Sunday, 19 April 2009
சோனியா கலக்குவாரா? கலங்குவாரா?
நேரு-காந்தி குடும்பத்தின் பரம்பரைத் தொழில் இந்தியாவை ஆள்வது. சஞ்சை காந்திக்கு மகனாக வருண் பிறந்தபோது இந்தியாவின் அடுத்ததிற்கு அடுத்து பிரதம மந்திரி பிறந்து விட்டார் என காங்கிரசார் மகிழ்ந்து கொண்டனர். இந்தியாவின் தலைவிதி அப்படி. அண்மையில் இலங்கைச் சிக்கலில் சாதிய வெறியர்களின் ஆலோசனைகளைக் கேட்டு பாரிய சிக்கலில் மாட்டிக் கொண்டது இக்குடும்பம்.
இலங்கையில் தோட்டங்களில் தொழிலாளிகளாக இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய தமிழர்களின் குடியுரிமை பறிக்கப் பட்டபோது ஜவகர்லால் நேரு அது உள் நாட்டுப் பிரச்சனை என்று கூறித் தட்டிக் கழித்துக் கொண்டார். இலங்கை அமெரிக்கா பக்கம் சாய்ந்த போது தமிழர்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் கொடுத்து சிங்களவர்களுடன் சண்டை பிடிக்கும் படி துாண்டினார். ராஜுவ் காந்தி தமிழர்களின் ஆயுதங்களைப் பறித்து தனது படைகளை அனுப்பி தமிழர்களை கொன்று கொள்ளையடித்து கற்பழித்து அட்டூழியங்கள் பல புரிந்தார். சோனியா காந்தி திரைமறைவாக சிங்களவர்களுக்கு சகல உதவிகளையும் செய்து தமிழர்களைக் கொன்றொழிக்கவும் தமிழ் தேசிய வாதத்தை இல்லா தொழிக்கவும் முயலுகிறார்.
சோனியா காந்தி இப்போது தேர்தலை எதிர் கொள்கிறார். இந்திரா காந்தியின் கொலையை ஒட்டி நடந்த இனக் கலவரத்தில் சீக்கியர்களின் கொலைக்கு காரணமாக இருந்தவர்களைத் தண்டிக்காத காரணத்தால் சீக்கியர்களின் ஆத்திரத்துள்ளாகி இருக்கிறார். உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி இவரது கட்சிக்கு பெரும் சவாலாக உருவெடுத்து விட்டது. இலங்கை இனக் கொலைக்கு இவருக்கு பங்கிருப்பதாக தமிழின உணர்வாளர்கள் அனைவரும் நம்புகிறார்கள். இவர்களின் உணர்வலைகள் இனி வரும் நாட்களில் மேலும் பொங்கி எழும்.
தேர்தலுக்கு முன் தமிழ் தேசிய வாதத்தை ஒழித்து இலங்கை அரசை ஒரு அரைவேக்காட்டுத் தீர்வை முன்வைத்து தனது காங்கிரஸ் கட்சிதான் இலங்கையில் தமிழர்களை தொன்று தொட்டே பாதுகாத்து வருகிறது என்பதையும், தாம் இல்லாவிட்டால் தமிழர்கள் அனைவரும் என்றோ கொன்றொழிக்கப் பட்டிருப்பர் என்ற பொய்ப்பிரச்சாரத்தையும் முன்வைத்து தமிழர் வாக்குகளைப் பெறலாம் என்ற சோனியாவின் கனவு பலிக்கவில்லை. இவரை இம்முறை தேர்தல் கலங்கடிக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
1 comment:
palestine looses people .even india looses people in all parts of india due to naxals.whose going to save them tamilians are not the only people in the world facing bad times.atleast world wide people are protest for tamils.so think fo world people not only tamils.
Post a Comment