Thursday 4 June 2009

உலக வர்த்தகத்தின் மூன்றில் இரு பகுதியை சீனா தன் கட்டுக்குள் வைத்திருக்குமா?


இலங்கையின் போர் வெற்றி விழாவில் உரையாற்றிய இலங்கை அதிபர் தமது நாட்டுக்கு சில வெளி நாடுகள் அழுத்தம் கொடுப்பதாக கூறினார். இது நடந்த சில மணித்தியாலங்களில் சீன வெளி நாட்டமைச்சர் ஒரு அறிக்கை விட்டார்: இலங்கையின் உள் விவகாரங்களில் வெளி நாடுகள் தலையிடக் கூடாது என்றார்.

முதலில் என்ன அழுத்தம் வெளி நாடுகள் கொடுக்கின்றன? இலங்கை தமிழர்களுக்கு எதிரான போரில் இலங்கை குற்றம் இழைத்தது. இனக் கொலை செய்தது. இதற்கான ஆதாரங்களை அழிப்பதில் இலங்கை ஈடுபட்டு வருகிறது. ஆதாரங்களை அழிப்பதற்கு முன்னர் செயற்பட வேண்டும் என்று சில நாடுகள் முயல்கின்றன. இந்த நாடுகளுக்கு ஏன் இந்த அக்கறை? சீனா இலங்கையில் காலூன்றுவதைத் தடுக்கவே சில மேற்குலக நாடுகள் தமிழர்கள் பிரச்சனையை கையில் எடுக்கின்றன. இலங்கையின் நட்பு நாடுகளான சீனாவும் பாக்கிஸ்த்தானுடன் இப்போது ஈரானும் இணைந்துள்ளது. மியன்மாரில்(பர்மா) சீன ஆதிக்கம் நிலவுகிறது. பங்களாதேசமும் சீனாவின் பிடியில் உள்ளது.

சீனாவின் முத்து மாலைத் திட்டம்
சீனக் கடற்படைத் தளங்கள் பாக்கிஸ்த்தான் பங்களாதேசம் மியன்மார் ஆகியவற்றில் உண்டு. இத்துடன் இலங்கையின் தென் கோடியில் அம்பாந்தோட்டையில் பாரிய கடற்படைத் தளத்தை அமைப்பதில் ஈடு பட்டுள்ளது. இது சீனாவின் முத்துமாலைத் திட்டம் என்று அழைக்கப் படுகிறது. இந்த முத்து மாலைத்திட்டம் இந்து சமுத்திரக் கடற் பிராந்தியத்தை தனது கட்டுப் பாட்டில் வைத்திருக்கும் நேக்கம் கொண்டது. இந்த இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் ஊடாக உலக வர்த்தகத்தின் மூன்றில் இரண்டு பகுதி நடை பெறுகிறது. சீனாவின் இந்த முத்து மாலைத் திட்டம் இந்த மூன்றில் இரு பகுதி வர்த்தகத்தை தனது கட்டுப் பாட்டில் வைத்திருக்கும் எண்ணத்துடன் தீட்டப்பட்டது.

குடும்ப நலன்களுக்காக பிராந்திய நலனைக் கைவிட்ட இந்தியா
மேற்குலக நாடுகள் இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இலங்கைப் பிரச்சனையை கையில் எடுத்த வேளை இந்தியா சீன-இலங்கைக் கூட்டில் தன்னையும் ஒரு பங்காளனாக இணைத்துக் கொண்டது. ஐக்கியா நாடுகள் சபையில் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்பட்டது. விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்டினால் போதும் என்பது மட்டும் தான் தமது எண்ணம் என்பது போல் இந்தியா இலங்கைத் தமிழர் பிரச்சனையில் நடந்துகொண்டது. அப்படி நடந்தமைக்குக் காரணம் ஒரு குடும்ப நலனை மட்டும் கருத்தில் எடுத்துக் கொண்டு இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் செயற்பட்டமையே. சிங்களப் பேரினவாதிகள் கடும் இந்திய எதிர்ப்பாளர்கள் என்பது சிங்கள மக்களுடன் பழகிய அனைவருக்கும் தெரியும்.

1 comment:

காலம் said...

சீனாவின் முற்றுகையில் இந்தியா
சமூக விழிப்புணர்வு வெளியீடு படித்தீர்களா?
மிகமுக்கியமான புத்தகம்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...