
லிபிய அரசுக்கு எதிராக கிளர்ந்து எழுந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடாத்த அனுப்பப்பட்ட இரு போர் விமானங்களும் இரு உலங்கு வானூர்திகளும் மக்கள் மீது தாக்குதல் நடாத்தாமல் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள லிபியாவின் கிழக்குப் பிராந்தியத்தில் போய் தரை இறங்கின. விமானிகள் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்து கொண்டனர்.
படைத்துறைப் புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்த மும்மர் கடாபி தனது படையினரை நம்புவதில்லை பெரும்பாலான படையினரிடம் ஆயுதங்கள் இல்லை. காவல் துறையினரிடமும் ஆயுதங்கள் இல்லை. கடாபிக்கு நெருக்கமான படையினரிடம் மட்டுமே ஆயுதங்கள் உண்டு. அவரது மெய்ப்பாதுகாவலர் அனைவரும் பெண்களே.
திங்கட்கிழமை கடாபியின் மகன் சய்f தொலைக்காட்சியில் தோன்றி ஆற்றிய உரையத் தொடர்ந்து மக்களின் ஆத்திரம் மேலும் அதிகமானது. பல படையினர் அரசு தரப்பில் இருந்து விலகி ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்தனர். மும்மர் கடாபியின்நீதி அமைச்சர் முஸ்தபா அப்துல் ஜலில் பதவி விலகினார். லிபிய அரசின் வெளிநாடுகளுக்கான தூதுவர்களில் ஏழுக்கு மேற்பட்டவரகள் லிபிய அரசின் நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்து பதவி விலகி உள்ளனர். லிபிய விமானப்படையின் இரு உயர் அதிகாரிகள் மோல்டா நாட்டிற்கு தப்பி ஓடிவிட்டனர்.லிபியாவின் ஐக்கிய நாடுகளுக்கான தூதுவரும் பலத்த அதிருப்தி அடைந்துள்ளார். உதவித் தூதுவர் கடாபி இனக்கொலை புரிவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இலண்டனில் உள்ள லிபியத் தூதுவரகத்திற்கு முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் தூதுவரகத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
பெண் பித்தனுக்கு பெண் பித்தன் ஆதரவு?
கடாபியின் நடவடிக்கைகளை அவரது நண்பரான இத்தாலியப் பிரதமர் பெர்லுஸ் கோனி கண்டிக்க மறுத்துள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் திரிப்பொலியைச் சூழ்ததைத் தொடர்ந்து மும்மர் கடாபி திரிப்பொலியில் உள்ள தனது உறைவிடத்தில் இருந்து தப்பி தனது செந்த ஊருக்குச் சென்று பின்னர் அங்கிருந்து வெனிசுலேவியாவிற்குத் தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. பிரித்தானிய வெளியுறவுத் துறை அமைச்சர் தனக்கு கடாபி தென் அமெரிக்கா நோக்கிப் பயணிப்பதாக தகவல் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.
முந்திய பதிவு: கடாபியின் லிபியாவில் இரத்தக் களரி
No comments:
Post a Comment