Friday, 17 April 2009

2011 உலகக் கிண்ணத்திற்க்கான கிரிக்கெட் போட்டி பாக்கிஸ்தானில் நடை பெறமாட்டாது


அடுத்த உலகக் கிண்ணத்திற்கான கிரிக்கெட் போட்டி பாக்கிஸ்த்தானில் நடை பெறமாட்டாது என உலக கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. பாதுகாப்பை மனதில் கொண்டே தாம் இந்த முடிவை மிகுந்த மன வருத்தத்துடன் எடுத்ததாக கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

நாலு நாடுகளில் நடை பெறைருந்த போட்டி.
பாக்கிஸ்த்தான் இந்தியா பங்களதேசம் இலங்கை என 4 நாடுகளில் இப்போட்டி நடை பெறவிருந்தது.

சோனியாவின் ஆட்சியில் இந்தியாவிலும் துடுப்பாட்டக்காரர்களுக்கு உயிராபத்து?
ஆட்சி ஒருவர் கையில் அதிகாரம் இன்னோருவர் கையில் என்ற இரண்டும் கெட்டான் இந்தியாவில் வெளிநாட்டுத் துடுப்பாட்டக்காரர்களுக்கு ஆபத்தா என்ற கேள்வி எழுந்துள்ளது. மும்பையில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு எதிர் நடவடிக்கை எடுப்பதற்கு உரிய தீர்மானம் எடுக்க மிக அதிகமான நேரம் எடுத்தற்கு காரணம் இந்த இரண்டும் கெட்டான் கட்டமைப்புத்தான் என்று பலரும் கூறினர். தக்க தாக்குதல் அணியை அனுப்பாததால் பலத்த இழப்பை மும்பையில் சந்திக்க வேண்டியிருந்தது. இப்போது லாகூரில் இலங்கை அணியிர் மீது நடாத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் இந்தியா இருப்பதாக பாக்கிஸ்தானில் இருந்து மறைமுக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இனி இந்தியா வரும் வெளிநாட்டு துடுப்பாட்டக்காரர்களுக்கு உயிராபத்து வருமா என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...