புகைப்படக்கருவிகள் இலத்திரனியல் மயமாகி எண்மியப்படுத்தப் பட்ட பின்னர் பல மாற்றங்களுக்கு உள்ளாகிவிட்டன. புதுப் புது புகைப்படக் கருவிகள் வந்தவண்ணமாய் இருக்கின்றன. இருபந்தைந்து ஆண்டுகளுக்கு முன்னரும் சிறந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. போட்டோஸொப் போன்ற மென்பொருள்கள் இல்லாத காலங்களிலும் சிறந்தபுதிய புகைப்படக் கருவிகள் வாங்கினாலும் பழுதடையாமல் இருக்கும் பழையவற்றைக் கொண்டும் சிறந்த படக்கள் எடுக்க முடியும்.
ஒரு பிரபல புகைப்படக் கலைஞரின் கண்காட்சிக்குச் சென்ற ஒரு பிரபல எழுத்தாளர் நீங்கள் நல்ல புகைப்படங்கள் எடுத்துள்ளீரகள். நீங்கள் என்ன கமெரா பாவிக்கிறீர்கள் எனக் கேட்டார். அதற்கு அந்தப் புகைப்படக் கலைஞர் நீங்கள் சிறந்த நாவல்கள் எழுதுகிறீர்கள். நீங்கள் என்ன பேனா பாவிக்கிறீர்கள் எனப் பதிலுக்கு கேட்டார். புகைப்படம் எடுத்தலும் பயிலக்கூடிய ஒரு கலையே. வலுக்கூடிய ஒரு மோட்டர் பைக் இருந்தால் மட்டும் விரைவாக ஓட்ட முடியாது. நல்ல பயிற்ச்சியும் திறமையும் உள்ளவரால் ஒரு மோசமான மோட்டார் பைக்கை விரைவாக ஓட்ட முடியும் புகைப்படமும் அப்படியே.
புகைப்படமும் ஒரு கலைஞனின் கற்பனையே. Image என்ற சொல்லும் imagination என்ற சொல்லும் நெருன்க்கிய தொடர்புடையவை.
பழைய கமெராக்களைப் பாவிக்கும் போது கவனிக்க வேண்டியவை:
1. Charge the battary before it goes down. பழைய கமெராக்களின் பாட்டரிகள் விரைவில் முடிந்து விடும். அவற்றை Charge முடிய முன்னரே Chargeபண்ணிவிட வேண்டும்.
2. வெளிச்சம் உங்கள் முதுகின் பின்னர் இருந்து வரவேண்டும். இயற்கையான ஒளியோ அல்லது செயற்கையான ஒளியோ ஒளி உங்கள் முதுகின் பின்னர் இருந்து வரவேண்டியபடி நிலை எடுக்க வேண்டும். மேற்கு நாடுகளில் பல நேரங்களில் மப்பும் மந்தாரமாக இருக்கும். பல இடங்களில் திக்குத் திசை தெரியாமல் இருக்கும். அப்போது உங்கள் உள்ளங்கையக் நிலத்திற்குச் சமாந்தரமாகப் பிடிதுக் கொண்டு மறுகையின் சுண்டுவிரலை உள்ளங்கைக்கு செங்குத்தாகப் பிடித்தால் விரலின் நிழல் விழும் திசையை வைத்து எந்தப்பக்கத்தில் இருந்து அதிக ஒளிவருகிறது என்று அறியலாம்.
3. கறுப்பு நிறமானவர்களைப் படம் எடுக்கும் போது கமெராவை இருட்டில் அல்லது குறைந்த ஒளியில் படம் எடுப்பதற்கான settingஇல் வைக்கவேண்டும்.
4. இயன்ற அளவிற்கு அதிக படங்களை எடுக்க வேண்டும். அதிலும் வேறு வேறு settingஇல் வைத்து பல படங்களை எடுக்க வேண்டும். கமெராவின் memory போதாவிட்டில் பெரிய வலுவுள்ள SD cardஐப் பொருத்தலாம்.
5. பழைய கமெராக்கhttp://www.blogger.com/blogger.g?blogID=4878036059365749039#editor/target=post;postID=2779207865571850495ளில் படம் எடுக்கும் போது ஒளி அதிகம் இருந்தாலும் flash lightஐப் பாவித்தால் படங்கள் நன்றாக வரும். சில இருட்டான நிலைகளில் flash lightஐப் பாவிக்காமல் எடுத்தாலும் படங்கள் நன்றாக வர வா6ய்ப்புண்டு.
6. பழைய கமெராவில் உள்ள creative mode களைப் பாவிப்பதைத் தவிர்த்துக்கொள்ளவும். Basic settingஇல் சிறந்த படங்களை எடுக்க முடியும்.
7. பின்னணி முன்னணியைக் கெடுக்கும். நீங்கள் படமெடுக்கும் ஆளின் அல்லது பொருளின் பின்னணியில் புகைப்படத்தின் தரம் பெரிதும் தங்கியுள்ளது. கரிய அல்லது கரு நிலப் பின்னணியை புகைப்படக் கலைஞர்கள் விரும்புவார்கள்.
8. புதிதாகப் புகைப்படம் எடுப்பவர்கள் வேறு வேறு settingஇலும் பின்னணியிலும் பல பாடங்களை எடுத்து அந்த அந்த settingஇலும் பின்னணியிலும் படங்கள் எப்படி வருகிறது என்று பார்த்து உரிய settingகளையும் பின்னணிகளையும் குறித்து வைத்து கொள்ள வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment