Tuesday, 8 February 2011
நிருபாம ராவ் இலங்கைக்குப் போய் கதைத்தது என்ன?
இலங்கையில் 2009 மே மாதத்தில் போர் முடிந்தவுடன் இலங்கையைத் தன் வழிக்குக் கொண்டுவர தன்னிடம் இலங்கைப் படை செய்த போர் குற்ற ஆதாரங்கள் இருப்பதாக இந்தியா இலங்கையை மிரட்டியதாம். பதிலுக்கு மஹ்ந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபாய தன்னிடம் இந்திய இலங்கையுடன் நடாத்திய உரையாடல்களின் ஒலிப்பதிவு இருப்பதாகவும் இந்தியா இலங்கையின் போர் குற்றங்களைப் பகிரங்கப் படுத்தினால் தான் அந்த உரையாடல் களைப் பகிரங்கப் படுத்துவேன் என்றும் பதிலுக்கு மிரட்டி இந்தியாவைப் பணியவைத்தாராம். இப்படி The Ground Report India என்னும் ஊடகத்தில் எழுதினார் வீ. எஸ்.சுப்பிரமணியம் என்னும் இந்திய ஆய்வாளர். இதை கிரிக்கெட் பாணியில் கோத்தபாயாவின் master stroke என்று வர்ணித்தார் அவர்.
2009 மே மாதத்திற்கு முன் இந்தியப் பாதுகாப்புத் துறை ஆலோசகர் சிவசங்கர மேனனும் வெளியுறவுத் துறைச் செயலர் நாராயணன் ஆகிய இருவரும் அடிக்கடி இலங்கை வந்து போனதுண்டு. வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாம் முகர்ஜியும் இலங்கை வந்து போனதுண்டு. போர் முடிந்தபின் இந்தியா இலங்கையின் போரக்குற்றம் பற்றி வாய் திறக்கவில்லை. இலங்கையின் மிரட்டலுக்குப் பயந்த இந்தியா ஐநா சபையின் மனித உரிமைக் கழகக் கூட்டத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்க ஐரோப்பிய ஒன்றியம் கொண்டு வந்த தீர்மானத்தை சீனாவிடன் இணைந்து இலங்கையைப் பாராட்டும் தீர்மானமாக மாற்றித் தன்னைத் தானே கேவலப் படுத்திக் கொண்டுவந்தது.
இலங்கையில் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டமைக்கு இந்தியாதான் காரணமென்றும் அதிலும் சோனியா காந்திக்கு தமிழர்கள் மேல் உள்ள ஆத்திரத்திலும் பார்க்க மேனன் - நாராயணனுக்கு அதிக ஆத்திரம் இருந்தது என்று எழுதினார் வீ. எஸ். சுப்பிரமணியம். ஆனால் எந்த உரையாடலை வைத்து கோத்தபாய இந்தியாவை மிரட்டினார் என்று வீ. எஸ். சுப்பிரமணியம் எழுதவில்லை. வேறு ஆய்வாளர்கள் இலங்கை போரை ஆகஸ்ட் 2009இல் முடிக்க எண்ணியிருந்ததாகவும் ஆனால் இந்தியாதான் மே- 2009இல் முடிக்க வலியுறுத்தியதாகவும் எழுதியிருந்தனர்.
இவற்றை வைத்துப் பார்க்கும் போது மேனன், நாராயணன், பிரணாப் முகர்ஜி போன்றோர் இலங்கை வந்தது அப்போது இந்தியா கூறியது போல் இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்த அல்ல எப்படி தமிழர்களைக் கொன்றொழிப்பது என்று ஆலோசனை கூறவும் அதற்க்குத் தேவையான படைத் துறை உதவிகளை எப்படி வழங்குவது என்றும் எங்கிருந்து பெறுவது என்றும் முடிவு செய்யத்தான் வந்திருக்க வேண்டும் என்று ஊகிக்கலாம். இலங்கையிடம் இருக்கும் இந்தியாவை மிரட்டும் ஒலிப்பதிவு இதைத் தவிர வேறு என்ன?
இப்போது நிருபாம ராவ் ஜனவரி 31-ம் திகதி இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கொல்லப் படுவது தொடர்பாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்த வந்திருந்தார். இவர் நடாத்திய பேச்சு வார்த்தையின் பின் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடாத்தப் பட மாட்டாது என்று இருதரப்பாலும் உறுதி கூறப்பட்டது. நிருபாமாவும் மஹிந்தவும் இப்படித்தான் உரையாடியிருப்பார்களோ?
நிருபாமா: உங்கடை கடற்படையினர் தமிழ்நாட்டு மீனவர்களைத் தாக்குகிறார்கள் கொல்கிறார்கள் என்று தமிழ்நாட்டில் ஒரு சில குழுக்கள் கூச்சலிடத் தொடங்கிவிட்டன. அந்தக் கோமாளிகளை எலக்சன் முடியும் வரை சமாளிக்க வேண்டும். உங்கடை கடற்படையிடம் சொல்லுங்கோ அதுவரைக்கும் கொஞ்சம் தமிழ் மீனவரை விட்டுப் பிடிக்கச் சொல்லி.
மஹிந்த: நம்ம படையினருக்கு தொழில் பொழுது போக்கு எல்லாமே தமிழர்களைக் கொல்வதுதான். நாங்க இதை 1956இல் இருந்து செய்து வருகிறோம். இதை நிப்பாட்ட முடியாது.
நிருபாமா: அதைச் செய்ய வேண்டாமென்று நான் சொல்லவில்லை. தயவு செய்து கொஞ்சம் அடக்கி வாசிக்கச் சொல்லுங்கோ.
மஹிந்த: அது சரியான கடினம். தனியாக தமிழர்களைக் கண்டால் கொல்ல வேணும் போல் இருக்கும் எங்கள் படைக்கு. இந்திய மத்திய அரசுக்கும் தமிழர்களைக் கொல்வது சரியான சந்தோசம்தானே. தமிழர்களைக் கொல்லத்தானே உங்க மத்திய அரசு எங்களுக்கு ஆயுதம் தந்தது பயிற்ச்சி தந்தது, காசு தந்தது. 20,000ஆயிரம் இந்தியப் படையினரைக் கூட அனுப்பிவைத்தது.
நிருபாமா: ஐய்யோ ஐய்யோ நான உங்களைத் தமிழர்களைக் கொல்ல வேண்டாமேன்று சொல்லவில்லை. நல்லாய் கொல்லுங்கோ. அந்தக் குறைந்த சாதி நாய்கள் கொல்லப்படுவதைப்பற்றி யார் கவலைப்படுவான். ஆனால் இந்த எலக்சன் வரைக்கும் கொஞ்சம் பொறுங்கோ. அதுக்குப் பிறகு உங்களுக்குத் தேவையான உதவிகளை நாங்கள் செய்வம் தமிழர்களைக் கொல்ல.
மஹிந்த: அதெல்லாம ஏலாது. நாங்கள் செய்கிறதைச் செய்வம். நீங்கள் எங்களுக்கு உதவி செய்தே ஆக வேண்டும். இல்லாவிடில் திருக்கோணாமலை, காங்கேசன் துறை, பலாலி, மன்னார் புத்தளம் என்று எல்லா இடத்திலையும் சீனர்களை வந்து காம்ப் அடிக்க விட்டிடுவம். அப்புறம் உங்க கதி அதோகதிதான்.
நிருபாமா: ஐய்யோ சார். உங்களை எங்களால் எப்படி எங்களால் தடுக்க முடியும்? நீங்க எந்த அளவு பெரிய ஆள். நீங்கள் தமிழனை அழித்தால்தான நாங்கள் இந்தியாவில் தமிழர்களை அடக்கி வைத்திருக்க முடியும். அவங்க ஏதாவது பேசினா இலங்கையில் நடந்ததுதான் உங்களூக்கும் நடக்கும் என்று சொல்லலாம். உங்களை எங்களுக்கு மிகவும் தேவை.
மஹிந்த:அப்பிடி வழிக்கு வா.
நிருபாமா: உங்களை மன்றாட்டமாகக் கேட்கிறன் சார். பிளீஸ் சார் ஒரு அறிக்கையாவது விடுவம் இனி மீனவர்களுக்கு கடலில் பிரச்சனை இல்லை என்று. அது மட்டுமல்ல. ஒரு நாடகமாடி தப்பி உள்ள புலிகள்தான் தமிழ் மீனவர்களைக் கொல்கிறார்கள் என்று சொல்லுவம்.
(இப்போது நிருபாமா மஹிந்தவில் காலைப் பிடித்திருப்பாரோ?)
தமிழ்நாட்டு மீனவர்கள் மீது நிருபமா இலங்கை சென்று வந்த பின்னும் தாக்குதல் நடக்கிறது. இதைத் தவிர வேறு எதைக் கதைத்திருக்க முடியும்?
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
2 comments:
நிருபாமா ம்ஹிந்தவின் காலை மட்டும்தான் பிடித்தார??????
கொலைவெறியனின் காலைப் பிடிததாளா? காலை நக்கினாளா இந்த வெட்கம் கெட்ட இந்திய பிசாசு.
Post a Comment