Monday, 7 December 2009
சிங்களவர்களின் ருசி சுவைத்த பூனைகளா இந்திய எம்பிக்கள்?
இப்பொது எந்த நாட்டினதும் உளவுத் துறை அமைப்பு தனது நடவைக்கைகளை நிறைவேற்றத் தேவையான நேரத்தில் எதிர்க்கட்சியையும் பயன் படுத்திக் கொள்ளும். எதிர்கட்சியில் உள்ளவர்களும் தேசிய நலனை மனதில் கொண்டு உளவுத் துறையினருடன் இணைந்து செயற்படுவர்.
இப்போது இந்திய உளவுத் துறையின் பெரிய சவால் இலங்கையில் உள்ள தமிழ் மக்களை மீண்டும் இந்தியாவின் பக்கம் இழுத்து எடுப்பது.
ராஜீவ் காந்திக்குப் பிறகு பல தமிழர்கள் இந்தியாவை வெறுக்கத் தொடங்கிவிட்டனர்.
சென்ற ஆண்டும் இந்த ஆண்டும் இந்தியா இலங்கைக்கு தமிழர்களைக் கொன்றொழிக்க உதவியதை பலரும் அறிவர். பல தமிழர்கள் இந்தியப் படைகள் நேரடியாக களத்தில் இருந்து சிங்களவர்களுடன் இணைந்து தமிழர்களைக் கொன்று குவித்தாக நம்புகிறனர்.
இலங்கையில் நிவாரண முகாம் களில் அடைக்கப்பட்டிருக்கும் 2.5 லட்சம் தமிழ் மக்களின் உயிர்க ளைக் குறித்து ஒட்டுமொத்த இந்தி யாவும் கவலைப்பட்டுக்கொண்டி ருக்கிறது. உண்மையில் அவை முகாம்கள் அல்ல. முள்வேலிச் சிறைச்சாலைகள். இவ்வாறு இந்திய நாடாளுமன் றத்தில் தமிழில் பேசுகையில் பாரதிய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த சுஷ்மா சுவராஜ் குறிப்பிட்டார்.
தவித்து நிற்கும் தமிழ் மக்களுக்கு இப்படி ஒரு பேச்சைக் கேட்கும் போது மிகவும் ஆறுதலாக இருக்கும். இலங்கையில் போர் நடக்கும் போது இந்த சுஷ்மா சுவராஜ் என்கிருந்தார் என்ற கேள்வியும் உடன் அவர்கள் மனதில் எழத்தான் செய்யும். இந்தியா தமிழர்களைக் கொல்வதற்கு உதவிசெய்வதுடன் நின்றதா? ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மன்றில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தபோது இந்தியா தனது எதிரி சீனாவுடன் இணைந்து கொலைகாரச் சிங்களவர்களைப் பாராட்டும் தீர்மானமாக அது மாற்றியத எந்தத் தமிழன் மறப்பான்? எவன் அதை மன்னிப்பான்? அப்போது வாய் மூடியிருந்த சுஷ்மிதா அம்மையார் இன்று "ஒட்டுமொத்த இந்தி யாவும் கவலைப்பட்டுக்கொண்டி ருக்கிறது" என்று ஏன் பொய் சொல்கிறார். சோனியா காந்திஅப்படிக் கவலைப் படுவதாகத் தொரியவில்லையே! அவர்தான் இந்தியர் அல்லவே என்று வைத்துக் கொள்வோம். சரி சிவசங்கர் மேனனும் நாராயணனும் கவலைப் படுகிறார்களா? எல்லா காங்கிரசு கட்சியினரும் கவலைப் படுகிறார்களா? அப்படிக் கவலைப் படுபவர்கள் ஏன் மஹிந்த ராஜபக்சேயிற்கு வந்து பொன்னாடை போர்த்தினார்கள்?
இப்போது இருக்கும் இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் முக்கிய நோக்கு பிராமணிய சாதி ஆதிக்கத்தை நிலைநாட்டுவதுதான். இலங்கையில் சாதிய ஆதிக்கத்தை ஒழித்துக் கட்டியவர்கள் விடுதலைப் புலிகள் என்பதை அவர்கள் நன்கு அறிவர். அதே பாணியைத் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் பின்பற்றி பார்பனச் சாதியின் ஆதிக்கத்தை ஒழித்துக் கட்டிவிடக்கூடாது என்றுதான் ஹிந்து ராம், துக்ளக் சோ, சுப்பிரமணிய சுவாமி போன்றோர் முன்னின்று விடுதலைப் புலிகளை எதிர்த்தனர். மத்திய அரசில் உள்ள பார்ப்பனர்களை தமிழர்களின் விடுதலை போருக்கு எதிராகத் தூண்டினர்.
இப்போது உலகெங்கும் வாழும் உணர்வுள்ள தமிழ் மக்கள் இந்தியாவை தமது முதல் எதிரியாகக் கருதுகின்றனர். இது இந்தியக் கொள்கை வகுப்பாளர்களைச் சற்றுச் சிந்திக்க வைத்துள்ளது. தமிழர்களை மீண்டும் இந்தியாவின் பக்கம் வென்றெடுப்பதிற்கு அவர்கள் பல முயற்ச்சிகளை மேற்கொள்கின்றனர். அதன் ஒரு பகுதியாகவே திருமாவளவனும் தமிழருவி மணியனும் இலண்டன் வந்து இந்தியாவை விட்டால் உங்களுக்கு உதவ ஒருவரும் இல்லை என்றனர். அது பயனளிக்கவில்லை. இப்போது இந்திய வெளியுறவுத் துறை எதிர்க்கட்சிகளின் உதவியை நாடுகிறது போல் இருக்கிறது. அதன் ஒரு அம்சம் தான் சுஷ்மிதா அம்மையாரின் பாராளமன்ற உரை என்று எண்ணத் தோன்றுகிறது. அவர் உரை கட்சி நலன்களுக்கு அப்பால் சென்று தேசிய நலனை கருத்தில் கொண்டுள்ளது. அவர் காங்கிரசுக் கட்சியை தாக்கிப் பேசவில்லை. இது அவர் இந்திய வெளியுறவுத் துறையினதோ அல்லது உளவுத் துறையினதோ வேண்டுகோளின் படி பேசியதாகத் தோன்றுகிறது. அத்துறைகளின் சாதிய கொள்கைகளும் சுஷ்மிதா அம்மையாரின் கட்சியின் திரை மறைவுச் சாதியக் கொள்கைகளும் நன்கு ஒத்துப் போகக் கூடியவை.
இலங்கைக்கு மீண்டும் ஒரு இந்திய பாராளமன்றக் குழு வருமாம். ஏற்கனவே வந்து ராஜபக்சேயிற்கு பொன்னாடை போர்த்த பன்னாடைகள் அவரிடம் இருந்து பரிசுகளும் பெற்றுச் சென்றன. ருசிகண்ட பூனைகள் மீண்டும வருகின்றனவா?
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
2 comments:
இந்தியா இப்போது குத்துக் கரணம் அடித்துள்ளது. பாராளமன்ற உறுப்பினர்கள் வரமாட்டார்களாம். அவர்களைப் "பராமரிக்க" மஹிந்தவிற்கு இப்போது நேரமில்லை.
ஐயோ பாவங்கள். மஹிந்த தேர்தலுடன் மல்லுக் கட்டுகிறார். இவர்களைக் கவனிக்க முடியாது...
Post a Comment