Thursday, 9 December 2010

டில்லித் திருடர்களின் திருகுதாளங்கள் தொடர்கின்றன


திகதி 28-11-2010 :- இலங்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் புதுடில்லி திரும்புகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு காலக்கெடு எதுவும் நிர்ணயம் செய்ய முடியாது என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்தார்.

திகதி 07-12-2010:- இலங்கை இனப்பிரச்சனை தீர்வு தொடர்பில் இந்தியா எந்தவித அழுத்தங்களையும் கொடுக்காது.

திகதி 07-12-2010:-"தமிழர் பிரச்சனைக்கான தீர்வு குறித்து பேசுமாறு இலங்கைக்கு வலியுறுத்தினேன்" கருணாநிதிக்கு வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கடிதம்.

இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான டில்லியின் திருகுதாளங்கள் முள்ளிவாய்க்கால் இனக்கொலையுடன் முடியவில்லை இன்றும் தொடர்கின்றன.

இப்போது டில்லித் திருடர்களின் முக்கிய பணி தமிழர்களை அவர்கள் சொந்த நிலங்களில் இருந்து விரட்டி அடித்து அங்கு சிங்களவர்களைக் குடியேற்றுவது. இதனால் இனி எந்த ஒரு காலத்திலும் தமிழர்கள் ஒரு உரிமைப் போராட்டத்தை தொடக்குவதை நிரந்தரமாகத் தடுப்பது டில்லித் திருடர்களின் நோக்கம். டில்லித் திருடர்களின் கொள்கைப்படி தமிழன் சூத்திரன். அவன் ஆளப்பட வேண்டியவன். அவன் ஆளக்கூடாது. டில்லித் திருடர்கள் தாம் இலங்கையில் தமிழர்களுக்கு 50,000 வீடுகள் கட்டிக் கொடுப்பதாக பிதற்றுகிறார்கள். இவர்கள் எத்தனை இலட்சம் வீடுகளை அழித்தார்கள் என்று சொல்வதில்லை. இந்த 50,000 வீடுகளில் எத்தன ஆயிரம் சிங்களவர்கள் குடியமர்த்தப் படுவார்கள் என்று சொல்ல மாட்டாரக்ள்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...