
சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதுவரகத்தை மூடச் சொல்லி நெடுமாறன் ஐயா போராட்டம் நடத்துகிறார். அவருக்குத் தெரியும் அது நடக்காத அலுவல் என்று.
பிரபாகரனின் தாயாரின் சம்பலை அசிங்கப்படுத்தியதை உலக நாட்டுத் தலைவர்கள் கண்டிக்க வேண்டும் என்கிறார் வைக்கோ ஐயா. அவருக்கும் தெரியும் இது ஆவாத காரியம் என்று.
ராஜபக்சவிற்கு பொன்னாடை போர்த்திய பன்னாடைக் கூட்டத்தோடு போன திருமாவளவன் மூன்றாம் முறை இலங்கை சென்றபோது அவர் திருப்பி அனுப்பப்பட்டார். டில்லியின் அவர் பாராளமன்ற உறுப்பினர் என்றாலும் அவர் ஒரு தமிழன்தானே. டில்லியில் சிங்களவன் செல்வாக்கு செல்லாக்காசுத் தமிழனின் செல்வாக்கிலும் பார்க்க பல மடங்கு அதிகம் என்று தோழர் திருமாவிற்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் அவர் சோனியா ஆட்சியின் பங்காளனாக இருந்து கொண்டு தானும் ஏதோ போராட்டம் நடத்துவதாகக் கூறுகிறார்.
சோனியா கூட்டணி கிடைக்கும் என்ற நப்பாசையில் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு இருக்கிறார் செல்வி.
இதற்கு மேல் போய் மன்மோகன் சிங் ஐயா பகிடி விடுகிறார் இப்படி:
- இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் இராஜதந்திர ரீதியில் அழுத்தமான கோரிக்கை விடுத்துள்ளோம். அதற்கு இலங்கை அரசாங்கம் சாதகமான பதில் அளித்துள்ளது. இலங்கையில் வாழும் தமிழ் மக்களை கௌரவமான முறையில் நடாத்துவதாக இலங்கை அரசாங்கத்தின் சார்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்திலும் மத்தியிலும் ஆட்சியில் உள்ள கருணாநிதி மகளைவிட்டு ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடாத்துகிறார் இலங்கை அரசிற்கு எதிராக.
கருணாநிதியன் அடிமடியில் சோனியா கைவைத்து விட்டார். இப்போது அவருக்கு கவிதை எழுதவோ கடிதம் எழுதவோ நேரமில்லை. நேரமிருந்தாலும் மானாட மயிலாடவை எப்படிச் சிறப்பிப்பது என்றுதான் யோசிப்பார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஏதாவது போலி நாடகம் அவர் ஆடுவார். ஏமாறத்தான் இருக்கிறாங்களே கோடிக்கணக்கில் இளிச்ச வாயங்கள்.
தான் இலங்கைப்பிரச்சனையில் நேரடியாக ஈடுபடப்போகிறேன் என்கிறார் ராகுல் காந்தி. அடப்பாவி மகனே! நீ மறைமுகமாக ஈடுபட்டபோதே மூன்று இலட்சத்திற்கு மேலான தமிழ் மக்களைக் கொன்று குவித்தாங்கள். நேரடியாக ஈடுபட்டால்????
நாம் செத்துக் கொண்டிருக்கிறோம். எல்லாரும் எம்மை வைத்து பொழைப்பு நடத்துறாங்க.
3 comments:
எமது அவலவாழ்வை தமது சுயநல அரசியல் அசிங்கங்களுக்காக இந்த விபச்சாரிகள் உபயோகிக்கின்றார்கள். இதில் சிறிதாவது நம்பக்கூடியவர் நெடுமாறன் அவர்கள் மட்டுமே. எந்த அரசியல் அசிங்கங்களையும் மிதிக்காமல் தனித்து நின்று எமக்காய் குரல்கொடுக்கின்றார். மற்ற அரசியல் வியாதிகள் அசிங்கங்களில் புரண்டெழுந்து எமக்காய் நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர். தமிழக தமிழாகள் ஈழத்தமிழர்கள் ஏமாந்த சோனகிரிகள் என்பது இந்த அரசியல் அவலங்களின் எண்ணம்.
எமது அவலவாழ்வை தமது சுயநல அரசியல் அசிங்கங்களுக்காக இந்த விபச்சாரிகள் உபயோகிக்கின்றார்கள். இதில் சிறிதாவது நம்பக்கூடியவர் நெடுமாறன் அவர்கள் மட்டுமே. எந்த அரசியல் அசிங்கங்களையும் மிதிக்காமல் தனித்து நின்று எமக்காய் குரல்கொடுக்கின்றார். மற்ற அரசியல் வியாதிகள் அசிங்கங்களில் புரண்டெழுந்து எமக்காய் நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர். தமிழக தமிழாகள் ஈழத்தமிழர்கள் ஏமாந்த சோனகிரிகள் என்பது இந்த அரசியல் அவலங்களின் எண்ணம்.
இப்போது தான் நேரம் கிடைத்தது,வேல் தர்மா!உங்கள் ஆக்கங்களுக்கு ரசிகன் நான்.சில வேளைகளில் அவசரப்பட்டோ என்னமோ தெரியவில்லை!ஏராளம் எழுத்துப் பிழைகள்!"குற்றம் கண்டு பிடித்தே" பேர் வாங்கும் புலவரென்று எண்ண வேண்டாம்!இன்று ஆரம்பமே சரியில்லை!ஓரெழுத்தால் பொருளே தமிழ் மொழியில் மாறி விடும் என்பது உங்களுக்குத் தெரியாததல்ல!தமிழ் மொழியும் உங்களுக்குப் புதிதல்ல!மீளவும் பிழை திருத்திப் பார்க்கவும்!நன்றி!!!!
Post a Comment