Wednesday, 8 December 2010
இலங்கையில் போர் குற்ற விசாரணைக்கான போதிய ஆதாரம் - பிரபல சட்ட வல்லுனர்.
பொது மக்கள் அல்ல து ஆயுதம் தரிக்காத போராளிகள் கொல்லப்படுவது ஒரு கடுமையான போர்க்குற்றம் என்றும் இப்படிப்பட்டவற்றை சிலதடவைகள் மட்டுமே பார்த்திருக்கிறேன என்று பிரித்தானியாவைச் சேர்ந்த முன்னணி போர்க்குற்ற சட்டவாளர் ஜுலியன் நவுல்ஸ் அவர்கள் சனல்-4 தொலைக்காட்சியின் செய்திக்கு அவர்களின் இலங்கையில் நடந்த போர் குற்றம் தொடர்பான காணொளி ஆதாரங்களைப் பார்த்தபின் கூறினார்.
கைகளும் கண்களும் கட்டப்பட்ட நிலையில் பொது மக்களோ அல்லது போரில் பங்கேற்றவர்களோ கொல்லப்படுவது ஜெனிவா உடன்படிக்கையை மீறும் செயல் என்றார் போர்க்குற்ற சட்டவாளர் ஜுலியன் நவுல்ஸ் அவர்கள்.
ராஜபக்ச பொறுப்பு
இப்படிப்பட்ட கொலைகள் சம்பந்தமான முடிவு படைத்துறையில் கீழ்நிலையில் எடுக்கப்படுவதில்லை. இது உயர் நிலையில் தான் எடுக்கப்படும். முப்படைத் தளபதியான மஹிந்த ராஜபக்சவும் போர்குற்றம் புரிந்ததாகக் கருதப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leading war crimes lawyer Julian Knowles, from Matrix Chambers, told Channel 4 News the video was "astonishing evidence" of a type he had only seen "a handful of times" showing the mass killing of civilians or unarmed combatants, a serious war crime.
சனல்-4இற்கு மேற்படி சட்டவாளர் வழங்கிய செவ்வியை இந்த இணைப்பில் காணலாம்: Julian Knowles
சனல்-4 தொலைக்காட்சி புதன் இரவு(08-12-2010) இலங்கை தொடர்பாக ஒரு செய்தியை ஒளிபரப்பியது. அதில் இசைப்பிரியா எனப்படும் திருமதி ஷோபாவின் இறந்த உடலையும் மற்றும் பல கொல்லப்பட்ட தமிழர்களின் உடல்களும் காண்பிக்கப் பட்டன. எல்லா உடல்களும் கைகள் கட்டப்பட்ட நிலையிலேயே இருந்தன.
27வயதான பாடகி, நடிகை, செய்தி வாசிப்பாளர் எனப் பல முனைகளில் செயற்பட்ட இசைப்பிரியா எனப்படும் இருதய நோயாளியான திருமதி ஷோபாவுடன் பணியாற்றிய கல்பனா என்பவர் சனல்-4 தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட உடல் இசைப்பிரியா எனப்படும் திருமதி ஷோபாவினது என்று உறுதிசெய்தார். அத்துடன் இசைப்பிரியா எனப்படும் திருமதி ஷோபா எந்த ஆயுத நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என்றும் கூறினார். தானும் ஷோபாவும் உண்மைகளை வெளிக் கொண்டு வருவதிலேயே ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.
சனல்-4இன் செய்தியை இந்த இணைப்பில் காணலாம்:சனல்-4
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment