
பிரித்தானியாவைச் சேர்ந்த எலிசபெத் அடெனி என்பவர் 66 வயதில் பிள்ளை பெற்றுச் சாதனை செய்துள்ளார். ஐந்து இறாத்தலும் மூன்று அவுன்ஸும் எடையுள்ள ஆண் குழந்தையை கேம்பிரிட்ஜில் உள்ள மருத்துவ மனையில் எலிசபெத் பிரசவித்துள்ளார். ஒரு நிறுவனத்தின் முகாமைத்துவ இயக்குனரான இவர் உக்ரேய்ன் நாடு சென்று அங்கு பரிசோதனைக் குழாய் மூலம் கருத்தரித்தார். பிரித்தானியச் சட்டம் பரிசோதனைக் குழாய் மூலமான கருத்தரிப்பை 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு அனுமதிப்பதில்லை. இதற்கு முன்னர் 62 வயதுப் பெண் ஒரு ஆண் மகவை ஈன்றதும் குறிப்பிடத் தக்கது.
No comments:
Post a Comment