GSP என்பது The Generalised System of Preferences என்பதன் சுருக்கமாகும். GSPஎன்பது ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் வர்த்தக முன்னுரிமையாகும். இவ்வுரிமை வழங்கப் பட்ட நாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் இறக்குமதித் தீர்வின்றி பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும்.
ஜிஎஸ்பி+ என்ற சலுகைமூலம் ஒரு நாடு கிட்டத்தட்ட 7200 வகையான பொருட்களை இறக்குமதித் தீர்வையின்றி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதி செய்ய முடியும்.
ஐரோப்பிய ஒன்றியம் ஏன் இச்சலுகையை வழங்குகிறது?
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நாடுகளுக்கு தமது பொருளாதரத்தை அபிவிருத்தி செய்ய சந்தர்ப்பம் வழங்குவதற்கு என்று ஐரோப்பிய ஒன்றியம் சொல்கிறது. ஆனால் சீனாவிற்கு ஆப்பு வைக்கச் செய்யப்பட்ட ஏற்பாடுதான் இது என்றும் சொல்லப் படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வியாபார நிறுவனம் ஒன்று ஊழியர்களுக்காக செய்யும் செலவு சீனவின் ஊழியச் செலவுடன் ஒப்பிடுகையில் 20 மடங்கு அதிகமாகும். இதனால் பல பொருட்களை ஐரோப்பிய ஒன்றிய வியாபாரிகள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யத் தொடங்கினர். இதனால் சிறந்த தொழிலாளர் வளமுள்ள நாடுகளுக்கு GSP+ வரிச் சலுகையை வழங்கி அந்நாடுகளில் இருந்து மலிவாகப் பொருட்களை இறக்குமதி செய்ய ஐரோப்பிய ஒன்றியம் முயன்றது.
GSP+சலுகையைப் பெறுவதற்கு என்று சில நிபந்தனைகளை ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கும். அதில் முக்கியமானது 27 சர்வதேச உடன்படிக்கைகளில் சலுகை பெறமுயலும் நாடு கையொப்பமிட்டிருக்க வேண்டும். அந்த உடன்படிக்கையை மதித்து பின்பற்றி நடக்க வேண்டும். அவற்றில் முக்கியமானவை மனித உரிமைகள் சம்பந்தமானது.
இலங்கையும் GSP+ உம்.
2005ஆம் ஆண்டின் நடுப் பகுதியில் இலங்கைக்கு இந்த வரிச்சலுகை ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்பட்டது. இலங்கைக்கு மூன்று பில்லியன் டொலர் பெறுமதியான ஏற்றுமதி வருமானம் இதனால் ஆண்டு தோறும் கிடைக்கிறது. 100,000 பேர் வேலை வாய்ப்புப் பெற்றனர். Marks & Spencer உட்படப் பல வர்த்தக நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்தன.
தமிழாராய்ச்சிப் படுகொலை, செம்மணிப் படுகொலை, கொக்கட்டிச் சோலைப்படுகொலை இப்படி நீண்ட கொலைப் பட்டியல் கொண்ட நாட்டிற்கு இப்படி ஒரு சலுகை வழங்கியிருக்கக் கூடாது. இந்தச் சலுகை நிறுத்தப் பட்டால் ஒருஇலட்சம் பேர் வேலை வாய்ப்பு இழப்பர் பல பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தை இலங்கை இழக்கும்.
2008இல் GSP+ஏன் நிறுத்தப் படவில்லை?
சென்ற ஆண்டு இலங்கைக்கான GSP+ வரிச்சலுகை நிறுத்தப் படவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப் பட்டது. ஆனால் இலங்கைக்கு மனித உரிமை தொடர்பா சீர்திருத்தம் செய்ய அவகாசம் வழங்கி ஒத்திவைக்கப் பட்டது என்று சொல்லப் பட்டது. ஆனால் Marks & Spencerஇன் வற்புறுத்தலின் பேரில் தான் வரிச்சலுகை நிறுத்தப் படவில்லை என்றும் சொல்லப்பட்டது. Marks & Spencer தனது உற்பத்தியை வேறு இடம் எடுத்துச் செல்ல அல்லது தனது உற்பத்திச் செலவை சரிசெய்து கொள்ள அவகாசம் வழங்கப் பட்டதாகவும் சிலர் கருத்துத் தெரிவித்தனர்.
இப்போது ஏன் நிறுத்தப் படுமா?
பத்து நாட்களுக்கு முன் தி எக்கொனமிஸ்ற் சஞ்சிகை ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்ளக அறிக்கை ஒன்றை மேற்கோள் காட்டி வெளியிட்ட தகவலின் படி GSP+ சலுகை இலங்கைக்கு கிடைப்பது மிக அரிது என்றே தெரிகிறது. அது வெளியிட்ட தகவல்:
The confidential 130-page report, which has been obtained by The Economist, concludes that Sri Lanka has failed to honour important human-rights commitments, and is ineligible for GSP Plus. Widespread police torture, abductions of journalists, politicised courts and uninvestigated disappearances have all played a part in creating a state of “complete or virtually complete impunity in Sri Lanka”. The internment of the Tamil displaced, which the government claims is necessary to weed out the last Tamil Tiger rebels and to protect them from munitions left in their fields, is “a novel form of unacknowledged detention”.
ஆனால் பின்வருவனவற்றையும் நாம் கவனத்தில் கொள்ள் வேண்டும்:
- இவ்வறிக்கை திஸ்ஸநாயகத்திற்கு 20ஆண்டுச் சிறைத் தண்டன வழங்கமுன் தயாரிக்கப் பட்டது.
- இவ்வறிக்கை தாயாரித்த பின்னர்தான் சனல்-4 தொலைக்காட்சியின் இரண்டாவது வன்னி முகாம் தொடர்பான காணொளி வெளிவந்தது.
- இவ்வறிக்கையின் பின்னர் தான் யூனிசெவ்வின் அதிகாரி இலங்கையில் இருந்து வெளியேற்றப் பட்டார்.
ஐரோப்பிய ஒன்றியம் தனது முடிவை அக்டோபர் மாத நடுப்பகுதியில் எடுக்கவிருக்கிறது.
7 comments:
Thanx 4 the useful article.
Now I have some idea about GSP..I need to know more about it...
this is only 1 million . world bank is giving 75 million, as long as this money is coming, people cannot go home from camps.
When EU was preparing that internal report mentioned in the Economist magazine, Srilanka was not marked as a war crime country by the International Criminal Court..
This time SL will not get GSP+...
அடித்துச்சொல்கிறேன் நிச்சயம் இலங்கைக்கு கிடைக்கும் எந்த சலுகையயையும் எந்த நாடும் நிறுத்தப்போவதில்லை
அரசியல் வாதிகளும்,கார்பரேட்டுகளும் வெவ்வேறாக இருக்கின்றவரையில்தான் எல்லாம் சாத்தியம் அரசியல்வாதிகளே கார்ப்ரேட்டுகளாய் மாரிவிட்டபிறகு நமது கனவுகள் அவ்வளவு எளிதாய் நிறவேறிவிடும் என கனவுகண்டுகொண்டிருக்ககூடாது
உலகளாவிய ஒரு இயக்கம் அது தீவிரத்தன்மைகொண்டவையாகவும் அதன் இன்னொருவடிவம் மென்மை தன்மைகொண்டவையாக இருந்தால் மட்டுமே எல்லாம் சாத்த்யமாகும்
உங்களது படைப்பு நாம் தமிழர் இணையத்தில், வாழ்த்துகள்
http://naamtamilar.org/articleview.php?Id=248
Post a Comment