Tuesday, 9 October 2012

விஞ்ஞானிகள்: சர்க்கரை அதிகம் உண்டால் முட்டாள்களாய் ஆகுவீர்கள்


சர்க்கரை உண்பதற்கும் மூளையின் செயற்பாட்டிற்கும் உள்ள தொடர்பைப்பற்றி லொஸ் ஏஞ்சலிஸில் உள்ள கலிபோர்னியாப் பல்கலைக் கழகம் ஒரு ஆய்வை மேற்கொண்டது. Gomez-Pinilla என்னும் விஞ்ஞானியின் தலைமையிலான ஒரு குழுவினர் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.


சிக்கலான சுவர்க்கட்டமைப்பு(maze)
ஏற்கனவே சிக்கலான சுவர்க்கட்டமைப்பிக்குள்(maze) நடந்து திரியப் பழக்கப்பட்ட எலிகளை வைத்து செய்த ஆய்விகளின் படி சர்க்கரை அதிகம் உள்ள உணவுவகைகளை உண்பது உங்கள் மூளையைப் பாதிக்கும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். எலிகளை இரு குழுக்களாகப் பிரித்து ஒரு குழுவிற்கு சர்க்கரை நிறைந்த உணவுகளையும் மற்றக் குழுவிற்கு சர்க்கரை இல்லாத உணவையும் கொடுத்து வந்தனர். சர்க்கரை அதிகம் கொடுத்த எலிகளுக்கு omega-3 கொழுப்பு கொடுக்கப்படவில்லை. இரண்டாவது குழுவிற்கு  flaxseed oil and fish oil—both rich in omega-3 fatty acids கொடுக்கப்பட்டன.

இரு குழு எலிகளும் மீண்டும் சிக்கலான சுவர்க்கட்டமைப்பிக்குள்(maze) நடக்கும் படி விடப்பட்டன. சர்க்கரை அதிகம் உண்ட எலிகள் கட்டமைப்பில் இருந்து வெளியே நடந்து வரும் வழியைக் கண்டுபிடிக்கமுடியாமல் தடுமாறின.  சர்க்கரை உண்ணாத எலிகள் இலகுவாக வெளியே வரும் வழியை இலகுவாகக் கண்டு கொண்டன.

மூளையில் உள்ள உயிரணுக்கள் தமக்கிடையிலான சமிக்ஞைப் பரிமாற்றத்தை செய்வதை சர்க்கரை உணவு உண்பது தாமதப் படுத்துகிறது. இன்சுலினின் வலுக்குறைவதால் இந்த தாமதம் ஏற்படுகிறது.  அத்துடன் நினைவாற்றலும் கற்கும் திறனும் பாதிப்படைகிறது.  A closer look found that insulin had lost some of its power to influence the brain, which in turn disrupted the memory and learning functions of the brain.

அதிக மீன்களை உண்பவர்களுக்கு மூளை அதிகம் என்ற பழம் கூற்றும் இந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மூளையின் சிறந்த செயற்பாட்டிற்கு docosahexaenoic acid (DHA) பெரிதும் உதவுகிறது.  மீன்வகைகளில் docosahexaenoic acid (DHA) உண்டு.

சர்க்கரை அதிகம் உண்பதால் இரத்தத்தில் சேரும் fructose எமது மூளைக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இயற்கையான பழவகைகளை உண்பதால் இந்தப்பாதிப்பு ஏற்படாது.  பழவகைகளில் உள்ள ஆன்டிஒக்சிடென்ற் உடலுக்கு உகந்தது.

"Insulin is important in the body for controlling blood sugar, but it may play a different role in the brain, where insulin appears to disturb memory and learning," he said. "Our study shows that a high-fructose diet harms the brain as well as the body. This is something new." என்கிறார் Gomez-Pinilla என்னும் விஞ்ஞானி.

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

பயனுள்ள ஆரோக்கியப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...