Tuesday, 14 April 2009

நோர்வேயிலுள்ள இலங்கைத் தூதுவரகத்தின் மீதான தாக்குதலின் மர்மம்.

1983 ஆம் ஆண்டின் பின் பல ஐரோப்பிய நாடுகளில் வருடந்தோறும் பல ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் அங்கு வாழும் தமிழ்ர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை வன்முறைகள் அற்றனவாகவும் மிகுந்த கட்டுக் கோப்புடனும் நடாத்தப் படுகின்றன. காவல்துறையினர் வெறும் பார்வையாளர்களாகவே கலந்து வருகின்றனர். இதனால் இதுவரை தமிழர்களினது ஊர்வலங்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு எவ்வித தயக்கமுமின்றி காவல் துறையினர் அனுமதிகள் வழங்கி வருகின்றனர்.
இந்த ஆண்டு தை மாதத்தில் இலண்டனில் நடந்த நூறாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்ட பேரணி காவல் துறையினர் எதிர் பார்த்ததிலும் அதிகமான மக்கள் கலந்து கொண்டபோதிலும் நிலமையை சமாளிப்பதில் நகர காவல் துறைக்கு பெரும் சிரமம் இருக்கவில்லை. போக்குவரத்துத் துறை மட்டும் தான் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திணறியது. இலண்டனின் போக்குவரத்துத் துறையின் பலவீனம் யாவரும் அறிந்ததே. இப்பேரணியைப் பார்த்த Sky Television நிருபர் ஒரு பேரணி எப்படி இருக்கவேண்டும் என்பதை தமிழர்களிடமிருந்து மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

சுவிஸ் காவல் துறை மாஅதிபர் பாராட்டினார்.
சுவிஸில் நடந்த பேரணிகளின் போது தமிழர்களின் கட்டுக்கோப்பைப் பார்த்து வியந்த சுவிஸ் காவல் துறை மாஅதிபர் பேரணி ஏற்பாட்டாளர்களை அழைத்துப் பாராட்டினார்.

கண்டிப்பான பிரெஞ்சு அரசு
பிரான்ஸ் தேசம் மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் சட்டம் ஒழுங்கு விடயத்தில் மிகவும் கண்டிப்பாகவே நடந்து கொள்ளும். தமிழர்கள் பிரான்ஸில் எவ்வித தடையுமின்றி ஊர்வலங்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி பெற்றுக்கொள்வர்.

இலங்கைத் தூதுவரகம் ஏன் தாக்கப் பட்டது.
நோர்வேயிலுள்ள இலங்கைத் தூதுவரகத்தை தாண்டி தமிழர் பேரணி சென்றபோது அங்கு காவலாளிகளைத் தவிர எவரும் இருக்கவில்லை. ஆதலால் ஊர்வலத்தில் சென்றவர்களை ஆத்திரமூட்டும் செயல் ஏதுவும் நடக்க வாய்ப்பில்லை. இதில் தமிழ்தேசியப் பேராட்டத்திற்கு எதிரான சக்திகள் ஈடுபட்டதாகவும் தகவல்கள் இல்லை. தமிழ்தேசியவாதம் இப்போது சர்வதேச அங்கீகாரத்திற்காக துடித்து நிற்கிறது. உலகின் பல பாகங்களிலும் நடந்த அண்மைக்கால தமிழர் பேரணிகளில் எந்த இலங்கை அரச சொத்துக்களும் தாக்குதலுக்கு உள்ளாகவில்லை. பின்வரும் சம்பவங்களின் பின்னணியில் நாம் நோர்வேயிலுள்ள இலங்கைத் தூதுவரக்த்தின் மீதான் தாக்குதலின் காரணத்தைப் பார்க்க வேண்டும்:
· கொழும்பிலுள்ள நோர்வேத் தூதுவரகம் ஏற்கனவே குண்டுத் தாக்குதலுக் குள்ளானது.
· நோர்வேயிலுள்ள இலங்கைத் தூதுவரகத்தை எப்படி இருமுறை தாக்க முடிந்தது. முதலில் தாக்குதல் நடந்போது அங்கிருந்த தூதுவரகக் காவலாளிகள் இரு தாக்குதலாளிகளளத் தடுத்து வைத்திருந்தனர். பின்னர் மேலும் பல தமிழர்கள் உட் புகுந்து அவர்களை மீட்டதுடன் மீண்டும் தாக்கினர்.
· விடுதலைப் புலிகளின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் கே. பத்மநாதனை ஐக்கிய நாடுகள் சபை நோர்வே ஊடாகத் தொடர்பு கொண்டதில் இலங்கை நோர்வேமீது தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தியது.


· தாக்குதலின் பின் இலங்கை நோர்வேயை சமாதன ஏற்பாட்டாளர் என்ற நிலையில் இருந்து நீக்கியது.


. அதற்கு நேர்வே சமாதான ஏற்பாடு எப்போதே முடிவடைந்து விட்டது என்று பதிலடி கொடுத்தது

1 comment:

ttpian said...

யார் கண்டது? மாமியும்,மாமாவும் சேர்ந்து போட்டி போட்டு நம்மை எமாட்ரும் காலம் விரைவில் வரலாம்!

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...