Friday, 25 February 2011
லிபியா இப்போது: லிபியாவுக்குள் ஒரு புதிய அரசு
லிபிய அதிபர் தளபதி மும்மர் கடாபி தான் பதவி விலகப்போவதில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றார். பிரித்தானிய் அரசி எலிசபெத்-2 பதவியில் இருக்கும் வரை தானும் பதவிய்யில் இருப்பேன்; தன்னிலும் அதிக காலம் எலிசபெத்-2 பதிவியில் இருக்கிறார் என்கிறார். பிரான்ஸ் போன்ற மற்ற நாடுகளில் அரச குடும்பத்திற்கு எதிராக நடந்த இரத்தப் புரட்சி தமக்கு எதிராக நடக்காமல் இருக்க பிரித்தானிய அரச குடும்பம் தனது அதிகாரங்களை பிரபுக்கள் சபைக்கும் மக்கள் சபைக்கும் வழங்கிவிட்டது. இதற்கு நன்றியாக அரச குடும்பத்தை இப்போதும் ஒரு அலங்காரப் பொருளாக வைத்துக் கொண்டு அவர்களுக்கு பம் கொடுத்துக் கொண்டு வருகிறது பிரித்தானைய அரசு. அரச குடும்பம் நாட்டை ஆளவில்லை. நாட்டுப்பணத்தில் வாழுகிறார்கள். கடாபி ஒரு விடுதலை வீரனாக உருவாகி ஒரு மோசமான சர்வாதிகாரியாக மாறிவிட்டார். முன்றாம் உலக நாடுகளில் ஒரு காலத்தில் நல்ல செல்வாக்குப் பெற்றிருந்தார் கடாபி. இந்திரா காந்தி, சிறிமாவோ பண்டாரநாயக்க போன்றோர் மட்டுமல்ல நெல்சன் மண்டேலாவினாலும் பெரிதும் மதிக்கப்பட்டவர்.தென் ஆபிரிக்காவின் இனவெறிக்கு எதிரான போருக்கு காத்திரமான உதவிகள் வழங்கியவர்.
இப்போது கடாபியின் அதிகாரம் ஆட்டம் கண்டுகொண்டிருக்கிறது. லிபியாவிற்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரத் தடை எந்நேரமும் வரலாம். ஐரோப்பிய ஒன்றியம் கடாபிக்கு எதிரான பொருளாதரத் தடைக்கு ஒப்புதல் அளித்து விட்டது. சுவிஸ்லாந்து அரசு தம் நாட்டிலுள்ள கடாபியின் வங்கிக் கணக்குகளை முடக்கி விட்டது. இவை கடாபிக்கு பெரும் நெருக்கடியைக் கொடுக்கலாம்.
இன்று வெள்ளிக்கிழமை மசூதிகளில் நடந்த தொழுகைகளுக்குப் பின் கடாபிக்கு எதிரான ஆத்திரம் மக்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.
திங்கட் கிழமை ஜெனிவாவிலுள்ள ஐநா மனித உரிமைக்கழகத்தில் கடாபியின் அரசுக்கு எதிரான கண்டனங்கள் நடவடிக்கைகள் பல உருவாகலாம்.
லிபியா தொடர்பாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நேற்றுப் பின்னிரவு பிரித்தானிய இத்தாலியப் பிரதமர்களுடனும் பிரெஞ்சு அதிபருடனும் கலந்துரையாடியுள்ளார். லிபியா மீது படை நடவடிக்கை ஒன்று மேற் கொள்ளப்படுமா என்று கேட்கப்பட்டபோது வெள்ளை மாளிகைப் பேச்சாளர் ஜே கார்ணி அது நடக்காது என்று கூற அவர் மறுத்துவிட்டார்.
கடாபி தனக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி அல் ஹைய்தா அமைப்பால் மேற் கொள்ளப்படுகின்றன என்று சொல்கிற்றார். பொதுவாக கடாபி போன்றவர்கள் தமக்கு எதிராக கிளர்ச்சி செய்பவரக்ளை அமெரிக்கா அல்லது இஸ்ரேல் மீது குற்றம் சுமத்துவது உண்டு. கடாபி தான் வித்தியாசமானவர் என்று இன்றும் காட்டுகிறார். கடாபி தான் இன்னும் மக்கள் மீது தாக்குதல் நடாத்தும்படி உத்தரவிடவில்லையாம் அப்படி உத்தரவிட்டால் முழு லிபியாவும் எரியும் என்று எச்சரிக்கிறார். இப்போது இவரை அமெரிக்க முன்னாள் அதிபர் விசர் நாய் என விபரித்தது ஞாபகம் வருகிறது.
லிபியாவின் மூன்றாம் நான்காம் பெரிய நகரங்க்களை கடாபி இழந்தார்.
பெங்காஜியைத் தொடர்ந்து திரிப்போலியில் இருந்து முப்பது மைல்கள் தொலைவில் உள்ள ஜாவியா நகரத்தையும் கிளர்ச்சிக்காரர்கள் கைப்பற்றினர். கடாபி ஜாவியா நகர மக்களுக்கு இப்படிச் சொன்னார்: "உங்கள் மகன்மார்கள் பின் லாடன் சொல்வதிக் கேட்பதால் ஜாவியா எனது கைகளில் இருந்து நழுவுகிறது". கிளர்ச்சிக்காரர்களும் முன்னாள் படைத்துறையைச் சேர்ந்தவர்களும் இணைந்து கடாபியின் படையினரிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்களைக் கொண்டு காடாபியின் ஆதரவுப் படைகளை மிஸ்ரட்டா நகரில் இருந்து விரட்டினர்.
இதுவரை இரண்டாயிரத்திற்கு மேற்பட்டோர் கொல்லப் பட்டுள்ளனர். மூன்று இலட்சத்திற்கு மேற்பட்டோர் தங்கள் சொந்த வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். 50,000 மேற்பட்ட லிபியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும் பலர் வெளியேறத் தயாராகின்றனர்.
காப்பி போன்ற பானங்களில் போதைப் பொருள்களைக் கலந்து கொடுத்து தனக்கு எதிராக கிளர்ந்தெழும்படி இளைஞர்கள் தூண்டப்படுகிறார்கள் என்றாக் கடாபி அதையொட்டி வெளியான கேலிச் சித்திரம் இது
ஒரு புதிய அரசின் ஆரம்பம்.
லிபியாவின் கிழக்குப் பகுதியான பெங்காஜியை மும்மர் கடாபியிடம் இருந்து அவருக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய பின் அங்கு சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதில் பல சிரமங்களை எதிர் நோக்குகின்றனர். கடாபிக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் பல குழுக்களை அமைத்து சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட பெரும் பாடு படுகிறார்கள். கடாபிக்கு ஆதரவான குழுக்கள் கடாபியின் உளவாளிகள் போன்றேரிடமிருந்து பாரிய சவால்களை அவர்கள் எதிர் நோக்குகிறார்கள்.
சுதந்திரம், குடியாட்சி ஆட்சி மாற்றம் என்ற தார்க மந்திரத்துடன் பெங்காஜியில் இருந்து புதிய பத்திரிகையும் வெளிவரத் தொடங்கியுள்ளது. இது அரபு மொழியில் இணையப்பதிப்பாக வெளிவருகிறது. பிரித்தானிய அரசு தனது மக்களை லிபியாவிலிருந்து வெளியேற்ற கடாபிக்கு இலஞ்சம் வழங்கியாதாக அது குற்றம் சாட்டுக்கிறது.
நியூயோர்க் ரைம்ஸின் தகவலின் படி ஒரு நீதிபதி தெருவில் நின்று வண்டியோட்டிகளை ஆசனப் பட்டி அணியச் செய்தல் போன்ற அறிவுறுத்தல்களை மக்களுக்கு விடுக்கின்றார். பெங்காஜியின் சட்டவாளர்களும் நீதவான்களும் சமூக ஒழுங்கை நிலை நாட்டுவதில் முன்னின்று உழைக்கின்றனர். இளைஞர்கள் காவல் துறைக்கு ஓத்தாசையாகச் செயற்படுகின்றனர். மொத்தத்தில் அவர்கள் அங்கு ஒரு புதிய அரசை அமைக்க முற்படுகின்றனர்.
இன்னமும் கத்தி முனையிலேயே.
லிபியாவின் நிலை இப்போதும் மோசமாகவே உள்ளது. எகிப்தைப் போல் லிபியாவில் படைத்துறை நடுநிலையாக இருக்கவில்லை. இரத்தக்களரி இப்போது முடிவுக்கு வரும் நிலையில் இல்லை. காடாபியின் பதவி ஆசைக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் நீண்ட கடினமான பாதையில் பலத்த இழப்புக்களுடன் பயணிக்க வேண்டியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
2 comments:
nice one
(இன்னும் "கொஞ்சம்" கவனம் தேவை!கண்டிப்பல்ல,அன்பில் தான்)அலசல் கலக்கல்!இதயச்சந்திரனையும்,அருஷையும் தூக்கி சாப்பிட்டு விடுவீர்கள் போலிருக்கிறதே?
Post a Comment