Saturday, 25 April 2009

மேனன்-நாராயணன் கேட்கவில்லையா? கொடுக்கவில்லையா?




சிவ் சங்கர் மேனனும் நாராயணனும் இலங்கைக்கு திடீர்பயணம் மேற் கொண்டபோது தமிழ்நாட்டிலுள்ள உத்தரப் பிரதேச பேரினவாதிகளின் கொத்தடிமைகள் சற்று நிமிர்ந்து உட்கார்ந்தனர்.
போகிறார்கள் போர்நிறுத்தம் வரப் போகிறது என்று நம்பியிருந்தனர். தாம் தேர்தல் பிரச்சார மேடைகளில் முழங்கலாம் என மகிழ்ந்திருந்தனர். இவ்விரு தமிழின விரோதிகளும் காங்கிரசுக் கட்சிக்கு அப்பால் இந்திய நலன்களுக்கு அப்பால் தமது சாதிய மேம்பாட்டை நிலை தளராமல் பார்த்துக் கொள்ளும் ஒரு கட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
கேட்டு சம்மதிக்கவில்லையா? அல்லது கேட்கவில்லையா?
எவர் வற்புறுத்தினாலும் போர்நிறுத்தம் செய்யப் போவதில்லை என்று இலங்கை இனக் கொலையாளிகள் மீண்டும் கத்துகின்றனர். இவர்கள் இருவரும் போருக்குத் தேவையான வழங்களையும் தற்போதைய நிலையையும் மீளாய்வு செய்ய சென்றார்களா? அல்லது இவர்கள் போர் நிறுத்தம் கேட்டு இலங்கை இனக் கொலையாளிகள் மறுத்து விட்டார்களா?
இவ்விரு தமிழின விரோதிகளும் இலங்கை சென்று திரும்பிய பின் இனக்கொலையின் உக்கிரம் மேலும் அதிகரிக்கும். இதுவே கடந்த கால அனுபவம்.
பிந்திக் கிடைத்த செய்திகளின்படி போர்நிறுத்தம் செய்யும்படி இந்தியப் பிரதிநிதிகள் கோரவில்லை. தமிழ்நாட்டில் உள்ள உத்திரப் பிரதேச பேரின வாதிகளின் கொத்தடிமைகள் என்ன சொல்லப் போகிறார்கள். - ராஜுவ் கொலை - சகோதர யுத்தம்...என்பதைத்தவிர.

















3 comments:

sen said...

இவர்கள் அங்கே போர் நிறுத்தத்துக்காகப் போகவில்லை இராணுவ ஆலோசனைகள் கூறுவதற்காகவும் அடுத்த நடவடிக்கை எடுத்து எப்படி தமிழர்களை சிதைக்கலாம் என்பது பற்றி சதி செய்யப் போய் இருக்கிறார்கள்.
அதனால் பெரிய அவலம் ஒன்று இவ்வளவு நாட்கள் நடந்ததை விட மோசமாக அரங்கேறப் போகிறது என்றும் பலரும் நினைக்கிறார்கள்

Anonymous said...

இதே கூட்டம் தான் ராஜுவிற்கு தெரியாமல் பிரபாகரனைக் கொல்லச் சதிசெய்தது. இந்திய அரசுக்குத் தெரியாமலே தங்கள் சாதிக்கான ஒரு நிகழச்சி நிரலை அமைத்து அதற்கேற்ப செயல்படுகிறார்கள் இவர்கள்.

Anonymous said...

தமிழகத்தில் தேர்தல் முடியும் வரை முன்னகர்வை இடைநிறுத்தி வைக்கக் கோரியிருப்பார்கள்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...