Tuesday 7 December 2010

விக்கிலீக் அசங்கே பாலியல் வலையில் வீழ்த்தப்பட்டாரா?


ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் போரில் ஊடகங்களின் பங்கு பற்றி ஸ்ரொக்ஹொல்மில்(Stockholm) நடந்த மாநாட்டில் உரையாற்ற ஜுலியன் அசங்கே என்னும் அவுஸ்த்திரேலியாவில் பிறந்த முன்னாள் கணனி ஊடுருவி(computer hacker) அழைக்கப்படுகிறார். மாநாட்டை ஏற்பாடு செய்தவர்கள் மத்திய இடது சாரி சகோதரத்துவ இயக்கம். இந்த இயக்கத்திற்காக பணியாற்றிய அழகி-1 (இவர் பெயர் வெளிவிடப்படவில்லை) ஜுலியன் அசங்கேயுடன் தொடர்புகொள்கிறார். ஸ்ரொக்ஹொல்மில்(Stockholm) தனது தங்குமிடத்தைப்பற்றி அழகி-1 இடம் ஜுலியன் அசங்கே விசாரிக்கிறார். தனது வீட்டில் (Flat) தங்கலாம் மாநாடு நடக்கும் வேளையில் தான் வீட்டில் இருக்கமாட்டேன் நகரத்திற்கு வெளியில்தான் தங்குவேன் என்று அழகி-1 கூறுகிறார்.
மாநாட்டிற்கு சென்ற ஜுலியன் அசங்கே அழகி-1 இன் வீட்டிலேயே தங்குகிறார். ஆனால் அழகி-1 குறிப்பிட்ட தினத்திற்கு ஒரு நாள் முன்கூட்டியே தன் விட்டிற்கு திரும்புகிறார். ஜுலியன் அசங்கேயும் அழகி-1 இரவு ஒரு உணவகத்திற்கு சென்று உணவருந்திவிட்டு மீண்டும் வீடுவந்து இருவரும் அழகி-1 இன் சம்மதத்துடனேயே உடலுறவு கொள்கின்றனர். பாவம் ஜுலியன் அசங்கே அவர்கள் உடலுறவு கொள்ளும்போது அவர்கள் பாவித்த ஆணுறை கிழிந்து விடுகிறது. (காய்ந்த மாடோ?) மறுநாள் அழகி-1 ஜுலியன் அசங்கேஇற்கு ஒரு விருந்தும் வழங்குகிறார்(உணவுதான்).

அழகி-1 ஒரு பெண்ணுரிமைப் போராளி. பல்கலைக்கழகமொன்றில் ஆய்வு உதவியாளராகப் பணியாற்றுகிறார். பெண்ணுரிமை உட்படப் பல முற்போக்கு இயக்கங்களில் பங்கு கொள்பவர். பல நாடுகளுக்கும் சென்று வருபவர்.

ஜுலியன் அசங்கே மாநாட்டில் உரையாற்றும் போது அழகி-2 முன்வரிசையில் இருக்கிறார். அவர் அதிக புகைப்படங்கள் ஜுலியன் அசங்கே உரையாற்றும் போது எடுக்கிறார். மாநாட்டின் பின்அழகி-1 அழகி-2ஐ ஜுலியன் அசங்கேயிற்கு அறிமுகம் செய்கிறார். இருவரும் நகரத்தை சுற்றுகின்றனர். அழகி-2 இல் ஜுலியன் அசங்கே மயங்கிவிடுகிறார். நீ அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறாய் என்று ஜுலியன் அசங்கே பிதற்றவும் செய்கிறார். இங்கும் உடலுறவு நடக்கிறது. அழகி-2 இன் சம்மதத்துடன்தான். ஆனால் அழகி-2 ஆணுறை அணியும்படி வேண்டியதை ஜுலியன் அசங்கே மறுத்துவிடுகிறார். (Rain coat போட்டுக் கொண்டு குளிப்பதை யார்தான் விரும்புவர்.)

அழகி-1ம் அழகி-2ம் பின்னர் சந்தித்துக் கொள்கின்றனர். ஜுலியன் அசங்கே உடன் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். பெண் உரிமைப் போராளியான அழகி-1 ஆணுறை இன்றி அழகி-2 உடன் உடலுறவு கொண்டதைக் கேள்விப்பட்டு ஆத்திரம் அடைந்தாராம். பின்னர் இருவரும் காவல் துறையில் முறையீடு செய்கின்றனர். உங்களையும் என்னையும் போலவே ஜுலியன் அசங்கே இற்கு சுவீடன் தேசத்து கற்பழிப்புச் சட்டத்தைப் பற்றித் தெரியாமல் இருந்திருக்கலாம். பெண் சம்மதத்துடன் உறவு கொண்டாலும் ஆணுறை கிழிப்பது ஆணுறை அணிய மறுத்து உறவு கொள்வது எல்லாம் அங்கு குற்றமாம்.

அழகிகள் ஜுலியன் அசங்கே நடந்த விததைப் பற்றி பத்திரிகைகளிலும் வெளியிருகின்றனர் ( தங்கள் பெயர் வெளிவராமல்தான்). தங்கள் சம்மதத்துடன் தான் ஜுலியன் அசங்கே தம்முடன் உறவு கொண்டதாகவும் பத்திரிகைகளில் ஒத்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

பன்னாடைக் காவல்துறை
உலகத்தில் எத்தனையோ குற்றச் செயல்கள் எல்லாம் நடக்கிறபோது ஆணுறை கிழித்த ஆணுறை அணியாத குற்றங்களுக்காக பன்னாட்டுக் காவல்துறை(Inter Pol) ஜுலியன் அசங்கேயை தனது சிவப்புப் பட்டியலில் இட்டு கைது ஆணை பிறப்பிக்கிறது. ராஜபக்சேக்களும் இலங்கையில் செயற்பட்ட அமைதிப்படையினரும் இதைக் கேள்விப்பட்டபோது நிச்சயம் விழுந்து விழுந்து சிரித்திருப்பார்கள். இலங்கையில் கற்பழித்து பெண்கள் கொல்லப்பட்டமைக்கு யார் பிடியாணை பிறப்பிப்பார்?

ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் நடந்தவற்றிற்கு நவம்பர் இறுதியில் பன்னாட்டுக் காவல்துறை(Inter Pol) பிடியாணை ஏன் பிறப்பிக்கிறது?

தேன் பொறி (Honey Trap)
சுவீடன் மக்கள் பலரும் ஜுலியன் அசங்கே திட்டமிட்டு தேன் பொறி (Honey Trap)யில் விழுத்தப்பட்டார் என்றே கருதுகிறார்களாம். ஒருவரை அழகிகளைப் பாவித்து பாலியல் வலைக்குள் விழுத்துவதை தேன் பொறி (Honey Trap) என்பார்கள். இதற்கு சிக்கலான கற்பழிப்புச் சட்டங்கள் நிறைந்த சுவீடனில் இந்தப் பொறி வைக்கப்பட்டதா?

ரவுண்டு கட்டித் தாக்கப்படும் விக்கிலீக்
பல வர்த்தக நிறுவனங்கள் விக்கிலீக் இணையத்துடன் தமது தொடர்புகளை நிறுத்திக் கொண்டன. பல இணைய வசதி வழங்குபவர்கள் கடன் அடை நிறுவனங்கள் ஈ-பே போன்றவை விக்கிலீக்குடன் தொடர்புகளைத் துண்டித்தன. விக்கிலீக்குடன் தொடர்புடையவர்கள் இணையத் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன. இந்த தாக்குதலை நெறிப்படுத்துவது யார்?

ஜுலியன் அசங்கே செவ்வாய் காலை சரண். பிணை மறுப்பு
செவ்வாய்க்கிழமை காலை பிரித்தானியக் காவல் துறையினரிடம் சரணடைந்த ஜுலியன் அசங்கே சுவீடனுக்கு தான் நாடுகடத்தப்படுவதை எதிர்த்து நீதிமன்றில் போராடப் போவதாக அறிவித்துள்ளார். அவருக்கு பிணைப் பணம் செலுத்த பாக்கிஸ்த்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் மனைவி ஜெமிமா கான் உட்பட ஆறு பேர் தயாராக நீதிமன்றம் வந்தனர். ஆனால் பிணை மறுக்கப் பட்டுவிட்டது. இத்தனைக்கும் ஆணுறைக் குற்றம். அவருக்கு பிரித்தானியாவில் ஒரு நிரந்தர விலாசம் இல்லாத படியால் பிணை வழங்க முடியாதாம். அமெரிக்காவின் பெண்டகன் றூம் போட்டுத்தான் யோசித்திருக்கிறது.

உலகின் முன்னணி மனிதராக ஜுலியன் அசங்கே
அமெரிக்காவின் ரைம்ஸ் சஞ்சிகையின் கருத்துக் கணிப்பின் படி ஜுலியன் அசங்கே இப்போது உலகின் முன்னணி மனிதராகக் கருதப்படுகிறார். அச்சஞ்சிகை 2010 ஆண்டின் சிறந்த மனிதராக ஜுலியன் அசங்கே தேர்ந்தெடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இணையப் போர்

விக்கிலீக்கிற்கு எதிரான இணையத் தளங்களும் ஆதரவான இணையத் தளங்களும் இப்போது மாறி மாறி தாக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஓயாத கசிவுகள்
ஜுலியன் அசங்கே கைது செய்யப்பட்டாலும் விக்கிலீக் தொடர்ந்து அமெரிக்க அசிங்கங்களை வெளிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 comments:

Mohamed Faaique said...

gus article....

Unknown said...

உலகம் முழுவதும் இந்த போலீசு சட்டம் எல்லாம் இப்படிதான் போல??

Unknown said...

எல்லா நாடுகளிலும் காவல் துறை, சட்டம் எல்லவம் அட்சியாளக்ளின் வசதிக்கக தான் பன்படுத்தபடும் போல.

YOGA.S said...

சுவீடனில இருக்கிற எங்கட ஆக்களுக்கு இந்த விஷயம் தெரியுமோ?அதான்,ஆணுறை கிழிந்தாலோ,ஆணுறையின்றியோ...............................................................?!

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...