Tuesday 29 June 2010

பிரித்தானியத் தமிழர் பேரவை இலங்கையை உளவு பார்த்ததா?


இலங்கை அரசிடம் அகப்பட்டு ஒநத்துழைத்துக் கொண்டிருக்கும் அல்லது 2006இல் இருந்து சேர்ந்தியங்கும் கேபி எனப்படும் குமரன் பத்மநாதனின் ஏற்பாட்டின் பெயரில் வெளிநாடுகளில் இருந்து ஒன்பது பேர் இலங்கை சென்றனர். இவர்களைப் புலி ஆதரவாளர்கள் என்று இலங்கை அரசாங்கம் சொல்கிறது. இந்த ஒன்பது பேரின் விபரம்:
  • பிரித்தானியா: சார்ள்ஸ் அன்ரோனிதாஸ், மருத்துவர் வேலாயுதம் அருட்குமார், சிறிபதி சிவனடியார், விமலதாஸ்
  • பிரான்ஸ்: கெங்காதரன்
  • சுவிஸ்லாந்து: மருத்துவர் சந்திரா மோகன் ராஜ்
  • அவுஸ்திரேலியா: மருத்துவர் ரூபமூர்த்தி
  • கனடா: பேரின்பநாயகம், சிவசக்தி

இலங்கை சென்ற இந்த ஒன்பது பேரையும் பலரும் துரோகிகளாகவும் கருதுகின்றனர்.

இவர்களில் ஒருவர் பிரித்தானியாவில் இருந்து சென்ற மருத்துவர் வேலாயுதபிள்ளை அருட்குமார் அவர்களைப்பற்றி ஒரு பேட்டி பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் தொலைக்காட்சியான ஜீரீவியில் ஒளிபரப்பானது. அது மட்டுமா இவரது காணொளிப் பேட்டி tamilnet இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. tamilnet இணையத் தளத்தைப் பொறுத்தவரை பேட்டிகளை எடுப்பது வழமையான ஒன்றல்ல. அதிலும் காணொளிப் பேட்டி. அதில் அவர் பல மர்மங்களைத் துலக்கியுள்ளார். அப்பேட்டியை இங்கு காணலாம்:tamilnet இணையத் தளம்

பிரித்தானியத் தமிழர் பேரவையைச் சேர்ந்த ஸ்கந்ததேவா என்பவரை ஜீரிவீயின் பிறேம் பேட்டி கண்டு ஒளிபரப்பினார். அதில் கூறப்பட்டவை:
  • மருத்துவர் வேலாயுதபிள்ளை அருட்குமார் பிரித்தானியத் தமிழர் பேரவையின் ஒரு ஆயுட்கால் உறுப்பினர்.
  • அவர் இலங்கை சென்றது அவரது தனிப்பட்ட பயணம்.
  • மருத்துவர் வேலாயுதபிள்ளை அருட்குமார் அவர்கள் இலங்கை சென்றமைக்கும் பிரித்தானியத் தமிழர் பேரவைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
  • மருத்துவர் வேலாயுதபிள்ளை அருட்குமார்மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.
tamilnet இணையத் தளத்திற்கு மருத்துவர் வேலாயுதபிள்ளை அருட்குமார் அவர்கள் வழங்கிய பேட்டியில் மிக முக்கியமானவையும் இதற்கு முன் அறியப்படாதவையுமான பல தகவல்கள் உள்ளன.

மற்றப் ஒன்பது பேரில் எவரையும் ஏன் tamilnet இணையத் தளம் பேட்டி காணவில்லை? அவரைப்பற்றிய பேட்டி ஏன் ஜீரிவீயில் ஒளிபரப்பானது? இவற்றைச் சேர்த்தும் பார்க்கும் போது இலங்கை அரசையும் மற்ற எட்டுப் பேரையும் உளவு பார்க்க மருத்துவர் வேலாயுதபிள்ளை அருட்குமார் அவர்களை பிரித்தானியத் தமிழர் பேரவை அனுப்பியதா?

இந்த ஒன்பது பேரின் இலங்கைப் பயணத்தைத் தொடர்ந்து இலங்கை அரசு தமிழர்களின் புலனாய்வுத் துறை பலமாக இருப்பதாக மீண்டும் ஒரு முறை அறிவித்தது.

1 comment:

Anonymous said...

It is a very wise move by British Tamil Forum if it is true...

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...