இலங்கையில் போர் மும்முரமாக நடந்து தமிழர்கள் தினமும் ஆயிரக் கணக்கில் கொல்லப் பட்டுக் கொண்டிருக்கையில் இப்படி ஒரு செய்தி தமிழ்நாட்டில் இருந்து வந்தது:
இலங்கையில் போர்நிறுத்தம் கோரி, தமிழக முதல்வர் கருணாநிதி நடத்திய திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தின் எதிரொலியாக இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு உற்சாகமாகப் பேசினார்.
நேற்றிரவெல்லாம் கண் விழித்து, இலங்கையில் போர் நிறுத்தம் என்ற நல்ல செய்தி ஏதாவது வருகிறதா என்று டில்லியிலே தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டே இருந்தேன். உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை பல முறை தொடர்பு கொண்டேன். பிரதமரும் என்னோடு தொடர்பு கொண்டார். நல்ல வார்த்தைகள் தான் கூறினர். ‘நல்லதே நடக்கும்’ என்று தான் உறுதியளித்தனர்.
ஆனால், இலங்கை அரசு போரை நிறுத்தவில்லை என்ற செய்தி தான் கிடைத்தது. அதிகாலை 5 மணியளவில் என் வீட்டாருக்கும் சொல்லாமல், ‘அறிவாலயம் செல்கிறேன்’ என்று கூறிவிட்டு, அண்ணாதுரை இருக்கும் இடம் எனக்கு அறிவாலயம் தானே என்று இந்த அறிவாலயத்திற்கு வந்து, உண்ணா நோன்பை துவங்கினேன்.
இதன் விளைவாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக, இலங்கை அரசின் பாதுகாப்பு கவுன்சில் கூடி, போருக்கான நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பது என்று முடிவு செய்திருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தி கிடைத்திருக்கிறது. இனி இலங்கை ராணுவம், இந்த போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகள் அளிக்கப் பயன்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது”சரத் பொன்சேக்கா Outlook India விற்கு வழங்கிய பேட்டியில் கலைஞர் கருணாநிதியின் குட்டு உடைபட்டிருக்கிறது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளால் அழுத்தங்கள் கொடுக்கப் பட்ட போதும் இந்தியா தமது நடவடிக்கைகளில் தேர்தல் வேளையில் கூட தலையிடவில்லை என்று சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.
Did India help with satellites or intelligence inputs? என்று சரத் பொன்ச்சேக்காவிடம் கேட்கக்ப் பட்டபோது அவர் வழங்கிய பதில்:
Not really, but even (if) they did...I can’t tell you (laughs). We didn’t expect that kind of support from India. India was always against the terrorism here. So, despite the pressure which Tamil Nadu politicians had put on the central government even when general elections were being held in India (May ’09), India didn’t interfere in our operations.
கருணாநிதியின் உண்ணாவிரதத்தின் பின் ஒருநாளில் மட்டும் இருபதினாயிரத்திற்கு மேலான தமிழர்கள் கொல்லப் பட்டனர். இந்தக் கபட நாடக்த்திற்கும் கருணாநிதி தனக்குத் தானே விருது கொடுத்துக் கொள்ளலாம்.
6 comments:
அப்ப நீங்க சொல்ல வர்றத வச்சு பார்த்த சரத்பொன் சேகா ஒரு நாணயஸ்தர்..உண்மையாளர்னு எடுத்துக்கலாமா!
Ada, Innuma Intha Janaga Unnai Nambuthu... [For Ponsaga and Karunanithi]
கலைஞர் சொல்வதெல்லாம் உண்மையல்ல. சரத் சொல்வதெல்லாம் பொய்யுமல்ல.
people like r the reason for todays situation in Eelam. maanam ketta manidarhal
கவிஞர் வேல்தர்மா.. நாய் நம்மை கடித்தால் நாம் திரும்ப நாயை கடிக்க முடியுமா.. கருணா என்ற பெயர் என்னவே இனி தமிழில் குறிக்க வேண்டிய எட்டப்பர்களை குறிக்க எடுகோளாக பயன்படபோகிறது..அது ஈழத்திலும் சரி இங்கும் சரி.. எனவே ஈழத்தவர் அந்த பெயர்களை குழந்தைகளுக்கு வைப்பதை தவிர்க்க அன்போடு கேட்டு கொள்கிறேன்..அத்தோடு சூடு சொரணையுள்ள.. சோற்றில் உப்பு போடு சாப்பிடுகிற.. நல்ல தகப்பனுக்கு பிறந்த.. ஈழத்தவன் எவனும் கோவையில் கருநாகம் நடத்தும் கனி மொழி மாநாட்டிற்கு வரக்கூடாது என்றும் கேட்டு கொள்கிறேன்
நாம் துணை என நினைத்தவர் எல்லாம் துரோகிகளாயினர்.
Post a Comment