
கடவுள் சகல உலக நாட்டுத் தலைவர்களினதும் கனவில் தோன்றி நான் இன்னும் ஒரு வாரத்தில் இந்த உலகத்தை அழிக்கப் போகிறேன் இதை உங்கள் மக்களிடம் சொல்லி அவர்களை அமைதிப் படுத்துங்கள் என்றனர்.
ஒவ்வொரு நாட்டுத் தலைவர்களும் தங்கள் மக்களுக்குக் கூறியவை:
அமரிக்க அதிபர்: அன்புடைய மக்களே உங்களுக்கு இரு செய்திகள் சொல்லப் போகிறேன். ஒன்று நாம் இனி சீனாவின் வளர்ச்சியைப் பறிக்கவலைபடத் தேவையில்லை. கடவுள் வெள்ளை மாளிக்கைக்கு வந்து ஒரு வாரத்தில் உலகை அழிக்கப்போகிறேன் என்றார். அதுவரை குடித்துக் கூதாடி அனுபவிப்போமாக.
சீன அதிபர்: உங்களுக்கு இரு துக்கச் செய்திகள் சொல்லப் போகிறேன். ஒன்று கடவுள் இருக்கிறார். மற்றது அவர் உலகை அழிக்கப் போகிறார்.
சோனியா காந்தி: அன்பான மக்களே உங்களுக்கு இரு செய்திகள் சொல்லப் போகிறேன். ஒன்று எனக்குத் துக்கம் உங்களுக்கு மகிழ்ச்சி. அது ராகுல் காந்தி இந்தியாவின் பிரதமராக முடியாது. மற்றது எல்லோருக்கும் கவலையானது. உலகம் அழியப்போகிறது.
பாக்கிஸ்த்தான் பிரதமர்: அன்பான மக்களே நாங்கள் இந்தியாமீது அணுக்குண்டு போடத் தேவையில்லை. கடவுள் முழு உலகையுமே அழிக்கப் போகிறார்.
இஸ்ரேலியப் பிரதமர்: அன்பான மக்களே இந்த உலகம் அழியும்வரை பலஸ்த்தீனம் ஒரு தனிநாடாக அமையாது.
பிரித்தானியப் பிரதமர்: அன்பார்ந்த மக்களே இனி ஒருநாளும் பிரித்தானியாவில் தொழிற் கட்சி ஆட்சிக்கு வராது.
இத்தாலியப் பிரதமர்: என் இனிய இத்தாலி மக்களே எத்தனை சிறுமிகளுடன் நான் எப்படி நடந்தாலும் யாராலும் என்னைத் தண்டிக்க முடியாது.
மஹிந்த ராஜபக்ச: எனது அருமை மக்களே! நான் உயிரோடு இருக்கும் வரை, நீங்கள் உயிரோடு இருக்கும் வரை, இந்த உலகம் அழியும் வரை நானே இலங்கையின் ஜனாதிபதி.
2 comments:
சோனியா காந்தி: அன்பான மக்களே உங்களுக்கு இரு செய்திகள் சொல்லப் போகிறேன். ஒன்று எனக்குத் துக்கம் உங்களுக்கு மகிழ்ச்சி. அது ராகுல் காந்தி இந்தியாவின் பிரதமராக முடியாது. மற்றது எல்லோருக்கும் கவலையானது. உலகம் அழியப்போகிறது.
super....
கொசுறு:ஐ.நா செயலாளர் பான் கி மூன்; அன்பான உலக மக்களே! இலங்கை மீது போர்க் குற்றச்சாட்டு சுமத்த வேண்டிய தேவையே இல்லை!ஒட்டு மொத்தமாக நாம் அழிந்து விடப் போகிறோம்!
Post a Comment