
அருணாசலம் கிரிசாந்தகுமார் எனப்படுபவரும் பிரித்தானியாவில் இலங்கைத் தமிழர்கள் விடுதலைக்காக உழைத்து வருபவருமான சாந்தன் மீது சாட்டப் பட்ட ஐந்து குற்றங்களில் இரண்டில் அவர் கிங்ஸ்டன் முடிக்குரிய நீதிமன்றில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப் பட்டார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உபகரணங்கள் அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டமை, வெடி குண்டுகள் தயாரிக்கும் பொருட்களை புலிகளுக்கு அனுப்பியமை ஆகியவற்றில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டார். இதற்கான தண்டனன விபரங்கள் இன்னும் வெளியிட்ப் படவில்லை. ஏனைய மூன்று குற்றச்சாட்டுகளில் ஜுரர்கள் முடிவு ஏதும் எடுக்கவில்லை.
52 வயதான சாந்தன் பிரித்தானியாவில் பிரபல தமிழ் இன உணர்வாளர். இவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனியின் உறவினருமாவார்.
No comments:
Post a Comment