Forbes உலகின் முதல் நூறு வர்த்தகச் சின்னங்களின் (Brands) வரிசையை வெளியிட்டுள்ளது. இதில் முதலாம் இடத்தை ஆப்பிளும் நூறாம் இடத்தை கடுதாசிக் கைக்குட்டை தயாருக்கும் கிளீனெக்குசும்(Kleenex) பெற்றுள்ளன. ஆப்பிளை அடுத்து இரண்டாம் இடத்தில் Microsoft உம் தொடரும் இடங்களை Coca Cola, IBM, Google, Intel, MacDonalds, General Electric, BMW, Cissco ஆகியவை பெற்றுள்ளன.
முதல் பத்து இடங்களில் அமெரிக்க நிறுவனங்களே அதிகம் இடம் பிடித்துள்ளன. Coca Cola மூன்றாம் இடம் எடுத்துள்ள வேளையில் அதன் போட்டி நிறுவனமான பெப்சி 27-ம் இடத்தை மட்டுமே பெற்றுள்ளது. முதலாம் இடம் பெற்ற ஆப்பிளின் போட்டி நிறுவனமான சம்சங் 12-ம் இடத்தைப்பெற்றுள்ளது. நொக்கியா 22-ம் இடத்தையும் பிளக்பெரி 62-ம் இடமும், எல்ஜி 65-ம் இடமும், HTC 77-ம் இடமும் பெற்றுள்ளன.
கூகிள் 5-ம் இடத்தைப் பெற யாஹூ 96-ம் இடம் பெற்றுள்ளது. Adidasஇன் 53-ம் இடமும் Facebookஇன் 73ம் இடமும் e-bayஇன் 74-ம் இடமும் Dell - 41 ஆச்சரியத்தைத் தருகின்றன. ஆனால் Amazon 28-ம் இடத்தைப் பிடித்துள்ளது.
BMW - 9, Toyotoa - 14, Mercedes-Benz - 16, Honda - 19, Audi - 32, Volksvagan - 45, Ford - 59, Hyundai -71, Nissan-76, Lexus - 87, ஆகிய இடங்களைப் பிடித்து வாகன உற்பத்தித் துறையில் ஜேர்மனியும் ஜப்பானும் அமெரிக்கவிற்குப் பெரும் சவாலாக இருப்பதைக் கூறுகின்றன.
HPஇன் 15-ம் இடம் Dellஇன் 41-ம் இடமும் கவனிக்கத் தக்கன.
கடன் அட்டைகளில் Visa 29, American Express 34, Matercard 52,
விரைவு உணவகங்களில் MacDonalds7-ம் இடத்தில் இருக்கிறது. KFC, Burger King முதல் 100 இடத்துக்குள் வரவில்லை. காப்பிக்குப் பெயர் போன Starbucks 54-ம் இடத்தில் இருக்கின்றது. காப்பித்தூளிற்குப் பெயர் பெற்ற நெஸ்கஃபே20-ம் இடத்தைப் பெற்றுள்ளது.
இந்தியாவில் இப்போது பிரபலமாக அடிபடும் வால் மார்ட் 24-ம் இடத்தைப் பெற்றுள்ளது.
தொலைக்காட்சி மற்றும் செய்திகளுக்குப் பெயர் எடுத்த பிபிசி, அல்ஜசீரா, சிஎன்.என் போன்றவை முதல் நூறு இடத்துக்குள் வ்ரவில்லை. எம்ரீவி 68-ம் இடம் பெற்றுள்ளது.
வங்கிகளில் HSBC மட்டும் முதல் நூறு இடத்துக்குள் இடம்பெற்றுள்ளது. அதன் நிலை 39.
இவையாவும் அமெரிக்கர்களின் விருப்பை அடிப்படையாகக் கொண்டவையாகத்தான் இருக்கின்றன.
No comments:
Post a Comment