விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றிக்கு(?) இலங்கைக்கு உதவியவர்கள் யார்? சீனாவா? இந்தியாவா? பாக்கிஸ்த்தானா? இஸ்ரெலா? அமெரிக்காவா? எல்லோருமா?
.
பாக்கிஸ்த்தான் தனது பங்கே பெரியது என உரிமை கொண்டாடுகிறது.
இந்தியா படை உதவி, படைக்கல உதவி, பயிற்ச்சி உதவி, உளவுத்துறை உதவி, எனப் பல செய்தும் தாம் உதவி செய்ததாக சொல்லவில்லை!பெருந்தன்மையா?

இந்தியா உதவி செய்யும் போது இலங்கை இந்தியாவைப் பயன் படுத்துகிறது. தனது தேவை முடிந்ததும் இந்தியாவிற்கு பேப் பே காட்டிவிடும் என்று கூறப்பட்டது. இலங்கை இந்தியாவை ஓரம் கட்டப்போகிறது என்பதற்கு ஏற்பதாக மூன்று சம்பவங்கள் நடந்துள்ளன:

1. இலங்கையின் வெற்றிக்கு தாமே பெரும் பங்காற்றியதாக பாக்கிஸ்த்தான் அறிவித்தது. அத்துடன் தாம் உள்நாட்டு அழுத்தமின்றி செயற்பட்டதாகவும் அறிவித்தது. இது இந்தியாவை ஓரங்கட்டவே.

2. ஜேவிபி என்னும் சீன சார்புச் சிங்களக் கட்சியின் வீரவன்ச என்பவர் இலங்கைப் போரிற்கு இந்தியாவின் பங்களிப்பை மிகவும் கேவலப் படுத்திப் பேசியுள்ளார். தமிழர்களின் பேரழிவிற்கு இந்தியாவே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். அது மட்டுமல்ல பாக்கிஸ்த்தானும் சீனாவும் இலங்கைக்கு உதவி செய்ததுடன் நிற்கின்றன. இந்தியா அத்துடன் நிற்காமல் இலங்கையின் உள் நாட்டு விவகாரங்களில் தலையிடுகின்றது என்று குற்றம் சாட்டுகிறார். இந்த அறிக்கை சீனவில் தயாரிக்கப் பட்டிருக்கலாம் என்று கொழும்பிலுள்ள ஒரு நண்பர் கூறினார். இது இந்தியாவை ஓரங்கட்டவே.

3. இலங்கையின் குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சே ஒரு படி மேலே சென்று விடுதலைப் புலிகளுக்கு எதிராக நாங்கள் நடத்திய போர் எங்களுக்காக மட்டும் அல்ல, “இந்தியாவுக்காகவும்தான். 18 ஆண்டுகளுக்கு முன்னால் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்களைப் போரில் சண்டையிட்டு வென்று நீதி வழங்கியிருக்கிறோம். விடுதலைப் புலிகளை நாங்கள் கொன்றுவிட்டதால் இந்திய அரசு அதற்காகப் போர் நடத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.” என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார். இது இந்தியாவை ஓரங்கட்டவே.

இது மட்டுமல்ல தமிழ்நாட்டுத் தமிழர்களை கேவலப் படுத்த இலங்கையின் குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சே இன்னும் கூறியுள்ளார்:
“எங்களுடைய போர் நடவடிக்கைகளை ஆதரித்த கட்சியும் கூட்டணியும் வென்றிருக்கிறது. புலிகளை ஆதரித்தவர்களைத் தோற்கடித்து தமிழக மக்கள் நல்ல பாடம் புகட்டிவிட்டார்கள்.”

இதற்கு தமிழக மக்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.புலிகளுக்கு எதிரான போர் முடிந்ததும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்கள் எங்களைத் தொடர்புகொண்டு பாராட்டினார்கள். அவர்கள் யாரென்று தெரிவிக்க விரும்பவில்லை என்றார் ராஜபக்ச.

இவர்கள் யார் என்பதை தமிழக மக்கள்தான் கண்டு பிடிக்க வேண்டும்.
1 comment:
//புலிகளுக்கு எதிரான போர் முடிந்ததும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்கள் எங்களைத் தொடர்புகொண்டு பாராட்டினார்கள்//
அது போர் முடிந்ததற்காக அல்ல! போரின் முடிவுகளை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வெளியிட்டமைக்காக!
Post a Comment