Thursday, 10 February 2011
வருகின்றன ஐ-பாட் -2 உம் Facebook இன் கைப்பேசிகளும்.
ஐ-பொட், ஐ-போன், ஐ- பாட் போன்ற தொடர்ச்சியான புதுப் புதுக் கருவிகளை அறிமுகம் செய்து உலகத்தின் மிகப் பெறுமதி மிக்க நிறுவனமாக ஆப்பிள் வளர்ச்சியடையவுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் பெறுமதி £269.5 பில்லியன்கள். விரைவில் ஆப்பிள் எரிபொருள் நிறுவனமான Exxonஐ பெறுமதியில் முந்திக்கொள்ளப் போகிறது.
ஆப்பிளின் ஐ-போன்கள் கைப்பேசிச் சந்தையைக் கலங்கடித்தது. பலர் ஐ-போன்களின் அடிமைகளானார்கள். வத்திக்கான் ஐ-போன் மூலம் பாவமன்னிப்புக் கேட்க முடியாது என்று அறிவித்தது.
ஆப்பிளின் ஐ-பாட்டின் வெற்றிகரமான அறிமுகம் தொடுதிரைக் கணனிகள் சந்தையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. மற்ற நிறுவனங்களும் தங்கள் தொடுதிரைக் கணனிகளை அறிமுகம் செய்தன. இறுதியாக HP நிறுவனமும் களத்தில் இறங்கியுள்ளது. ஐபாட்-2 பெரிய ஒலி பெருக்கி, USB இணைப்பு வசதி, அதிக ஒளியுள்ள திரை, முன்புறமும் பின்புறமும் ஒளிப்பதிவு செய்யும் வசதி, SD Slot போன்ற ஐ-பாட் -1 இல் இல்லாத வசதிகளுடன் வருகிறது.
ஐம்பது கோடிக்கு( 500 மில்லியன்கள்) மேற்பட்டவர்களைக் கொண்ட சமூக வலைத்தளமான Facebook விரைவில் கைப்பேசிகளை தயாரித்து விற்பனை செய்யவிருக்கிறது. Facebook இதுவரை மறுத்து வந்த இந்த இரகசியம் இப்போது அம்பலமாகிவிட்டது. இலண்டனைச் சேர்ந்த INQ நிறுவனம் Facebook உடன் இணைந்து 'Facebook phone' ஐ உருவாக்கியுள்ளது. Facebook இன் முக்கிய அம்சங்களான அரட்டை, தகவல் பரிமாற்றம், சுவர்ப்பதிவு, அறிவுறுத்தல்கள் (chat, messages, wall postings and notifications) Facebook phoneஇல் இலகுவாகச் செய்யக் கூடியவையாக இருக்கும்.
Cloud Touch எனப்படும் Facebook phone' இன் முக்கிய அம்சங்கள்: powered by a Qualcomm 600MHz 7227 chipset and offers a 3.5-inch HGVA touch screen, 4MB of memory with an option to add more, and a 5-megapixel autofocus camera.
மேலும்: Wi-Fi 802.11b/g, Bluetooth, GPS, an FM radio, an accelerometer, and a compass.
Facebookஉம் Googleஉம் இணைகின்றன Twitterஐ விழுங்க.
Facebookஉம் Googleஉம் இணைந்து ஆறு பில்லியன் பிரித்தானியப் பவுண்டுகளுக்கு வாங்கும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளன. Twitterஇல்175 மில்லியன் பயனர்கள் உண்டு. நாளொன்றிற்கு 95மில்லியன் பதிவுகள் இடப்படுகின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
1 comment:
இங்கேயும் வந்துட்டான இந்த பேஸ்புக் சனியன்
Post a Comment