Monday, 1 June 2009

இருதய நோய்க்கு தக்காளியிலிருந்து அற்புத மருந்து கண்டு பிடிப்பு.

தக்காளிப் பழத்தில் தோலில் உள்ள லைக்கொபீன் எனும் பொருள் இருதய நோயைக் குணப் படுத்தும் சக்திவாய்ந்தது என் பிரித்தானியாவில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இதற்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் அரெறொனன் என்னும் மாத்திரையை தக்காளிப் பழத்தின் லைக்கொபீனிலிருந்து உருவாககியுள்ளது.

.

உலகளாவிய ரீதியில் இக் கண்டு பிடிப்பு பல உயிர்களைக் காப்பாற்றும் என நம்பப்படுகிறது. அரெறொனன் மாத்திரை இருதயத்தின் குழாய்களில் கொழுப்புத் தேங்குவதால் ஏற்படும் அடைப்பை நீக்கவல்லது என்கிறார்கள் இதைக் கண்டுபிடித்தவர்கள். ஒரு மாத்திரை மூன்று கிலோ தக்காளி சாப்பிடுவதற்கு சமானமாகும். ஒரு வருட காலமாக இதய நோய் கொண்ட 200 பேரில் இம் மாத்திரைகள் ஏற்கனவே பரிசோதிக்கப் பட்டுள்ளது.

.



ஒரு மாதத்திற்கு தேவையான அரெறொனன் மாத்திரை வாங்குவதற்கு சுமார் 50 அமெரிக்க டொலர்கள் செலவாகும் என்றும் கூறப்படுகிறது.

.

இது பற்றிக் கருத்துத் தெரிவித்த பிரித்தானிய தக்காளி பயிரிடுவோர் சங்கம் இயற்கையாக வளர்க்கப் படும் உணவுகளில் கண்டுபிடிக்கப் படாத பல நன்மைகள் உண்டு எனத்தெரிவித்தனர்.

1 comment:

கவிக்கிழவன் said...

இலங்கையில் இருந்து யாதவன்

உங்கள் படைப்பு நன்றாக உள்ளது

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...