Tuesday, 8 December 2009

இனக்கொலை: குற்றமுள்ள இந்திய நெஞ்சம் குறு குறுக்கிறது.


1983-ம் ஆண்டு இலங்கையில் நடந்த கலவரத்தை அப்போதைய பாரதப் பிரதம மந்திரி ஒரு இனக்கொலை எனக் கூறினார். இந்தியச் சட்டவாளர்கள் அவையும் (Indian Bar Association) அதை ஒரு இனக் கொலை என்றே கூறியது.

இனக்கொலைக்கான வரைவிலக்கணம்.
ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ , மனித இனம் சார்ந்த , இன ஒதுக்கல், மதவேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால் கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது இவைகள் இனக்கொலைகளாகக் கருதப்படும்.

இலங்கையில் இந்த ஆண்டில் நடந்தவற்றிற்கான காட்சிப் பதிவுகளை பின்னுள்ள இணைப்பில் காணலாம். ஒரு எச்சரிக்கை இப்படங்கள் உங்கள் மனதையும் இதயத்தையும் பாதிக்கக்கூடியவை தைரியமுள்ளவர்கள் மட்டும் பார்க்கவும்.

http://www.tamilwin.com/view.php?2a36QVH4b3dj9Eq34d0SWnB3b02R7GGb4d3aYpD4e0dJZLukce0cg2h32ccebj0q2e

http://picasaweb.google.com/tamilnational/TamilGenocidePartIV?feat=embedwebsite#

இலங்கையில் 2008/09il நடந்தது இனக்கொலை இல்லை என்றால் உலக சரித்திரத்தில் நடந்தவை எதுவும் இனக்கொலை அல்ல.

1983இல் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொல்லப் பட்டனர். வீடுகளை இழந்தனர். இப்போது இலட்சக்கணக்கில் அவை நடந்துள்ளது.

இந்திய பொதுவுடமை(கம்யூனிச) கட்சியுன் உறுப்பினர் திரு ராஜா அவர்கள் மாநிலங்கள் அவையில் உரையாற்றும் போது இலங்கையில் நடந்தது இனக்கொலை எனக் கூறினார். அவர் பாவித்த இனக் கொலை என்னும் பதத்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்கும்படி உத்தரவிட்டார் அவைத் தலைவர். மாநிலங்கள் அவையில் பெரிய பூசணிக்காய் ஏன் சோற்றில் மறைக்கப் பட்டது?

இந்திரா காந்தி அன்று பொய் சொன்னார் என்று இன்றைய மாநிலங்கள் அவை கருதுகிறதா? அரசவையில் மாதவிலக்கில் இருக்கும் பெண்ணின் சேலையை உருவுபவர்களிடம் நாம் நியாயத்தை எதிர்பார்க்க முடியுமா? மருமகள் சீதனம் கொண்டு வரவில்லை என்றதற்காக உயிருடன் கொழுத்துபவர்களிடம் நாம் நியாயத்தை எதிர்பார்க்க முடியுமா? பிறக்கப் போகும் குழந்தை பெண் என்று அறிந்தால் கொல்பவர்களிடமிருந்து நாம் நியாயத்தை எதிர் பார்க்க முடியுமா?

இனக்கொலை என்பது பாரதூரமான குற்றம். இலங்கையில் நடந்த இனக்கொலைக்கு இந்தியா நேரடியாகப் பங்களித்தது என்றும் 20,000இற்கு மேற்பட்ட இந்தியப் படையினர் சிங்களவர்களுடன் இணைந்து இனக்கொலை புரிந்தார்கள் என்று தமிழர்கள் நம்புகிறார்கள்.

இலங்கையில் நடந்ததாக தமிழர்கள் நம்புவது இதுதான்: மாவிலாற்றில் இருந்து விடுதலைப் புலிகள் பின்வாங்கும் போது முன்னேறும் சிங்கள இராணுவத்திற்கு கணிசமான இழப்பு ஏற்படுத்திக் கொண்டே பின்வாங்கினர். அவர்களின் திட்டம் இப்படி சிங்கள இராணுவத்திற்கு இழப்பு ஏற்படுத்திக் கொண்டு தமது தரப்பு இழப்புக்களைத் தவிர்த்துக் கொண்டு போகும் பட்சத்தில் ஒருகட்டத்தில் சிங்கள இராணுவம் பலவீனமடையும் அக்கட்டத்தில் பலத்த தாக்குதல் நடாத்தி சிங்களப் படைகளைச் சிதறடிப்பது. இத்திட்டத்தை தமது உளவாளிகள் மூலம் அறிந்து கொண்ட இந்தியா இலங்கைப் படையினரின் இழப்புக்களுக்கு தனது படைகளை போர்க்களத்திற்குஅனுப்பி ஈடுகட்டியது என்றே தமிழர்கள் கருதுகிறார்கள். அதனால் தமிழரக்ளைப் பொறுத்தவரை இந்தியா ஒரு இனக்கொலையாளி.

இலங்கையில் நடந்தது இனக்கொலை என்றால் இந்தியாவும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப் படும் என்று இந்தியா பயப்படுகிறதா? அதனால்தான் மாநிலங்கள் அவைக் குறிப்பில் இனக்கொலை என்ற பதம் நீக்கப் பட்டதா?

5 comments:

Anonymous said...

இந்தியாவைத் தாக்கி எழுதுவது அல்வா சாப்பிடுகிற மாதிரியோ?

தமிழ் said...

வேசி கூட்டத்தை தாக்கி எழுதாமல் தாங்கியா எழுதுவது.இனிவரும் பதிவுகளில் இந்தியா என்ற வார்த்தையை நீக்கி வேசிதேசம் அல்லது பரத்தை தேசம் எனக்குறித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

உண்மை விளம்பி said...

பரத்தையின் வழிவந்தவர்கள் பரத்தையர், பரத்தையர்களின் தேசம் பரத்தைதேசம், அதுவே பின்னாளில் மருவி பரதம், பாரதம் என்றானது,.....

Anonymous said...

பாக்கு நீரிணையின் இருபுறத்திலும் வாழும் தமிழர்களின் முதலாம் எதிரி இந்தியா. மோசமான எதிரி இந்தியா...

Anonymous said...

இந்தியா தண்டிக்கப் படவேண்டிய குற்றவாளி...

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...