
தற்போது ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையில் நிரந்தரத் தூதுவர் பாலித கொஹென்னவுடன் இந்திய அரசதந்திரிவிஜய் நம்பியாரும் போர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றில் இலங்கை ஒரு உறுப்பினர் நாடு அல்ல. இதனால் இலங்கைக் குடிமக்கள் மீது பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றில் குற்றம் சாட்டுவது கடினம். விஜய் நம்பியார் இந்தியக் குடிமகன் என்பதாலும் பாலித கொஹென்ன இலங்கை அவுஸ்திரேலிய இரட்டைக் குடியுரிமை உள்ளவர் என்பதாலும் அவர்கள் இருவர் மீதும் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக நம்பப் படுகிறது. விஜய் நம்பியாரில் குற்றம் சுமத்திய அடிப்படை:
- வெள்ளைக் கொடியுடன் இலங்கை அரசிடம் சரணடைபவர்கள் பாதுகாப்பு உண்டு அவர்கள் போர்க்கைதிகள் போல் நடத்தப்படுவார்கள் என்று மஹிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, பாலித கொஹென்ன ஆகியோர் தன்னிடம் உறுதியளித்தனர் என்று விஜய் நம்பியார் தெரிவித்திருந்தார்.
அமெரிக்காவைச் சேர்ந்த இனக்கொலைக்கு எதிரான தமிழர் அமைப்பு இந்த வழக்குத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
1987இல் பிரபாகரனை பேச்சு வார்த்தைக்கு வரும்படி அழைத்து அவரைக் கொன்று விடும்படி ராஜிவ் காந்தி உதரவிட்டிருந்தாராம். இதை இலங்கையில் அப்போது நிலை கொண்டிருந்த இந்திய அமைதிப்(?) படையின் உயர் அதிகாரி அது போர் குற்றத்தில் முடியும் என்று சொல்லி மறுத்திருந்தாராம்.
யார் இந்த விஜய் நம்பியார்
மும்பாய் பல்கலைக்கழகத்தில் அரசறிவியற் துறையில் பட்டப்படிப்பு படித்த விஜய் நம்பியார் இந்தியாவின் முன்னாள் பிரதிப் பாதுகாப்புத்துறை ஆலோசகர் ஆவார். அல்ஜீரியா, மலேசியா, சீனா, பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளில் விஜய் நம்பியார் இந்தியாவின் தூதுவராகவும் பணியாற்றியவர். 2002இல் இருந்து 2004ம் ஆண்டுவரை ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாகவும் பணியாற்றியவர். விஜய் நம்பியார் முன்னாள் ஐந பொதுச் செயலர் கோபி அனன் அவர்களின் ஆலோசகராகவும் கடமையாற்றியவர். இவருக்கு சதீஷ் நம்பியார் என்ற ஒரு சகோதரர் இருக்கிறார் அவர் இலங்கை அரசுக்கு படைத்துறை ஆலோசகராகப் பணியாற்றுபவர். ரனில்-பிரபா சமாதான ஒப்பந்தத்தின் படி உயர் பாதுகாப்பு வலயங்களில் இருந்து படைகளை ரணில் விக்கிரமசிங்க விலக்கத் தயாராக இருந்த வேளை இந்தியா சதீஷ் நம்பியாரை அனுப்பி உயர் பாதுகாப்பு வலயங்களில் இருந்து படைகள் விலகுவதைத் தடுத்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன் உள்ளிட்டோர் சரணடைவது தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரின் தலைமைச் செயலரான விஜய் நம்பியார் இலங்கையில் இருந்தபோது இலங்கை அரசுடன் பேச்சு நடத்தியிருக்கிறார். இத்தகவலை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூனின் பேச்சாளர் மிச்சேல் மொன்டாஸ் தெரிவித்துள்ளார்.
வெள்ளைக் கொடியுடன் சரணடைவது தொடர்பான பேச்சு வார்த்தையில் விஜய் நம்பியார்.
நோர்வேயின் எரிக் சொல்ஹெய்ம் அவர்களிடமும் இது தொடர்பாக புலித்தேவன் தெரிவித்தார். விஜய் நம்பியார் இலங்கைக்குச் செல்வதற்கு முன்பாக, சரணடைதல் தொடர்பான வேண்டுகோளுடன் பிரித்தானிய ஊடகவியலாளரான மேரி கொல்வின் அவரை முதலில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் பிரதிநிதி ஒருவரும் விஜய் நம்பியாரைத் தொடர்பு கொண்டிருக்கிறார். சரணடைவதாக இருந்தால் இலங்கை படையினரிடம்தான் சரணடைய வேண்டுமே தவிர மூன்றாவது தரப்பினரிடம் அல்ல என்பதை இலங்கை அரசு வலியுறுத்தி வருகிறது என்ற செய்தியை விஜய் நம்பியார் அவர்களிடம் தெரிவித்திருக்கிறார். சரணடைவதற்கு விரும்பிய நடேசனிடமும், புலித்தேவனிடமும் வெள்ளைக்கொடியை ஏந்தி இலங்கை படையினரிடம் காட்டினால் போதும், பாதுகாப்பாக சரணடையலாம் என்று விஜய் நம்பியார் கூறியிருக்கிறார். நடேசன், புலித்தேவன் ஆகியோரின் கடைசி வேண்டுகோள் ஊடகவியலாளர் மேரி கொல்வின் மூலமாக விஜய் நம்பியாருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது உரிய முறையில் இலங்கை அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப் பட்டது. ஆனால் விடுதலைப் புலிகளின் அரசியற்துறையினர் வெள்ளைக் கொடியுடன் சரணடையச் சென்றபோது சுட்டுக் கொல்லப் பட்டனர். இதன் பின்னால் ஒரு சதி இருந்திருக்க வேண்டும். இலங்கை அரசு விடுதலைப் புலிகளை வேரோடு அழித்தொழிக்கும் எண்ணத்தையே கொண்டிருக்கிறது. அதன் இராணுவ ஆலோசகர் சதீஷ் நம்பியார் அவரின் சகோதரர் விஜய் நம்பியாரை ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இலங்கைக்குத் தூதுவராக அனுப்பியது ஒரு சதியன்றி வேறு எது? இலங்கையில் போர் நடந்து கொண்டிருக்கும் போது அங்கு செல்லும்படி அவரிடம் வலியுறுத்திய போது அவர் அதைத் தட்டிக் கழித்து விட்டு போர் முடிந்த பின் இலங்கை சென்றார். சம்பந்தமில்லாமல் கண்டி சென்றார். மிக உயரத்தில் இருந்து வன்னி முகாம்களை பார்வையிட்டுவிட்டு அறிக்கை விட்டார். இதனால்தால் Foreign Policy இணையத்தளம் மிக ஆபத்தான கொரியர் என்று விமர்சித்தது. The Economist சஞ்சிகை இலங்கை விவகாரத்தில் அவரது செயற்பாட்டை வைத்து அவருக்கு பத்துக்கு மூன்று புள்ளிகள் வழங்கியது.
இலங்கையில் மக்கள் ஆயிரக் கணக்கில் கொல்லப்பட்ட போது காலத்தை இழுத்தடித்த விஜய் நம்பியார்
போர் நடந்து கொண்டிருந்த வேளை பிரித்தானியாவின் வற்புறுதலின் பேரில் ஐநாவின் விஜய் நம்பியார் என்னும் சீனாவின் நண்பர் இலங்கைக்கு அனுப்பப்பட்டார். அவர் அங்கு சென்று உடனடியாக அறிக்கை சமர்பிக்கும்படி பணிக்கப் பட்டார். அவர் அங்கு சென்று உடன் ஐநா திரும்பாமல் இந்தியா சென்றார். அவர் அங்கு தமிழின விரோதிகளான சிவ் சங்கர மேனனுடனும் நாராயணுடனும் பேச்சு வார்த்தை செய்யவா சென்றார் என்ற கேள்வியும் அப்போது எழுந்தது. காலம் தாழ்த்தி ஐநா திரும்பிய வில்லங்கமான வில்லன் நம்பியார் முதலில் தனது அறிக்கையை சமர்பிக்காமல் காலம் தாழ்த்தினார். இதற்க்காக அவர் மீது ஒழுக்காற்று நடவைக்கை எடுக்கப்படும் என்று பிரித்தானியா மிரட்டிய பின் நிலத்திற்குக்கீழ் உள்ள மூடிய அறையில் அவரது அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டது.
வில்லங்கமான வில்லன் இந்த விஜய் நம்பியார்
மியான்மர் ஜனநாயக இயக்கத்திற்கு எதிரானவர்களுக்கு ஆதரவாக விஜய் நம்பியார் செயல்படுவதாகவும் இங்கிலாந்து குற்றம் 2010 டிசம்பரில் குற்றம் சாட்டி இருந்தது. இதுகுறித்து ஐ.நா.வுக்கான இங்கிலாந்து தூதர் மார்க் லியால் கிரான்ட் கூறுகையில், மியான்மர் தூதராக விஜய் நம்பியார் தொடர்ந்து செயல்படக் கூடாது. மியான்மருக்கென தனி, நிரந்தர தூதரை ஐ.நா. நியமிக்க வேண்டும் என பான் கி மூனை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். ஆனால் இதுவரை இதை பான் கீ மூன் இழுத்தடித்து வருகிறார். மியன்மார் தொடர்ப்பாக விலங்கம் பிடித்த வில்லன் விஜய் நம்பியார் ஐநாவிற்கு சமர்ப்பித்த அறிக்கையில் சீனாவின் வேண்டுகோளிற்கு இணங்க போர் குற்றம் தொடர்பான வாசகங்களை தவிர்த்துக்கொண்டார். இந்த அசிங்கமான இந்தியர் ஐக்கிய நாடுகள் சபையில் உயர் பதவியில் இருப்பது ஐநாவிற்கு ஒரு பெரும் இழுக்காடு.
1 comment:
இந்த அசிங்கமான இந்தியர் ஐக்கிய நாடுகள் சபையில் உயர் பதவியில் இருப்பது ஒரு இழுக்காடு.
முற்றிலும் உண்மை...
Post a Comment