Friday, 5 June 2009

மனித உரிமைகளும் ஐநா எருமைகளும்.



இலங்கையில் நடந்த நடந்து கொண்டிருக்கின்ற அவலங்கள் வார்த்தைகளில் வடிக்க முடியாதவை.சிலர் அவற்றை வார்த்தைகளில் வடிக்க முயன்றனர்:
Food and medicine are denied for the innocents and many of them are forced into starvation.



  • Most of the wounded are let to die in the open fields. Those who are fortunate enough to make to the make shift hospitals have their limbs amputated without anaesthesia. Caesarian operations are carried out without pain relievers.

  • காயப் பட்டு பதுங்குகுழிகளுக்குள் இருந்த மக்கள் உயிரோடு புதைகப் பட்டனர். சரணடைய வந்தவர்கள் சுட்டுக் கொல்லப் பட்டனர்.

  • Chinese F7s and Russian MIG fighters fly over the skies of Vanni continuously and they regularly bomb hospitals,schools, churches and orphanages. Cluster bombs and phosphorous bombs are used against innocent Tamil civilians.

  • ஒரேயொரு கிளர்ச்சித் தலைவரை கொல்ல ஆகாயத்திலிருந்து குண்டுகளை வீசியும் ஐம்பதாயிரம் மக்களைக் கொன்றும் முப்பதாயிரம் மக்களை அங்கவீனர்களாக்கியும் சிங்கப்பூரைப் போன்ற பரப்பளவுள்ள இரண்டு மடங்கு பிரதேசத்தை அழித்து துவம்சம் செய்துமுள்ளதைப் போன்ற ஒரு அரசாங்கள் இந்த உலகில் வேறில்லை.

  • உடல் சிதறி இறந்த சிறார்களின் படங்கள் ஆயிரக் கணக்கில் உண்டு.

  • காயப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி செய்து அவலத்தை உலகிற்கு தெரிவித்தவர்களைக் காணவில்லை.

  • சாட்சியங்கள் கூறவேண்டிய மத குருமார்களைக் காணவில்லை.

  • சண்டை நடந்துகொண்டிருந்த போது சென்ற ஐநா அதிகாரி விஜய் நம்பியார் தான் இலங்கை அரசுடன் நடாத்திய பேச்சு வார்த்தையை ஐநா பிரதிநிதிகளிடம் தெரிவிக்க மறுத்தார். ஏன்?

  • சண்டை நடந்துகொண்டிருந்த போது செல்ல மறுத்த ஐநா பொதுச் செயலாளர் சண்டை முடிந்தபின் இலங்கை சென்றார். சம்பந்தமில்லாமல் கண்டி சென்றார். ஏன்?

  • இவர்கள் இருவரும் தாம் செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டது மட்டுமல்ல மனிதத்திற்கெதிராக நடாத்தப்பட்ட மாபெரும் குற்றங்களுக்கு முழுமையான ஆதரவளிப்பவர்களாகவும் சந்தேகிக்கப்படுகிறார்கள். ஏன்?

  • இதைப்பற்றி ஐநாவின் மனித உரிமை மன்றில் எழுப்பப் பட்ட போது 47 நாடுகள் இணைந்து ஒன்றாக இலங்கைப்பிரச்சினை மீது வாக்களித்துள்ளன. அவற்றில் பெரும்பான்மையான நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. இலங்கைப் பிரச்சினை ஒரு உள்நாட்டுப் பிரச்சினை என்ற கோணத்திலிருந்தே அவை அவ்வாறு வாக்களித்துள்ளன. அவ்வாறு வாக்களித்ததனூடாக அவை இலங்கை அரசாங்கத்தின் புலிகள் மீதான வெற்றியைப் பாராட்டியுள்ளதோடு இலங்கை அரசாங்கத்தின் போர்க்குற்றங்கள் மீதான விசாரணையையும் புறந்தள்ளியுள்ளன.

அண்மையில் ஒரு ஐநா பிரதிநிதியைச் சந்திக்கும் வாய்ப்புக்கிட்டியது. அவரது அறிவுப்படி ராஜீவ் காந்தி மகாத்மா காந்தியின் பேரன்! இப்படிப் பட்ட எருமைகளுக்கு மனித உரிமைகள் பற்றியோ அல்லது இலங்கையில் நடப்பவை பற்றியோ எப்படி அறிந்திருக்க முடியும்? உலகத்தின் தலைவிதியை இவர்கள் தீர்மானித்தால் எப்படி இருக்கும்!


ஐநாவிற்கான இந்தியப் பிரதிநிதிகளுக்கு இலங்கையில் நடந்தவை முழுவதுமே தெரியும். காந்தியின் தேசத்தைச் சேர்ந்தவர்கள் காந்தியின் பெயரை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்களின் சொற் கேட்டு வாக்களித்தது ஏன்?

அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் ஜப்பான்

சேர்ந்தால் சர்வதேச வியாபாரிகள் கூட்டம்

இவற்றோடு சீரழி சினாவும் ரசியாவும்

சேர்ந்தால் சர்வதேச சண்டியர் கூட்டம்

போதாக் குறைக்கு இந்தியாவையும்

சேர்த்தால் சர்வதேச சண்டாளர் கூட்டம்.

எதுதான் அந்த சர்வதேச சமூகமோ?

யார் குடி கெடுக்க யாரை ஏமாற்ற

எந்த இனங்களை அழித்தொழிக்க

எவங்கள் நாடகம் ஆடுகிறாங்கள்

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...