Wednesday, 3 June 2009
இலங்கை இல்லாத ஒன்றுக்கு பயப்படுகிறதா? இருக்கிறதை இல்லை என்கிறதா?
இலங்கையில் பயங்கர வாதத்திற்கு எதிரான போரில் வெற்றி பெற்றதற்கான விழா கோலாகலமாகக் கொண்டாடப் படுகிறது. இலங்கையில் இனிப் பயங்கரவாதப் பிரச்சினை இல்லையாம். போர் முடிந்ததற்க்கான பத்திரங்கள் சற்று முன்னர் அதிபர் மஹிந்த ராஜபக்சேயிடம் முப்படைத் தளபதிகளும் சமர்ப்பித்தனர்.
பயங்கர வாதப் பிரச்சனை இல்லாத நாட்டில் கொண்டாடப் படும் விழாவிற்கு ஏன் இத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகள்? முதல் நாளே பல தெருக்கள் மூடப்பட்டன. பல தமிழர்கள் கைது செய்யப் பட்டனர். விழாவிற்கு வருவோர்கள் பலத்த சோதனைகளுக்கு உட்படுத்தப் பட்டனர். தொடரூந்து சேவைகள் பல இடை நிறுத்தப் பட்டன. இவை மட்டுமா? முதல் நாளில் இருந்தே கல்கிசையில் இருந்து முகத்துவாரம் வரையிலான கடற் பகுதிக்குள் எவரும் அனுமதிக்கப் படவில்லை. கடல் வழியாக வந்து தாக்குதல் நடத்தப் படுவதை தடுக்க இந்தப் பாதுகாப்பு. புலிகளின் கடற்படைத் தளபதி சூசை இறந்து விட்டார்தானே? சென்ற மாதம் 15ம் திகதி இலங்கையின் சகல கடற் பிராந்தியமும் மீட்கப் பட்டு விட்டதாகச் சொன்னார்களே! ஏன் இந்தப் பயம் இப்போது?
பயங்கரவாத தடுப்புச் சட்டமும் அவசர காலச் சட்டமும் இப்போது தேவையா? ஒழிக்கப் பட்ட ஒன்றுக்கு ஏன் இந்தப் பயம்? ஒழிக்கப் பட்டது எனது கேள்விக்குரியதா?
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
1 comment:
அவர்கள் பார்வையிலேயே எடுத்துக்கொண்டாலும் 'தனது தேசத்தின் போரில் 20 ஆயிரம் மக்களை இழக்க நேரிட்டது வருத்தமளிக்கும் விடயம் தனது சொந்த தேசத்து மக்களின் இழப்புகளுக்காக துக்கநாள் அறிவிக்கிறோம்' என்று அறிவித்திருந்தால் தமிழ்மக்களுக்காக எதேனும் ஆறுதல் கிடைக்கும் என்ற நம்பிக்கையை அடைந்திருக்கலாம்
Post a Comment