Friday, 3 July 2009
கலைஞரின் காகித ஓடமும் ஈழத் தமிழரும்.
அண்மையில் நண்பர் ஒருவர் கலைஞர் கருணாநிதி எழுதிய திரை படப் பாடல் என்று சொல்லி ஒரு பாடலை மின்னஞ்சல் மூலம் அனுப்பியிருந்தார். கலைஞர் ஐயா முப்பது வருடங்களுக்கு முன்னதாகவே ஈழத்தமிழனின் இன்றைய நிலையை கவிதையாக வடித்துவிட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. அவர் என்ன சாதாரண ஆளா?
இரு பெண்டாட்டிகள் உடனிருக்க
இரு குளிரூட்டிகள் அருகிருக்க
நாலு மணி நேர உண்ணா விரதத்தால்
போரை நிறுத்திய பெருந்தகை.
அவரது மறக்க முடியுமா திரைப் படப் பாடல் இப்படி ஆரம்பிக்கிறது:
காகித ஓடம் கடலலை மீது
போவது போலே மூவரும் போவோம்
ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம்
அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம்
ஈழத்தமிழனுக்கும் இன்று மூழ்குவதைத் தவிர வேறு வழியில்லை!
கோலமும் போட்டு கொடிகளும் ஏற்றி
தேரையும் ஓட்டி தீயையும் வைத்தான்
காலமும் பார்த்து நேரமும் பார்த்து
வாழ்வையும் ஈந்து வதைக்கவும் செய்தான் ( காகித)
இந்தியா ஈழத்தமிழனுக்கு ஆயுதம் தந்தது பயிற்ச்சி தந்தது. இப்போது சிங்களவனுடன் சேர்ந்து தமிழனை வததைத்து விட்டது.
அழுவதைக் கேட்க ஆட்களும் இல்லை
ஆறுதல் வழங்க யாருமே இல்லை
ஏழைகள் வாழ இடமே இல்லை
ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை ( காகித)
ஈழத்தவன் இசுலாமியனாக இருந்தால் இசுலாமியர் வாழும் நாடு உதவியிருக்கும்.
கிறிஸ்தவனாக இருந்த்தால் கிறிஸ்த்தவர்கள் வாழும் நாடு உதவியிருக்கும்.
கத்தோலிக்கனாக இருந்தால் கத்தோலிக்கர்கள் வாழும் நாடு உதவியிருக்கும்.
பௌத்தனாக இருந்தால் பௌத்தர்கள் வாழும் நாடு உதவியிருக்கும்.
பெரும் பாலான ஈழத்தவர்கள் இந்துக்களாக இருந்ததால் எந்த நாடும் உதவவில்லை.
தாயின் மடியும் நிலைத்திடவில்லை
தந்தையின் நிழலும் காத்திடவில்லை
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
அம்மா எங்களை அழைத்திடு தாயே (காகித)
தமிழ்நாட்டைத் தாயென்று நம்பினான் இந்தியாவைத் தந்தை நாடென்று நம்பினான். எதுவும் நிலைக்கவில்லை.
Thursday, 2 July 2009
ஐயோ கிளம்பீட்டாங்களய்யா - மைக்கேல் ஜக்சன் சாகலையாம்
செத்தாரா? சாகவில்லையா? முடியை பிய்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு இன்னும் ஒரு தலையிடி. மைக்கேல் ஜக்ஸன் சாகவில்லை அவர் உயிருடன் இருக்கிறார் என்று வதந்தி கிளப்பி விட்டிருக்கிறார்கள்.
'Jackson's not dead, he's living in a bunker with Elvis Presley': Conspiracy theories flood the internet
Living in a bunker with Elvis PresleyInternet site 68comeback reported that Jackson was living in a 'bunker' with Elvis Presley.
It wrote: 'Surely you've heard of the secret, seven-storey-deep bunker that Elvis Presley had built underneath Graceland, prior to faking his own death? MJ lives there now with Elvis and certain other "dead" celebrities. You don't have to be sad for him any more.'
இந்தமாதிரிப் போகுது செய்தி.
எல்விஸ் பிரெஸ்லி இன்னும் சாகவில்லை என்று அவரது பல கோடிக்கணக்கான இரசிகர்கள் இன்றும் நம்பியிறுக்கின்றனர். பலர் அவரைப் போல உடையணிந்து தாம் தான் அவர் என்றும் சொல்லித் திரிகின்றனர்.
இப்போது மைக்கேல் ஜக்சன் தான் தான் என்று கூறிக்கொண்டு பலர் கிளம்பப் போகின்றனர்.
MICHAEL JACKSON FAKED HIS OWN DEATH?
“Michael Jackson, like Elvis, is sick and tired of being larger than life and wants to get a life,” said world-renowned psychic and metaphysician Dr. Andy Reiss at the time.
“The superstar trip has trapped Michael in Neverland. Also there’s a very good chance he could end up in prison if he’s convicted of child sex abuse.
“The only way out of this mess he’s in is to fake his death, cut his hair and go underground,” says Dr. Reiss, who specializes in celebrity predictions.
Dr. Reiss believes The Gloved One will try to escape his hellish existence by “dying” in Neverland, his remote amusement park retreat.
“The cover story will be that Michael Jackson suffered a fatal heart attack while riding his
“The only way for Michael to start a fresh new life is to end the grotesque life he has now. He learned the trick from Elvis.”
———————————————————–
While Jackson did not end his days at his beloved Neverland, he did indeed “die” of a heart attack this afternoon.
மைக்கேல் ஜக்சன் தனது வாழ்க்கையின் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு ஒரு சுதந்திர மனிதனாக வாழ்வதற்காக தானே தான் இறந்ததுபோல் பொய்யாக நாடகமாடுகிறாராம்.
மைக்கேல் ஜக்ஸனின் பாடல் தலைப்புகளை வைத்து வந்த குறுந்தகவல்: Police say Michael Jackson's death could be suspicious they're currently looking for a smooth criminal, he could be black or white but he's definitely bad and dangerous. They got fingerprints off the wall and say say say there was a man in the mirror, so he has to be there. They would like Ben & Billy jean to come forward but they don't wanna be starting something, police say they don't stop till they get enough as they found blood on the dance floor. Its going to be a tough case but they will beat it. Police say its a real thriller.
13வது அரசியலமைப்புத் திருத்தம் மூலமான தீர்வு சாத்தியமா?
எண்பதுகளில் இலங்கைத் தமிழர்களின் உரிமைக்காகப் போராடுவதாக இருபதிற்கு மேற்பட்ட இயக்கங்கள் செய்ற்பட்டன. அவற்றில் சில தமிழ்த்திரைப் படங்களின் பெயரால் அழைக்கப்பட்டதுண்டு. விடுதலை புலிகள் இயக்கத்தை அலைகள் ஓய்வதில்லை என்ற பெயரால் அழைப்பார்கள். ஒயாமல் இலங்கை இராணுவத்தின்மீது தாக்குதல் நடாத்துவதால் இப்பெயர். புளொட் இயக்கத்தை விடியும் வரை காத்திரு என்று அழைப்பர். இலங்கை இராணுவத்தின் மீது வெறுமனே அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தாக்குதல் நடாத்தாமல் தக்க தருணம் வரும்போது தாக்கவேண்டும் என்று கூறுயதால் இந்தப் பெயர். ரெலொ இயக்கத்தை தூறல் நின்று போச்சு என்று அழைப்பர். சில தாக்குதல்களை இலங்கை இராணுவத்தின் மீது நடாத்திவிட்டு பின்னர் எதுவும் செய்யாததால் இப்பெயர். இவைதவிர தமிழீழ மக்கள் விடுதலை இயக்கம், ஈரோஸ், தமிழீழ விடுதலைப் படை போன்றவை இராணுவத்தின் மீது தாக்குதல்கள் நடாத்துவதுண்டு. ஈரோஸ் இலங்கையின் பொருளாதரத்தின் மீது பாதிப்பு ஏற்படுத்துவதில் அதிக அக்கறை காட்டியது. ஆக மொத்தத்தில் இவைஎல்லாம் இலங்கை அரசிற்குப் பாரிய தலையிடியாகவே இருந்தன. இந்த இயக்கங்களால் இலங்கையின் எப்பாகத்திலும் தாக்குதல் நடாத்தமுடியும். விடுதலைப் புலிகள் விக்டர் தலைமையில் அநுராதபுரத்தில் நாடாத்திய தாக்குதல் முழு இலங்கையையும் படு அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இப்படியான ஒரு சூழ்நிலையில்தான் 13வது அரசியல் திருத்த சட்டம் இலங்கைப் பாராளமன்றில் நிறை வேற்றப் பட்டது.
பார்த்தசாரதியின் திறமையால் இலங்கைப் பிரச்சனையில் இந்தியாவிற்கு உரிய நடவடிக்கை எடுக்கும் கடப்பாடு உண்டு என்பதை மற்ற நாடுகள் ஏற்றுக் கொள்ளச் செய்யப்பட்டது. பூமாலை நடவடிக்கை மூலம் இந்திய விமானப் படைகள் இலங்கையில் அத்து மீறிப் பிரவேசித்ததை எந்த நாடும் கண்டிக்கவில்லை. இந்தியக் கடற்படைகள் இலங்கையை சூழ நிற்க, 30,000 படையினர் பெங்களூரில் எதற்கும் தயாராக நிற்க, இலங்கையின் எப்பகுதியிலும் தமிழ் ஆயுத இயக்கங்கள் தாக்குதல் நடாத்தும் வல்லமை பெற்றிருந்த நிலையில் 13ம் அரசியல் திருத்தம் இலங்கையில் நிறைவேற்றப்பட்டது.
13ம் அரசியல் திருத்தற்கு எதிராக பலத்த எதிர்ப்பு சிங்கள மககள் மத்தியில் எழுந்தது. அவை உழங்கு வானூர்தித் தாக்குதல் மூலம் அடக்கப் பட்டது. இந்த அரசியல் திருத்தம் கிட்டத்தட்ட இந்திய மாநில அரசுக்குரிய அதிகாரங்களை இலங்கையின் மாகாண சபைகளுக்கு வழங்கியது. இந்த அரசியல் சட்டத் திருத்தம் இதுவரை தமிழர்களைப் பொறுத்தவரை அமூல் படுத்தப் படவில்லை. கிழக்கு மாகாணத்தில் தற்போது முதலமைச்சராக இருப்பவருக்கு இதன்படி அதிகாரங்கள் முழுமையாக வழங்கப் படவில்லை.
தீர்வு சாத்தியமா?
13ம் அரசியல் திருத்தம் அதிகாரப் பகிர்வு அல்ல இது ஒரு வகையான அதிகாரப் பரவலாக்கம் தான். மைய அரசு மகாண அரசை எந்நேரமும் கலைக்கலாம். இந்தியாவின் மாநில அரசை ஒரு பாரிய மாநகர சபையாகவே அரசமைப்பு அறிஞர்கள் கூறுகின்றனர். It is a glorified municipality. இப்படிப்பட்ட அதிகாரப் பரவாலாக்கல் மூலம் இனப் பிரச்சனக்குத் தீர்வு காண முடியாது.
அமூலாக்குவது சாத்தியமா?
இந்த 13ம் அரசியல் திருத்தற்கு ஜாதிக ஹெல உறுமய ஜேவிபி ஆகிய அமைப்புக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு இலங்கை இராணுவதின் ஆதரவுண்டு என்று கூறப்படுகிறது. அது மட்டுமல்ல இலங்கை இராணுவமும் இலங்கையின் இனப் பிரச்சனை தொடர்பாக ஒரு நிலைப் பாட்டில் இருப்பதாகக் கூறப் படுகிறது. இலங்க அரசாங்கத்தைப் பொறுத்த வரை எந்தவிதமான் உள்ளக அழுத்தங்களும் இதை அமூலாக்குவதற்கு இல்லை. இதற்கான அழுத்தங்களை யார் கொடுப்பார்கள்? இலங்கை மீது எந்த அழுத்தங்களையும் தாம் பிரயோகிக்கப் போவதில்லை என்று இந்திய அதிகாரிகள் கூறிவிட்டனர். அமெரிக்கா இதை அமூல் படுத்தும் படி ஒரு வேண்டு கோளை மட்டும் விடுத்துள்ளது. ஆகவே இரு முக்கிய கேள்விகளுக்கு விடை தேவை:
- 13வது திருத்தம் நிறைவேற்றப் படுமா?
- 13வது திருத்தம் தீர்வாகுமா?
Wednesday, 1 July 2009
மனித உரிமைகள் என்றால் என்ன?
மனித உரிமைகள் என்றால் என்ன?
எல்லா மனிதர்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமைகளூம் சுதந்திரமும் மனித உரிமைகள் எனப்படும்.
உரிமை என்பது எத்தைகயது?
சுதந்திரமாக மற்றவர்களைப் பாதிக்காத வகையில் செயற்படும் அனுமதி உரிமையாகும். ஒருவருக்குத் தனது கைத்தடியை சுழற்ற உரிமை உண்டு ஆனால் அது மற்றவர்மேல் படாமல் இருக்க வேண்டிய பொறுப்பும் அவருக்கு உண்டு.
.
10-12-1948 இல் ஐக்கிய நாடுகள் சபை முதன் முதலில் உல மனித உரிமைகள் பிரகடனத்தை வெளியிட்டது. குடியுரிமை, அரசியல், பொருளாதார சமூக உரிமைகளை அனுபவிக்கும் உரிமை சகலருக்கும் உண்டென்பதி இப் பிரகடனம் வலியுறுத்தியது.
.
இப் பிரகடனத்திலும் இதன் பிறகு வந்த பல மனித உரிமைகள் தொடர்பான ஒப்பந்தங்களிலும் கையெழுதிட்ட நாடுகள் இவற்றை மதித்து நடக்கும் கடப்பாடுடையன. பல நாடுகள் இதற்கு ஏற்றாப் போல் தமது நாட்டுப் பாராளமன்றத்தில் சட்டங்களை சமர்ப்பித்து நிறைவேற்றி உள்ளன. பல நாடுகளின் மனித உரிமை ஆணையகங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இந்தியாவில் தேசிய மனித உரிமை ஆணையம் அமைக்கப் பட்டுள்ளது. இது தன்னாட்சி உடையது என்று சொல்லப்படுகிறது.
.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கழகம்.
இக் கழகம் 2005ஆம் ஆண்டு உருவாகக்ப் பட்டது. இது மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக விசாரிக்கும் உரிமை உள்ளது. இது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் உப அமைப்பாகும். இதன் நிலை ஐக்கிய நாடுகளின் பாது காப்புச் சபையிலும் கீழானது. இதன் 47 உறுப்பினர்களையும் பொதுச் சபையின் 191 உறுப்பினர்கள் தெரிவு செய்வர். இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகளாகும். இது ஜெனீவா நகரில் செயற்படுகிறது. மனித உரிமகள் கழகம் ஒரு நாட்டில் மனித உரிமைகள் மீறப் படுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி பாது காப்புச் சபையைக் கோரமுடியும். பாது காப்புச் சபை சில நடவடிக்கைகளை குறிப்பிட்ட நாட்டுக்கு எதிராக எடுக்க முடியும்:
- நாட்டுக்கு எதிராக பொருளாதரத் தடை, பயணத்தடை விதித்தல்.
- சர்வதேச குற்றவியல் நீதி மன்றில் வழக்குத் தாககுதல் செய்தல்.
ஜரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மணி ஆகிய நாடுகளின் படையினர் ஆப்கானிஸ்தானில் மேற்கொண்ட தாக்குதல்களில் அப்பாவி மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் கணக்கீட்டின் பிரகாரம் கடந்த ஆண்டு மட்டும் 2000 ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து இவ் வருட ஜனவரி மாதம் வரை பலஸ்தீனிய காசா பிரதேசம் மீது இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 500 மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டு இருந்தார்கள். இஸ்ரேலிய படையினர் ஐக்கிய நாடுகள் சபை கட்டிடம் மீது மேற்கொண்ட தாக்குதலில் சேதம் 10.4 மில்லியன் அமெரிக்க டொடலர் என ஐ.நாவினால் கணக்கெடுக்கப்பட்டது.
சோமாலியா , சிம்பாவே மற்றும் சிறிலங்கா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட இனப்பிரட்சனைகளில் பொது மக்கள் கொல்லப்பட்ட போது ஐக்கிய நாடுகள் சபை தனது கொடியினை உயர்த்தி நீட்டியது. ஆனால் பலம் பொருத்திய நாடுகள் ஈராக், ஆப்கானிஸ்தான், செச்சினியா , தீபெத் ஆகிய நாடுகளில் அப்பாவி மக்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட போது மெளனமாக இருந்தது. பலம் பொருத்திய நாடுகளும் தமது யுத்தத்தில் அப்பாவி மக்களை கொண்டுள்ளார்கள். மனித உரிமைகள் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை ஓர வஞ்சனையாக (Double standard) நடந்து கொள்ளுகின்றது என இதனை மேகோள் காட்டியே அரேபிய நாடுகள் கூட்டமைப்பும் அணிசேரா நாடுகளின் அமைப்பும் கூறியிருந்தது.
என்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்
Tuesday, 30 June 2009
Monday, 29 June 2009
விகடனின் கபடம் – பிரபாகரனின் இறப்பு
Sunday, 28 June 2009
இல்லாத புலிகளுக்கு என் இந்தப் பயமோ?
- அமெரிக்காவின் இராசாங்க அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தனது நட்டினரை இலங்கைக்குச் செல்ல வேண்டாமென்று எச்சரித்துள்ளது.
- அமெரிக்கா விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் ஐந்து வருடங்களுக்கு நீடித்துள்ளது.
- இலங்கை அரசு இன்னும் அவசர கால நிலைமையின் கீழ் நாட்டை வைத்திருக்கிறது.
- இலங்கைப் படைத்துறை மேலும் தமக்கு நாற்பதினாயிரம் படையினர் புதிதாகத் தேவை என்று சொல்கிறது.
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...