Monday, 6 December 2010
விக்கிலீக் இந்திய உளவுத் துறையில் கண்மூடித்தனத்தை அம்பலப் படுத்துகிறது.
இலங்கையில் பாக்கிஸ்த்தானிய தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதென்றும் அவை இந்தியாவிற்கு எதிராகச் செயற்படும் என்றும் பத்து ஆண்டுகளுக்கு முன்பே விடுதலைப் புலிகளின் ஆலோசகர் அண்டன பாலசிங்கம் தெரிவித்திருந்தார். ஆனால் இந்திய அரசு இதை விட்டுவைத்தது. பாக்கிஸ்த்தானும் சீனாவும் இலங்கையுடன் நல்ல நெருக்கத்தை பேணுவதை இந்திய நிர்வாகத்தின் தென் மண்டலத்தினர் (South Bloc) விரும்பியிருந்தனர். இந்த பாக்கிஸ்த்தானிய சீன நெருக்கம் தமிழர்களின் தேசிய போராட்டத்தை அடக்க பெரிதும் உதவும் என்பதால் அவர்கள் இதை அனுமதித்திருந்தனர்.
தென் மண்டலத்தில் (South Bloc) உள்ள பார்ப்பனரகளின் கொள்கை தமிழன் என்பவன் சூத்திரன் அவன் ஆளப்படவேண்டியவன். இதற்காக இவர்கள் இந்தியாவின் பிராந்திய நலன்களையும் பலியிடத் தயங்கவில்லை. இலங்கையைப் பொறுத்தவரை இந்திய வெளியுறவுக் கொள்கை மகன் செத்தாலும் பரவாயில்லை மருமகள் தாலி அறட்டும் என்பதுதான்.
பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் 200க்கும் அதிகமான தீவிரவாதிகள் இலங்கையில் பதுங்கி இருப்பதாக அமெரிக்க புலனாய்வுதுறை 2010 Septemberஇல் எச்சரித்திருந்தது. இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்துக்கு அமெரிக்கா அனுப்பியுள்ள எச்சரிக்கை தகவலில் லக்சர் இ தொய்பா அமைப்பு இந்தியாவுக்குள் நுழைவதற்கு இலங்கையை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இலங்கையில் பயிற்சி பெற்றதாக கூறப்பட்ட அந்த அமைப்பின் போராளி ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள இலங்கை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, ஏற்கனவே இங்கு வெளிநாட்டு தீவிரவாதிகள் அமைப்பு ஒன்றும் இல்லை என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருந்திருந்ததை மேற்கோள் காட்டியுள்ளார். இவ்வாறான எச்சரிக்கை அறிக்கை ஒன்றும் தமக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விக்கீலீக் இப்போது வெளியிட்டுள்ள தகவலில் அமெரிக்க அரச திணைக்களம் 19-06-2009இல் வெளியிட்டுள்ள குறிப்பில் பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா அமைப்பு இலங்கையில் தளம் அமைத்து செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தகவலில் பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா அமைப்பு இலங்கை இந்தியா நேப்பாளம் ஆகிய இடங்களில் அபாயகரமான முறையில் வளர்ந்து வருவதாகவும் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஷபீக் கபா என்னும் பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா அமைப்புத் தலைவர் தென் இந்தியாவில் இரு குழுக்களை அமைக்க முயல்கிறார் என்றும் விக்கிலீக் தெரிவிக்கிறது. இலங்கையில் தளம் அமைத்ததை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் தமக்கு களம் அமைக்க பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா அமைப்பு முயல்வதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அண்மையில் இலங்கைக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா பயணம் மேற்கொண்டபோது ஒரு பாக்கிஸ்தானிய உயர் பீடமே இந்தியாவிற்க்கு போட்டியாக இலங்கை வந்தது. சீனாவுடன் இணைந்து எப்படி இலங்கையில் இந்திய ஆதிக்கத்தை ஒழிக்க இலங்கைக்கு உதவலாம் என்பதே அவர்களின் நோக்கம். இலங்கையில் சீனாவின் திட்டங்களுக்கான சீமேந்தை சீனா பாக்கிஸ்த்தாலில்தான் கொள்வனவு செய்கிறது. இது பாக்கிஸ்தானின் நலிவடைந்திருக்கும் பொருளாதாரத்தையும் பலப்படுத்தும். பாக்கிஸ்தானும் தன்பங்கிற்கு இலங்கைக்கு இரு நூறு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இலகு கடனை இலங்கைக்கு வழங்குகிறது. இது பாக்கிஸ்தானின் இலங்கைக்கான ஏற்றுமதியை வளர்க்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
2 comments:
India's diplomatic blunder in Srilanka result in the worst ever nightmare for India soon.
In such an eventuality, how does sub-nationals of Indian state will behave?
Post a Comment