக்க வந்த காவல் துறையினர் தாம் எதிரபார்த்ததிலும் அதிக மக்கள் கூடியிருந்தமையையும் அவர்கள் முகத்தில் தெரிந்த ஆத்திரத்தையும் பார்த்து கலவரம் அடைந்திருந்தமையை அவர்கள் முகங்களில் காணக் கூடியதாக இருந்தது. தமிழர்களின் ஆர்ப்பாட்டங்களில் முன்பு ஒரு போதும் இல்லாத அளவு கலவரம் அடக்கும் படையினர் தருவிக்கப்பட்டு முன்னணியிலும் பின்னணியிலும் நிறுத்தப்பட்டனர். இவற்றிற்கு எல்லாம் காரணமான கமலேஷ் ஸர்மா பொதுநலவாய நாடுகளின் செயலாளர் பதவியில் இருந்து தானாகவே விலக வேண்டும். ஆனால் அவர் அப்படிச் செய்ய மாட்டார். அவர் ஒரு மானங்கெட்ட இந்தியர்.

Wednesday, 6 June 2012
தமிழர்கள் பிரச்சனைகளின் மூலம் தேடினால் அது பூனூலில் போய் முடியும்
சோழப் பேரரசின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் ஆராய்ந்த பிரெஞ்சு வரலாற்று நிபுணர்கள் சோழர்கள் கைப்பற்றிய பல நாடுகளில் இருந்து கிடைத்த செல்வம் பெரும் மூலதனமாகத் திரளாமல் அவற்றை பார்ப்பனர்களின் ஆலோசனைப்படி கோவில்கள் கட்டுதல் யாகங்கள் செய்தல் போன்றவறில் வீணாக்கினர்கள் என்கிறார்கள்.
இன்றைய தமிழர்களின் அடிமைகளாக தெலுங்கர்களாலும் மலையாளிகளாலும் கன்னடர்களாலும் ஆளப்படுவதற்குக் காரணம் அவர்கள் சாதி அடிப்படியில் பிளவு பட்டு நிற்பதே. இந்த சாதியம் எப்படித் தமிழர்களிடை வந்தது என்று பார்த்தால் அதுவும் பூனூலில்தான் முடியும்.
முள்ளிவாய்க்கால் பின்னடைவிற்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்தாலும் அதிலும் பல பூனூல்களைக் காணலாம். ராஜபக்சவின் கையாளாக இந்து ராம். ராஜபக்சவிற்கு பாராட்டுத் தெரிவிக்க வேண்டும் எனக் கூறிய சோ. ராஜபக்சவிற்கு பாரத் ரத்னா பட்டம் கொடுக்க வேண்டும் என்று சொல்லும் சுப்பிரமணிய சுவாமி. ராஜபக்ச தமிழர்களுக்கு எதிரான போரில் வெல்ல வேண்டும் என்று எத்தனை இந்தியக் கோவில்களில் பூசைகள் யாகங்கள் நடந்தன?
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழக்த்தில் உரையாற்ற வந்த ராஜபக்சவை பலத்த போராட்டத்தின் பின்னர் தமிழர்கள் விரட்டியடித்த பின்னர் ராஜபக்ச தமிழர்கள் வாழும் நாட்டில் காலடி எடுத்து வைக்க முடியுமா என்ற கேள்வி இருந்தது. பிரித்தானிய அரசியின் வைரவிழாவிற்கு ராஜபக்ச அழைக்கப்பட்டது எப்படி? பிரித்தானிய அரசியின் கீழ் பிரித்தானிய அரசும் பொதுநலவாய நாடுகளும் இருக்கின்றன. ராஜபக்சவிற்கான அழைப்பை பிரித்தானிய அரசியும் அனுப்பவில்லை. பிரித்தானிய அரசும் அனுப்பவில்லை. பிரித்தானிய அரசு மஹிந்த ராஜபக்ச அரசியின் வைரவிழாக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதை விரும்பவில்லை. அவர் வருவதால் பிரித்தானியா வாழ் தமிழர்கள் கொதிப்படைவார்கள் என்பதை பிரித்தானிய அரசு அறிந்திருந்தது. பிரித்தானியாவில் உள்ள பொதுநலவாய நாடுகளின் அலுவலகம் மட்டும் மஹிந்த ராஜபக்ச அரசியின் வைர விழாக் கொண்டாட்டத்தில் ராஜபக்ச வரவேண்டும் என அடம்பிடித்தது. இதனால் மஹிந்த ராஜபக்சவிற்கான அழைப்பை அனுப்புவதில் சில நாட்கள் ஒரு இழுபறி நடந்தது. பிரித்தானியாவில் உள்ள பொதுநலவாய நாடுகளின் அலுவலகம் அடுத்த ஆண்டு இலங்கையில் அதன் மாநாடு நடக்கவிருப்பதால் மஹிந்தவிற்கு அழைப்பு அனுப்பாவிடில் பொதுநலவாய நாடுகளிடை பெரும் சிக்கலை அது உருவாக்கும் என்று அடம் பிடித்தது. இறுதில் பிரித்தானியாவில் உள்ள பொதுநலவாய நாடுகளின் அலுவலகம் மஹிந்தவிற்கு அழைப்பை அனுப்பியது. அத்துடன் நிற்கவில்லை அது. ஒரு பொருளாதார மாநாட்டையும் ஜூன் 6-ம் திகதி கூட்டி அதில் ராஜபக்சவைக் கலந்து உரையாற்ற ஏற்பாடு செய்திருந்தது.
மஹிந்த ராஜபக்ச பிரித்தானியாவிற்கு ஏன் அழைக்கப்பட்டார் என்று ஆராய்ந்தால் அங்கும் ஒரு பூனூல் தான் தட்டுப்படுகிறது. பொது நலவாய நாடுகளின் பொதுச் செயலராக இருப்பவர் கமலேஷ் ஸர்மா.
பிரித்தானிய அரசியின் வைரவிழாவிற்கு மஹிந்தவின் வருகையை பிரித்தானியா வாழ் தமிழர்கள் கடுமையாக எதிர்த்தனர். இதனால் அவரின் வருகை தொடர்ப்பான தகவல்கள் மிக இரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. முதலில் பிரித்தானியப் பிரதம மந்திரியின் பணிமனை முன்பும் பின்னர் ஹீத்துரூ விமான நிலையத்திலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. ஆனால் அரசியின் வைரவிழாவைக் குழப்ப தமிழர்கள் விரும்பவில்லை. இரு ஆர்ப்பாட்டங்களையும் பெருமளவில் ஒழுங்கு செய்யவில்லை. ஜூன் 5-ம் திகதியுடன் அரசியின் வைரவிழாக் கொண்டாடங்கள் நிறைவு பெற்றன. ஜூன் 6-ம் திகதி பொது நலவாய நாடுகளின் பணிமனை ஒழுங்கு செய்த பொருளாதர மாநாட்டிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை பெருமளவில் ஒழுங்கு செய்தனர். இலண்டனுக்கு வெளியிலும் வேல்ஸ், ஸ்கொட்லாண்ட் போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களும் வர ஒழுங்குகள் செய்யப்பட்டன. ஐரோப்பாவில் இருந்தும் பெருமளவு மக்கள் இலண்டன் வர ஏற்பாடு செய்யப்பட்டது. சிலர் ஐக்கிய அமெரிக்காவிலிருந்தும் கனடாவிருந்தும் வர ஏற்பாடுகளைச் செய்தனர். பத்தாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் கூடி ஆர்ப்பாட்டம் செய்வார்கள் என்பதை உணர்ந்த ஸ்கொட்லண்ட்யார்ட் பாதுகாப்பு நிலைகளில் உள்ள சிரமங்களை பொது நலவாய நாடுகளின் பணிமனைக்கு எடுத்துக் கூறியது. இதனால் ஜூன் மாலை 5-ம் திகதி மாலை பொது நலவாய நாடுகளின் பணிமனை மஹிந்த ராஜபக்ச கலந்து கொள்ளவிருந்த காலை நிகழ்ச்சிகள் யாவும் தவிர்க்க முடியாத் காரணத்தால் இரத்துச் செய்வதாக ராஜபக்சவின் பெயரைக் குறிப்பிடாமல் அறிவித்தது. அதன் நிகழ்ச்சி நிரலை திருத்தி அமைத்தி வெளிவிட்டது. அதில் உள்ள பங்கு பற்றுவர்களின் பெயர்களில் மஹிந்த ராஜபக்சவின் பெயர் இடம் பெறவில்லை. ஆனால் பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டபடி நடக்கும் என்றனர்.

Tuesday, 5 June 2012
ஈரானில் நடந்த வைரஸ் தாக்குதல் விபரம்
இரசியாவின் பிரபல கணனி வைரஸ் ஒழிப்பு நிறுவனமான Kaspersky Lab ஈரான் அணு ஆராய்ச்சி நிலையத்திலும் எண்ணெய் உற்பத்தித் துறையிலும் நடந்த வைரஸ் தாக்குதல்கள் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. உலகிலேயே அதிக அளவு வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகும் நாடாக ஈரான் கருதப்படுகிறது. அங்கு 185 வைரஸ் தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளன. அதற்கு அடுத்தபடியாக இஸ்ரேலில் 95 தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளன.
ஈரானில் மே மாதம் இறுதிப் பகுதியில் நடாத்தப்பட்ட தாக்குதலாளிகள் தங்கள் வைரஸ்களை PDF, AutoCAD ஆகிய வடிவங்களில் உள்ள கோப்புக்களை தாக்கக் கூடிய வகையில் உருவாக்கியிருந்தனர். அக்கோப்புக்களை text வடிவத்தில் சிறிய கோப்புக்களாக மாற்றக்கூடியவையாக அவ் வைரஸ்கள் அமைந்திருந்தன. மின்னஞ்சல் போன்ற மேலும் பல முக்கிய கோப்புக்களை வேட்டையாடக் கூடியவையாகவும் அவை அமைந்திருந்தன. அந்த வைரஸ் flameஎனப் பெயரிடப்பட்டது. இவை ஒலிப்பதிவு, கணனித் திரையை படப்பதிவு செய்தல், கணனி உரையாடல்களை பதிவு செய்தல் புளூரூத் மூலம் தொடர்புகளை ஏற்படுத்தல் போன்ற புதிய திறமைகளைக் கொண்டது. இந்த வைரஸின் அளவு 20MP. Flame வைரஸை உருவாக்கியவர்கள் வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா ஆகிய பிராந்தியங்களில் இருந்து 80 நாடுகளில் இருந்து இந்தவைரஸ் மூலம் கணனிகளைக் கட்டுப்படுத்தினர். PDF, AutoCAD ஆகிய வடிவங்களில் உள்ள கோப்புக்களை இலக்கு வைத்தமை ஈரானில் உள்ள தொழில் நுட்ப வடிவமைப்புக்களைத் திருடுவதற்காக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
flame வைரஸின் கட்டளை-கட்டுப்பாட்டுக் கட்டமைப்பு (command-and-control infrastructure) பல காலமாகச் செயற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. flame வைரஸின் தன்மைகளையும் அது ஈரானில் புகுத்தப்பட்ட விதங்களைப் பார்க்கும் போது அவை ஒரு வல்லரசு நாட்டில் இருந்துதான் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள் இரசிய Kaspersky Lab நிபுணர்கள்.
இரசிய Kaspersky Lab நிபுணர்கள் sinkholing என்னும் முறைமையைப் பாவித்து flame வைரஸின் தன்மைகளை ஆராய்ந்தனர். இதன் அளவும் சிக்கலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் அமைந்திருக்கின்றன(Flame virus is unprecedented in size and complexity.) என்கின்றனர் அவர்கள். இந்த வைரஸ் லெபனான் ஈராக் ஆகிய நாடுகளையும் தாக்கியிருந்தன. மைக்குரோசொஃப்ர் நிறுவனம் தனது விண்டோவில் உள்ள சிறு பிழையை(bug) flame பயன்படுத்திக் கொண்டதாகவும் அதைச் சரிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அணு உலைகளை Stuxnet வைரஸ் தாக்கிய விதம்
ஈரானின் Natanzஇல் இருக்கும் அணு ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள கணனிகள் வைரஸ் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கப்படும் முகமாக இணைய வெளியுடன் தொடர்பற்ற முறையில் இயங்குகிறது. வெளியில் இருந்தோ அல்லது வெளியில் இருந்தோ அங்கு இணைய வெளித் தொடர்புகளை ஏற்படுத்த முடியாது.
அங்கு வேலை செய்யும் விஞ்ஞானி ஒருவரின் மடிக் கணனியில் Pen Drive மூலம் Stuxnet வைரஸை ஒரு இரட்டை உளவாளி புகுத்துகிறார். அந்த மடிக்கணனியில் இருந்து அணு ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள மற்றக் கணனித் தொகுதிகளுக்கு புளூருத் மூலமாக பரவுகிறது. பல கணனிகளை Stuxnet தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறது. முக்கியமாக Siemens S7 என்னும் கணனித் தொகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறது. Siemens S7 என்பது பெரிய தொழிற்சாலைகளில் பொறிகளின் இயக்கங்களை உணர்ந்து அவற்றை உரிய வகையில் இயங்கச் செய்யும்.
Siemens S7 யூரேனியம் பதனிட சுற்றிக் கொண்டிருக்கும் மையநீக்கிக்(centrifuges) குழாய்களை அளவிற்கு மிஞ்சிய வேகத்தில் சுற்றும் படி கட்டளை இடுகின்றன. இதனால் ஆயிரம் வரையிலான மையநீக்கிக்(centrifuges) குழாய்கள் சிதைவடைகின்றன. ஈரானிய விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைகின்றனர். ஈரானிய ஆட்சியாளர்களுக்கு தமது விஞ்ஞானிகளின் திறமையில் சந்தேகம் ஏற்படுகிறது
ஈரானில் மே மாதம் இறுதிப் பகுதியில் நடாத்தப்பட்ட தாக்குதலாளிகள் தங்கள் வைரஸ்களை PDF, AutoCAD ஆகிய வடிவங்களில் உள்ள கோப்புக்களை தாக்கக் கூடிய வகையில் உருவாக்கியிருந்தனர். அக்கோப்புக்களை text வடிவத்தில் சிறிய கோப்புக்களாக மாற்றக்கூடியவையாக அவ் வைரஸ்கள் அமைந்திருந்தன. மின்னஞ்சல் போன்ற மேலும் பல முக்கிய கோப்புக்களை வேட்டையாடக் கூடியவையாகவும் அவை அமைந்திருந்தன. அந்த வைரஸ் flameஎனப் பெயரிடப்பட்டது. இவை ஒலிப்பதிவு, கணனித் திரையை படப்பதிவு செய்தல், கணனி உரையாடல்களை பதிவு செய்தல் புளூரூத் மூலம் தொடர்புகளை ஏற்படுத்தல் போன்ற புதிய திறமைகளைக் கொண்டது. இந்த வைரஸின் அளவு 20MP. Flame வைரஸை உருவாக்கியவர்கள் வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா ஆகிய பிராந்தியங்களில் இருந்து 80 நாடுகளில் இருந்து இந்தவைரஸ் மூலம் கணனிகளைக் கட்டுப்படுத்தினர். PDF, AutoCAD ஆகிய வடிவங்களில் உள்ள கோப்புக்களை இலக்கு வைத்தமை ஈரானில் உள்ள தொழில் நுட்ப வடிவமைப்புக்களைத் திருடுவதற்காக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
flame வைரஸின் கட்டளை-கட்டுப்பாட்டுக் கட்டமைப்பு (command-and-control infrastructure) பல காலமாகச் செயற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. flame வைரஸின் தன்மைகளையும் அது ஈரானில் புகுத்தப்பட்ட விதங்களைப் பார்க்கும் போது அவை ஒரு வல்லரசு நாட்டில் இருந்துதான் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள் இரசிய Kaspersky Lab நிபுணர்கள்.
இரசிய Kaspersky Lab நிபுணர்கள் sinkholing என்னும் முறைமையைப் பாவித்து flame வைரஸின் தன்மைகளை ஆராய்ந்தனர். இதன் அளவும் சிக்கலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் அமைந்திருக்கின்றன(Flame virus is unprecedented in size and complexity.) என்கின்றனர் அவர்கள். இந்த வைரஸ் லெபனான் ஈராக் ஆகிய நாடுகளையும் தாக்கியிருந்தன. மைக்குரோசொஃப்ர் நிறுவனம் தனது விண்டோவில் உள்ள சிறு பிழையை(bug) flame பயன்படுத்திக் கொண்டதாகவும் அதைச் சரிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அணு உலைகளை Stuxnet வைரஸ் தாக்கிய விதம்
ஈரானின் Natanzஇல் இருக்கும் அணு ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள கணனிகள் வைரஸ் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கப்படும் முகமாக இணைய வெளியுடன் தொடர்பற்ற முறையில் இயங்குகிறது. வெளியில் இருந்தோ அல்லது வெளியில் இருந்தோ அங்கு இணைய வெளித் தொடர்புகளை ஏற்படுத்த முடியாது.
Siemens S7 |
யூரேனியம் பதனிட சுற்றும் குழாயகள் |
Monday, 4 June 2012
ஹைக்கூ: அவளைத் தொட வேண்டிய இடம்
உயர் வேக தகவற்பரிமாற்றம்
பேச்சு வன்மையின் உச்சக்கட்டம்
நான்கு விழிகளின் சந்திப்பில்
அறிவைப் புறந்தள்ளும்
ஆசையை நிறைவேற்றும்
கற்பனை
முயற்ச்சிகளின் தொடர்ச்சி
தடைகள் நிறைந்த பயணம்
வாழ்க்கை
மக்களை வழி நடத்துபவனல்ல
மக்கள் வழி செல்பவன்
தலைவன்
ஐயங்கள் துரோகிகள்
தயக்கங்கள் காட்டிக் கொடுப்போர்
வாழ்க்கைப் போர்
தேடி என்றும் வராதது
உருவாக்கப்பட வேண்டியது
வாய்ப்புக்கள்
இடம் பிடிக்க
அவளைத் தொட வேண்டிய இடம்
இதயம்
பேச்சு வன்மையின் உச்சக்கட்டம்
நான்கு விழிகளின் சந்திப்பில்
அறிவைப் புறந்தள்ளும்
ஆசையை நிறைவேற்றும்
கற்பனை
முயற்ச்சிகளின் தொடர்ச்சி
தடைகள் நிறைந்த பயணம்
வாழ்க்கை
மக்களை வழி நடத்துபவனல்ல
மக்கள் வழி செல்பவன்
தலைவன்
ஐயங்கள் துரோகிகள்
தயக்கங்கள் காட்டிக் கொடுப்போர்
வாழ்க்கைப் போர்
தேடி என்றும் வராதது
உருவாக்கப்பட வேண்டியது
வாய்ப்புக்கள்
இடம் பிடிக்க
அவளைத் தொட வேண்டிய இடம்
இதயம்
Sunday, 3 June 2012
பிரித்தானிய மகராணியும் இலங்கைத் தமிழர்களும்
பிரித்தானிய மகராணியார் இரண்டாம் எலிசபெத் அவர்களின் கணித ஆசிரியராகக் கடமையாற்றியவர் இலங்கையில் முதன் முதலில் தமிழர்களுக்கு ஒரு தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த பேராசிரியர் திரு சி. சுந்தரலிங்கம். மகராணியின் முடிசூட்டு விழா திருமணவிழா போன்றவற்றிற்கு திரு சுந்தரலிங்கமும் அழைக்கப்படுவதுண்டு. திரு சுந்தரலிங்கத்துடன் கைகுலுக்கும் போது மரியாதையின் நிமித்தம் மகராணியார் தனது கையுறைகளைக் கழற்றி விட்டுக் கைகுலுக்கினார் என்று கூறப்படுகிறது.
அரிச்சந்திர புராணம் கேட்டு அழுத மகராணி
காலயோகி ஆனந்தக்குமாரசாமி அவர்களிடம் பயிலும்போது அரிச்சந்திர புராணத்தைக் கேட்டு மகாராணியார் கண்ணீர் வடித்தார் என்றும் கூறப்படுகிறது
முன்னுக்குப் பின்னர் முரண்பட்ட கையொப்பங்கள்
இலங்கைக்கு சோல்பரிப் பிரபு 1946இல் எழுதிய சோல்பரி யாப்பில் பிரித்தானிய மகராணியார் இரண்டாம் எலிசபெத் கையொப்பமிட்டு அதை சட்டபூர்வமாக்கினார். சோல்பரி யாப்பின் 29-(2)வது பிரிவின் படி இலங்கைப் பாராளமன்றத்தில் சிறுபானமை இனங்களுக்கு எதிராக சட்டங்கள் இயற்ற முடியாது. ஆனால் இலங்கைப் பாராளமன்றம் தனிச்சிங்கள சட்டம் இயற்றியபோது அதிலும் பிரித்தானிய மகராணியார் இரண்டாம் எலிசபெத் கையொப்பமிட்டு அதையும் ஒரு சட்டமாக்கினார். அதற்கு எதிராக கோடிஸ்வரன் என்ற அரச ஊழியர் வழக்குக் தொடுத்த போது ஒரு குடிமகன் மகராணிக்கு எதிராக வழக்குத் தொடுக்க முடியாது என பிரபுக்கள் சபை தீர்ப்பு வழங்கியது. இதே போன்று இலங்கை மலையகப் பகுதியில் வாழ்ந்த தமிழர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்ட சட்டத்திலும் மகராணியார் கையொப்பமிட்டார். இச்சட்டமும் அப்போது அமூலில் இருந்த சோல்பரி யாப்பிற்கு எதிரானதாகும். 1972இல் இலங்கையை பிரித்தானிய மகராணியின் ஆட்சியில் இருந்து விலக்கி ஒரு குடியரசாக்கும் கொன்வின் ஆர் டி சில்வாவால் எழுதப்பட்ட அரசியல் யாப்பை அமூல் படுத்தும் போது அதை இலங்கைப் பாராளமன்றத்துக்குள் நிறைவேற்றாமல் இலங்கைப் பாராளமன்ற உறுப்பினர்கள் நவரங்ககலா என்ற மண்டபத்தில் ஒன்று கூடி நிறைவேற்றினார்கள். அந்த அரசியல் யாப்பு இலங்கைச் சிறுபான்மையினத்தினருக்கு எதிரானது என்றபடியால்தான் இப்படிச் செய்தார்கள்.
இன்றும் தமிழர்களை புறக்கணித்த மகராணி
இலங்கை அதிபர் மகிந்த ராஜ்பக்சவை தனது முடிசூடிய வைரவிழாவிற்கு அழைப்பதால் பல தமிழர்கள் மனமுடைந்துள்ளனர். அதற்கு எதிராக பல ஆர்ப்பாட்டங்கள் ஆட்சேபனைக் கடிதங்கள் அனுப்புதல்கள் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன. அவை எதையும் மகராணி கண்டு கொள்ளவில்லை.

Subscribe to:
Posts (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...