Tuesday, 21 April 2009

தமிழர் கொலை - மூடிய கதவுகளுக்கு நடுவில் நடந்த ஐநா கூட்டம் - நம்பியாரின் வில்லத் தனம்

பிரான்ஸ் நாட்டின் பிரதிநிதியின் வலியுறுத்தலின் பேரில் மூடிய கதவுகளுக்குள் இலங்கை நிலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக் கூட்டம் நடந்தது.

கடலோர இரத்தக் களரி
சூடனில் நடக்கும் கொலைகளை விட மோசமான கொலைகள் இலங்கையில் நடந்தபோதும் இலங்கைக் கடலோர இரத்தக் களரி பற்றிய விவாதம் ஐநாவின் நிகழ்ச்சி நிரலில் இடம் பெறவில்லை. இருந்த போதும் சிறப்பு ஏற்பாட்டின் பேரில் இலங்கை தொடர்பான கலந்துரையாடல் மூடிய கதவுகளுக்கு நடுவில் நடந்தது. விடுதலைப் புலிகள் இக் கூட்டத்தை தமக்கான சட்டபூர்வ அங்கீகாரமாகப் பாவிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என சீன அங்கு தெரிவித்ததாக நம்பப்படுகிறது. இக்கருத்து முழுக்க முழுக்க இலங்கையின் கருத்தாகும்.

நம்பியாரின் வில்லத் தனம் – கடலோரக் கொலைகள்
ஐநா தனது சிறப்புத் துாதுவராக விஜய் நம்பியார் என்னும் இந்தியரை இலங்கைக்கு அனுப்பியது. அவர் சீனாவாலும் விரும்பப்படுபவர். அவரின் சகல கோரிக்கைகளையும் இலங்கை நிராகரித்து விட்டது. அவர் தமது பயணம் தொடர்பான அறிக்கையை ஐநாவிற்கு இன்று வரை சமர்ப்பிக்கவில்லை. அவர் செவ்வாய் கிழமை ஐநா செல்வார். புதன் கிழமை தான் அறிக்கை சமர்ப்பிப்பார். அவர் இலங்கைக்கு கால அவகாசம் அளிப்பதற்காகவே இப்படிச் செய்வதாக அறிவிக்கப் படுகிறது. புதன்கிழமைக்குள் இலங்கை தனது கடலோரக் கொலைகளை அரங்கேற்றி விடலாம். நம்பியாரின் அறிக்கைக்கு இப்போது பிரித்தானியா வலியுறுத்தி வருகிறது.

சீன இந்தியக் கூட்டமைப்பு
தமிழர் இனக்கொலைக்கு இலங்கைக்கு சாதகமாக இந்தியாவும் சீனாவும் நடந்து கொள்வதால் மற்ற நாடுகள் ஏதும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...