போர் நிறுத்தம் தொடர்பாக இலங்கை அரசிற்கு காலக்கெடு விதிக்கும்படி மாண்பு மிகு முதல்வர் கருணாநிதி அவர்கள் மத்திய அரசிற்கு தந்தி அனுப்பியுள்ளார்.
இந்திய அரசு இலங்கையை போர்நிறுத்தம் செய்யும்படி வேண்டுகோள் விடுத்தது அல்லது வேண்டுகோள் விடுப்பது போல பாசாங்கு செய்தது. போர்நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அறிவித்துவிட்டது இலங்கை. இந்தியா இது தொடர்பாக மேற்கொண்டு எதுவும் செய்யவில்லை. அட செய்யாமல் இருந்தாலாவது பரவாயில்லை. 50,000 எறிகணைகளைக் கொடுத்ததாம் இலங்கைக்கு.
அமெரிக்கா போர் நிறுத்தம் செய்யும்படி இலங்கையை கேட்டது. இலங்கை மறுத்தது. அமெரிக்கா போர்நிறுத்தம் செய்யாவிடில் சர்வ தேச நாணயத்தின் கடன் கிடைக்காது என்று மறைமுகமாக தெரிவித்து விட்டதாம். முதுகெலும்புள்ள நாடு!
இந்தியா கொல்கிறதா?
இந்தியாவின் போர்நிறுத்தக் கோரிக்கையை இலங்கை நிராகரித்தது. தொடர்ந்து இனக்கொலை நடை பெறுகிறது. இதற்காக இந்தியா தனது கண்டனத்தை இலங்கைக்கு தெரிவித்திருக்கலாம். குறைந்த்தது ஒரு வருத்தத்தையாவது தெரிவித்திருக்கலாம். இந்தியாவின் ஏற்பாட்டில்தான் எல்லாக் கொலைகளும் நடக்கிறதா?
இலங்கைக்கு வழங்கும் கால அவகாசமா? காலக் கெடுவா?
இலங்கை அரசு தனது போரில் வெற்றி பெற இன்னும் சிலநாட்கள் தான் தேவை என் நினைக்கிறது. அதற்கு ஒரு கால அவகாசம் தேவை.
இன்று கலைஞர் கலக்கெடு விதிக்கும் படி கேட்கிறார். சில நாட்க்ள் கழித்து இந்தியா ஒரு காலக் கெடுவை விதிக்கும். அதற்குள் இலங்கை போரை முடித்துவிட்டு போர் நிறுத்தம் என்று சொல்லும். கலைஞர் அப்போது சொல்லுவார் தன்னால்தான் இலங்கை போரை நிறுத்தியது என்று.
என்னமாதிரி ஏமாத்துறாங்கள்!
No comments:
Post a Comment