Saturday, 12 February 2011

இலண்டனில் சீனர்களின் பணம் சூறை


சீனாவின் பொருளாதார வளர்ச்சியையும் அங்குள்ள பெரும் பணக்காரர்களின் பணத்தையும் எப்படி ஏமாற்றிப் பறிப்பது என்பது பற்றி இலண்டனில் உள்ள பெரும் கடைக்காரர்கள் தங்கள் தலைமுடியைப் பிய்த்துக் கொள்கிறார்கள்.

சீனாவின் மக்களில் 1700பேர்களில் ஒருவர் அமெரிக்க டொலரில் மில்லியன் பெறுமதியான சொத்துக் குடையவர்கள். இவர்கள் தங்கள் விடுமுறையைக் கழிக்க ஐரோப்பிய நகரங்களுக்கு செல்வதுண்டு அங்கு அவர்கள் பெரும் தொகைப் பணம் செலவழித்து ஆடை அணிகலன்கள் வாங்குவதுண்டு. அவர்களின் சுற்றுலச் செலவுகளில் 70%மானவற்றில் ஆடை அணிகலன்கள் வாங்குவர். உலகில் எங்கிருந்தாலும் எந்தக் கலாச்சாரத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் பெரும் பணக்காரர்களில் பலர் தங்கள் வாழ்கை முறையை மேற்கத்தியப் பாணியில் அமைத்துக் கொள்வர்.


வழமையாக இலண்டன் பெரும் கடைகளில் அரபு நாட்டுக்காரர்கள் நிறைய பொருட்கள் வாங்குவதுண்டு. இரசியாவில் இருந்தும் பெரும் பணக்காரர்கள் இலண்டனுக்கு வருவர் பொருட்களை அள்ளிச் செல்ல. இப்போது இரசியாவில் இருந்து வருபவர்கள் தொகை குறைந்து சீனாவில் இருந்து வருபவர்கள் தொகை அதிகரித்துள்ளது. இவர்கள் வடிவமைப்பாளர் ஆடைகள் (designer clothes) நிறைய வாங்குவர். சராசரியா ஒரு சீனப் பயணி £972 பவுண்ட்களுக்கு பொருட்கள் வாங்குவர். இந்த ஆண்டு சீனப் பயணிகள் மோத்தம் 160மில்லியன் பவுண்ட்களுக்கு பொருட்கள் வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இலண்டனில் உள்ள பெரும் கடைகள் சீனப் பயணிகளைக் கவர்வதற்காக தங்கள் ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்குகின்றன. சீனர்களின் மொழியைப் புரிந்து கொள்ளுதல் அவர்களின் கலாச்சாரத்திற்கு ஏற்ப நடத்தல் போன்றவற்றில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இலண்டனில் உள்ள பெரும் கடைக்காரர்களுக்கு உள்ள பெரும் பிரச்சனை ஐரோப்பவிற்கு வரும் சீனப் பயணிகளில் 5%மானவர்களே இலண்டன் வருகிறார்கள். இதற்கு காரணம் பிரித்தானியா விசா வழங்குவதில் செய்யும் கெடு பிடிகள்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...