Thursday, 10 December 2009
சரத் பொன்சேக்காவை வெல்ல வைக்க அமெரிக்காவின் சதி.
இலங்கையில் போர் நடந்து கொண்டிருக்கும் போது அமெரிக்கா உன்னிப்பாகக் கவனித்து தேவையான பதிவுகளைச் செய்து கொண்டே இருந்தது. இது தொடர்பான பதிவைப் பார்க்க இங்கு சொடுக்கவும்: இனக்கொலை
அந்தப் பதிவுகளை சர்வதேச நியமங்களை மீறி போர் செய்த ஒரு அதிகாரக் கும்பலைத் நியாயப் படி தண்டிக்க அமெரிக்கா என்ன சர்ததேச நீதிபதியல்ல. உலகின் மிக மோசமான போர்க்குற்றம் புரிந்த புரிந்து கொண்டிருக்கும் நாடு அமெரிக்கா.
இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பான சாட்சியங்களைத் தயாரித்த அமெரிக்கா அதைப் பயன்படுத்தி முதலில் சரத் பொன்சேக்காவை மிரட்டி தேர்தலில் போட்டியிட வைத்தது அமெரிக்கா என்று இலங்கையில் உள்ளோர் நம்புகின்றனர். ஏற்கனவே தனக்கு தோல்வி நிச்சயம் என்று உணர்ந்த ரனில் விக்கிரமசிங்க சரத் பொன்சேக்காவின் பின்னால் அணிதிரண்டார். சிங்கள மக்கள் சரத் பொன்சேக்கா அமெரிக்காவால் உருவாக்கப் பட்ட குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் என்று அறிந்தால் அவர்கள் சரத்தை வெறுப்பார்கள் என்று அமெரிக்கா உணர்ந்து கொண்டுள்ளது. அதிலும் இடதுசாரி சிந்தனை உள்ளவர்கள் தீவிரமாக எதிர்ப்பார்கள்.
இலங்கையில் போர்க்குற்றங்கள் இழைக்கப் பட்டபோதும் மனித உரிமைகள் மீறப் பட்டபோதும் அமெரிக்கா சர்வதேச நிறுவனங்களைத் திருப்திப் படுத்தவும் தனனை மனித உரிமைக் காவலன் என்று காட்டவும் இலங்கைக்கு எதிராக சில அறிக்கைகளை வெளியிட்டது. ஆனால் தமிழர்களுக்கு எதிரான போரில் சிங்களவர்களுக்கு அமெரிக்காவும் திரை மறைவில் உதவி செய்தது. இது பல சிங்களவர்களுக்கு தெரியாது. ஆனால் இலங்கைக்கு எதிரான அமெரிக்க அறிக்கைகளைப் பார்த்த சிங்களவர்கள் அமெரிக்கா தமக்கு எதிரானது என்றே நம்பினர். அந்த நம்பிக்கை சரத்தின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்று உணர்ந்த அமெரிக்கா தான் இலங்கை தொடர்பாக கொள்கை மாற்றம் செய்யப் போவதாக அறிவித்தது. அதேவேளை அமெரிக்கா தனது தெற்கு-மத்திய ஆசிய உதவிச் செயலர் ரொபேர்ட் பிளேக்கை இலங்கைக்கு அனுப்பி தான் சிங்களவர்களின் நண்பன் என்றும் காட்ட முனைந்தது.
கொழும்பில் வதந்தி
அமெரிக்க உளவாளிகள் கொழும்பில் உள்ள தமிழ் மக்களிடையே சரத் வெற்றி பெற்றால் மஹிந்தவிற்கும் அவரது சகோதரர்களுக்கும் எதிராக போர்குற்றம் கொண்டுவந்து அவர்களைத் தண்டிப்பார் என்ற வதந்திகளைப் பரவவிட்டுள்ளதாக கொழும்பில் சிலர் பேசிக் கொள்கிறார்கள். இதற்காக சரத் பொன்சேக்காவிற்கு வாக்களிக்க வேண்டும் என சிலர் மக்களிடையே பேசி வருகிறார்கள். இவ்வதந்த்தி வட கிழக்கிற்கும் பரப்பப் படுகிறது. இதையே ஒரு செய்தியாக வெளியிட்டால் அது மஹிந்தவின் புகழை சிங்கள மக்கள் மத்தியில் உயர்த்தி அவர் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்பதால் இது வதந்தியாகப் பரவ விடப் பட்டுள்ளது என்று கூறப் படுகிறது.
தீர்ப்பதும் தீர்த்துக் கட்டுவதும்
அமெரிகாவின் தெற்கு-மத்திய ஆசிய உதவிச் செயலர் ரொபேர்ட் பிளேக் கொழும்பில் இனப் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று சும்மா சாக்குப் போக்கிற்கு சொல்லிவிட்டு பத்திரிகைச் சுதந்திரத்தைப் பற்றியே அதிகம் கவலைப் பட்டார். அதிலும் இனப்பிரச்சனைக்கான தீர்வு என்ற பதத்தை தவிர்த்து இனங்களுக்கு இடையிலான இணக்கப் பாடு என்ற பதத்தையே அதிகம் பாவித்தார். சிங்கள மக்கள் இனப் பிரச்சனைக்கான தீர்வு என்ற பதத்தையே சந்தேகக் கண்ணுடன் பார்க்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரை இனப் பிரச்சனை தீர்க்கப் பட்டுவிட்டது. அதாவது தீர்த்துக் கட்டப் பட்டுவிட்டது.
ஒபாமாவை ஆதரித்த தமிழர்கள்
அமெரிக்கத் தேர்தலில் பல தமிழர்கள் Tamils for Obama என்ற குழுவைத் தொடங்கி பராக் ஒபாமாவை ஆதரித்தனர். அவர்கள் இப்போது அடங்கிப் போய் இருக்கின்றனர். ஒரு முதலாளித்துவ நாட்டின் வெளியுறவுக்க் கொள்கை அதன் வர்தக நலனை ஒட்டியே அமைந்திருக்கும். சில ஆயிரம் பேர்களின் வாக்குகளுக்காக மாற்றப் படமாட்டாது என்பதை அவர்கள் ஏன் உணரவில்லை?
அடங்கிப் போன ஐரோப்பிய ஒன்றியம்
இலங்கை மனித உரிமை மீறல்கள் போர் குற்றங்கள் பற்றிய ஐரோப்பிய ஒன்றியத்தின் சலசலப்பு அடங்கிப் போய்விட்டது. இலங்கையை ஐரோப்பிய ஒன்றியம் இப்போது இலங்கையை அமெரிக்காவின் கைகளில் விட்டு விட்டது போல் காணப் படுகிறது. அமெரிக்கா ஜீஎஸ்பி வர்த்தகச் சலுகையை இலங்கைக்கு வழங்க ஐரோப்பிய ஒன்றியத்தை நிர்பந்திக்கலாம அல்லது ஏற்கனவே நிர்பந்தித்திருக்கலாம். பிரித்தானியா தனது பங்கிற்கு இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் அடுத்த மாநாடு நடக்காமல் தடுத்துவிட்டு அதற்கடுத்த மாநாடு இலங்கையில் நடக்க அனுமதித்தது. பிரித்தானியா இதுவரை இலன்கைக்குஏதிராக எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. தொழிற்கட்சி அரசு பிரித்தானியத் தமிழர்களை ஏமாற்றி விட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment