
புரியக் கடினமானதால் புதிராய் இருப்பதால்
மென்பொருளும் வன்பொருளுமிருப்பதால்
தேவைப்படும் வேளை முரண்டு பிடிப்பதால்
பெண்ணே நீயும் கணனி போலடி
வாக்குறுதிகள் தந்ததால் வரிசைகள் கொண்டு வந்ததால்
ஊர்கூடி இணைந்ததால் ஊர்வலம் போனதால்
விருந்துகள் படைத்ததால் பின்னர் அம்போ என விட்டதால்
எம் திருமணமும் அரசியல் தேர்தல் போலடி
அன்று என்னை ஆருயிர்
என்று அணைத்தவன்
இன்று என் வயிற்றில் இருப்பது
ஆருடைய உயிர் என்கிறான்.
நாளொன்றில் இருந்தன
இனிய இருபத்தி நான்கு மணித்தியாலங்கள்
வாரமொன்றில் இருந்தன
இனிய ஏழு நாட்கள்
வருட மொன்றில் இருந்தன
இனிய ஐம்பத்திரெண்டு வாரங்கள்
திருமணத்தின் முன்.
1 comment:
நாளொன்றில் இருந்தன..
இனிய இருபத்தி நான்கு ..மணித்தியாலங்கள்..
வாரமொன்றில் இருந்தன..
இனிய ஏழு நாட்கள்..
வருட மொன்றில் இருந்தன..
இனிய ஐம்பத்திரெண்டு வாரங்கள்..
திருமணத்தின் முன்...
அனுபவமோ????
Post a Comment