
கருணாநிதி இயற்க்கை மரணம் எய்தியபின் அவரை ஒருவர் வந்து அழைத்துச் சென்று முதல் நாள் சொர்க்கத்தைக் காட்டினார். அங்கு மகாத்மா காந்தி, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, எம்ஜிஆர் போன்றேர் ஒரு புற்தரையில் மல்லாக்கப் படுத்து அமைதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர்.
பின்னர் மறுநாள் கருணாநிதியை நரகத்திற்கு அழைத்துச் சென்றார்கள் அங்கு ஒர் அழகிய அரங்கில் மானாட மயிலாட நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. கலா அக்கா ஒரு நாட்டுக் கட்டை போல் அமர்ந்திருந்தார்; விநோத உடைப்போட்டியில் கலந்து கொள்பவர் போல் சுதா சந்திரன் ஒரு விசித்திரமான ஆடையுடன் இருந்தார்; ஆச்சரியப்படத் தக்க வகையில் செம கட்டை மும்தாஜ் ஆடை அணிந்திருந்தார். சிறப்பாக அமைக்கப்பட்ட மேடையில் பலர் நடனமாடிக் கொண்டிருந்தனர். சிலர் அதைப்பார்து அது நடனமா நாடகமா என்று விழிபிதுங்கிக் கொண்டிருந்தனர். என்ன ஆச்சரியிம்! அவர்களை முன் வரிசையில் அமர்ந்து ராஜிவ் காந்தியும் முன்னாள் சிங்களத் தலைவர்களன ஜே ஆர் ஜயவர்த்தன ஆர் பிரேமதாசா போன்ற தமிழின விரோதிகளும் உமா மகேஸ்வரன் அமிர்தலிங்கம் போன்றோர்களும் அமர்ந்து மது அருந்தியபடி இரசித்துக் கொண்டிருந்தனர்.
கருணாநிதியை அழைத்துச் சென்ற தூதுவர் கருணாநிதியிடம் கூறினார்: இப்போது சொர்க்கத்தையும் நரகத்தையும் பார்த்து விட்டீர்கள். இப்போது உங்கள் வாக்கை அளியுங்கள் சொர்க்கமா நரகமா சிறந்தது என்று. நீங்கள் வாக்களிக்கும் இடத்தில் நீங்கள் இனி உங்கள் வாழ் நாளைக் கழிக்க வேண்டி இருக்கும். நரகம் சொர்க்கத் தங்கம் சோனியா அன்னை போல் எவ்வளவு சுகமாக இருக்கிறது. அதற்கே எனது வாக்கு என்றார் கருணாநிதி. அடுத்தநாள் கருணாநிதிக்கு நரகத்தில் நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்பட்டு அங்கு அவரை அழைத்துச் சென்றனர்.
நரகத்தில் கருணாநிதிக்கு பெரும் ஆச்சரியம்! அங்கு கூவம் நதி போன்ற ஒரு மிக அழுக்கான நதியை ராஜிவ் காந்தியும் முன்னாள் சிங்களத் தலைவர்களன ஜே ஆர் ஜயவர்த்தன ஆர் பிரேமதாசா போன்றோர் சுத்தப் படுத்திக் கொண்டிருந்தனர். அவர்களை ஒருவர் இருந்து நீண்ட சவுக்கால் அடித்து வேலை வாங்கிக் கொண்டிருந்தார். போனவுடன் கருணாநிதிக்கும் ஒரு அடி விழுந்தது. கருணாநிதி ஐய்யோ முதல் நான் இங்கு வந்த போது வேறு விதமாக இருந்ததே! இப்போது ஏன் இப்படி என்று அலறினார். அதற்கு அப்போது நடந்தது நீ வாக்களிப்பதற்கான தேர்தல் பிரச்சாரம். பிரச்சார "செட் அப்" இற்கான "சீன்" அது. அவற்றைப்பார்த்து நீ வாக்களித்து விட்டாய். வாக்களித்த பலனை நீ இனி அனுபவிக்க வேண்டியதுதான் என்று கூறி மீண்டும் ஒரு அடி விழுந்தது.
10 comments:
:))))))
நல்ல கற்பனை. அவர்கள் வயிற்றில் புளியை கரைக்கும்.
super story
அது பராவயில்ல ..அங்க 2ஜி இல்லையா..
இப்படி எத்தனை கதைகள் எழுதினாலும் நம்ம ஆட்கள் திருந்த மாட்டார்கள்.
!வேல் தர்மா இந்தப் பதிவை நீக்கியே ஆக வேண்டும்!நீக்கி விட்டு "முரசொலியில்"இந்த ஆக்கம் வெளியாக வேண்டும்!ஜன?!நாயக ஆட்சியல்லவா இந்தியா பூராவும் நடக்கிறது?!அதனால் முரசொலியில் வெளியாவதில் தடையேதும் இருக்காது!
மூன்று மணித்தியால உண்ணாவிரதத்தில் இலங்கையில் போரை நிறுத்திய பாசத் தலைவன்;
சோனியாவை சொர்க்கத் தங்கம் என வர்ணித்த நேசத் தலைவன்;
ராஜபக்சவை நல்லவர் எனக் கூறிய தானைத் தலைவன்;
எங்கள் தன்மானச் சிங்கம் நரகத்திலா????
கொடுமை! கொடுமை!! கொடுமையிலும் கொடுமை!!!
aiyo paavam..
ஆண்டவேனே உன்னிடம் கேட்பது இது மாத்திரமே ! இந்தக் கருணாமூர்த்தி எழுதிய கருணாநிதியின் கதை உண்மையில் நடந்துவிட வேண்டும்.........
இதைத் தவிர வேறு எதுவும் தமிழினக் கொலைஞருக்கு நடக்காது..
Post a Comment