
அமெரிக்க செனட் சபை தனது வெளியுறவுக் கொள்கைக்களுக்கன குழுவிற்கு ஒரு அறிக்கையை சமர்பித்துள்ளது. இலங்கை: போருக்குப் பின்னரான தந்திரோபயத்தை மீள்வடிவமைத்தல் என்று தலைப்பிடப் பட்ட இவ்வறிக்கை அமெரிக்க மூதவையால் தெரிவு செய்யப் பட்ட ஒரு குழுவினால் தயாரிக்கப் பட்டுள்ளது. இக்குழு இலங்கை சென்று அங்கு பலதரப்பினரையும் சந்தித்ததாம்.
நீண்டகால அமைதி ஏற்படுத்தும் தன் முயற்ச்சியில் இலங்கை ஒரு இக்கட்டான நிலையில் இருக்கிறது என்று அந்த அறிக்கை தொடங்குகிறது. அண்மைக்கால சரித்திரத்தில் பயங்கரவாதத்தை போரின் மூலம் தோற்கடித்த சிலநிகழ்வுகளில் இலங்கையின் பயங்கரவாதத்திற்கு எதிரான வெற்றி அமைந்திருக்கிறது என்கிறது அவ்வறிக்கை.
போர்முடிந்துவிட்டது ஆனால் அடிப்படை முரண்பாடு இப்போதும் கொதிநிலையில் இருக்கிறது என்பதை அறிக்கை சுட்டிக் காட்டத் தவறவில்லை. ஆயுத முரண்பாடு உருவானதற்கான காரணிகளைச் சரிசெய்வதற்குக் காலம் எடுக்கும் என்பத அவ்வறிக்கை சொல்கிறது. இனப் பிரச்சனைக்கான தீர்வு வெளியில் இருந்து திணிக்கப் படமுடியாது என்பதை அது வலியுறுத்துகிறது.
இலங்கைப் பொருளாதாரம் திடமற்ற நிலையில் இருக்கிறது என்று கூறும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்களுக்கன குழுவிற்கான அறிக்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்ககைகான வர்த்தகச் சலுகையைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளது.
போர் குற்றம் மனித உரிமைமீறல் ஆகியவற்றிக்கு மத்தியிலும் ராஜபக்ச அரசு மானிடப் பிரச்சனைகளைத் தணிக்க சில நடவைக்கைகளை எடுத்துள்ளது என்றும் இளவயதினரைப் படையில் இருப்பதைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அறிக்கை கூறுகிறது.
இலங்கைத் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மீள்கட்டமைப்பும் அபிவிருத்துயும் இலங்கை அரசால் முடியுமா என்று அறிக்கை கேள்வி எழுப்பியுள்ளது.
இலங்கையில் நடந்த இறுதிப்போர் அமெரிக்கா உட்பட பல நாடுகளின் கவனத்தை ஈர்த்தது என்கிற அறிக்கை ஒபமா நிர்வாகம் மனித உரிமைப் பிரச்சினையிலும் பத்திரிகைச் சுதந்திரத்திலும் கவனம் செலுத்தியது என்றும் குறிப்பிடுகிறது. ஆனால் கொழும்பு தனது வாசிங்கடனுடானான உறவு கீழ்நோக்கிசெல்கிறது என்று கருதுகிறது என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பன:
யூஎஸ்-இலங்கை உறவுநிலையில் முரண்பாடு தோன்ற கொழும்பு மேற்குலகல்லாத நாடுகளுடன் மீள்கூட்டணி சேர்ந்தது. அந்நாடுகள் சுதந்திரத்திலும் பார்க்க பாதுகாப்பில் அக்கறையுள்ள அபிவிருத்தியை இலங்கைக்கு வழங்கின. ராஜபக்சேயின் தலைமை பர்மா, சீனா, ஈரான், லிபியா ஆகிய நாடுகளுடன் உறவுகளை வளர்த்துக் கொண்டது. சீனா பல பில்லியன் டொலர் பெறுமதியான முதலீடுகளை இலங்கையில் செய்துள்ளது.
இத் தந்திரோபாய முரண்பாட்டால் இப்பிராந்தியத்தில் அமெரிக்க நலன்கள் பாதிப்படைகின்றன.
இலங்கையுடனான உறவை அமெரிக்கா இழக்க முடியாது. உலகசரக்குக் கப்பல் போக்குவரத்துக்களில் பாதி இலங்கையை அண்டிய கடற்பரப்பினூடாக நடப்பதால் இலங்கை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. இலங்கையூடாக அமெரிக்கப் போர்விமானங்கள் பறக்க முடியும். அமெரிக்க கடற்படைக் கலன்கள் இலங்கையில் தரிக்க முடியும்.
இப்படி இலங்கையின் பூகோளகேந்திரோபாய முக்கியத்துவத்தை வலியுறுத்திய அறிக்கை இலங்கைக்கு அமெரிக்கா பல உதவிகளைச் செய்யவேண்டும் என்று பலபரிந்துரைகள் செய்கிறது. இலங்ககை செய்ய வேண்டிய ஆறு விடயங்களை அறிக்கை சுட்டிக் காட்டுகிறது:
1. உள்ளக இடப் பெயர்வுக்குள்ளானோரை சர்வ தேச நியமங்களுக்கமைய நடாத்துதல்
2. பத்திரிகைச் சுதந்திரம்
3. அவசரகாலச் சட்டங்களை நீக்குதல்
4. புனர் நிர்மாணங்களையும் அபிவிருத்திகளையும் பொதுமக்களுடன் பங்கிடுதல்
5. இனங்களுக்கிடையான இணக்கப்பாடு
6. காணிகள் சம்பந்தமான முரண்பாடுகளைத் தீர்த்தல்
அமெரிக்கச் சதி
அறிக்கை அதிகாரப் பரவலாக்கல் அதிகாரப் பகிர்வு சுயநிர்ணய உரிமை போன்றவற்றை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. அவை சிங்களவர்களைப் பொறுத்தவரை கெட்ட வார்த்தைகள் என்பதை அமெரிக்கா உணர்ந்து கபடத்தனமாக அவற்றைத் தவிர்த்துள்ளது. இலங்கைக்கு இப்போது சீனாவும் இந்தியாவும் போட்டி போட்டுக் கொண்டு உதவி செய்கின்றன. இப்போட்டியில் இப்போது அமெரிக்காவும் இணையப் போகிறது. சிங்கள மக்களைத் தன் பக்கம் எப்படி இழுப்பது என்பதிலேயே அறிக்கை அதிக கவனம் செலுத்துகிறது. இதற்காக அறிக்கை தயாரிப்பில் நில்மினி குணரத்ன என்னும் சிங்களப் பெண்மணி ஈடுபடுத்தப் பட்டுள்ளார்.
இலங்கையில் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள மனிதாபிமானப் பிரச்சனையில் அமெரிக்கா அதிக கவனம் செலுத்தினால் நீண்டகால அடிப்படையில் அமெரிக்க இலங்கை உறவு பாதிப்படையும் என்பத அறிக்கை சுட்டிக் காட்டுகிறது
சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களில் அமெரிக்கா முதலீடு செய்ய வேண்டும் என்று அறிக்கை கூறுகிறது. போர்க்குற்றம் புரிந்தோரைத் தண்டிப்பது பற்றி எதுவும் குறிப்பிடப் படவில்லை.
அறுபதுகளில் கம்யூனிசப் புரட்சிகள் நடக்காமல் இருக்க அமெரிக்கா Peace Corps என்னும் தொண்டர் அமைப்புக்களை கம்யூனிசப் புரட்சி நடைபெறும் அறிகுறி உள்ள நாடுகளில் ஈடுபடுத்தி சமூக சேவை என்றபோர்வையில் கம்யூனிசத்திற்கு எதிராகச் செயற்படுத்தியது. அவற்றை இலங்கையில் ஈடுபடுத்தி ஆங்கிலமும் தகவல் தொழில் நுட்பமும் கற்பிக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்று அறிக்கை பரிந்துரை செய்கின்றது.
இந்த Peace Corps மீண்டும் ஆயுத போராட்டம் தமிழர்கள் மத்தியில் உருவாகாமல் இருக்க அமெரிக்கா செய்யும் சதியாகும். அமெரிக்கா இலங்கையுடன் தனது நட்பை மேலும் உறுதியாக்கி தமிழர்களை அடக்கியாள வழி செய்யப் போகிறது.
No comments:
Post a Comment