
ஜப்பானில் வாழைக்காய்களை Mozartஇன் இசைகளை கேட்க வைத்து இனிய பழங்களாக மாற்றிகின்றனர். Mozartஇன் String Quartet 17 and Piano Concerto 5 in D major ஆகியவற்றை பிலிப்பைன்சில் இருந்து இறக்குமதி செய்யப் பட்ட வாழைக்காய்கள் வைக்கப் பட்டிருக்கும் களஞ்சியசாலைகளில் ஒலிபரப்பி அவற்றை இனிய பழங்களாக மாற்றுகின்றனர். இந்த இசை ஒலிபரப்பாத களஞ்சிய சாலைகளில் இருக்கும் வாழைக்காய்களிலும் பார்க்க இசை ஒலிபரப்பப்படும் களஞ்சிய சாலைகளில் இருக்கும் வாழைக்காய்கள் விரைவாகவும் சுவையாகவும் பழுத்துவிடுகின்றன.
ஏற்கனவே சோயா சாஸ் உடோன் நூடில்ஸ் ஆகியவை பாரம்பரிய இசை கேட்டு சுவை பெறுகின்றன என்று ஜப்பானில் அறிந்துள்ளனர். அது மட்டுமல்ல அரிசியில் இருந்து தயாரிக்கப்படும் ஒருவகை மதுவும் இசை கேட்டு சுவை பெறுகிறதாம்
No comments:
Post a Comment